பிரான்ஸ், டென்மார்க், புலிகள் அவ்வவ் நாடுகளில் இரண்டமைப்பாக உடைந்துள்ளனர். புலிகளின் வெளிநாட்டுப் பொறுப்பாளர்களின் கண்மூடித்தனமான அடக்குமுறையுடன் கூடிய ஜனநாய மறுப்பு சிலரை வெளியேற்ற வைத்துள்ளது.
இவர்கள் வெளியேறிய போதும் தமிழ்த் தலைமைக்கு விசுவாசமாகவே உள்ளனர். எந்த இயக்கத்திலிருந்து வெளியேறும் எவரும் அரசியல் ரீதியில் கடந்தவற்றை விமர்சிக்காதவரை இவ் வெளியேற்றம் எதையும் சாதிக்காது. மாறாக மீண்டும் ஒரு புலியை நோக்கிச் செல்வர். அதுவே பிரிந்தவர்கள் தமிழீழத்தலைமைக்கு விசுவாசகமாக உள்ளனர்.
தமிழீழம் எனினும் இங்கு தலைமை என்றும் ஒரே அரசியல் வகைப்பட்டதே. வெளியேற்றம் என்பது அரசியல் ரீதியில் முறிவைக் கொண்டிருக்க வேண்டும். பிரிந்தோர் உங்கள் அரசியலை திரும்பப் பாருங்கள். அப்போதே புரியும் எங்கே தவறு இழைத்தீர்கள் என்று. இல்லாதவரை தலைமையில் நபர் மாற்றத்தை எதிர்ப்பதென்பது மீண்டும் ஜனநாயகமற்ற அதே தலைமையைக் கோருவதே.