3ந்தேதி விடியற்காலை
நேரம். சென்னையை
முகாமிட்டிருந்த பேரிருள்
தன் இருப்பை அகற்றி
கொண்டு விரைவாய்
மறைந்தோடியது.
காலை கதிரவன் சிவந்து
உச்சியேறிய நேரம்.
கடற்பரப்பு “பேரலைகளால்
சலசலத்து கொண்டிருந்தன.
எதைப்பற்றியும் கவலை
படாத மக்கள் கூட்டம்
அவசர வேலைகளில்
தங்கள் அறிவை பறிகொடுத்து
கொண்டிருந்தன.
நாங்கள் ஓர் லட்சம்
உறுப்பினர். நாங்கள் 5
இலட்சம் உறுப்பினர்
நாக்ன்கள் 10 இலட்சம்
உறுப்பினர்.
நாங்கள் தான் நம்பர் ஒன்
இல்லை இல்லை நாங்கள்
தான் நம்பர் ஒன் என்று
குமுதம், குங்குமம், விகடன்
கதையாக,
ஆள் ஆளுக்கு அடித்து
கொள்ளும் ஓட்டு பொறுக்கிகளின்
மாணவர் அமைப்புகள்
வளர்ப்பு பிராணிகளாய்
போடும் எலும்பு துண்டுகளை
கவ்விக்கொண்டு வாய்மூடி
கிடக்க
ஈழத்தமிழன் கண்ணீரை
இதயத்தில் ஜீரணிக்காமல்
களத்தில் இறங்கி போராடி
கொண்டுருக்கும் பு.மா.இ.மு
மாணவர் அமைப்பு
சொரனையற்று கிடந்த
சென்னை மாநிலக் கல்லூரி
யின் நுழைவாயிலில்
5 தோழர்களை களத்தில்
இறக்கியது. அவ்விடம்
சுயமரியாதை காற்றால்
சூழந்து நின்றது.
எதையோ கற்க மாணவர்
கள் கல்லூரிக்குள் நுழைந்தது
கொண்டிருக்க.
ஈழத்தின் அழுகை ஓலத்தை
வழக்கறிஞர்களின் போர்
குணத்தை எமது தோழர்கள்
கருத்து குவியலாய் மாற்றி
அம்மாணவர்களின் கேளாத
செவிட்டு காதுகளில்
சத்தமாக துளைத்து
கொண்டிருந்தனர்.
மாணவர் பேரெழுச்சி
எழுந்துவிடுமோ, வங்க
கடல் வாய்பிளந்துவிடுமோ
அதில் தம் ஆட்சி மூழ்கி
விடுமோ என்றச்சி கிடக்கும்
பேடி கருணாநிதியின்
காவல்துறை கல் குடித்த
காளிகளாய் எமது
தோழர்களை சுற்றி
வளைத்தது.
சிவப்பு சூரியன்களை
பனித்துளிக்ள் படையெடுத்தைபோல.
உங்க அம்மாவிற்கு ஈழத்தானா
கணவன்? உங்கள் அக்கா
தங்கைகளை ஈழத்திற்கா
வருந்தாக்கினீர்? நீங்க ஈழத்தானுக்கா
பிறந்தீங்க? என்ற
ஆபாச வார்த்தைகள்
அம்புகளாய் பாய்ந்தன எமது
தோழர்கள் மீது
அது காவல்துறையின்
தன்னிச்சையான கருத்தல்ல.
ஈழத்தமிழன் நிலைகண்டு
கலங்காத கருணாநிதியின்
கழுத்தறுப்பு நிலைப்பாடு.
இன்ஸ்பெக்டர் கண்ணனின்
குரல்வளையாய் ஒலித்தது
காவல்துறையல்ல,
கருணாநிதி.
புரிந்து கொண்டு ஒவ்வொன்றாக
பிடிங்கி எறிந்தனர்
பு.மா.இ.மு வீரர்கள்.
வாங்கி கொண்டு திரும்பும்
பழக்கமல்ல எமக்கு
பதிலடியாய் ஒரே ஒர்
வார்த்தை.
அது அம்பு அல்ல, அவை
களை வாய்மூட வைத்த
அணுகுண்டு.
இதோ கீழே அவ்வார்த்தை.
எல்லாம் இருக்கட்டும்
ஈழத்தமிழன் கண்ணீரை
துடைக்க நீளும் கைகளை
உடைக்கும் நீங்கள் என்ன
சிங்களவனின் வித்துக்களா?
இவ்வார்த்தைகளை கேட்ட
அண்ணா சாலையோர
சிலைகள் ஓர் கனம்
அசைந்து எமது தோழர்களை
பார்த்தன.
காக்கி சட்டைக்குள் மறைந்து
கிடந்த ரவுடிகளின் வாய்
உடைக்கப்பட்டன.
மறுவார்த்தை பேச வழியின்றி
மவுனத்தை வாந்தி எடுத்தன.
பின் நாங்கள் குரைக்கும்
சாதியல்ல, கடிக்கும்
சாதி என்று முழங்கின.
அவைகள் கைகளால்
பேசன. கால்களால் ஏசின.
லத்தியகளால் அடித்தன.
நக்சல்பாரிகளை
மார்க்சிய எரிமலைகளை
காக்கி ஆடுகள்
முட்டிபார்த்தன.
துவண்டு போனதுதான்
மிச்சம். அவைகளின்
முயற்சி கொம்புகள்
உடைக்கப்பட்டன.
இதற்கிடையே
செய்தி பரவிய வேகத்தில்
செம்படை கூட்டம்
ஸ்டேஷன்களை நோக்கி
படையெடுக்க,
சமாதானம் பேசின
சதிகார மிருகங்கள்.
சமாதானத்துக்கு இடமில்லை
சந்திப்போம் நீதிமன்றத்திலே
என்று கூறி மீண்டும் ஒர்
முறை அவைகள் வாய்
உடைக்கப்பட்டன.
நெருப்புகள் பொட்டலம்
கட்டப்பட்டன. மின்னல்கள்
சிறைக்கு கொண்டு
செல்லப்பட்டன.
சூழ்நிலை கைதிகளின்
சுற்றாத பூமியாய்
கிடக்கும் புழல் சிறை
எமது அரசியல்
அணுகுமுறையால்
சிவந்தது.
வெளியில் எதை செய்ய
முயன்றார்களோ
அதனை எந்த எதிர்ப்பும்
இன்றி சிறையில் செய்தார்கள்
எமது தோழர்கள்.
அதற்காக வாய்ப்பை
ஏற்படுத்தி கொடுத்த காவல்
துறை நாய்களுக்கு
நன்றிகள் ஆயிரம்
சொல்வோம்.
வெளியிலும் எமது
அரசியல் சூறைக்காற்றாய்
வீசியது. அவ்வீச்சியில்
போலி ஜனநாயகம்
அம்பலப்பட்டு நிர்வாணமாய்
நின்றது.
ஆளும் அரசை சுவரொட்டிகள்
கண்ட இடங்களில் காறிதுப்பின.
தெருமுனை கூட்டங்கள்
சூடுகொலுத்தின.
தஞ்சை, திருச்சி எனறு
கானும் இடமெல்லாம்
காட்டாறுகள் கதிகலங்க
வைத்தன.
இனி அணைபோட
முடியாது என்பதை
அரசு உணர
மறுபுறம் வழக்கறிஞர்
ஆதரவு பெருக
ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்
செவ்வணக்கதுக்குக்குரிய பு.மா.இ.மு
வீரர்கள்.
தமிழகத்திற்கு தன்மானம்
ஊட்டிய பகத்சிங்கின்
பேரன்கள்
கருணாநிதியின் காட்டு
தர்பாரை கண்டு
கலங்காத எமது தியாகிகள்.
மாநில கல்லூரியில்
போர்முரசு கொட்டிய
எங்களின் பாதிகள்
சென்னை மாவட்ட
மாணவர் வரலாறு
எமது தோழர்கள்
பெயரின்றி எழுதிட இயலாது.
இது காலம் ஏற்றுக்
கொள்ளவேண்டிய சூழல்
போர்குணமிக்க எமது
தோழர்கள் பகத்சிங்கின் சாயல்.
தியாகத்திற்கு பஞ்சம் இல்லை
தமிழ்மண்ணில்
அதனை நேரிடையாக
கண்டோம் எமது கண்ணில்
நெஞ்சுரம் கொண்ட
கணேசனாக
சீற்றம் கொண்ட
சேகராக
ஆர்ப்பறித்த அருள்
மொழியாக
வீரம் செறிந்த
வினோத்குமாராக,
அச்சம் உடைந்த
முத்துக்குமாராக
நீண்டு நிற்கும் இந்த
நீள்வரிசை இதோடு
நிற்காது.
அது நீளும்…
ஈழத்தமிழன் கண்ணீர்
நிற்கும் வரை
இந்திய புரட்சி நடக்கும்
வரை
ஆளும் வர்க்கங்களை
அடக்கம் செய்யும்
வரை
சுரண்டலற்ற சமூகம்
படைக்கும் வரை
அதுவரை நிற்காது
நக்சல்பாரிகளின்
இயக்கம்
தமிழகமே விழித்தெழு
இன்னும் என்ன
தயக்கம்
மீண்டும் ஒர்முறை
ஈழத்தமிழன் கண்ணீர்
துடைக்க, தமிழக
தமிழனுக்கு
சொரனை கொடுக்க
சிறைசென்று வந்த
எமது தோழர்களுக்கு
சுயமரியாதை ஊட்டிய
தியாகிகளுக்கு
செவ்வணக்கம்
செவ்வணக்கம்.
-நக்சல்பாரியன்