வருண் காந்தி மீது மதவெறி உணர்வை தூண்டும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகிறது.

 

"இந்துவுக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினால் அவனது கையை இந்த வருண் வெட்டுவான். இந்த வருண் காந்தி ஒரு புயலைப் போல..."

 

 

"இந்தியாவில் இருக்கும் முஸ்லீம் தலைகளை வெட்ட வேண்டும்...."

 

"இந்துக்களை தவீர இந்தியாவில் யாரும் இருக்கக் கூடாது. குறிப்பாக முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு போய்விடுங்கள்..."

 

என்று முஸ்லீம்களை தாக்கி பேசிக் கொண்டிருந்தவரின் மதத்துவேஷப்பார்வை சீக்கியர்களின் மீது திரும்பி இருக்கிறது. பிலிபித் தொகுதியில் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வி.எம்.சிங் குறித்து தேர்தல் பிரசாரத்தின் போது வருண் சொல்கிறார் :

 

"இந்த தொகுதியில் ஒரு பைத்தியக்கார சீக்கியர் போட்டியிருகிறார். அவர் முஸ்லீம் ஆதரவாளர். இந்த சீக்கியரை எந்த இந்துக்களும் ஆதரிக்கக்கூடாது. அப்படி ஆதரிப்பவர்கள் இந்து மதத்தின் துரோகிகள்."

 

இவரைப் போலவே இன்னொரு வேட்பாளரான "ரியாஸ் அகமது என்னும் முஸ்லீம் பாக்கிஸ்தான் ஆதரவாளன். இவர்களைப் போன்றவர்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்துவிட வேண்டும்."

 

"இந்திய நாட்டை இந்து ஆளவேண்டும். எனக்கு முஸ்லீம்களின் ஓட்டுக்கள் தேவையில்லை. இந்துக்கள் ஒன்றுபட வேண்டும். இந்துக்கள் எல்லோரும் இந்து ஆதரவாளர்களுக்கு ஓட்டு போட வேண்டும். இந்துக்கள் அப்படி ஓட்டு போடாமல் இருப்பது இந்து மதத்துக்கு துரோகமாகும்."

 

மேலும், "நான் வெற்றி பெற்றால் இந்து இராணுவத்தை அமைத்து துப்பாக்கி உரிமம் கொடுப்பேன்."

 

இப்படி வன்முறையைத் தூண்டும் மிக மோசமான வார்த்தைகளை தொடர்ச்சியாக வருண்காந்தி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். முஸ்லீக்களை தாக்கி பேசியதற்காக ஏற்கனவே இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தன்னை கைது செய்யக் கூடாது என்று முன்ஜாமீன் வாங்கிய வருண்காந்தி மீண்டும் எந்தவித குற்றவுணர்ச்சியுமின்றி தன்னுடன் போட்டியிடும் வேட்பாளர்களை மதரீதியாக கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

 

பிரிபித் காங்கிரஸ் வேட்பாளரான வி.பி.சிங் வருண் காந்தி மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்நிலையில் மக்கள் மத்தியில் வருண் காந்தியின் மததுவேஷம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

 

வருண்காந்தி கூத்து ஒரு பக்கம் பகீரங்கமாக இந்துத்துவவெறியாக உளறிக் கொட்டினால் இன்னொரு பக்கம் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் பிரசாரம் செய்ய சென்றிருந்த பிரியங்கா வருண் காந்தியின் மதச்சார்பான பிரச்சாரத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்திரா காந்தியின் குடும்ப பாரம்பரியத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் பேச்சாக இருப்பதாக குறிப்பிட்ட பிரியங்கா, "வருண்காந்தி பகவத் கீதையை முழுமையாக படித்து புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்" என்று கூறுகின்றார். பகவத் கீதை என்ன போதித்திருக்கிறது மனிதத்தையா? அதை படித்து தொலைத்ததால் தானே மதவெறியில் திரிகிறார் அவர். ஆக இருவருமே இங்கு தங்கள் அரசியல் லாபத்திற்காக இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்துகின்றனர்.

 

நேருவின் பாரம்பரியம் காந்தியின் பெயரை தன் குடும்பப் பெயராக வைத்துக் கொண்டதில் கூட சூழ்ச்சி நிறைந்த அரசியல் பாரம்பரியம் உடையதுதான் நேருவின் பாரம்பரியம். இதே நேருவே தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் இந்து மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறுவதைக் கண்டு, "உங்களுக்கெல்லாம் இனி இந்தியாவில் என்ன வேலை? ஓடிப்போங்கள் பாகிஸ்தானுக்கு" என்று இந்துத்துவத்துக்கு ஆதரவாக கூப்பாடு போட்டவர்தானே ´பூணூல்´ நேரு.

 

இந்தியாவுக்கு வெள்ளையன் சுதந்திரம் கொடுத்துவிட்டு ஓடினானே எதற்காக என்றால், நேருவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் சட்றென சொல்லுவார்கள் "நேருவிடம் இருந்து அவர்கள் பொண்டாட்டிகளை காப்பாற்றிக் கொள்ளத்தான்" என்று. நேருவின் சில்மிஷம் அவ்வளவு. பல காலமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சங்கதிகளையெல்லாம் பின்னாளில் சாட்சிகளோடு பல புத்தகங்களாக நேருவின் நடத்தை குறித்து பேசப்பட்டிருக்கிறது.

 

"ஐனெயை சுநஅநஅடிநசநன: யு Pநசளழயெட யுஉஉழரவெ ழக வாந ஆழரவெடியவவநளெ னுரசiபெ வாந வுசயளெகநச ழக Pழறநச" என்ற புத்தகத்தில் பமீலா என்ற ஆங்கிலேயப் பெண் தன் தாயிக்கும் (எட்வினா) நேருவுக்கும் இருந்த தொடர்பையும், நேரு பமீலாவின் அம்மா எட்வினாவுக்கு 1957-ம் ஆண்டு நேரு எழுதிய கடிதம் ஒன்றையும் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

 

அப்படிப்பட்ட பாரம்பரியமிக்க குடும்பம் தான் இந்தியாவை இன்னும் ஆண்டுக் கொண்டிருக்கிறது.

 

எந்த பாரம்பரியமிக்க குடும்பமாக இருந்தால் என்ன? மக்களிடம் கலகம் மூட்டி அரசியலில் லாபம் தேடும் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் குரல்வளையைப் பிடித்து லத்தியால் மொத்தி; கூண்டில் ஏற்றி கேள்வி கேட்க வைப்பது தான் ஜனநாயகத்தின் கடமை இருந்திருக்க வேண்டும். வருண்காந்தியின் வாய்ச்சாடல்கள் பேச்சுக்கு முடிவுதான் என்ன?


தமிழச்சி
29.03.2009