ஏகாதிபத்தியங்களுக்கு
பிரம்மாஸ்திரமாய்
விளங்கும் இயேசுவின்
கிறிஸ்துமசா
நமக்கான விழா?இல்லை
ஏகாதிபத்தியம் விழுந்தே
தீரும்
அதன் சிதிலங்களில் கம்யூனிசம்
மிளிர்ந்து எழும்
அதற்கான பாட்டாளிகளின்
ஆயுதமே மார்க்ஸியம்
என்று சூளுரைத்த
மாமேதை மார்க்சின்
பிறந்தநாளே நம்முடைய விழா..!பெற்ற தகப்பனை
கணவனாய் கொண்டு
படுக்கையை பகிர்ந்து
கொண்ட சரஸ்வதியை
கல்வி கடவுளாய்
உயர்த்தும் சரஸ்வதி
பூஜையா நமக்கான விழா?
இல்லை
அறிவு கூர்மையிலும்
பண்பின் கருணையிலும்
தன் வாழ்நாள் தியாகத்தாலும்
படிப்பவர் மனதில்
தாய்மையின் பாடங்களாய்
பதிந்துபோகும்
ஜென்னிமார்க்சின் பிறந்தநாளே
நம்முடைய விழா..!காட்டை கழனியாக்கி
வியர்வை துளிகளை
நெற்கதிர்களாக்கி
உலகின் பசியாற்றிய
உழுபவனை,
எருதுகளோடு எருதுகளாய்
ஏர்முனையில் பூட்டி
ஏழ்மையிலும், துயரத்தாலும்
அவனை வாட்டி
அவன் ஈட்டிய அனைத்தையும்
தனதாக்கி கொண்ட
நிலப்பிரபுக்களின்
பொங்கல் விழாவா
நமக்கான விழா?
இல்லை
உழுபவனை அடித்து
தன் தொந்தியை பெருக்கிய
நிலப்பிரபுக்களை
ஈவிரக்கம் பாராமல்
அழித்தொழித்த
ரஷ்யாவின் நவம்பர் புரட்சியே
நம்முடைய விழா..!ஆபாசத்திலும்
அழுக்கு உருண்டையிலும்
உயிர் பெற்றதாய் விளங்கும்
பானை வயிறு
பிள்ளையாரின் விநாயகர்
சதுர்த்தியா நமக்கான விழா?
இல்லை
மனிதநேயத்தாலும்
மேதாவிலாசத்தாலும்
நம் மனங்களை
கொள்ளை கொண்ட
மாமேதை
மாவோவின் பிறந்தநாளே
நம்முடைய விழா!சி.பி.எம் என்னும்
பூணுலிஸ்ட்களுக்கு
அஹிம்சையை போதித்த
யானை காது காந்தியின்
காந்தி ஜெயந்தியா
நமக்கான விழா?
இல்லை
காந்தியின் துரோகமும்
வெள்ளையரின் கோபமும்
23 வயது இளைஞனின்
கழுத்தை
தூக்குகயிறால் முறிக்க,
உயிர் இழந்த அவ்விளைஞன்
தன் ஒப்பற்ற தியாகத்தால்
இந்திய வரலாற்றில்
பகத்சிங்காய் எழுந்து நின்றானே
அம்மாவிரனின்
பிறந்தநாளே
நம்முடைய விழா!நயன்தாரா, நமீதாவின்
குலுக்கல் ஆட்டம்
பில்லாவை இரவு
முழுக்க கண்விழித்து
பார்க்கும்
சிவராத்தியா நமக்கான விழா?
இல்லை
பயங்கரவாத அமெரிக்காவின்
ஆக்கிரமிப்புக்கு பாடை
கட்டிய வியட்நாமிய
போராளிகளின்
போர்கால இரவுகளே
நம்முடைய விழா!எம் பாட்டன் நரகாசூரனின்
வீரத்தை கண்டஞ்சி
நடுங்கிய
பார்ப்பன பரதேசிகள்
கோழைத்தனத்தால்
செடிமறைவில் நின்று
அம்மெய்தி வீழ்த்திய
தீபாவளி நாளா
நமக்கான விழா?
இல்லை
இரண்டாயிரமாண்டு
கால பார்ப்பன பண்பாட்டு
படையெடுப்பிற் கெதிராய்
அரைநூற்றாண்டு கால
சுயமரியாதை யுத்தம் நடத்திய
பெரியாரின் பிறந்தநாளே
நம்முடைய விழா..!வெள்ளியில் வீழ்ந்து
ஞாயிரின் உயிர்
பெற்றதாய் பொய்யுரைக்கும்
இயேசுவின்
மூன்றாம் நாள்
உயிர்த்தெழுதலான புனித
வெள்ளியா நமக்கான விழா?
இல்லை
50 களில் சோவியத்திலும்,
70 ன் இறுதியில் சீனத்திலும்
துரோகத்தால்
வீழ்த்தப்பட்டு
இன்று இமயத்தின் சிகரத்தில்
கத்திமுனையில் கருக்கொண்டிருக்கும்
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே
அதன் பிறப்பே
நம்முடைய விழா..!பசியால் வாரங்களை
கடந்து, பிரியாணியின்
ருசிய\யால் வயிறு முட்ட
உண்டு
மந்தநிலையில் மதிமயங்கி
கிடக்கும் ரம்சான் பண்டிகையா
நமக்கான விழா?
இல்லை
ஈராக் மண்ணை ஆக்ரமித்தற்க்காக
வெள்ளை மாளிகையின்
வெள்ளை பன்றியை
செருப்பால் அடித்து
அமெரிக்காவின் காலனி
ஆதிக்கத்திற்கு
தன் காலனியால்
பதிலடி தந்தானே
மாவீரன்
முண்டாசர் அல்ஜெய்தி
அவ்விரனின் தியாகம்
வெளிப்பட்ட நாளே
நம்முடைய விழா..!புதிய ஜனநாயக புரட்சி
நடந்தேறி விடுமோ
யென்றஞ்சி
வெள்ளை ஏகாதிபத்தியம்
இந்திய நிலப்பிரபுத்துவத்துடன்
செய்து கொண்ட
துரோக ஒப்பந்தமான
ஆகஸ்ட் 15ன்
போலி சுதந்திரமா
நமக்கான விழா?
இல்லை
ஏகாதிபத்தியத்தையும்
அதன் அல்லக்கை
தரகு முதலாளியத்தையும் அதன்
கூட்டாளி நிலப்பிரபுத்துவத்தையும்
பூண்டோடு ஒழிக்கும்
புதிய ஜனநாயக புரட்சியின்
பிறப்பே
நம்முடைய விழா..!- நக்சல்பாரியன்
“நம்முடைய விழாக்கள்”
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode