ஒரு பெண்ணை மானபங்கப்படுத்துவதோ அல்லது கற்பழிப்பதோ அல்லது இம்சிப்பதோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகாது, அதனுடன் இப்படிச் செய்தவர்களை தண்டிக்க மட்டுமே சட்டத்தில் இடம் உள்ளது. இவ்வாறு நீதி மன்றத்தில் திருவாய் மலர்ந்துள்ளார்.

ஒரிசா மானிலத்து பஞ்சாயத்து துறை அமைச்சர் தாமோதர் ரௌத். இவர் பஸந்திபரா எனும் பஞ்சாயத்து சபை தலைவியை மானபங்கப் படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளவர். மாநில முதல்வர் பிஜு பட்நாயக்கோ குற்றச்சாட்டு வெளிவந்த பொழுது அவர் ஓர் ஆண் மகன் எனக்கூறி பச்சையாக தனது வக்கிர ஆணாதிக்க புத்தியை வெளிக்காட்டிக் கொண்டார்.

 

 

நாயன்மாரின் காமவெறி

 

பெண்ணகத்து எழில் சாக்கியப் பேய் அமன் தென்ணாற் கற்பழிக்கத் திருவுள்ளமே

 

சம்மந்தர் தேவாரம்.

 

என்று பாலறாவாயரான சம்மந்தப் பெருமான் (நாயன்மார்களிலேயே வயது குறைந்தவர்) அருள் ஒழுக ஒழுக பாடுகிறார். இதன் அர்த்தம் தெரியுமா? சமயப் போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் சைவத்திற்கும் எதிரான சாக்கிய, சமணப் பெண்களைக் கற்பழிக்க எல்லாம்வல்ல பெருமானிடம் திருவுள்ளம் தேடுகிறார் சம்மந்தர். நாயன்மாரே இப்படி என்றால்? மண்ணும் மனித உறவுகளும்- (கேசவன் எழுதியது)

 

நன்றி தூண்டில்