01202022வி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

வெல்லட்டும் பேரணி ! உழைக்கும் மக்களோடு சேரு நீ !! - துரை. சண்முகம், ம.க.இ.க.

ஒப்புக்கு அறிக்கைவிட்டு
ஒதுங்கிக் கொண்ட ஓட்டுக் கட்சிகள்,
இரத்தம் கசிந்து, சித்தம் கலங்கியபோதும்
நாங்கள் ஆளும் வர்க்கத்தின் மண்டையோடுகள் எனத்
தெளிவாக வசனம் பேசும் நீதிபதிகள்,


உண்மைகளுக்கு பாடைகட்டிய
போலீசின் காலடிக்கு ‘கிருஷ்ணா’ர்ப்பனங்கள்
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் மக்கள்.
இந்தச் சூழலிலும் … சொந்த நலனிழந்து
போலீசின் கொலைவெறிக்கு எதிராக
போராடும் வழக்குரைஞர்களே
உங்கள் உணர்வு பெரிது! மிகப்பெரிது!

 

மண்டையைப் பிளந்தபோதும்…
மார்பினில் மிதித்த போதும்…
பெண்களை வதைத்த போதும்…
பேசிய வசவுகளால் அவர்களின்
உடல்தோல் உரித்த போதும்…
மண்டியிட்டு பணியாமல்,
மானத்தை விலைபேசாமல்…
தண்டனை வழங்கு போலீசுக்கு! என
கண்டனம் முழங்கும் வழக்குரைஞர்களே
உங்கள் உறுதியைப் பார்த்து
தமிழகமே! தலை நிமிரட்டும்!

முத்தமிழ் வித்தகர்கள் முடங்கிக் கிடக்கையில்
அஞ்சா நெஞ்சர்களும், தளபதிகளும், அண்ணன்களும்,

தர்ப்பை கட்டுக்கு அடங்கிக் கிடக்கையில்…
தமிழினப் பகையை பார்த்த மாத்திரத்தில்
சுப்பிரமணியசாமிக்கே! சொரணை வரும்படி
கொடுத்தீர்களே! இதுவன்றோ தமிழ்வீரம்!
யாராவது இந்த பார்ப்பன கூ முட்டையை
பதம் பார்க்க மாட்டார்களா! என
தமிழகமே ஏங்கிக் கிடந்த வேளையில்
வாராது வந்த்தல்லவா வழக்கறிஞர் முட்டை!

கலைஞர் முட்டை போட்டதா பெரிது

வழக்குரைஞர் முட்டை வீசியதல்லவா சிறப்பு
உங்கள் முட்டை தமிழ் இனத்துக்கே சத்துணவு!

ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் போராடும்

எல்லோரையும் ஒடுக்கி விட்டோம்
சூரப்புலிகள் அனைவரையும்
ஓட்டு வேட்டைக்கு திருப்பி விட்டோம்…என
இறுமாந்திருக்கிறது அரசு…
எங்களை என்ன செய்ய முடியும்?
எக்காளமிடுகிறது போலீசு

தடியடிக்கு தணியுமா விடுதலை தாகம்
உழைக்கும் மக்களுடன் சேர்ந்தால்
எதுவும் முடியாமலா போகும்!

- துரை. சண்முகம், ம.க.இ.க.கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்