நாம் சமர் 7 இல் ஆசிரியர் தலையங்கத்திலும் அரபாத்தின் துரோகத்தனத்தை சுட்டிக்காட்டியிருந்தோம். இரண்டு தலைமுறையாக பலஸ்தீன மக்கள் பல தியாகங்களுக்கு மத்தியில் தமது மண்ணுக்காக நடத்திய போராட்டத்தை அரபாத் போன்ற சுயநலவாதிகள் காட்டிக் கொடுத்துள்ளனர்.

 இன்று பாலஸ்தீனம் என்ற நாட்டை இல்லாமல் செய்துள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களின் எலும்புக்காக. கால்களை நக்கப் புறப்பட்டுள்ள அரபாத்தும் அவர் சார்ந்த விடுதலை இயக்கமும், எதிர்காலத்தில் பொலிஸ்காரராக செயற்பட உத்திரவாதம் கொடுத்துள்ளார்.

 

எம்மண்ணில் இது போன்ற E.P.R.L.F, E.R.O.S , PLOT, ENDLF, TELO  கூட்டணி என்பன இந்தியாவினதும், இலங்கையினதும் குண்டி கழுவி பிழைக்கப் புறப்பட்டனர். எம் மக்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தி எமது போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் ஜந்தாம் படையாக சீரழிந்து போயுள்ளன. EPRLF இந்திய அரசின் பொலிஸ் நாயாக மாறி எம் மக்களின் போராட்டத்தை நசுக்க தம்மால் இயன்றளவு கூலிக்கு மாரடிக்கின்றனர். இன்று EPRLF, PLOT, TELO...... என அனைவரும் இலங்கை அரசின் பொலிசாக செயற்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. இன்று இவர்கள் மீது மக்கள் காறி உமிழ்கின்றனர். இது போனற அரபாத்துக்கும் அவர் சார்ந்த விடுதலை இயக்கத்துக்கும் பாலஸ்தீன மக்கள் காறி உமிழத் தொடங்கியுள்ளனர்.

 

அந்த வகையில் இன்று பாலஸ்தீன, இஸ்ரேல் ஒப்பந்தம் எழுதப்பட்ட மை காய முன்பே மக்கள் போராடப் புறப்பட்டுள்ளனர். இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி எங்கும் நாள் தவறாது ஆயிரக்கணக்கில் மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். இப்போராட்டமானது பாலஸ்தீன, இஸ்ரேல் ஒப்பந்தத்திற்கு எதிரானதே.

 

இவ் ஒப்பந்தம் பாலஸ்தீன மக்களை இஸ்ரேலின் கால்களுக்கு சேவை செய்யக் கோருவதே. இன்று வீதியில் இறங்கியுள்ள மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொலை செய்து வரும் இஸ்ரேலிய இராணுவத்தின் கொலைத் தொழிலை, அரபாத்தின் தலைமையில் உருவான 20 ஆயிரம் பொலிசைக் கொண்டு செய்ய இஸ்ரேல்-பாலஸ்தீன ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது. அரபாத்துக்கும், அரபாத்தின் கைக் கூலிகளுக்கும் பாலஸ்தீன மக்கள் பதிலடி கொடுப்பது அதிக நாட்களாகாது. இதை எமது ஈழப்போராட்டம் எமக்கு தெளிவாக உணர்த்தி நிற்கிறது.

 

இதுபோல ஆயிரம் ஒப்பந்தங்களை பிற்போக்குத் தலைமைகள் தமது சுரண்டும் வர்க்கக் கனவுகளுடன் செய்துகொள்ள முடியும். ஆனால் அவை எப்போதும் மக்களுக்கு முடிவைப் பெற்றுத் தந்துவிடப்போவதில்லை.

 

இவ் ஒப்பந்தந்தை ஒரு சில ஜரோப்பிய சஞசிகைகள் ஆதரித்தும். ஆதரிக்காத மாதிரியும், எதிர்த்த மாதிரி இரட்டைத் தன்மையில் கட்டுரைகள் எழுதி உள்ளனர். இது ஈழப்போராட்டத்தில் இந்தியாவின் மாகாண சபையை ஆதரித்த அதாவது ஈ-பி வாயிலாக சீரழிந்ததையே காட்டும். இவ் முற்போக்கு மார்க்சிய வேடதாரிகள் தமக்கு என அரசியல் இன்றி எழுதுகின்றனர்.

 

இது போன்றவைகளை சுட்டிக்காட்டப் புறப்பட்டால் அது சஞ்சிகையின் கருத்து அல்ல தனிப்பட்டவர்களின் கருத்து என கூறி விடுகின்றனர். அப்படியாயின் இந்த முற்போக்குச் சஞ்சிகைகள் தனிப்பட்ட நபர்கள் ஈ-பி (துரோகிகள்) இந்திய ஆதரவு மாகாண சபையை ஆதரித்த கட்டுரையையும் போடுவதன் ஊடாக துரோகிகள் பக்கம் சேர்ந்து விடுகின்றனர்.

 

இரட்டை வேடதாரிகள் மார்க்சிய விரோத வேடதாரிகளும் அரபாத்தின் வாரிசுகளே. பாலஸ்தீனமும் சரி தமிழீழப் போராட்டமும் சரி முழுமையான விடுதலை கிடைக்காத வரை இது போன்ற ஒப்பந்தங்கள் குப்பைத் தொட்டிக்குள் இடப்பட்டவையே. பாலஸ்தீன இஸ்ரேல் ஒப்பந்தம் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை அங்கீகரிக்கும் வகையில்; அமெரிக்கா என்ற பொலிஸினால் பாலஸ்தீன மக்கள் மீது திணிக்கப்பட்டதே. இதை வரலாற்றில் பாலஸ்தீன மக்கள் நிறையவே கண்டுள்ளனர். இது போன்ற பித்தலாட்ட ஒப்பந்தங்களுக்கும் அதை ஏற்றுக்கொள்ளும் துரோகிகளுக்கும் மக்கள் பதில் கொடுப்பார்கள்.