உயிர்ப்பு இதழ் மூன்று தனது அரசியல் வழியை தெளிவாக இனம் காட்டி வெளிவந்துள்ளது. அந்த வகையில் ஆசிரியர் தலையங்கம் உட்பட மற்றைய மூன்று கட்டுரையும் மார்க்சியத்தை குழிதோண்டி புதைத்துவிடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கத்திற்கு சமர் 9 இல் பதிலளித்தோம். பெண்ணும் புரட்சியும் என்ற கட்டுரை வேறுபலரின் கட்டுரைகள் இன்மையால் விமர்சிக்க முடியாதுள்ளது. இக்கட்டுரை மார்க்சியத்தை குழிதோண்டிப் புதைப்பதாகவே உள்ளது. அதை ஒரு(உ-ம்) ஊடாகப் பார்க்கலாம்.
சோசலிசத்தை உருவாக்குவதற்கான போராட்டம் வேறுவேறான நலன்கள் கொண்ட குழுக்கள் அணிச்சேர்க்கை உருவாக்கும் அடிப்படையில் ......... இருக்கவேண்டும் என்கின்றார். மார்க்சியம், பெண்கள் இரு வௌ;வேறு நலன்களை பிரதிபலிப்பதாக கோருவதன் ஊடாக நலன்கள்(வர்க்க) வேறுபாட்டையும் அதன் இருப்பையும் கோருகிறார் இதன் ஊடாக முதலாளித்துவ இருப்பை காப்பாற்றுகின்றார். எல்லாவகை முரண்பாடுகளும் அதன் உள்ளடக்கமும் வர்க்க போராட்டத்துடன் ஒன்று கலந்தவையே.
நாம் ஆய்வுக் கட்டுரையையோ, புதிய கட்டுரைகளையோ இவர்களுக்குப் பதிலாக வைப்பதை விட இக்கட்டுரைகளின் ஒவ்வொரு வரியின் மீதும் விமர்சிப்பதையே கைக்கொள்கிறோம். பொதுவான ஒரு கட்டுரையின் போக்கில் வாசகர்களை தெளிவாகப் பார்க்கமுடியாது என்பதாலும், ஒவ்வொரு வரி மீதுமான விமர்சனம் மூலம் வாசகர்களை தெளிவாக ஆராய வைக்கமுடியும் என்பதாலும் இதையே கைக்கொள்கிறோம்.
மார்க்சியத்துக்கு எதிராக மார்க்சியத்தை உச்சரித்தபடி பின்பக்க கதவுகள் மூலம் புகுந்துவிட முயலும் மார்க்சிய விரோதிகளை இட்டு நாம் எப்போதும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவை மார்க்சியம் உருவான நாள் முதல் ஒரு தொடராக நடந்து வருகின்றது. சோவியத், சீனா என பாட்டாளிவர்க்க ஆட்சி இருந்தபோதே திரிபுவாதம் ஆட்சிபீடம் ஏறி மார்க்சியத்தின் பேரால் மார்க்சியத்தை குழிதோண்டிப் புதைத்தனர். இது இன்று எமது போராட்டத்திலும் விதிவிலக்கின்றி தொடர்கின்றது.
யார் மார்க்சியவாதி என நாம் பார்ப்போமாயின் மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையை யார் ஏற்றுக்கொள்கின்றார்களோ அவர்களே மார்க்சியவாதிகள். லெனின் மார்க்சிசம் எது திரிபுவாதம் எது என்பதை வரையறுக்க கூறிய கூற்றைப் பார்ப்போம். வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பதை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கான அங்கீகரிப்பாகவும் யார் விரித்துச் செல்கிறார்களோ, அவர்கள் மட்டுமே மார்க்சியவாதிகள்.
................. இரு முக்கிய முடிவுகள் இன்று, மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை யார் ஏற்று பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலை நாட்டவும், பாட்டாளி வர்க்க புரட்சியை தொடர்ந்து முனைபவர்களுமே மார்க்சிய வாதிகள் ஆவர். இதை ஏற்க மறுத்து மார்க்சியத்தை உச்சரித்தபடி எதைச் சொன்னாலும் அது திரிபாகவும், முதலாளித்துவ கோட்பாடாகவுமே இருக்கும்.
மார்க்சியம் என்பது அது கொண்டுள்ள தத்துவத்தை வரைந்தவர்களான மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனினின், ஸ்டாலின், மாவோ என தொடரும் மார்க்சிஸ்டுகளால் வரையப்பட்ட தத்துவமாகும். இவர்களின் தத்துவத்தை நிராகரித்த எந்த தத்துவமும் மார்க்சிசமல்ல. மாறாக அது புதிய ஒரு தத்துவம். அது முதலாளித்துவ தத்துவம. இவர்கள் ஜவரும் தமது காலத்தில் இருந்த நிலைமைகளை கவனத்தில் எடுத்து மார்க்சியத்தை வளர்த்தெடுத்தனர். மார்க்சியத்தின் அடிப்படையில் நின்று அதை உயர்த்திப் புரட்சியை நடத்தினர். இவர்களுடைய புரட்சிக் கட்டத்தை பின்வருமாறு வரையறுக்க முடியும். மார்க்ஸ் காலத்தில் மார்க்சியத்துக்கும் அதன் எதிரிகளுக்குமான போராட்டமானது தத்துவார்த்த துறையில், மார்க்சியத்தை ஒரு விஞ்ஞானமாக நிலைநாட்டுவதற்கும் அதற்கு எதிரானவற்றுக்குமாக இருந்தது. லெனினின் காலத்தில் போராட்டமானது பாட்டாளி வர்க்க புரட்சியில் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான கோட்பாடு, யுத்த தந்திரம் ஆகிய துறையில் இருந்தது. மாவோ காலத்தில் போராட்டமானது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சியைத் தொடர்ந்து நடத்திச் செல்வதற்கான கோட்பாடு, யுத்ததந்திரம், போர்த்தந்திரம் ஆகிய துறையில் நடைபெற்றது. பின்னரும் நடைபெறுகின்றது.
மார்க்சியம் எது, திரிபுவாதம் எது என்பது மார்க்சிய, லெனினிய மாவோ சிந்தனையை யார் கடைப்பிடிக்கிறார்களோ அவர்களால் மட்டுமே வேறுபடுத்த முடியும். சோவியத், சீனா மற்றும் திரிபாகிப்போன அனைத்து வகையறாக்களும் மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையை நிராகரித்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை, வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து முதலாளித்துவத்தை மீட்டவர்கள். இன்று மனிதத்தில் சில கட்டுரைகளும், உயிர்ப்பு 3இல் முழுக் கட்டுரையும் மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையை நிராகரித்து, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிராகரித்து, வர்க்க புரட்சியை நிராகரித்தபடி, மார்க்சியத்தை உச்சரித்தபடியே திரிபாக உள்ளது. இவர்கள் மார்க்சியம் என உச்சரிக்கின்ற மார்க்சியம் மார்க்ஸ், லெனினின், மாவோவின் உடையதல்ல. மாறாக மார்க்சியத்துக்கு எதிராக உள்ள தத்துவம். இத்தத்துவம் கடந்த காலத்தில் முற்றாக முறியடிக்கப் பட்டு சவக்குழிகளில் இருந்தவை. இவைகளை காலத்துக்கு காலம் தோண்டியெடுத்து மார்க்சியத்தை குழிதோண்டி புதைத்துவிட முயல்கின்றனர். ஆனால் தொடர்ந்தும் மார்க்சிசம் ஒரு சமூக விஞ்ஞானமாக இருப்பதால் வெற்றி பெற்று வருகின்றது. இனி நாம் கட்டுரைகளை ஆராய்வோம்.
(1) இலங்கையில் தேசங்களின் உருவாக்கம் என்ற கட்டுரையில் உள்ள முக்கிய தத்துவ முரண்பாட்டின் மீது நாம் விமர்சிக்க முயல்கின்றோம்.
"பொருளாதாரம் என்ற ஒரு காரணி மூலமும் வர்க்கம் என்ற ஒரு கருத்தின் மூலமும், சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரச்சனைகளையும் விளக்கிவிட முனையும் பொருளாதாரவாதமானது, தேசிய வாதத்தின் தனித்துவமான பண்புகளை அங்கீகரிப்பதில்லை. அல்லது பெயரளவில் மாத்திரம் அங்கீகரிக்கின்றது. இதனால் வர்க்கப் போராட்டத்தை மதிப்பிடும் அதே அளவுகோலைக் கொண்டு தேசியவாதத்தையும் மதிப்பிட முனைகின்றது.
இதுவே தேசியவாதம் தொடர்பாக எழுகின்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு மையமாகும். தேசியவாதமானது பொருளாதாரத்திலிருந்து வேறுபட்ட தனியான ஒரு கட்டமைப்பாக( ) இனங்காணப்பட்டால் தேசியவாதத்தின் தனித்துவமான பண்புகள், குறிப்பான இயங்கு விதிகள் என்பவை புரிந்து கொள்ளப்பட்டால்- அதாவது தேசியவாதத்தின் பரிபாசைகள் புரிந்து கொள்ளப்படுமாயின் தேசியவாதத்துடன் தொடர்புடைய பல்வேறு அம்சங்கள் மிகவும் வித்தியாசமாக விளங்கப்படுவதை காணலாம்". என தேவதாஸ் மார்க்சியத்துக்கு எதிராக தனது தாக்குதலை தொடுத்துள்ளார். இது முன்பு கரிகாலன் கூறிய வர்க்கமற்ற புலிகளை அங்கீகரிப்பதில் போய் முட்டி நிற்கின்றது.
தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக மார்க்சியம் அங்கீகரிக்கவில்லை அல்லது பெயரளவில் அங்கீகரிக்கிறது என்று கூறியதன் ஊடாக மார்க்சியத்தை கொச்சைப்படுத்தி முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயன்றுள்ளனர். தேசிய இனப்பிரச்சனையை மற்றைய எந்தத் தத்துவத்தையும் விட மார்க்சியம் சிறப்பாக விளங்கப்படுத்தியும், இன்று உலகில் முன்னேறிய தீர்வையும் வைத்துள்ளது. இக்கட்டுரையில் வரும் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டை அங்கீகரித்தும் அதை விளங்கப்படுத்தியும் உள்ளது மார்க்சியமே. இதை மறைக்க சேறடிக்க முயல்வது ஏன்?
சுயநிர்ணய உரிமை தொடர்பாக சோவியத்தில் லெனின், ஸ்டாலின் விரிவான விளக்கத்தை முன்வைத்து விளங்கப்படுத்திய அதேகாலத்தில் சோவியத்தில் தேசிய இன முரண்பாடுகள் கூர்மையடைந்து இருந்ததை மறந்துவிடமுடியாது. போலந்து பிரிந்து போகக் கூடிய சுயநிர்ணய உரிமையை லெனின் அங்கீகரித்த போது ரோசாம்லுக்சம்பேர்க் அச் சுயநிர்ணய உரிமையை எதிர்த்தார். இதுவே லெனினின் தேசிய சுயநிர்ணய உரிமை என்ற புத்தகம்.
மார்க்சியம் தேசிய இன முரண்பாட்டை அங்கீகரிக்கவில்லை அல்லது பெயரளவில் அங்கீகரிக்கின்றது என்ற தேவதாஸின் வாதம் அப்பட்டமான பொய் மாத்திரமின்றி மார்க்சியத்தின் மீதான தாக்குதலாக வெளிவந்ததே. வர்க்கப் போராட்டம், அது சார்ந்த பொருளாதாரமும் தேசியவாதத்தின் தனித்துவமான பண்புகளை அங்கீகரிப்பது இல்லை என்ற தேவதாஸின் கூற்று கரிகாலன் குறிப்பிட வர்க்கமற்ற புலிகளை நிறுவ வாதிடப்பட்டதே. தேசிய இன முரண்பாட்டில் உருவாகும் போராட்டங்கள் பொருளாதாரமற்ற, வர்க்கமற்றதாக இருக்கமுடியும். இது வர்க்கமற்ற சமுதாயம் உருவாகியுள்ளதாக சோவியத்தில், சீனாவில் கூறி முதலாளித்துவத்தை மீள உருவாக்கியதைப் போன்றே. ஏதோ ஏதோ கம்யூனிச சமுதாயத்தில் வாழ்வதாக கற்பனையோ? சமுதாயங்கள் வர்க்கங்களால் உருவானது. வர்க்கங்களால் உருவான சமுதாயத்தில் எழும் முரண்பாடுகள் வர்க்க அமைவுக்குள்ளேயே அமையும்.
தேசிய இன முரண்பாட்டின் தனித்துவமான பண்பு என்பது என்ன. அது கட்டுரையாளர் கற்பனையில் நினைப்பது போன்றது அப்படி ஒன்றும் கிடையாது. எல்லா முரண்பாடுகளும் அவற்றுக்கேயுரிய சிறப்பான இயல்புகளோடு வெளிப்படும். தேசிய இன முரண்பாடும் பொருளாதாரம் சாராது தோன்றுவது இல்லை. இக் கட்டுரையாளர் வசதியாக ஏன் தேசிய இன முரண்பாடு தோன்றியது, அதற்கான காரணம் என்ன என்பவற்றை மூடி மறைத்து விடுகின்றார். தேசிய இன முரண்பாடும் எந்த ஆதாரமும் இன்றி அந்தரத்தில் தோன்றியது இல்லை. இரு தேசிய இனங்கள் ஏன் மோதிக்கொள்கின்றன. இது எது சார்ந்ததாக (மதம்,...இனம்,.......)இருந்தாலும் அது சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வாதமே.
சிங்கள, தமிழ் தேசிய இனத்துக்கிடையிலான போராட்டம் ஏன் தோன்றியது. இது தேவதாஸ் குறிப்பிடும் கற்பனையான தனித்துவமான பண்புகளால் அல்ல. மாறாக சுரண்டும் வர்க்கம் தனது சுரண்டலை தொடர்ந்து பாதுகாக்க இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துகின்றனர். தமிழ் மக்களின் நிலப்பறிப்பு, தரப்படுத்தல் தமிழ் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்தல்... என அனைத்தும் பொருளாதாரம் சார்ந்ததே. பொருளாதாரம் சாரும் போது வர்க்கமாக இனங்காணமுடியும். இங்கு இரு இனங்களின் அனைத்து வர்க்கமும் ஒரு அணியில் உள்ளது போல் அல்லது உள்ளனர் என்ற கூற்றை ஆராயின் ஒரு தேசிய இனத்தின் அனைத்துப் பிரிவினரும் பாதிக்கப்படும் போது தேசிய இன முரண்பாடு என்ற கோசத்தின் கீழ் அணிதிரள்கின்றனர்.
இது எந்த முரண்பாட்டுக்கும் பொருந்தும். ஒரு முரண்பாடு தனக்கே உரிய சிறப்பியல்புகளை கொண்டு இருக்கும். அதன் ஊடாக தனக்கே உரிய இணைவுகளையும் கொண்டிருக்கும். அவை தத்தம் பொருளாதார நலன் சார்ந்து தமது நோக்கில் செயல்படும். இது தேசிய இன முரண்பாட்டிற்க்கும் பொருந்தும். பழம் பெருமைகளைப் பேசினாலும் கூட பொதுவாக, தேசிய இயக்கங்களது இலக்கானது முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்காகவே இருக்கின்றது என்ற தேவதாஸின் வாதம் முழுமையானது அல்ல. ஏனெனில் ஜனநாயகத்தை கோரவேண்டும் எனின் முதலாளித்துவ வர்க்க அடிப்படையான தேசிய நலன் சார்ந்திருக்க வேண்டும். அதற்கான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். இதை விட தேசிய இனமுரண்பாடு முதலாளித்துவ தேசியவாதத்துக்கு பதில் நிலப் பிரபுத்துவவாதத்தை கோரமுடியும். இதை நாம் ஆராயின் இந்தியாவில் சுதந்திரம் பெற்றபோது அங்கு முதலாளித்துவ தேசியம் உருவாக வில்லை. மீண்டும் பழைய இந்தியாவே தொடர்ந்தது. இது வரலாறு முழுக்க நீண்டே உள்ளது. ஏன் எதிர்காலத்தில் புலிகள், தென் ஆபிக்கா காங்கிரஸ் அரபாத்... என தொடரும்.
முதலாளித்துவ தேசியமல்லாத பாட்டாளிவர்க்கப் புரட்சியை முன்னெடுத்த சீனா, என பல்வேறு தேசிய விடுதலைகளை நாம் காணமுடியும். தேச உருவாக்கம் என்பது மிகவும் வேறுபட்ட கூறுகளை அடிப்படையாகக் கொண்டும் நிகழ்ந்தேறுகின்றது. என்ற தேவதாஸின் வாதத்தை பார்ப்போம். வேறுபட்ட நிலைமை, வேறுபட்ட கூறு என்பது என்ன? தேசத்தின் உருவாக்கம் பொருள் சார்ந்த, வர்க்கம் சார்ந்தவையே. எலலாப் போராட்டங்களைப் போல் தேசவிடுதலைப் போராட்டமும் தனக்கான முரண்பாட்டின் அடிப்படையில் சிறப்பு இயல்புகளை வெளிப்படுத்தும். ஆனால் அனைத்தும் பொருளாதாரம் சார்ந்த வர்க்க இருப்புக்கானதே.
(2) தேசியவாதம் குறித்த ஒரு விவாதத்திற்கான முன்னுரை என்ற கட்டுரையை நாம் பார்ப்போம். இதில் உள்ள பல விடையத்துக்கு மேல் பதிலளிக்கப்பட்டுள்ளது. அவைகளை விடுத்து ஆய்வுக்கு எடுத்துக் கொள்கின்றோம்.
தேசியவாதம் குறித்த செவ்வியல் மார்க்சியத்தை ( )சரியான புரிதலைத் தரவில்லை என்ற விமர்சனம் நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது. இந்த நோக்கில் பல புதிய தேடல்களும், விவாதங்களும் மார்க்சியவாதிகளிடையே தொடர்ச்சியாகவே நடைபெற்று வந்துள்ளது...... தமிழ் முன்னேறிய பிரிவினரிடம் இருப்பதெல்லாம் லெனினின், ஸ்டாலின் ஆகியோரது சில கட்டுரைகள் மட்டுமே...... இவை இன்றைய தமிழ் தேசிய இயக்கத்தைப் புரிந்து கொள்வதில் அதிக பங்காற்ற மாட்டாது எனபது குறிப்பிடத்தக்கதாகும். ... தமிழீழ விடுதலைப் போராட்டமானது கோட்பாட்டு ரீதியில் பல பத்தாண்டுகள் பின்தங்கி நிற்கும் இன்றைய நிலையில்.... கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த வார்த்தையும் அதிகநேரத்துக்கு பயன்படமாட்டாது என்பது முதுமொழி.
இந்த கட்டுரையில் வரும் கருத்துக்கள் அனைத்துமே எமக்கு உடன்பட்டவை என்று கூறமுடியாவிட்டாலும் இக்கட்டுரையில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சனைகள் சாதாரணமாக தட்டிக்கழித்து விடக்கூடியவை அல்ல.... இக்கட்டுரை தொடர்பாக விரிவான கருத்துக்களை அக்கறை உடையோரிடமிருந்து (கீழ் கோடு எமது) எதிர்பார்க்கிறோம். என உயிர்ப்பு ஆசிரியர் குழு கட்டுரை மீது தமது கருத்தைக் கூறியுள்ளனர். இங்கு மார்க்ஸ், லெனினின், மாவோ சிந்தனையை நிராகரித்து வருவதால் இது மார்க்சியம் அல்ல. மார்க்சியம் என்பது மார்க்ஸ், லெனினின், மாவோ சிந்தனையே. தேசிய இன முரண்பாடு தொடர்பாக லெனின், ஸ்டாலின் கருத்துக்களை அதன் அடிப்படையை குழிதோண்டிப் புதைத்து அது எமக்குப் பொருந்தாது என்பதன் ஊடாக இவர்களின் மார்க்சியத்துக்கு புறம்பான முதலாளித்துவ தத்துவத்தை மார்க்சிசத்தின் பேரால் உயர்த்தியுள்ளனர். மார்க்ஸ், லெனின், மாவோ சிந்தனைக்குப் புறம்பாக மார்க்சிய சிந்தனைகள் வெளிவந்தன எனின் அது மார்க்சியமே அல்ல. மாறாக அது முதலாளித்துவ சித்தாந்தமே. மார்க்சியமென்பது மார்க்ஸ், லெனின், மாவோ சிந்தனையே. தமிழ் முன்னேறிய பிரிவினரிடம் இருப்பது லெனின், ஸ்டாலின் ஆகியோரின் கட்டுரையே எனச் சொன்னதன் ஊடாக லெனின் மாவோ காலத்தில் இருந்த மார்க்சிய சித்தாந்தத்தை நிராகரித்துள்ளனர். லெனினின், மாவோ சித்தாந்தத்தை ஏற்ற மார்க்சியர்கள் மீது தான் இத்தாக்குதல். இவர்களின் சித்தாந்தத்தை ஏற்காதவர்கள் மார்க்சியர்கள் அல்ல. இதில் உயிர்ப்பும் மனிதத்துடன் சேர்ந்து அடங்கும்.
மார்க்ஸ், லெனின், மாவோ சிந்தனையான மார்க்சியத்தை குழிதோண்டி புதைக்க எண்ணியே பல பத்தாண்டுகள் பின்தங்கி நிற்பதாக கூறி உள்ளனர். பல பத்தாண்டுக்கு முன் மார்க்ஸ், லெனின், மாவோ வரைந்த மார்க்சிய சிந்தனையை தமிழ் மார்க்சிஸ்ட்டுக்கள் கொண்டு உள்ளதாக கூறி இவர்கள் மார்க்சிசம் அல்லாத புதிய தத்துவத்தை (முதலாளித்துவ) ஏற்க வைக்க உயிர்ப்பு முயல்கின்றனர். இது போன்ற குருசேவ், டெங்கும்பல் சோவியத், சீனாவில் செய்ததை நாம் மறந்து விடமுடியாது. அது தான் ஒரு பழமொழியைக் கூறி ஒரு சோவியத், சீனா ஆக்க தமிழ் மார்ஸிஸ்டுக்கள் முயல்கின்றனர்.
இக்கட்டுரையில் முரண்பாடு உண்டு என்றவர்கள் அது என்ன என சொல்ல முடியாதவர்கள் கட்டுரையைத் தட்டிக் கழிக்க முடியாது என கூறி மார்க்சிய விரோத நிலைக்காக தமது வக்காலத்தை தொடர்ந்துள்னர்.
அத்துடன் இது தொடர்பாக அக்கறை உடையோர் இடம் இருந்து கருத்துகோரியது என்பது தமக்கு சார்பானவர்களிடமே. அதாவது மார்க்சிச, லெனினிய, மாவோ சிந்தனையை உயர்த்துபவர்களிடமிருந்து அல்ல. மாறாக இக்கருத்தை ஏற்க கூடியவர்களிடம் அதனால் தான் அக்கறைக்குரிவர்கள் என இக் கட்டுரைக்கு மட்டும் சிறப்பாக கோரியுள்ளனர்.
இடத்திற்கிடம் சூழலுக்குச்சூழல் மிகவும் வேறுபட்ட பரிணமாணங்களைக் கொண்ட தேசியப்பிரச்சனை தொடர்பாக ஒர் விரிவான கோட்பாட்டை உருவாக்குவதில் சகல கோட்பாட்டாளர்களும் தோல்வியையே கண்டுள்ளனர். தேசியப் பிரச்சனை குறித்து ஒன்றுபட்ட முரணற்ற ஒரு கோட்பாட்டை உருவாக்குவதிலுள்ள கஷ்டங்களை பரவலாக பலரும் அங்கீரித்துள்ளனர். இங்கு மார்க்சியமானது தேசியப் பிரச்சனை தொடர்பாக ஒரு முழு நிறைவான கோட்பாட்டை உருவாக்கி முன்வைக்கும் ஆற்றலை தனக்குள் கொண்டிருந்தும் தனது குறுகிய போக்குகளால் ஆக்கபூர்வமற்ற தனது வரலாற்றில் தேசியப் பிரச்சனையை ஒரு எல்லையில் உள்ள பிரச்னையாகவே வைத்திருக்கின்றது.
மார்க்சியமானது தேசியத்துக்கு முக்கியம் கொடுக்கவில்லை எனபது வெறுமனே தற்செயல் விபத்தல்ல. மிகவும் குறுகிய, இறுக்கிய சட்டம் போட்டு வரையறுத்து இது தான் மார்க்சியம் என மார்க்சியவாதிகள் அறைந்துவிட்டால் உலக ரீதியில் நாளுக்கு நாள், சகாப்தத்துக்கு சகாப்தம் தோன்றும் புதிய பிரச்சனைகளின் பரிணாமங்களுக்கு மார்க்சியத்தினுள் இடம் இல்லாமல் போய்விடுகின்றது. என உயிர்ப்பில் தொடர்கின்றனர். உலகில் மார்க்சியத்துக்கு இடம் இல்லாமல் போய்விட்டது என கூறும் முதலாளித்துவாதிகளின் கூற்றைக் கேட்டு மார்க்சியவாதிகள் நகைக்கத்தான் முடிகிறது. ஏனெனில் இன்று மார்க்சியம் அல்லாத முதலாளித்துவ கோட்பாடு உலகில் தனது அடக்கு முறையூடாக தன்னை நிலைநிறுத்துவதையும், முதலாளித்துவக் கோட்பாடு உலகில் உள்ள புதிய பிரச்சனைகளைத் தீர்க்கும் என வாதிட முற்படுபவர்கள் கருத்துக்களில் உயிர்ப்பு சாதாரணமாக தட்டிக்கழிக்க முடியாது எனக் கூறி அவர்களுடன் இணைந்துள்ளனர்.
தேசிய இனப்பிரச்சனை இடத்துக்கிடம் வேறுபட்ட பரிணாமத்தை கொண்ட போதும், அதன் உருவாக்கத்திற்க்கான அடிப்படை வர்க்க முரண்பாடும், பொருளாதார நிலையுமே. தேசிய பிரச்சனை தொடர்பாக விரிவான கோட்பாட்டை உருவாக்குவதில் சகல கோட்பாட்டாளரும் தோல்வி அடைந்துள்ளனர் என்றதன் ஊடாக மார்க்சிசம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். தேசிய இன முரண்பாடு அதன் வளாச்சியின் மீது மார்க்சிசம் மிகத் தெளிவான ஆய்வையும் உயர்ந்தபட்ச தீர்வையும் வைத்துள்ளது. ஒரு தேசிய இனம் சுயநிர்ணய உரிமையை கோரவும் அது பிரிந்து செல்லவும் முடியும் என்ற அதி உயர் தீர்வையும் அங்கீகரித்துள்ளது. தேசிய இன முரண்பாடும் அதன் தீர்வை கோரும் பிரிவினரின் அதிஉயர் தீர்வு பிரிவாகவே உள்ளது. அதை மார்க்சியம் அங்கீகரிக்கின்றது. அதை முற்போக்கு போராட்டமாக ஏகாதிபத்தியத்தை பலவீனப்படுத்துவதாக மார்க்சியம் விளக்கி உள்ளது. மார்க்சியம் தேசிய பிரச்சனையில் விரிவான கோட்பாட்டை கொண்டுள்ளதோடு தேசிய இன முரண்பாட்டைத் தீர்ப்பதில் வெற்றியும் பெற்றுள்ளது. தேசிய இனப் பிரச்சனையில் ஒன்றுபட்ட முரணற்ற கோட்பாட்டை உருவாக்குவதில் கஸ்டம் உள்ளதாக பலர் அங்கீகரித்துள்ளனர் எனறதன் ஊடாக ஒன்றுபட்ட முரணற்ற கோட்பாட்டைக் கோரி நிற்கின்றனர். அதாவது அனைத்துப் பிரிவு மக்களின் கோட்பாட்டை கோரி நிற்கின்றன. இது சோவியத்தில் குருசோவ், சீனாவில் டெங் கும்பல் அனைத்து மக்களுக்கான அரசு எனச் சொல்லி திரிபை புகுத்தி முதலாளித்துவத்தை மீட்டதை போன்றதே. அன்று அனைத்து மக்களின் அரசு போல் ஒன்றுபட்ட முரணற்ற கோட்பாட்டை கோருவது மார்க்சிசத்தை குழிதோண்டி புதைத்து அதன் மேல் மார்க்சியத்தின் பேரைக் கூறியபடி முதலாளித்துவ இருப்பை உருவாக்கவே. தேசிய இன முரண்பாடு வர்க்கப் போராட்டத்துக்கு உட்பட்டதே.
மார்க்சியம் பிரச்சனையை தீர்க்கும் பலம் கொண்டிருந்தும் தனது குறுகிய போக்கால் தேசியப் பிரச்சனையை எல்லையில் வைத்துள்ளதாம், எவ்வளவு வேடிக்கையான வாதம். மார்க்சியம் தேசிய இனத்தின் அதிஉயர் தீர்வான பிரிவினையை ஏற்கின்றது. அது ஏகாதிபத்தியத்தை பலவீனமாக்குகின்றது. அந்த வகையில் மார்க்சிசம் தீர்க்கும் பலம் கொண்டது. மார்க்சிசம் குறுகிய வட்டத்தில் தீர்க்கவில்லை என்றதன் ஊடாக மார்க்ஸ், லெனின் மாவோ சிந்தனை மீது அது குறுகிய வட்டம் என முதலாளித்துவ கோட்பாட்டில் நின்றபடி குரல் கொடுத்துள்ளனர். லெனின், ஸ்டாலின் தத்துவத்தை குறுகிய வட்டம், இறுகிய வட்டம் எனச் சொல்லி திரிபாக்கி முதலாளித்துவத்தை மீட்டது போல், சீனாவில் டெங் கும்பலும் மாவோவின் தத்துவத்தை குறுகிய வட்டம் எனக் கூறி முதலாளித்துவத்தை மீட்டது போல், இலங்கையில் தேசிய இனப்பிரச்சனையில் மார்க்சிய அடிப்படையை ஏற்று தீர்வை நாடுபவர்களை தாக்கி அழிக்க முயன்றுள்ளனர்.
மார்க்சிசம் தேசிய இனப்பிரச்சனைக்கு முக்கியம் கொடுக்கவில்லை இது தற்செயலான நிகழ்ச்சியல்ல. குறுகிய, இறுகிய, சட்டம் போட்டு இதுதான் மார்க்சிசம் என அறைந்து விட்டது. இதனால் உலகில் புதிய முரண்பாடுகளை கையாளுவதில் மார்க்சியத்துக்கு இடம் இல்லாமல் போய்விட்டது எனக் கூறிய உயிர்ப்பு இதை சாதாரணமாக தட்டிக்கழிக்க முடியாதாம். மார்க்சியவாதிகள் முதலாளித்துவ வாதிகளைப் பார்த்து சிரிப்பதுடன் அவர்களின் அழிவை சுட்டிக்காட்டியும் வருகின்றனர். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ காலங்காலமாக மார்க்சிசத்தை பாதுகாத்து சகல திரிபு எதிர்ப்புரட்சிவாதிகள் இடத்திலிருந்து பாதுகாத்து வந்த அடிப்படை மார்க்சியத்தை தாக்குகின்றனர். அன்றும் இதை உயர்த்தி மேற்கூறிய ஆசான்களின் தத்துவத்தின் மீது தாக்குதலைப் பொழிந்தனர். அது மீண்டும் எம்மண்ணில் எம்போராட்டத்தில் எழும்புவது எதிர்பார்த்தவையே.
இதைக் காப்பாற்ற உயிர்ப்பு பல பத்தாண்டுகள் பின்தங்கி நிற்பதாக கூறி மார்க்சியத்தை குழிதோண்டி புதைக்க முயன்றுள்ளனர். ஏனெனின் மார்க்சியம் என்பது மார்க்ஸ், ஏங்கல்ஸ, லெனின், ஸ்டாலின், மாவோவின் தத்துவங்களே. இது மார்க்சியம். இதற்கு அப்பால் உள்ளவை மார்க்சியத்துக்கு எதிரான முதலாளித்துவக் கோட்பாடே.
ஈழம் தொடக்கம் ஸ்காட்லான்ட் ஊடாக அஜர்பைஜான் வரையும் இன்று ஒரு கூர்மை அடைந்த பிரச்சனையாகவும்....... சமூகசக்தியாகவும் விளங்கும் தேசியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமையால் உலக ரீதியில் மார்க்சியத்தின் தோல்வியும் தவிர்க்க முடியாததாகின்றது. பெண்கள், நிற, சூழல், பிராந்தியம் போன்ற பல பிரச்சனைகளில் முக்கியமான தேசியப்பிரச்சனை மார்க்சிசம் தன்னை காலகாலமாக சுற்றிக் கட்டிவைத்துள்ள அரணை உடைத்து ஒரு பரந்த சட்டத்தில் வைத்து பிரச்சனைகளை அணுகுவதற்கு வற்புறுத்துகின்றது என கட்டுரை தொடர்கிறது. இவ் விவாதமும் அதன் கோட்பாடும் முதலாளித்துவ இருப்புக்கானதே. அதுதான் மார்க்சிசம் உலகில் தோல்வி பெற்று விட்டது என ஏகாதிபத்தியவாதிகளுடன் நின்று குரல் கொடுக்கின்றனர்.
மார்க்சியம் இன்று உயிர்வாழ்வதுடன் புரட்சியின் தலைமைச் சக்தியாகவும் இன்று உலகில் வீரநடை போடுகின்றது. ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தேசிய இன முரண்பாடும் மார்க்சியத்தினால் உருவானதாக கூறி, ஏகாதிபத்தியவாதிகள் மார்க்சியவாதிகளை பயங்கரவாதிகள் என்றது போல் ஒன்றுக்கு ஒன்று சம்மந்தமில்லாத விடயங்களை உளறிக் கொட்டுகின்றனர். ஈழப்போராட்டம் உருவானது மார்க்சியத்தால் அல்ல மாறாக சுரண்டலை அடிப்படையாக கொண்ட ஏகாதிபத்திய நலன் பேணும் தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ பிரிவினராலேயே உண்டாக்கப்பட்டது. இது உலகில் எந்த நாட்டுக்கும் விதிவிலக்கின்றி உள்ளது.
முன்னைய கம்யூனிஸ்ட் நாடுகளைப் பொறுத்தவரையில் புரட்சியின் காலத்தில் தேசிய இன முரண்பாட்டின் கூர்மையான நிலையிருந்த போதும், மார்க்சியம் அவர்களுக்கான சரியான தீர்வை வழங்கிய போது ஒன்றுபட்ட புரட்சியாக மாறி ஒரு நாட்டில் பலதேசிய இனங்கள் கொண்ட அரசாக மாறியிருந்தன. ஆனால்; புரட்சியைக் கைவிரித்து திரிபை ஏற்று எல்லா மக்களுக்கான அரசு உருவாக்கிய போது அங்கு முதலாளித்துவ மீட்சியும், அங்கு தேசிய இன அடக்குமுறையும் உருவாக்கப்பட்டது. ஆகவே வளர்ச்சிபெற்று இவை தனி அரசுகளாக மாறிவிட்டன, மாறிவருகின்றன. இந்நிலைமை என்பது மார்க்சியத்தை கைவிட்டதிலிருந்தே ஆரம்பிக்கின்றது. பெண்கள், நிற, சூழல், பிராந்தியம், தேசியம் என அனைத்துக்கும் மார்க்சியம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற வாதம் கேடுகெட்ட கடைக்கோடித்தனமான முதலாளித்துவ கோசமே. மேற்குறிப்பிட்ட அனைத்தையுமே மார்க்சிசம் மிகச் சிறப்பாக விளக்கியுள்ளது. மார்க்சியத்தை ஏற்றவர்கள் இப்பிரச்சனைகள் மீது முற்போக்குப் பாத்திரத்தை முன்னெடுத்து தீரமிக்க போராட்டத்தை நடாத்தினர், நடாத்திவருகின்றனர். இது வரலாறு நெடுக நீண்டுள்ளது. மார்க்சியத்தை நிராகரித்த யாரும் எந்தக் கோட்பாட்டாளரும் இப்பிரச்சனைகள் மீது முற்போக்கு நிலையை கடைப்பிடித்ததில்லை. கடைப்பிடிக்கவும் முடியாது. மார்க்சியம் என்பது ஒன்றே. இது இரண்டோ, மூன்றோ அல்ல. மார்க்சியம் என்பது ஒன்றுமட்டுமே உள்ளது. மார்க்சியத்தை ஒழுங்கமைத்து அதை சமூகவிஞ்ஞானமாக நிறுவியவர் மார்க்ஸ். மார்க்சியத்தை நிராகரிப்பவர்கள் மார்க்சின் கோட்பாடுகளையே நிராகரிக்கின்றனர்.
எல்லோருக்குமான கட்சி என்பது பாட்டாளி வர்க்கத்தை முதலாளிக்கு சேவை செய்யக் கோருவதே. திட்டம்... என அனைத்தும் கொண்டிருக்கும். இது இறுகியது, குறுகிய, சட்டம் போட்டு உள்ளது என்றதன் ஊடாக அராஜகத்தை(இங்கு அராஜகம் என்பது மார்க்சிய கருத்து ஆக்கத்தில்)கோருவதுடன் பாட்டாளி வர்க்கம் அரசு ஆணையில் ஏறுவதை சகிக்க முடியாதவர்களின் கூக்குரலே இக்கட்டுரை.
மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் மார்க்சிய தத்துவங்கள் அதன் சமூக விஞ்ஞான இயஙகியலாகும். மார்க்சிய அடிப்படையை உடைத்து எல்லோருக்குமான ஒரு கட்சியாக சீரழிக்க கோருவதை எந்த மார்க்சி;;;;;;;;;;;;;;ஸ்ட்டும் நினைத்துக் கூட பார்க்கமாட்டார்கள் என்பது மட்டுமின்றி அதற்கு எதிராக தீரமிக்க போராட்டத்தை நடத்துவர். கடந்த காலத்தில் அதற்காக போராடி பாதுகாத்து எம் கைகளில் தந்துள்ள நிலையில் நாம் அதற்காக போராடி புரட்சியை முன்னெடுக்கும் பணி எம் எல்லோருக்கும் உள்ளது. எல்லா வர்க்கப் பிரிவினரும் தமது வர்க்க நலன்களின் அடிப்படையில் ஒவ்வொரு பிரச்சனையையும் ஆராய்வர். அந்த வகையில் மார்க்சிஸ்ட்டுக்களை அதை கைவிட கோருவது என்பது பாட்டாளி வர்க்கத்தை முதலாளித்துவத்துக்கு சேவை செய்ய கோருவதே. இதை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது என்பதுடன் இக்கோட்பாட்டை திட்டவட்டமாக முறியடிக்க வேண்டும். இதுவே இன்று தமிழ் முற்போக்கு பிரிவினரின் பிரதான கடமையாகும். தேசியவாதமானது முதலாளி வர்க்கத்தின் சித்தாந்தமாகவே பார்க்ப்பட்டது. ஏனெனில் தேசியவாத சித்தாந்தமானது நிலப்பிரபுக்களுக்கு எதிராக வளர்ந்து வந்த முதலாளிவர்க்கத்துக்கு சேவை செய்தது. என்று கட்டுரை தொடர்கிறது.
இது ஒருபக்கம் மட்டுமே சரியானது. நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டங்கள் பாட்டாளிவர்க்கப் புரட்சியை முன்னெடுக்க முடியும். இதை மார்க்சியம் ஏற்றுள்ளது. தேசியப் போராட்டம் என்பது ஒரு நாட்டில் இருந்து பிரிவது மட்டுமல்ல காலனி, நவகாலனி நாடுகளின் விடுதலையும் தேசியவிடுதலைப் போராட்டங்களே. ஒரு நாட்டிலிருந்து இன்னுமொரு நாடு பிரியக்கோரி ஒரு இனம் போராடின் பெரும் தேசியஇனம் அல்லது அடக்கும் இனப் பாட்டாளிகள் பிரிவினையை அங்கீகரித்த சுயநிர்ணய உரிமையை வழங்க வேண்டும். அப்படி ஒருநிலை இல்லையெனில் ஒடுக்கப்படும் தேசியஇனம் பிரிந்து போவது எந்த வர்க்கம் தலைமையில் உள்ளதோ அதன் தலைமையில் விடுதலை கிடைக்கும். அதுவே தேசிய முதலாளித்துவ பிரிவாக இருக்கவேண்டும் என்பதல்ல. தேசியப்போராட்டம் என்பது ஒரு குறிப்பான வடிவில் உள்ள வர்க்க போராட்டமேயாகும். வர்க்க ரீதியிலான போராட்டத்தில் ஏற்படும் கூர்மையானது தேசியப் போராட்டத்தை மழுங்கடித்து விடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. எனக் கட்டுரை தொடர்கின்றது. வர்க்கப் போராட்டத்தின் கூர்மை தேசிய விடுதலைப்போராட்டத்தை இல்லாமல் ஒழிக்கின்றது. ஏன் எனில் வர்க்கப் போராட்டம் தேசிய போராட்டத்துக்கு சரியான தீர்வை வைத்து அவர்களுடன் ஜக்கியப்பட்டு புரட்சியை நடாத்தி முடிக்கின்றனர். சோவியத் புரட்சியில் தேசிய இனங்கள் ஜக்கியப்பட்டு போராடியதும், சீனாவில் தேசியம் ஜக்கியப்பட்டு போராடியதும் வரலாறு. அந்நாடுகளில் மார்க்சியத்துக்கு துரோகம் இழைத்த தேசிய இனங்களுக்கு மார்க்சியம் வழங்கிய உரிமையை மீறிய போது மீண்டும் தேசிய இனங்கள் போராடின. இன்று பிலிப்பைன்ஸ்சில் மிந்தானா தேசிய விடுதலை இயக்கம், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஜக்கியப்பட்டு போடுகின்றனர்.
எனவே மார்க்சியம் சரியாக முன்னெடுக்கும் புரட்சிகளில் தேசிய இனமுரண்பாடு மார்க்சியத்துக்குள் துரோகம் இழைத்து புரட்சி காட்டிக் கொடுக்கப்படும் போது மீண்டும் தேசிய இன முரண்பாடு முன்னுக்கு வருவது தவிர்க்க முடியாது. ....
....ஏகாதிபத்திய யுத்தங்களும், தேசிய விடுதலைப் போராட்டங்களும் உலகளாவிய போக்காக இக் கால கட்டத்தில் மாறிவிட்டுள்ளது. இங்கு தேசிய வாதம் மறைவதற்குப் பதிலாக தேசியவாதமே பிரதான போக்காக மாறி மார்க்சிய போராளிகளையே உள்ளிழுத்துக் கொண்டுள்ளதைக் காணமுடியும். என கட்டுரை தொடர்கிறது. இன்றைய சகாப்தம் வர்க்கப்போராட்ட சகாப்தமே. இன்று எங்கும் எல்லா இடத்திலும் என்றும் இல்லாதவாறு வர்க்க முரண்பாடுகள் கூர்மையடைந்து போராட்டம் வீறுகொண்டுள்ளது. தேசிய விடுதலைப்போராட்டமும் வர்க்கப் பேராட்டமே. தேசிய விடுதலைப் போராட்டம் வர்க்கப் போராட்டத்தின் பகுதிப் போராட்டமாகவே உள்ளது. இம் முரண்பாடு சிலவேளையில் பிரதான முரண்பாடாக முன்னிலைiயில் இருக்கலாம். ஆனால் எப்போதும் வர்க்கப் போராட்டத்தால் தான் தீர்வைப் பெறமுடியும். இது எமது போராட்டத்தில் எல்லா இயக்கங்களுக்குள்ளும் கற்றுத் தந்துள்ளன. எந்த முரண்பாடும், எந்தப் போராட்டமும் பொருளாதார வர்க்க முரண்பாடே. ஒவ்வொரு தேசியப் போராட்டமும் வர்க்கம் சார்ந்த பொருளாதாரம் சார்ந்ததே. அங்கேயும் வர்க்கபோராட்டமே நிகழ்கின்றது. சீனாவில், வியட்நாமில்.... எனத் தொடர்ந்;த விடுதலைப் போராட்டங்கள் வர்க்கம் சார்ந்த தேசியவிடுதலைப் போராட்டங்களே. இலங்கைக்கான வர்க்கப் போராட்டம் நடைபெறின் கூட அது இலங்கைக்கான வர்க்கப் போராட்டம். மூன்றாம் உலகநாடுகளோ, முன்னைய சோசலிச நாடுகளோ முதலாளித்துவ நாடுகள் அல்ல. அங்கு தேசிய இன முரண்பாடும், நவகாலனிக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டமாகவே பரிணமிக்கின்றது. இங்கு ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிராக தேசியவாதம் எழுவது இயல்பானதே. தேசத்தின் சுதந்திரத்தை மார்க்சிஸ்டுக்களும் கோருவர்.
....... இன்றும் கூட தேசியமே பிரதான போக்காகி புரட்சியாளருக்கே சவாலாகி நிற்கிறது. என்று கட்டுரை தொடர்கிறது. இங்கு புரட்சிக்கு எதிராக தேசியத்தை நிறுத்தி இரண்டும் வேறுவேறு ஆனதாக காட்டி திரிபை நியாயப்படுத்த முயன்றுள்ளார். வர்க்கப் போராட்டம் என்பது அனைத்து முரண்பாடுகளையும் உள்ளடக்கியதே. சில இடத்தில் பிரதான முரண்பாடாக தேசிய இன முரண்பாடும் வேறு இடத்தில் வர்க்க முரண்பாடும் என இருக்க முடியும். ஆனால் எல்லாம் இறுதியில் வர்க்கப் போராட்டத்தில் தான் தீர்வைப் பெறமுடியும். சமுதாயத்தில் தேசிய முரண்பாடு மட்டும் வானத்திலிருந்து விழுந்து விடவில்லை. மாறாக சமுதாயத்தில் பொருளாதார அடிப்படையில் எழும் ஒரு முரண்பாடே. பொருளாதார அடிப்படையில் உருவான தேசிய முரண்பாடு வர்க்கப் போராட்டத்தில் மட்டுமே தீர்வைப் பெறமுடியும். மாறாக வேறு எந்த வழியிலும் பெற முடியாது. முரண்பாடும் அதன் தீர்வும் வர்க்கப் போராட்டத்துக்கு உட்பட்டதே. எந்த புரட்சியாளருக்கும் எல்லா முரண்பாடும் போல் இதையும் கையாளும் ஒரு விடையமே.
தேசத்தை மேற்கட்டுமானங்களின் ஒன்றாக கருதி அடிப்படையான உற்பத்தி முறையிலான மாற்றமானது தேசியத்தை மாற்றி விடும் அல்லது இல்லாமற் செய்துவிடும் என்பதும், தேசியத்தை பொருளாதாரக் காரணிகளே தீர்மானிப்பதாக குறைத்து மதிப்பிடுவதும் வெறும் யாந்திரிகமான கருத்துக்களாகும். இவை பொருளாதார வாதத்தின் அப்பாற்பட்டவையாகும். இது தேசியத்தின் சார்பளவிலான சுயாதீனப் பண்பை அதன் அரசியல் அம்சத்தை, வரலாற்றை, ஏன் அடிப்படையான சமூக யதார்த்தத்தையும் மறுக்கும் போக்காகும். தேசம் என்பது வெறும் மேற்கட்டுமானமல்ல. மொழி போன்றே தேசமும் அடிக்கட்டுமானத்தின் ஒரு பகுதியாகும். ஈழத்தில் தேசியமானது எரியும் பிரச்சனையாக இருக்கும் போது சர்வதேசியம் என்ன சொல்கின்றது என்பது முக்கியமானது அல்ல. இங்கு சர்வதேசியம் தான் மேல் கட்டுமானத்தைச் சேர்ந்ததாகும். அதனால் தான் வரலாற்றில் அவை சுலபமாகத் தூக்கி எறியப்பட்டன.
தேசம் மேற்கட்டுமானங்களில் ஒன்றானதால் வரலாற்றில் நிரந்தரமில்லாத தற்காலிகமான ஒரு வகையினைச் சேர்ந்ததாகும் என்று மார்க்சியம் கொண்டிருந்த நம்பிக்கையானது மானுடத்தின் மானுடவியல் கூறுகளை, இயல்பான போக்குகளை மறுதலித்ததொன்றாகும். தேசம் என்பது வரலாற்றில் நிரந்தரமற்றது என்பது ஒருவகையில் உண்மையானதே என்ற போதிலும் இன்னோர் வகையில் இந்தக்கூற்றானது பொய்யானதுங் கூட என மார்க்சியத்தை குழிதோண்டி புதைக்க முயன்றுள்ளார். மார்க்சியத்தை வரலாறு தூக்கி எறிந்து விட்டது எனக் கூறி தனது முதலாளித்துவ கோட்பாட்டை உயர்த்தி நிற்கின்றனர். அதனால் தான் ஈழத்தில் தேசியத்தை ஆராயும் போது சர்வதேசியம் எனச் சொல்கின்றது என்பது முதன்மையானது அல்ல என்கின்றார்கள். அதாவது முதலாளித்துவவாதிகளே சர்வதேசியத்தை தூக்கி எறிவார்கள். வரலாற்றில் மார்க்சியம் தூக்கி எறியப்பட்டது என்பது முழுப் பூசணிக்காய் சோற்றில் மறைக்க முயலும் நாடகமே. வரலாறு மீண்டும் மீண்டும் மார்க்சியத்தை உயர்த்துவதுடன் உயிர்வாழ்வதும் அதுவே. புரட்சியின் தத்துவமாக இன்று வீறுநடை போடுகிறது.
மார்க்சியம் தோற்றுவிட்டது எனக் கூறி மார்க்சிய லெனினிய, மாவோ சிந்தனையை குழிதோண்டி புதைக்க முயல்கின்றார். ஆனால் மார்க்சியத்தை உச்சரித்தபடி உள்ள இம் முதலாளித்துவவாதிகள் என்ன தான் திரித்து புரட்டினாலும் மார்க்சியம் உயிர்வாழ்வது தவிர்க்க முடியாதது. ஏன் எனின் அதுவே இன்று உலகில் உள்ள ஒரே ஒரு சமூக விஞ்ஞானமாகும். சோவியத், சீனா தோல்வியல்ல. மாறாக மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ மீண்டும் மீண்டும் குறிப்பிட்டபடி (இதை கரிகாலனின் கட்டுரையில் பார்க்கவும்) திரிபுவாதிகள் மார்க்சியத்தை உச்சரித்தபடி முதலாளித்துவத்தை மார்க்சியத்தின் மீது நிறுவினர். இதை மார்க்சியம் தோற்றது என அதே திரிபு வாதிகள் உடன் (குருசேவ் டெங் கும்பல்) கூட்டுச் சேர்ந்து கத்துவதால் மார்க்சியம் மரணித்து விடாது.
தேசியம் என்பது மேல்கட்டுமானமே. தேசியத்தில் எழுச்சி அடிக்கட்டுமான பொருளாதாரத்தில் எழுவதே. எந்த தேசிய போராட்டமும் அடிப்படை பொருளாதாரத்தில் இருந்தே எழுகின்றது. சேவியத்தில் சோசலிச புரட்சி அடிக்கட்டுமான பொருளாதார தீர்வை தீர்க்கும் போது தசியம் மறைந்து விட்டது. மீண்டும் சோவியத்தில் முதலாளித்துவ மீட்சி அடிக்கட்டுமான பொருளாதாரத்தை தகர்த்த போது மீண்டும் தேசிய போராட்டம் எழுகின்றது.
தேசியம் என்பது வரலாற்றில் நிரந்தரமற்றது என கட்டுரையாளர் ஏற்று அதை தலைகீழாக புரட்டி நிரந்தரமானது என குத்துக்கரணத்தை அடிக்கின்றார். இங்கு அது அல்லது இது என சந்தர்ப்பவாதத்தை நியாயத்தை இருபக்கமும் தொடர்ந்து கையாளும் ஒரு வித புரட்டலே. ஒன்றில் உண்மை எனின் அது பொய்யாக இருக்காது. இரண்டுமாக இருக்க முடியாது. இதுவே இக்கட்டுரை முழுக்க கையாண்டுள்ளார். தேசத்துக்கு சார்பளவிலான சுயாதீனம் என்பது என்ன? சுயாதீனம் என்பது எப்போதும் வர்க்கம் சார்ந்ததே. இன்றைய வர்க்க சமுதாயத்தில் சுயாதீனமானது எதுவும் கிடையாது. எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டது. அது ஒவ்வொரு சடப்பொருளுக்கும் பொருந்தும். இதுபோல் மானுடத்தின் மானுடவியல் கூறுகளை என்பதில் இயல்பான போக்குகளை என்பது என்ன? இயல்பான போக்கு என்று ஒன்று கிடையாது. எல்லாம் ஒன்றுடன் ஒன்று சம்மந்தப்பட்டது. ஒரு மனிதன் அவனின் சிந்தனை, இயக்கம்,... என அனைத்தும் சமூகத்தை அதை ஒட்டிய கருத்து சார்ந்ததே.
ஒரு மனிதன் தேசியத்தை கோருவானாயின் அவன் அத் தேசியத்தின் மீது பொருள் சார்ந்த தேவையை கொண்டவனாவான். இது வேண்டும் எனின் இக்கட்டுரையாளருக்கும் பொருந்தும். இது புலிகளுக்கும் பொருந்தும்.
ஒரு தேசியத்தின் வரலாறு என்பது வர்க்கம் சார்ந்த பொருள் சார்ந்ததே. வரலாறு கடந்து வந்த போது அங்கு வாழ்வுக்கான போராட்டத்தைக் கொண்டதாகவே எப்போதும் இருந்துள்ளது. அங்கு அப் போராட்டங்கள் பொருள் சார்ந்ததாக இருந்ததுடன் சுரண்டப்படுவதும், சுரண்டுபவர்களின் வரலாறுகளும் இருந்துள்ளது. சமூக யதார்த்தத்தை மறுக்கும் போக்கு என்பது என்ன? சமூகம் அதன் இயல்பு அதன் போக்கும் ஒரு பொருளாதார அமைப்பைக் கொண்டதே. அங்கு வெளிப்படும் அனைத்து செயற்பாடும், இருப்பும் எந்த சமூக அமைப்பு உள்ளதோ அது சார்ந்த வர்க்க இருப்பை பேணுவதாகவே இருக்கும்.
மார்க்சியத்தை மேற்கட்டுமானம் எனக் கூறி தேசியத்தை அடிக்கட்டுமானம் எனக் கூறுவது இயல்பில் புலிகள் செயற்பாட்டை நியாயப்படுத்துகின்றது. புலியின் தேசியம் அடிக்கட்டுமானமாகவும் சர்வதேசிய வாதிகளின் தேசியம் மேற்கட்டுமானமாகவும் கூறி, சர்வதேசியம் என்ன சொல்கின்றது என்பது முதன்மையானது அல்ல என்கின்றனர். பின் தாம் மார்க்சியத்தை திருத்துவதாக பிதற்றுவது முதலாளித்துவத்தை நிலைநாட்டவே. இக்கருத்தை ஒத்த கரிகாலன் புலிகளை வர்க்கம் இல்லை என்கின்றார். ஏனெனில் வர்க்கமற்ற சக்திகள் ஆட்சியை அமைக்கக் கோருகிறாh.; புதிய கட்டுரை ஊடாக. அதாவது கட்சி அரசு அமைக்கக் கூடாதாம். எல்லாம் முதலாளித்துவத்தை பாதுகாக்க மார்க்சியத்தை உச்சரித்தபடி வெளிவரும் திரிபுவாதங்களே. தேசமானது எப்போதும் பொருளாதாரக் காரணியால் தான் தீர்மானிக்கப்படுகிறது. அப் பொருளாதாரக் காரணியின் தோற்றுவாயாக உள்ளவை நிறம், மதம், கலாச்சாரம், மொழி,...ஆகும் கூர்மையை தடுக்கவே அரசு திட்டமிட்டு இனமுரண்பாட்டை மொழி ரீதியாக முன்வைக்கின்றது. அது தரப்படுத்தல், நிலப்பறிப்பு,.... என அனைத்து வழிகளிலும் வெளிப்பட்டது. ஈழப்போராட்டத்தின் தோற்றம் பொருள்சார்ந்த வர்க்கப்போராட்டத்தில் தான் எழுந்த தோற்றுவாய்களே நிறம், மதம், இனம்,....என அனைத்தும்.
........ மாறமுடியாத அம்சமான கலாச்சார ஒழுங்கமைவானது ஒரு பூச்சியப் புள்ளியில் இருந்து தொடங்குகிறது. இந்த தொடக்கப் புள்ளி சடங்குகள் சம்பிரதாயங்கள் போன்றவற்றை திரும்பதிரும்ப செய்வதற்கு வழிவிடுவதால், இந்த காலம் மீள முடியாததாகியது. இது வரலாற்றில் பழங்குடிகள் தொடக்கம் தேசம் வளர்ந்து இன்றும் இன்னும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியுடன் வளர்ந்து கொண்டே போகும் அம்சமாக உள்ளதே ஒழிய தேய்ந்து போகும் அம்சம் இல்லை.
இப்படியாக மானுடத்தில் பதித்துவிடும் அம்சங்கள் தேசியத்துக்கான ஒரு அர்த்தத்தைத் தருகின்றது. இது போன்ற இயற்கையான மானுடவியல் அம்சங்களை விளக்குவதற்கு குறுகிய மார்க்சியப் பார்வையில் இடமில்லை. வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தில் நாங்கள் என்ன உற்பத்தி செய்கின்றோம் எதனை சிருஷ்டிக்கின்றோம் என்று அறியலாமே ஒழிய நாங்கள் எவற்றை தீர்மானிக்க முடியாது என்று அறியவோ வழியில்லை என கட்டுரை தொடர்கிறது. இவ்விடத்தில் தான் மேல் விவாதத்தை விட சிறப்பாக தங்களை இனம் காட்டுகின்றனர். ஆனால் உயிர்ப்பு இதை சாதாரணமாக தட்டிக்கழிக்க முடியாது எனக் கூறி தோள்களில் கைபோட்டபடி ஆசிரியர் தலையங்கத்தின் ஊடாக எம்மை தாக்கி தமது வர்க்கத்தன்மையை காட்டிவிடுகின்றனர். வரலாற்றை தவிடுபொடியாக்கிய மார்க்சியத்தை உச்சரித்த போலிகளின் முகமூடியின் பின் ஒழிந்திருப்பது எந்த வர்க்கம் என்பதைப் பார்ப்போம். பொருள்முதல்வாதம் ஊடாக நாங்கள் எவற்றை தீர்மானிக்க முடியாது என்று அறியவோ, எவற்றால் உருவாக்கப்படுகின்றோம் என்று அறியவோ வழியில்லை என்பதன் ஊடாக கருத்துமுதல் வாதம் மூலம் அதாவது கடவுளே எல்லாம் படைக்கின்றார் அவரே எல்லாம் அறிவார் என வக்காலத்து வாங்குகின்றார்கள் மார்க்சிய முகமூடிகள். அதுதான் வரலாற்றில் கலாச்சாரப் பூச்சியத்தில் இருந்து எந்த சமுதாயத்திலும் தோன்றுவதாக பிதற்றியுள்ளனர். கடவுளால் அருளப்பட்ட இப்பூமியும் அதன் செயல்களும் பூச்சியத்திலிருந்து தோன்றுவது தவிர்க்க முடியாது எனக்கூறி முதலாளித்துவ இருப்பை பாதுகாக்க மார்க்சிய முகமூடிகள் பிரயத்தனம் செய்கின்றனர். உயிர்ப்பு ஆசிரியர் குழுவோ இக்கட்டுரையை போட்டு சாதாரணமாக தட்டிக்கழிக்க முடியாது எனவும் பின் கட்டுரையில் முக்கியமான பகுதி என கறுப்பால் அடையாளமிட்டு மார்க்சிய சூத்திரத்தில் இருந்து வளர்கின்றார்களாம். இதை யாருக்கு போய் சொல்லி அழ. உயிர்ப்புக்குமா? மனித வரலாறு என்பது பூமி உருவான நாட்கள் முதல் இருந்ததில்லை மாறாக மனித இனம் பல லட்சம் ஆண்டுகள் பின்னே உருவானது. மனித இனம் உருவான உடன் கலாச்சாரம் உருவாகிவிடவில்லை. அவர்கள் பல ஆயிரம் வருடங்கள் வெறும் மந்தைக் கூட்டங்களாக வாழ்ந்தனர். இதன் பின் சொத்துரிமையை சமூகம் பேணத்தொடங்கியவுடன் கலாச்சாரம் உருவாகியது. மக்கள் தமது சக்திக்கு முடியாதவைகளை கண்டு அவற்றை நோக்கி வழிபட்டனர். இது கூட்டத்துக் கூட்டம் மாறுபட்ட வடிவில் இருந்தது. இது மனித சமுதாய வளர்ச்சியில் பல வழிபாட்டுப் பொருட்கள் இன்று மனிதனால் வெல்லப்பட்டு வரும் போது தகரத் தொடங்கியது. மனிதனின் கலாச்சாரம் என்பது வழிபாட்டுடன் கூடிய ஆணாதிக்க சமுக உருவாக்கதுடன் பொருட்களை சொத்தாக மாற்றியதில் இருந்து தொடங்கியது. இன்று பல தகர்ந்துள்ளது. புதிய கலாச்சாரமாக இன்று உள்ள அரசு அமைப்புக்களை ஒட்டி காணப்படுகின்றது. ஏகாதிபத்தியம் உள்ள இடத்தில் சீரழிவுக் கலாச்சாரமாக...... வடிவங்களில் மாறுபடும். கலாச்சாரம் என்பது மாறுபடக் கூடியதே. பின் தங்கிய கலாச்சாரம் அடித்து நொருக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.
மாற முடியாத அம்சமாக கலாச்சாரம் உள்ளதாம். இது வரலாற்றை புரட்டுவதே. ஆதிகால சமுதாயத்தின் பெண் தலைமையில் இருந்த சமூகம் இன்று ஆணாதிக்க சமூகமாக மாறியுள்ளது. இது கலாச்சார மாற்றம் இல்லை என்கின்றனர். இங்கு இவர்கள் பேண நினைப்பது என்ன எனின் ஆணாதிக்க சமூகத்தையே. அது தான் கலாச்சார மாற்றம் இல்லையாம். சமூகம் உருவான நாள் முதல் ஆணாதிக்க சமூகம் தொடர்ந்து உள்ளதாம். அது இன்று மாற்ற முடியாதது. பெண்களே வாயை மூடுங்கள். இதுவே கட்டுரை. இதுவே உயிர்ப்பின் மார்க்சிய ஆய்வுக்கான தட்டிக்கழிக்க முடியாத விடையம்.
முதலாளித்துவ சமூகத்துக்கு முன்னிருந்த நிலப்பிரபுத்துவ சமூகம் தகர்ந்த நாடுகளில் நிலப்பிரபுத்துவ கலாச்சாரம் நிலவுகிறதா? இது அல்ல கட்டுரையாளரின் வாதம். மாறாக முதலாளித்துவ கலாச்சாரம் மாற முடியாது பாட்டாளிகளே முதலாளிக்கு கீழ் கைகட்டி வேலைபாருங்கள். எந்த ஏகாதிபத்தியங்கள் பணம் தந்தது இப்படிக் கூற.
யாழ்ப்பாணத்தில் கடந்த தலைமுறையில் தாழ்த்தப்பட்ட மக்கள் வீதியில் செல்லும் போது உயர் சாதியைச் சேர்ந்த ஒருவரின் முன்னால் கைகட்டி நிற்க வேண்டும். இது கட்டுரையாளரின் மாறாதா கலாச்சாரம். இதுவல்ல இவர்களின் வாதம். மாறாக இன்று உள்ள சாதி ஒடுக்குமுறையை மறுத்து இப்படியே இருங்கள் என்றதன் ஊடாக இந்த சமூக அமைப்பையும் கலாச்சாரமும் மாறாது எனக் கூறி தேசியத்தின் மீது விவாதிக்கின்றனர்.
...
இவரின் தேசியவாதம் வர்க்கப்போராட்டத்தை நிராகரிக்க இச்சமூக அமைப்பை நிலைநிறுத்த கலாச்சாரம் மாறாது எனக் கூறி பூச்சியத்திலிருந்து தொடங்குவதாக பிதற்ற உயிர்ப்பு சாதாரணமாக தட்டிக்கழிக்க முடியாது எனக் கூறினர். அதேநேரம் கறுப்பால் முக்கியமானது என உயிர்ப்பு அடையாளமிடுகின்றனர். மார்க்சியத்தை செழுமைப்படுத்துகின்றதாம் இக்கட்டுரை. பாவம் உயிர்ப்பு கட்டுரையாளர் அம்பலப்பட்டதை விட உயிர்ப்போ சேர்ந்து புதைகுழிக்குள் போகின்றனர் அவ்வளவே.
பொருள்முதல்வாதம் எவற்றை நிர்ணயிக்க முடியும், அத்துடன் எவற்றால் உருவாக்கப்படுகின்றது என்பதையும் அறிய முடியும். மனிதனின் தோற்றம் உயிர்வாழ்வு என அனைத்தையும் பொருள்முதல் வாதம் விளக்கியுள்ளது. அத்துடன் நாம் உற்பத்தியை எவ்வளவு என தீர்மானிக்க முடியும் அதுபோல் உற்பத்தி எவ் மூலப்பொருட்களினால் உருவாக்கப்படுகின்றது என பொருள்முதல்வாதம் விளக்கும். எல்லாப் பொருட்களும், எல்லாக் கருத்துக்கும் இப் பொருள்முதல்வாதம் விளக்குவதுடன், தீர்மானிக்கவும், உருவாக்கவும், அழிக்கவும்,.... முடியும்.
உலகில் எழும் அனைத்து முரண்பாடும் பொருளாதார அடிப்படையில் இருந்தே உருவாகின்றன. இதன் வெளிப்பாடுகள் நாட்டுக்கு நாடு பிரதேசத்துக்கு பிரதேசம் மாறுபடும். இம் மாறுபட்ட நிலைமைகளை கையாள நாட்டுக்கு நாடு பிரதேசத்துக்குப் பிரதேசம், வேறுபட்ட யுத்த தந்திரத்தை கையாள வேண்டும். ஆனால் அனைத்தையும் ஒன்றிணைக்க பொருளாதார இருப்பின் மீது இணைத்து நாட்டுக்குள்ளும் சர்வதேச ரீதியிலும் இணைக்கவேண்டும். அப்போதே புரட்சி நடைபெறும். முரண்பாடுகள் உலகில் ஒரேமாதிரி தோன்றுவதில்லை. அது தேசிய இனமுரண்பாடு, வர்க்க முரண்பாடு......என பலவாக இருக்கலாம். ஆனால் குவிமையம் எப்போதும் வர்க்கப் போராட்டமே. அங்குதான் தீர்வு பெறப்படும். ஒரு தேசம் பிற்போக்குத் தலைமையில் உருவாகின் மீண்டும் அங்கு போராட்டம் உருவாகிறது. இவை எல்லாம் வர்க்கப் போராட்ட மூலம் அதன் தீர்வையும் மீண்டும் மீண்டும் நிறுவுகிறது.
கட்டுரையாளர் குறிப்பிடுகிறார் புரதான கம்யூனிசம், அடிமை உடமை சமுதாயம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், சோசலிசம் போன்ற இந்த வகையான உற்பத்தி முறையூடாகவே வரும் என்பது கற்பனைவாதமாம். எவ்வளவு வேடிக்கையான வாதம் மட்டுமின்றி சோசலிசம் உருவாகாது என வாதிட்டுள்ளார். புராதன கம்யூனிசம், அடிமை உடமை சமுதாயம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், எல்லா நாட்டிலும் இந் நான்கும் உருவாகின்றன. மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரையில் முதலாளித்துவம் பிரதியிடப்பட்டு உள்ளது.
கட்டுரையாளர் இவ் ஒழுங்கு கற்பனையானது என்றதன் ஊடாக சோசலிசம் உருவாகாது எனக் கூறி முதலாளித்துவமே நிலையானது என வாதிட முற்பட்டுள்ளார். அது தான் கலாச்சாரப் பூச்சியத்தில் உள்ளதாம் முதலாளித்துவ கலாச்சாரம் நிலையான மாறாத தன்மை கொண்டதாம். ஆகவே கம்யூனி;;;;;;ஸ்டுக்களே வாயை மூடுங்கள் என்கின்றார். மூன்றாம் உலக நாடுகளில் தரகு முதலாளித்துவம் புரட்சி உருவாக்க தடையாக உள்ளது. அவ் முரண்பாட்டையும் கடக்க அவ் நாடுகளில் புதிய ஜனநாயகப் புரட்சியின் ஊடாக முதலாளித்துவம், சோசலிசம் இரண்டையும் ஒரே புரட்சியாக இணைத்து நடாத்தப்படுகின்றது.
......... வரலாறானது சீராக ஒழுங்கமைவாக முன்னேறுவதாக கொள்வதானது தேசிய, கலாச்சார வேறு பாடுகளை குறைத்து மதிப்பிடுவதாகும். உண்மையில் இது முதலாளித்துவ ஆய்வுவகையைச் சேர்ந்ததாகும். மார்க்சியத்தில் தோன்றியுள்ள இந்தப் போக்கானது மேற்குலக மறுமலர்ச்சி கால மரபில் வேரூன்றியதாகும். இறுதியில் தேசிய வேறுபாடுகள் குறிப்பான தனித்தன்மைகளை அழித்து சர்வதேசிய சோசலிச குடியரசை அமைக்க முடியும் என்ற லெனினியத்தின் விரோதத்துக்கு இட்டுச் சென்றது.
மறுமலர்ச்சிக்கால பகுத்தறிவுவாத மரபானது உணர்வுகள், ஆசைகள் போன்ற மாறுபட்ட அடிப்படைகளை மறுத்ததுடன் சுபாவமான அறிவு உள்ளுணர்வான அறிவு செல்லாததாக்கியது. இங்கு தேசியமானது சுபாவமாகும். சர்வதேசியமானது மனட்சாட்சியாகும். எப்போதும் தேசிய சுபாவம் சர்வதேசிய மனசாட்சியுடன் சண்டையிட்டு கொண்டிருக்கும் ஆனால் தேசியத்திற்கே மக்கள் சக்தி அதிகம் உண்டு.
மறுமலர்ச்சி பகுத்தறிவுவாத மரபானது மார்சியத்தினுள்ளேயே தொடர்ந்து செல்வாக்குச் செலுத்தி வந்தன தேசியம் தொடர்பான பல தவறான நிலைப்பாட்டிற்கு காரணமாகியுள்ளது. சர்வதேசியத்தின் பேரால் ஜரோப்பாவை மையப்படுத்திய கருத்துக்கள் ஒருபுறம், ரஸ்சிய பெரும்தேசியவாதக் கருத்துக்கள் மறுபுறம் வெளிப்பட்டதை மார்க்சிய வரலாற்றில் காணமுடியும். என கட்டுரையாளர் தொடர்கின்றார். எந்த ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக உள்ளீர்கள்? ஏனெனில் ஏகாதிபத்தியம் அலறும் கம்யூனிச அபாயம் சொல்வதை நீங்களும் வாந்தி எடுத்து கம்யூனிச அபாயத்தில் இருந்து தேசியங்களை மீட்க முயற்சிக்கின்றீர்கள்.
மறுமலர்ச்சி காலம் என்பது மார்க்ஸ், ஏங்கல்ஸ் காலகட்டமே. அக்காலத்திலேயே கருத்துமுதல்வாதக் கோட்பாடு பொருள்முதல்வாதக் கோட்பாட்டால் அடித்து நொருக்கப்பட்டது. அக்காலத்தில் தான் மார்க்சியம் ஒரு விஞ்ஞானமாக நிறுவப்பட்டது. அக்காலத்தை மரபானதெனவும், கூக்குரல் இட்டு மார்க்சியம் மீது சேறடிப்பை நிகழ்த்த முயல்கின்றார். பகுத்தறிவுக்கு எதிரான கோட்பாடு கடவுள் உள்ளது என்பதே. பகுத்தறிவாளர்கள் கடவுள் இல்லை என்பதை நிறுவி அதற்கு எதிராகப் போராடியவர்கள். இக்கட்டுரையாளரும், சாதாரணமாக தட்டிக்கழிக்க முடியாத உயிர்ப்பும் மீண்டும் நிறுவ நினைப்பது பகுத்தறிவு கோட்பாட்டை இல்லாது ஒழிப்பதே. அதன் ஊடாக மார்க்சியத்தை அழிப்பதே. லெனின் உலகப் புரட்சியை அறை கூவியது மூலம் உலகில் உருவான முதல் சோசலிச நாடும்;, உலகப் புரட்சிக்கு அறை கூவல் இட்டது. இது கண்டு கம்யூனிச பூச்சாண்டி காட்டிய ஏகாதிபத்தியத்துடன் இணைந்து கட்டுரையாளர் கூறுகிறார் சர்வதேச சோவியத் குடியரசை நிறுவ முயல்வதாக. அதுதான் தேசியத்தை காப்பாற்ற முயல்கின்றராம். அதாவது கம்யூனி;சம் உலகில் எல்லா நாடுகளிலும் இருப்பின் தமக்கிடையில் எல்லைகளை ஒழித்து மனிதர்களை மனிதர்களாக மதிப்பர். தேசம் என்ற ஒன்று இல்லாது போய்விடும். புரதான கம்யூனிச சமுதாயத்தில் எப்படி தேசங்கள் இருக்கவில்லையே அதுபோல் உருவாகும். எல்லைச் சண்டைகள் இருக்காது அப்போது எப்படி தேசியம் எழும்.
ஆனால் தேசியம் எழுப்பிய சுரண்டல் நிலைக்கும் இவ் முதலாளித்துவவாதிகள் கூறுகின்றனர் மாறுபட்ட உணர்வுகள், ஆசைகளை மார்க்சியம் நிராகரிக்கின்றதாம். ஆசை, உணர்வுகள் வர்க்கம் சார்ந்தவை. இம் முதலாளித்துவ கட்டுரையாளரின் ஆசை உணர்வுகள் என்ன எனின் உழையாது சும்மா இருக்க சுரண்டி கொழுப்பது, மாடமாளிகையில் தாம் மட்டும் வாழ்வது, மற்றவர்களை அடக்கி ஒடுக்கி வாழ்வது ஆபாச களியாட்டம் நடத்துவது ...என்பவனே. ஆனால் மார்க்சிஸ்டுக்களின் உணர்வுகளோ, ஆசைகள் எல்லோரும் உழைத்தல், தேவைக்கு ஏற்ப எடுத்தல், சமூக கலாச்சாரத்தை வளர்த்தல் ...என்பனவே. மானிட உணர்வுகள் ஆசைகள் வர்க்கம் சார்நத்து. இதை மார்க்சியம் அங்கீகரிக்கின்றது. நீங்கள் தேசியம் எனக் கூறி சோசலிச சமூகம் உருவாவதற்கு எதிராக நின்று கோருவது சுரண்டல் அடிப்படையையும் அதன் ஆசைகளையும், உணர்வுகளையுமே.
தேசிய சுபாவம் என்பது ஒவ்வொரு வர்க்கத்திற்கும் வேறுபட்டது. சுரண்டல் காரணிகளின் சுபாவம் சுரண்டுவதாகவே இருக்கும். இதுவே உங்களின் உணர்வுகளும் கூட. இது உங்களின் நிலையும் கூட. உங்கள் மனச்சாட்சிக்கு மட்டும் இன்றி நேரடியாகவும் சர்வதேசியத்துடனும் மோதுவீர்கள். ஏனெனில் உங்கள் வர்க்க குணம் அது. ஆனால் நீங்கள் நினைப்பது போல் தேசியம் வெற்றி பெற முடியாது. மாறாக சர்வதேசியமே வெற்றி பெறும். ஏனெனில் உங்கள் தேசியம் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது என்பதுதான்.
உலகில் கம்யூனிசக் கருத்துக்களின் ஆதிக்கத்தை ரஸ்சியா பெரும் தேசியமாக திரித்துப்புரட்டி கம்யூனிசத்தை ஆக்கிரமிப்பாக ஏகாதிபத்தியத்துடன் இணைந்து கூக்குரல் இடுகின்றனர். இதில் இருந்தே சர்வதேச குடியரசை அமைக்க முனைவதாக அழுகின்றனர். கம்யூனிச அபாயம் எந்த வர்க்க இருப்பை தகர்க்கிறது என்பது யாரும் அறிந்ததே. உங்களின் வர்க்க இருப்பை கம்யூனிசத்தினூடாக நாம் தகர்ப்போம் என்பதை மறந்து விடாதீர்கள்.
வரலாறு உங்களைப் போன்ற சுரண்டல் பேர் வழிகளையும் உங்கள் கோட்பாட்டையும் அடித்து நொருக்கும் என்பதை நினைவில் வைத்திருங்கள.; லெனினிசம் என்பது மார்க்சியம். அதுவே உலகை மாற்றும் ஒரு தத்துவம். மார்க்சியத்தின் பேரால் செய்யும் எந்தப் புரட்டலும் நிர்வாணம் ஆனதே. மார்க்சியத்தின் பேரால் திரிபுகள், மார்க்சியத்தை வரட்டுச்சித்திரம் என்று கூக்குரல் இடின் அது நகைப்பிற்குரியதே.
இவைகளை எல்லாம் உயிர்ப்பு கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த வார்த்தைகளும் அதிக நேரத்துக்கு பயன்படாது எனக்கூறி மார்க்சியம் கட்டிக்கொடுத்த சோறு எனக் காட்டி இது அதிக நேரம் பயன்படாது எனக் கூறி மார்க்சியத்தை புதைக்க முயன்றுள்ளனர். முடியுமா? பாவம் உயிர்ப்பு. உயிர்பில் குறிப்பிடுகின்றனர் மார்க்சியமென்பது மார்க்சிய முன்னோடிகளது ஆசான்களது ஒரு சில படைப்புக்களே என்று குறுக்கி கொள்ளாமல் ...... என்றதன் ஊடாக மார்க்சிய விரோத முதலாளித்துவ கருத்துக்களை உயர்த்துகின்றனர். மார்க்சியமென்பது மார்க்சிய, லெனினிய ,மாவோ சிந்தனையே. அதற்கப்பால் உள்ளவை மார்க்சியமில்லை. அவை முதலாளித்துவ கோட்பாடே. முடியுமா உங்களால் மாக்சிய, லெனினிய, மாவோ சிந்தனை அப்பால் உள்ளவை மார்க்சியம் என நிறுவ?
ஸ்லாவிக் தேசங்களை வரலாறு அற்ற தேசங்கள் என ஏங்கல்ஸ் எழுதியபோது ஆசிய மக்களை காட்டுமிராண்டிகள் என மார்க்ஸ் குறிப்பிட்டபோது தேசியம் தொடர்பான தவறான கருத்துக்கள் மார்க்;சிய மூலவர்களிடம்.... என கட்டுரையாளர்கள் மூலவர்கள் மீது சேறடிப்பை தொடர்கின்றனர். சில தேசிய இனங்கள் வரலாறு இல்லாமல் உருவானவையே. அத் தேசிய இனம் உருவான, இருக்கின்ற பிரதேசத்தில் வரலாற்றை கொண்டவர்கள் அல்ல. இந்த வகையில் இலங்கை முஸ்லிம் மக்கள் வரலாற்றை கொண்டவர்கள் அல்ல. மாறாக மதம் மாறி அதன் ஊடாக ஒரு தேசிய இனமாக மதம் சார்ந்த கலாச்சாரத்தின் ஊடாக தம்மை இனம் காட்டினர். ஏங்கல்ஸ் ஸ்லாவிக் தேசிய இனம் இல்லை என விளக்க எடுத்த கோள்களை கட்டுரையாளர் குறிப்பிடவில்லை. மார்க்ஸ் ஆசிய மக்களின் சில குணாம்சங்களை காட்டுமிராண்டி சமூகத்துடன் ஒப்பிட்டாரே ஒழிய மொத்த சமூகத்தையும் அல்ல. மார்க்ஸ் இந்தியப்புரட்சி; தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டார். இக்கட்டுரையாளர்கள் மார்க்ஸ், ஏங்கல்சை பிழையாக காட்ட அவர்களின் கருத்துக்களை திரித்துப் புரட்டி தேசியத்தை பிழையாகப் பார்த்ததாக பிதற்றி உள்ளனர்.
சர்வதேச பாட்டாளிவர்க்க புரட்சியின் பெயரால் பகுதிப் போராட்டங்களால் தேசிய எழுச்சிகளை புறக்கணிப்பதானது அதாவது சர்வதேசியத்தின் பேரால் தேசியம் தியாகம் பண்ணப்படவேண்டும். ..... என கட்டுரையாளர்கள் சுரண்டலை அடிப்படையாக கொண்ட தேசியத்தை கோருகின்றனர். சாவதேசிய பாட்டாளிவர்க்கம் பகுதி போராட்டங்களை நிராகரிக்கிறதாம். எவ்வளவு வேடிக்கையான புரட்டல்கள். பாட்டாளி வர்க்கப் புரட்சி அந்தரத்திலிருந்து இறைவனால் உருவாக்கப்படுவதில்லை. மாறாக தீர்மானிக்கப்பட்டு உருவாக்கப்படுபவையே. பாட்டாளிவர்க்கம் தனக்கான திட்டத்தை உருவாக்கி திட்டமிட்டு தீர்மானித்து செயல்படுகின்றது. அந்தவகையில் அனைத்து பகுதிப் போராட்டத்தையும் தனது கையில் எடுக்கின்றது. பெண்விடுதலை, சாதிய ஒடுக்குமுறை, தேசிய இனமுரண்பாடு, கூலிப்போராட்டம், மாணவப்போராட்டம், நிலப்பறிப்பு....... என அனைத்து பகுதிப்போராட்டத்தின் மொத்த விழைவே சோசலிசம்.
ஆனால் இக் கட்டுரையாளர் தேசியத்தின் பேரால் கோரநினைப்பது பாட்டாளிகள் அல்லாத தேசியவிடுதலையை, அப்போதே உங்களால் சுதந்திரமாக சுரண்டமுடியும். அப்போதே உங்கள் ஆசைகளை, உணர்வுகளை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நிறுவமுடியுமல்லவா?
தேசிய விடுதலைப்போராட்டங்களை பாட்டாளிவர்க்கம் பகுதி போராட்டமாக ஏற்கின்றது, அங்கீரிக்கின்றது. அதற்காகவும் போராடுகின்றது. தேசிய விடுதலைப் போராட்டத்தில் பாட்டாளிகள் பங்கு கொள்ளக் கூடாதா? அப்படியாயின் உங்களுக்கு கைகட்டி சேவகம் செய்யவேண்டுமா? இதற்கு பாட்டாளிகள் ஒருக்காலும் சம்மதிக்கமாட்டார்கள். பாட்டாளிகள் தேசிய விடுதலைப்போராட்டத்தையும் தமது திட்டத்தில் முன்வைக்கின்றனர். மார்க்ஸ்சும் செக், குரோசியா, செக்கோஸ்லாவியா போன்ற தேசங்களது எழுச்சிகளை சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் பேரில் மறுத்திருக்கின்றார். இரண்டாம் உலக யுத்தத்தை அடுத்து கிழக்கு ஜரோப்பிய நாடுகளில் அமைந்த அனைத்து சோசலிச அரசுகளும் ரஸ்சிய பெருந்தேசிய வாதத்தின் அடிப்படையலேயே அமைந்தன. 1956 இல் கங்கேரியிலும் 1960 இல் செக்கோஸ்லாவாக்கியாவிலும் எழுச்சிகள் ரஸ்சியப் பெருந்தேசியத்திற்கு எதிரானவையே. இந்த எழுச்சியை மொஸ்கோ சோசலிசத்தின் பேரால் நசுக்கிய போதும்........
இன்றைய கிழக்கு ஜரோப்பாவின் எல்லா தேசிய இனங்களும் தமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுகின்றன. அப்படியாயின் இத்தனை கால சோசலிச ஆட்சி தேசியப்பிரச்சனையை கையாண்டது தொடர்பாக கேள்வி எழும்புவதை தவிர்க்கத்தான் முடியுமா? 1989 போலந்தில் நடைபெற்ற மாற்றங்கள் ரஸ்சியாவுக்கு எதிரான தன்மை கொண்டிருந்ததை என்னவென்பதாம்.? இத்தேசிய இனங்களின் போராட்டங்களை குறுகிய மார்க்சியத்தில் எங்கு வைப்பதாம்?..... தியாமென் சதுக்கத்தில் மாணவர்கள் மீது ரதம் ஓட்டிய கம்யூனிச தலைமைப் பீடம் என கட்டுரையாளர் மார்க்சியத்தை உச்சரித்தபடி மார்க்சியத்தை திருத்துவதாக தொடர்கின்றார். சோவியத்தில் ஸ்டாலின் மறைவுக்கு பின்பும், சீனாவில் டெங் கும்பல் ஆட்சி ஏறிய பின் அவ்வவ் நாடுகளும் மார்க்சியத்தின் பேரால் திரிபுவாதத்தின் ஊடாக முதலாளித்துவ மீட்சியை ஏற்படுத்தினர். இவை தொடர்பாக இச் சஞ்சிகையில் வரும் கரிகாலனின் கட்டுரையைப் பார்க்கவும். உங்களைப் போல் மார்க்சியத்தை உச்சரித்தபடி முதலாளித்துவ கோட்பாட்டை உயர்த்திய சோவியத், சீனா அதற்கே உரிய முதலாளித்துவ சுரண்டலின் அடிப்படையில் அங்குள்ள தேசிய இனங்களை சுரண்டினர். அதன் ஊடாக அவ் அவ் தேசிய இனங்கள் போராட்டத்தை முன்னெடுத்தன. இவர்களின் போராட்டம் சமூக ஏகாதிபத்தியத்தை பலவீனப்படுத்துவதால் முற்போக்கானது. இதுவே சீனாவிலும் நடைபெற்றது.
இந் நாடுகளில் ஒடுக்குமுறையும் அதற்கு எதிரான போராட்டமும் முற்போக்காக இருந்த அதேநேரம் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்கள் அப்போராட்டத்தை பயன்படுத்தின. ஒடுக்கப்பட்ட தேசிய இனம், மக்களின் போராட்டம் எவ்வளவு முற்போக்காக இருந்தபோதும் ஒருபகுதி இன்னும் ஒரு ஏகாதிபத்தியத்தின் கைக்குள் சென்று பிற்போக்காக இருந்தது. போலந்தில் (சீ-ஜ-ஏ) போப்பாண்டவர் நடத்திய கூட்டு மோசடி இன்று வெளிவந்துள்ளது.
கடடுரையாளர் மார்க்சியத்தின் மீது சேறடிப்பை நிகழ்த்த மார்க்சியத்தை கைவிட்டு முதலாளித்துவத்தை கண்டுகொள்ளாது நடந்தபடி, எல்லாம் மார்க்சியம் எனச் சொன்னபடி தாமும் மார்க்சியத்தையே கதைப்பதாக மார்க்சியத்தின் பேரால் முதலாளித்துவ கோட்பாட்டை உயர்த்தி உள்ளார். இவர்களுக்கு கோர்பச்சேவின் தத்துவமும் மார்க்சியமே. முதலில் மார்க்சியம் என்பது மார்க்சிய லெனினிய, மாவோ சிந்தனையே.
ஒரு சோசலிச சமுதாயத்தில் வர்க்க போராட்டமே எப்போதும் பிரதானமானது. இது சில தலைமுறைகள் நீடிக்கும். வர்க்கப் போராட்டத்தை கைவிட்ட சோவியத், சீனா திரிபாகி இன்று எல்லோரும் அறிவதுபோல் (கட்டுரையாளர் தவிர) முதலாளித்துவமாக மாறியுள்ளது. முதலாளித்துவத்திற்கு உரிய தேசிய இன முரண்பாடுகள்..... என அனைத்தையும் மார்க்சியத்தின் மீது சேறடிப்பதற்காக பயன்படுத்த நினைக்கும் கட்டுரையாளர்கள் குருசேவ், டெங் கும்பல் வாரிசுகளே. மார்க்சியம் குறுகிய, இறுகிய சட்டம் போட்டுள்ளதால் மார்க்சியம் வளரவில்லையாம். மார்க்சியத்தின் இறுகிய கட்சி அமைப்பு விதிகளை நீக்கி கட்சியை எல்லா மக்களின் கட்சி, வர்க்கப் போராட்டம் அற்று விட்டது என 1956இல் சோவியத்திலும் சீனாவிலும் டெங் கும்பல் கூறி கட்சியின் கதவை திறந்தனர். கட்சியின் இறுகிய கட்டமைப்பை உடைத்தனர். அதன் விளைவாக அக்கட்சிகள் திரிபாகி முதலாளித்துவத்தை மீட்டனர். இதை நடைமுறையாக உணர்ந்த மாவோ முன்கூட்டியே கட்சிக்கு எச்சரித்தும் திரிபுவாதிகள்(உங்களைப் போன்றவர்கள்) இறுகிய கட்சி விதியை திறந்து சீனாவை சிதைத்தனர். கட்சி விதிகள் மேலும் மேலும் திருத்தப்பட்டு இறுக்கப்படவேண்டுமே ஒழிய எல்லா திரிபு, பிழைப்புவாதிகளுக்கும் திறக்கப்படுவது தடுக்கப்படவேண்டும்.
ஒருதேசிய இனத்தின் பிரிந்து போகும் உரிமையை அங்கீகரிப்பது என்பது பெருந்தேசிய இனம் எந்தளவுக்கு ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்றனர் என்பதைப் பொறுதத்தே. அத்துடன் ஒடுக்கப்படும் தேசிய இனம் எந்தளவிற்கு முற்போக்காக இருக்கிறது என்பதையும் பொறுத்துள்ளது. இரண்டும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.
தேசிய இனமுரண்பாடு பொருளாதார அடிப்படையில் உள்ள தேசிய இனங்களுக்கு இடையில் சமத்துவமான நிலையை கொண்டுள்ள வரை தேசிய இன முரண்பாடு மறைந்தே இருக்கும். மீண்டும் பொருளாதார அடிப்படையிலான முதலாளித்துவ மீட்சியும் தேசிய சமத்துவமின்மையும் ஏற்படும் போது மீண்டும் போராட்டங்கள் ஏற்படுகின்றன. அவைகளில் சில தேசிய இன முரண்பாடாக வெளிப்படுகின்றன. வெளிப்பட்டு பிரிந்தவைக்குள் மீண்டும் மோதல். ஏனெனில் மக்களின் வர்க்க முரண்பாட்டை மறைத்து சுரண்டலை நடத்த தேசிய இனமுரண்பாட்டை முன்தள்ளுகின்றனர். இதுவே முன்னைய சோசலிச நாடுகளில் நடைபெறுகின்றது. இங்கு பிரச்சனையாக உள்ளவை பொருளாதாரமே.
சீக்கிய, காஸ்மீர்; பிரச்சனையை ஏகாதிபத்திய சதி என காட்டமுனையும் இடதுசாரிகளும் உள்ளனராம் என்றதன் ஊடாக உங்களைப் போன்றவர்களை இடதுசாரிகள் என்கின்றீர்கள். நீங்கள் உட்பட போலி இடதுசாரிகள் எனப்படுவோர் கம்யூனிஸ்டுக்களே கிடையாது. மாறாக மார்க்சிய மூலாம் பூசிய அப்பட்டமான கோர்பசேவ் போன்ற ஏகாதிபத்திய கைக்கூலிகளே. இடதுசாரிகள் முற்போக்கான ஏகாதிபத்தியத்தை பலவீனப்படுத்தும் அனைத்து தேசிய விடுதலை இயக்கங்களையும் விமர்சனத்துடன் அங்கீகரிக்கின்றனர். இதைப் பார்க்க மறுத்து மார்க்சியம் மீது சேறடிக்க மார்க்சியத்தை உச்சரித்தபடி நீங்கள் நடாத்தும் விவாதம் முதலாளித்துவக் கோட்பாடே.
ஸ்கொட்லான்ட் விரும்பின் தானாய் பிரிந்து போகலாம் என முதலாளித்துவவாதிகள் கூறும் போது சோசலிஸ்டுக்கள் இதில் இயலாது என்கின்றனர். எந்த முதலாளித்துவ அரசு அங்கீகரித்துள்ளனர். ஆனால் மார்க்ஸ், ஏங்கல்ஸ் அன்றே அங்கீகரித்தனர். பாவம் மார்க்சியத்துக்கு சேறடிக்க மார்க்சியத்தின் பேரால் முயலும் உங்கள் வாதத்துக்கு மார்க்ஸ், ஏங்கல்ஸ் அன்றே பதில் அளித்துள்ளனர்.
மூன்றாவது உலக நாடுகள் அனைத்தும் தேசம் ஊடாகவே போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. ஏனெனில் அங்கு காலனி) அல்லது நவகாலனி ஆதிக்கம் உள்ளன. அன்னிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் தேசியத்துடன் இணைந்த பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க புதிய ஜனநாயகப் புரட்சி வடிவை முன்னெடுத்தனர். இப் புதிய ஜனநாயகப் புரட்சி என்பது பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரானது அல்ல. மாறாக முதலாளித்துவ நாடுகளில் இருந்து மாறுபட்ட பின்தங்கிய வளர்ச்சியைக் கொண்ட நிலப்பிரபுத்துவ தரகு முதலாளித்துவ நாடுகளின் புரட்சி வடிவை புதிய வடிவிற்கு ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
சீனப் புரட்சி மூன்றாம் அகிலத்தின் வழிகாட்டலுக்கு முரணாக நடைபெற்றது என காட்ட முனையும் இக் கட்டுரையாளர் மார்க்சியத்தின் பெயரால் முனைகிறார். சீனப் புரட்சி மூன்றாம் அகில வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது. இதை மாவோவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் கூறியுள்ளனர். அவர்களே கூறும்போது நீங்கள் இல்லை என்கின்றீர்கள். போராடியவர்கள் அவர்கள். ஆனால் எல்லாக் கட்சிக்குள்ளும், எல்லா நாட்டுக்குள்ளும் முரண்பாடு இருப்பது இயல்பானது. அது எல்லோருக்கும் உள்ளது போலவே சீனாவுக்கும் இருந்தது. இது நட்பு முரண்பாடே. இதை சீனாவும்-மாவோவும் கூறியுள்ளனர். மூன்றாம் அகிலத்திற்கு எதிராக நடந்ததாக மாவோவின் பெயராலும் ஒரு பொய்யை கூறும் உங்கள் மார்க்சிய சேறடிப்பு உங்கள் முதலாளித்துவத்தை காப்பாற்றவே.
சோவியத் 1919களிலும் 1941இலும் தேசிய உணர்வுகள் உந்தப்பட்டன. உண்மையே. அது நாட்டை பாதுகாக்க கோருவதே. இது எந்த நாட்டிற்கும் பொருந்தும். அது நாட்டைப் பாதுகாக்கக் கோருவதே. இதை மார்க்சியம் நிராகரிக்கவில்லையே. ஆனால் சோவியத் தாக்கப்பட்டபோது மற்றைய நாட்டுப்பாட்டாளிகள் தமது நாட்டிக்கு எதிராகப் போராடினர். அவ்வவ் நாட்டுத் தேசிய யுத்த வெறிக்கு எதிராகப் போராடினர். தேசியம் என்பது முற்போக்காக இருந்தால் மார்க்சியம் அங்கீகரிக்கின்றது. சமூக ஏகாதிபத்தியவாதிகளை எதிர்க்கின்றது.
இலங்கையில் சிங்கள இனவெறி அரசின் தேசியவெறி எதிர்க்கப்பட வேண்டும் நீங்கள் வேண்டுமெனின் ஆதரியுங்கள். அதுபோல் புலிகளின் தேசியவெறியும் எதிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல், ஒடுக்கப்பட்ட மக்கள் என்பன தேசியவெறியின் பேரால் நிகழ்கின்றன. நீங்கள் வேண்டுமெனின் சிறிலங்கா, புலிகளின் தேசியத்தை அங்கீகரியுங்கள். ஏனெனில் உங்களுக்கு தேசியம் பூச்சிய கலாச்சாரமாக தொடங்குவதும், பொருளாதார மானுடவியல் கூறுகளைக் கொண்டதும் சர்வதேசியம் என்ன சொல்கிறது என்பதும் தேவையில்லை. மற்றும் உணர்வுகள். ஆசைகள் என்பனவே தீர்மானிக்கின்றன. நாம் இது போன்ற தேசியத்தை எதிர்க்கிறோம்.
சர்வதேசமயமாக்கல் என்பது மார்க்சிற்கு எல்லா தனித் தன்மைகளையும் ஒன்று கலத்தல் என்று பொருள்பட்டது. ஆனால் இன்றைய யதார்த்தத்தில் தேசிய பிராந்திய அபிலாசைகளை உயர்த்திப் பிடிப்பதானது பொருளாதார சமத்துவத்திற்கு அவசியமானதொன்றாகிறது. எல்லாத் தனித்தன்மையையும் ஒன்றுகலக்க முடியும் என மார்க்ஸ் சொன்னதாக மார்க்சியத்தின் பேரால் மார்க்ஸ் மீது சேறடிப்பு நிகழ்த்தப்பட்டு உள்ளது. ஒரு பொருளையும் இன்னொரு பொருளையும் கலக்கும் போது சில பொருட்கள் அப்படியே இருக்க சில பொருட்கள் கலந்தும் விடுகின்றன. ஆனால் இவை அனைத்தும் சில நிபந்தனைகளிலேயே நடைபெறும்.
எச்-2---ஒ--2- என்ற மூலக்கூறுகளை எடுப்பின் அவை தனித்தனியாக இயல்பாக பொதுச் சூழலில் உள்ளன. ஆனால் இவைகளுக்கு இடையில் நிபந்தனைகளை மாற்றும் போது நிபந்தனைகளை மாறும் போது எச்-2----ஒ2 மூலக்கூறுகளாக மாறிவிடுகின்றன. இதுபோல் முதலாளித்துவம் ஒன்று கலக்கின்றது. அங்கு போராட்டம் நிகழ்கின்றது. இது நீடித்த போக்கும் கூட. இதன் முடிவில் முதலாளித்துவம் அழிக்கப்படும். அப்போது வர்க்கமற்ற சமுதாயம் உருவாகும். இது சோசலிச சமுதாயத்தில் சில தலைமுறைகள் வரை தொடரும். ஒரு பொருள் எப்போதும் ஒரு மாதிரி இருக்கமுடியாது. அது மாறிய படி தனக்குள்ளும் செயற்படுகிறது. எனவே ஒரு பொருள் தனக்குள் செயற்பட்டபடி மாறிக் கொண்டிருக்கிறது. இது புறநிலைத்தாக்கத்துக்கு உட்படுவதும் நிகழ்கிறது. தேசியத்தை உயர்த்தும் போதும் பொருளாதார சமபலத்தைப் பேணுவதற்கு என்பது ஒரு பக்கம் மட்டுமே உண்மை. தேசியம் என்பது மற்றைய தேசியத்தை சுரண்டவும் பயன்படும். முற்போக்குத் தேசியத்தை மட்டும் மார்க்சியவாதிகள் அங்கீகரிக்கின்றனர். இன்று மூன்றாம் உலக நாடுகள் தேசிய பொருளாதாரத்தைப் பேண எவ்வளவுதான் முயன்றாலும் பாட்டாளி வர்க்க புரட்சியின்றி முடியாது. ஏனெனில் இன்று ஆட்சி பீடத்தில் உள்ள தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகள் ஒரு தேசிய முதலாளித்துவத்தை அங்கீகரிக்கப் போவதில்லை. அந்த வகையில் தேசிய முதலாளித்துவ தலைமையில் போராட்டம் என்பது மீண்டும் அவர்கள் ஏகாதிபத்தியத்திடம் போய் சரணடைவதில் முடியும். இது பல போராட்டங்கள் எமக்கு கற்றுத் தந்துள்ளது. எனவே தேசிய விடுதலைப்போராட்டம் பாட்டாளி வர்க்கத் தலைமையில் நடைபெறும் போதே சொந்தத் தேசியம் பாதுகாக்கப்படும்.
இன்றைய ஜரோப்பிய ஒன்றிணைவு என்பது கட்டுரையாளர் கருதுவதற்கு மாறாக உருவானதே. அதாவது இன்று உலகை சுரண்டுவதில் உள்ள போட்டி ஜரோப்பிய, ஜப்பான், அமெரிக்காவுக்கு இடையில் கூர்மை அடைந்துள்ளது. அந்த வகையில் ஜரோப்பிய நாடுகள் தமக்கிடையில் சுரண்டலில் மோதல் ஏற்படாது தடுக்கும் வகையில் பங்கிடப்பட்ட சுரண்டலை நடத்த உருவானதே ஜரோப்பிய ஒன்றிணைவு. இதன் விளைவாகவே இன்று ஜரோப்பிய நாடுகளில் ஏற்றுமதிகளில் பங்கிடப்பட்ட சுரண்டல் ஆட்குறைப்புக்கு இட்டுச் சென்றுள்ளது. இதனால் இன்று போராட்டம் தீவிரமாகியுள்ளது. ஒன்றில் சலுகை ஒன்றில் வெட்டு என்ற வகையில் உடன்பட்ட இவர்கள் தமக்கிடையில் தீவிர முரண்பாட்டுடன் மக்களைச் சுரண்டுகின்றனர். இதனால் மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் தீவிர போராட்டம் நாளாந்தம் வெடித்துக் கிளம்புகின்றது.
நாடுகளுக்கு இடையில் பொருளாதார சமபலத்தைக் கோரலாம். ஆனால் அது சுரண்டுவதற்காக இருக்க கூடாது. இன்று ஜரோப்பிய ஒன்றிணைவு பொருளாதார சமபலத்துக்கு அல்ல. மாறாக உலகை கொள்ளையடிப்பதற்கே.
இறுதியாக மார்க்சியத்தின் பேரால் மார்க்கியத்தை குழிதோண்டி புதைக்கும் உங்கள் வாதம் மார்க்சியத்தின் மீதான சேறடிப்பே. மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையை நிராகரிக்கின்ற எந்த தத்துவமும் மார்க்சியம் அல்ல. இவர்களின் சிந்தனைக்கு அப்பால் எழுந்த எந்த தத்துவம் மார்க்சியம்? இவர்களின் தத்துவம் வறட்டுதன்மை கொண்டதெனின் இவர்களுக்கு எதிரான எந்தத் தத்துவம் மார்க்சியம்? மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனை குறுகிய இருண்ட சிந்தனையெனின் எந்தச் சிந்தனை விரிந்த சிந்தனை? பதில் வைக்கமுடியுமா? கட்சியென்பது எப்போதும் இறுகியதே. ஏனெனின் அதுவே மக்களின் தலைமைச் சக்தி. அதுவே போராட்டத்தை வழிநடத்துவது! அது சரியாக இருந்தால் மட்டுமே புரட்சி பாதுகாக்கப்பட முடியும். இது வரலாறு மீண்டும் மீண்டும் கற்றுத்தந்த பாடம்.