அன்பு வாசகர்களே,மீளவும் ஒரு கட்டுரையூடாக உங்களோடு பேசுவதற்கு நெருங்கி வருகிறேன்.உங்கள் மனங்களைத் திறந்து என்னை அணுகுங்கள்.இது,தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான அரசியற்றெரிவில்லை.இன்று, நமது அரசியற் பலம் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டு அநாதையாக

 விடப்பட்டுள்ளது.இந்த அநாதைக் குழந்தையை எவரெவரோ தத்தமது விருப்பத்துக்கமையக் கைகளில் எடுத்துக் கிள்ளி விளையாடுகிறார்கள்.இக் குழந்தையின் நிலையோ மிகவும் பரிதாபகரமானது.இதன் பின்னே தத்தளிக்கும் முப்பது இலட்சம் தமிழ்பேசும் மக்கள் தமது கையலாகாத அரசியல்-சமூகவாழ்வையெண்ணிக் கவலையுறுவதைத் தவிர அவர்களால் எதுவும் முடியவில்லை.


நுகர்வு மறுப்புப் போராட்டம்:


கிழக்கிலும்,வடக்கிலும் மக்கள் வாளாது கிடக்கின்றார்கள்.டக்ளசும்,பிள்ளையானும் இவர்களது விடிவெள்ளிகள் அல்ல.இவர்களது தயவில், இழந்த தமது உரிமைகளை மக்கள் பெற்றுவிடவும் முடியாது.இலங்கையில் வாழும் அனைத்துச் சிறுபான்மை இனங்களும் சிங்களம் பேசும் பெரும்பான்மை மக்கள் சமுதாயத்தோடு தோள்சேர்ந்து இந்தத் துயரமான அரசியல் வாழ்வைத் துடைதெறிவதற்கானவொரு சூழல் இப்போது நெருங்கிவரவேண்டும்.இந்த அரசியல் பார்வையானது அவசியமானது.இதுகுறித்துப் பேசுவதென்றால் தொடர்ந்து புலிகளதும் ஆளும் மகிந்தா அரசினதும் பாசிசப் போக்கைப் பற்றிச் செய்தி பதிவதல்ல.மாறாக,இன்றைய உலகப் போக்குகள்,அவர்களது பொருளாதார இலக்குகள்,ஐரோப்பிய நவலிபரல்களின் பொருளாதார முன்னெடுப்புக்குப்பின்பான இன்றைய ஐரோப்பியக்கூட்டு(http://www.eu-vertrag-stoppen.de/),அது சார்ந்த லிசபொண் ஒப்பந்தம் Lissabon "EU-Reformvertrag"http://de.wikipedia.org/wiki/Vertrag_von_Lissabon இதனூடாக ஐரோப்பிய யூனியனின் அரசியற்பாத்திரம்(http://www.eu21.willensbekundung.net)-ஐரோப்பியக் கண்டத்திலுள்ள நாடுகளது பரிதாப அரசியல்http://www.uni-kassel.de/fb5/frieden/themen/Europa/verf/baf.html நிலைகள் குறித்தும் மிக நேர்த்தியான பார்வைகள் அவசியம்.



ஒபாமா தலைமையிலான அமெரிக்காவினது புதிய உலக அரசியல் நகர்வுகளது வெளியில்,ஐரோப்பாவும் அதன் கூட்டு இராணுவ வலுவான நேட்டோ மற்றும் இதற்கு முகம்கொடுக்க முடியாது திண்டாடும் இருஷ்சிய ஆளும் வர்க்கம் குறைந்தபட்சமாவது நோட்டோவோடு இணைந்து அவ்கானிஸ்தான் பிரச்சனையை அணுகுவதாக இப்போது முடிவெடுக்கிறது(Allerdings sei die Krise um Georgien damit noch nicht ausgestanden: „Wir haben ein schweres Jahr 2008 hinter uns mit dem Südkaukasuskonflikt. Der Konflikt wirkt fort", sagte Steinmeier. Nato-Generalsekretär Jaap de Hoop Scheffer plädierte ebenfalls für eine Wiederaufnahme der Beziehungen: „Wenn wir auch die ernsten Meinungsunterschiede zwischen der NATO und Russland vor allem über Georgien nicht verdecken wollen, so müssen wir doch anerkennen, dass wir auch gemeinsame Interessen mit Russland haben", sagte er. De Hoop Scheffer nannte Afghanistan, den Kampf gegen Terrorismus und die Nichtweiterverbreitung von Atomwaffen.).இத்தைய முடிவினது இறுதிவடிவத்தில் இருஷ்சியா நோட்டோவினால் உள்வாங்கப்பட்டு மேலுமொரு அரசியல் புதிய உத்வேகத்தோடு உலகைப் பந்தாடப்போகிறது.எனவே,இது, குறித்த எந்தப் புரிதலையும் தள்ளி வைத்துவிட்டு இன்றைய தமிழ் இளைஞர்கள் தமது அரசியலைப் பேசமுடியாதென்ற விதி நமக்கு முன் உள்ளது.இன்றைய புலம் பெயர் தமிழ் மக்கள் தமது இளைய தலைமுறையை மீளவும் விவஸ்த்தையற்ற கோசங்களுக்கு இரையாக்கியபடி ஐரோப்பிய வீதிகளில் இறுக்கிவிட்டுள்ளார்கள்.



இவர்களே இப்போது இலங்கையினது உற்பத்திப் பொருட்களை நுகரவேண்டாமென நம்மை மின்ஞ்சலூடாகக் கேட்டு இன்னொரு அரசியல் விபத்தை முன்னெடுக்கிறார்கள்.இலங்கையின் பொருளாதாரம் வங்குரோத்தாகும்போது சிங்கள மக்கள் வறுமைக்கோட்டுக்குள் தள்ளப்பட்டு,தமது இனவாத அரசியலைத் தவிர்த்து ஆளும் இலங்கை அரசினது பக்கம் தமது எதிர்ப்பைக் காட்டுவார்களென புலிகளது வங்குரோத்து அரசியலை முன் தள்ளும் இவர்கள்,உலகினது பாத்திரத்தையும் அங்கே இலங்கையினது இருப்பையும் புலிவழி புரிவதில் மீளவும் நம்மைப் படுகுழிக்குள் தள்ளிவிடப் போகிறார்கள்.இலங்கை அரசானது தனது உள் நாட்டு உற்பத்தியைக்கொண்டு இதுவரை இலங்கை வாழ் தனது மக்களைக் காக்கவில்லை.இலங்கையினது பாத்திரமும் தென்கிழக்கு ஆசியாவினது பாத்திரமும் மேற்குலக மற்றும் ஐரோப்பிய அரசியல் நகர்வுகளோடு மிகவும் பிணைந்தவை. இதன் இலகுவான விளக்கம் என்னவெனில்:காத்திரமான உதவிகளோடு இலங்கை அரசு எனும் அந்த அமைப்புக் காக்கப்படுகிறது என்பதாகும்!இலங்கையில் பொருளாதார நெருக்கடி எட்டும்போதெல்லாம் ஆளும் அரசைக் காக்க மீட்பர்கள் பற்பல வடிவுகளில் வருவார்கள்.இலங்கையில் புரட்சிகரமானவொரு சூழலைத் தடுப்பதன் நோக்கத்தில் மேற்குலக வர்த்தகத்தின் உள் நோக்கம்(http://www.parlinkom.gv.at/PE/DOKU/Dokumentation_Portal.shtml) இருக்கிறது.இந்தியப் பிராந்தியத்தின் பொருளாதாரத்தைக் கைக்குள் வைத்திருக்கும் ஆசியப் பெரு முதலாளியக் குடும்பங்களின் இருப்பு இலங்கை ஒடுக்குமுறை அரசோடு பிணைந்திருக்கிறது.எனவே,உங்களது "நுகர்வு மறுப்புப் போராட்டம்" அந்த அரசை ஒருபோதும் பாதிக்காது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

புலிகள் இதுவரை எந்தவொரு தமிழ்பேசும் மக்களுக்கும் உணவிடவில்லை,உறைவிடம் வழங்கவில்லை,உடைகள் வழங்கவில்லை.மக்களது அதிமானுடத்தேவைகளைப் புலிகள் தமது இயக்கச் சொத்தாக்கிய பாரம்பரியத்தினது மிகக்கெடுதியான இவ்வுளப் பாங்கே இன்று இலங்கையினது பொருளாதாரத்தைச் சிதறடிப்பதென்கிறது.இங்கே,சிங்கள மக்களோடு இலங்கையில் வாழும் முப்பது இலட்சம் தமிழ்பேசும் மக்களும் மற்றும் சிறுபான்மை இனங்களும்தாம் இலங்கையின் பொருளாதாரம் சிதைந்தால் மிகம் அவதிப்படப்போகிறார்கள்.இலங்கை அரசாவது கொஞ்ச நஞ்ச உணவாவது புலிக்குப் போட்டதால்தாம் அவர்கள் இதுவரை தமது உயிரோடு உலாவுகிறார்கள் என்பதை இப் புலப்பெயர்வுச் சமுதாயத்துக்குப் புரிவது இருக்கட்டும்.நாம்,இவர்களது அரசியலில் மீளவும் ஈழமெனும் கனவு ஏன் சாத்தியமில்லை என்பதைத் தெளிவாக்குவோம்.

தமிழீழம் மாய மான்:

"தமிழ் பேசும் மக்களது நலன் அவர்தம் "சுயநிர்ணய உரிமை,வரலாறுதொட்டுவாழ்ந்த ப+மி அவர்கள் வாழும் மண்ணாகவும்,அவர்களுக்கென்ற அரசியல் பொருளாதாரப்-பண்பாட்டு வாழ்வுண்டுடெனும் உறதிப்படுத்தலுடன் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தலும்" அவர்தம் நலனாகிவிட முடியாது. வர்க்கபேதமற்ற மனித வாழ்வுக்கான எந்த முன்னெடுப்புமற்ற இந்தக் கோசமும் வெறும் வெற்றுவேட்டாகும்.இது சிங்கள முதலாளிகள் அவர்களை அடக்கு வதற்குப் பதிலாகத் தமிழ் முதலாளிகள் அடக்குவதில் போய் முடியும். எனவேதாம் அவர்கள் நலனை முன்னேடுக்காத ஈழப்போரை ஒருசில தமிழ்த் தரகு முதலாளியத்தின் அபிலாசையென்கிறோம். உழைப்பவர் நலன் முன் வைக்கப்படும் அரசியல் ஈழக்கோசத்தை முன்னெடுக்க முடியாது. அங்கே பெருந்தேசிய வெறிக்குப் பதிலாகக் குறுந்தேசியம் முன் தள்ளப்பட முடியாது.இரண்டும் சாரம்ஸத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிரானதுதாம்."இது, கடந்தகாலத்தில் ஈழப் போராட்டத்தைக்குறித்த எமது மதிப்பீடு.இந்த மதிப்பீட்டிலிருந்து இன்றைய இலங்கையினது அரசியல் நகர்வைப் பார்க்கும்போது "ஈழப்போராட்டத்தை"முன்னெடுத்த புலி மற்றும் அனைத்து இயக்கங்களது நிலைமைகளையும்,அவர்கள் இன்று வந்தடைந்திருக்கும் அரசியற்பாதையையும் நாம் மிக இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும்.

 






இலங்கைபோன்ற பல் தேசிய இனங்கள் வாழும் ஒரு சிறு நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு தமிழீமாக இருக்காது.இஃது, உண்மையிலேயே இப்போது சாத்தியமில்லை.ஆனால், இலங்கையில் புரட்சிக்குரிய சூழல் நிலவுகிறது:இது, இனங்களுக்கிடையிலான ஐயக்கியத்தை வலியுறுத்திப் பாரிய வேலைத் திட்டத்துடன் நகரவேண்டும்.மீளவும் போராட்டம்தாம்.ஆனால்,சிங்களவர்களோடல்ல.சிங்கள-தமிழ்,இஸ்லாமியத் தரகு முதலாளிகளுடனும்-உலக,பிராந்திய ஏகாதிபத்தியங்களுடனும் போராடவேண்டியதுதாம்.இதுவல்லாத இன்றைய அரசியலில்,புலிகள் வந்தடைந்த அழிவு அரசியல் நிலை தமிழ்பேசும் மக்களுக்கு மிக நீண்ட அரசியற் பாதிப்பை தந்துவிடப்போகிறது.அதற்கு வழிசமைக்கும் காரியத்தில் புலம்பெயர்ந்து அநாதைகளாக வாழும் தமிழ் இளஞ்சிறார்கள் வழிவகுக்கப் போகிறார்கள்.


அழிந்து போவதற்குமுன் புலிகள் மீளவும் தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட சாதிகளைக் கருவறுக்கும் அரசியலோடு உழைப்பாளருக்கு விலங்கிடும்அரசியலையே தமிழ் இளையோரிடம் பரப்பிவிட்டுச் செல்ல முனைவது அவர்களது இயக்க நலனிலிருந்தல்ல.மாறாகப் புலிகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஐரோப்பாவெங்கும் புதுப்பணக்காரர்களான புலிப்பினாமி மேட்டுக்குடித் தமிழர்களது தெரிவே இது.இதன் வாயிலாகத் தமது அரசியல் பலத்தைப் பிரேயோகித்துத் தமிழ் பேசும் மக்களை மீளவும் அரசியல் அநாதைகளாக்கும் பாரிய சதியில் இவர்கள் காரியமாற்றுகிறார்கள்.இந்தச் சதியூடாக இலங்கையில் தமது வளங்களை(இவ் வளங்கள் யாவும் அப்பாவிகளிடம் நிதியாகத் திரட்டியது,இப்போதும் திரட்டப்படுகிறது) மூலதனமாக இடவும்,அதுசார்ந்து அரசியல் பலத்தைப் பெறவும்,இவர்கள் இப்போது புதிய தெரிவுகளுக்காக அரசியல் செய்கிறார்கள்.இது,உலக அரசியல்-பொருளாதாரபோக்குகளுக்குக் குறுக்கே நிற்பதாக எவரும் கருத முடியாது.இது,உலக மேலாண்மைச் சமுதாயத்துக்குச் சேவகஞ் செய்யும் தரகு வேலையைச் செய்வதில் தமது அரசியல் ஸ்த்தானத்தைத் தக்கவைக்க முனையும் அரசியலே!


தமிழீழமே தமிழருக்குப் பாதுகாப்பென்று புலப்பெயர்வு வாழ்வில் வளர்ந்துவரும் இளைஞர்கள் கூறுகிறார்கள்.இவர்களுக்கு இலங்கை மண்ணது குணமோ அல்லது நிறமோ தெரிந்திருக்காது.புலிகளது "ஈழப்போராட்டம்" என்பதைத் தமிழர்களுக்கான நலனாகக்காட்டிய புலிகளது அரசியலிலிருந்து இவர்கள் வந்தடைந்த இன்றைய நிலை மிகவும் மோசமான இனவாத நிலையாகும்.இவர்களுக்கு ஒரு அரசினது பாத்திரம் மக்களோடு எத்தகையது என்பதைப் புரிய வைக்க நாம் கடந்த இலங்கை வரலாற்றில் ஜே.வி.பீ.க்கு நடந்த சம்பவங்களைக் குறித்துச் சுட்டிக்காட்டுவது அவசியம்.


1969/70 களில் ஸ்ரீமாவினது தலைமை பல பத்து ஆயிரம் சிங்கள இளைஞர்களை அழித்தது.அவர்கள் சிங்களம் பேசும் சிங்கள இனமாக இருந்தபோதும்.1989/90 காலப்பகுதியில் களனி ஆற்றில் கொன்று வீசப்பட்ட சிங்கள இளைஞர்களின் தொகை அண்ணளவாக 80.000. என்பது இப்போதைய தகவல்.


இளையவரே சில கேள்விகளை இங்ஙனம் கேட்போமா?:


பிரேமதாச ஆயிரக் கணக்கான சிங்கள மக்களைக் கொன்றானே எதற்காக?அவன் சிங்களவருக்கான சிங்கள ஆட்சிதானே செய்தான்!இருந்தும் கொன்றானே எதற்காக?பிரேமதாசவின் பின் இருக்கும் அரசியலை நகர்த்துபவர்கள் எவர்?சரி தமிழருக்கான தளத்துக்குப் போவோம்,தமிழ் நாட்டில் பேரளவுக்கான மாநிலசுயாட்சி தமிழர்களின் கீழ்த்தானே நடைபெறுகிறது? இஃது, ஏன் தமிழகத் தமிழ்பேசும் மக்களை அடக்கியாளுகிறது?தமிழகப் பொலிஸ் ஏன் தமிழக மக்களை வேட்டையாடுகிறது? தமிழக அரசியல் வாதிகள் எப்படி பல்லாயிரம் கோடிகளைச் சொத்தாகப் பெற்றார்கள்?தமிழகத்தில் இன்னும் கொத்தடிமைகளாக அப்பாவி உழைக்கும் தமிழர்கள் இருக்கிறார்களே-இது,எவ்வகையில் சாத்தியமாகிறது?தமிழீழம் என்பதன் கதையும் இந்த நலன்களோடு இணைவுறுவதைப் புரியும்போது அது எவரது அபிலாசையென்பது புரியுமல்லவா?இப்போது வன்னி மக்களது வாழ்விடங்களையும்,புலிகள் வாழ்ந்த வாழ்விடங்களையும் உற்று நோக்கும்போது இவ்வுண்மை இன்னும் பலபடி புரிகிறது.இலங்கை இராணுவத்திடம் பறிகொடுத்த ஆயுதங்களுக்குக் கொட்டியதில் ஒரு பங்கையாவது வன்னி மக்களுக்குக் கொடுத்திருந்தால் அவர்கள் ஒரு நேரக் கஞ்சியையாவது வயிறாரக் குடித்திருப்பார்கள்.பறிகொடுத்த அவ்வளவு ஆயுதங்களும் மேற்குலகத்தின் குப்பைக்குப் போவதற்குத் தகுதியானவை.இவையாவும் தமிழீழத்தின் பெயரால்தாம் நடந்தேறியவை.இவையெல்லாம் பறுவாயில்லை.ஆனால்,தமிழர்களை தமிழீழத்தின் பெயரால் துரோகி சொல்லிக் கொன்றதும்-கொலைக்களத்துக்குப் போராளிகளைத் தள்ளிக் கொன்றதுமே மிகக் கொடுமையானது.இலட்சம் மக்களது உயிரைப் பறித்த இந்தப் புலிப் போராட்டம் சமூக விரோதமானது.இங்கே,இலங்கை அரசினது பாத்திரம் இனவொடுக்குமுறை அரச பாத்திரம்தாம்.என்றபோதும்,அதை அணுகியவிதம் சொந்த மக்களைக் கொல்லும் போராட்டமாக மாறியதில் புலிகளது பாத்திரம் என்ன?




இன்றைய உலக-பிராந்திய பொருளியல் நலனின் அரசியலில் தனித் தமிழீழம் சாத்தியமாகுமா? என்னுடைய பதில் சாத்தியமேயில்லை.காரணம:; பலவுண்டு இப்போதைக்குத் தேவை குறைந்தபட்சம் எமது மக்களது வாழ்வாதாரத்தையும் அதன் சிதைவையும் இதனூடாக அழிக்கப்பட்ட இலட்சக் கணக்கான மக்களது சாவையும் செய்த இன்றைய புலிகளது அழிவைக்குறித்து ஆய முனையுங்குள்.இதன் வாயிலாகத் தென்னாசியப் பிராந்தியத்தின் அரசியல்-பொருளியல் நலன்களைப் பிரதிநிதிப்படுத்தும் மேலாண்மைச் சமுதாயங்களையும் அவர்களது தயவில் அரசியல் செய்யும் இலங்கை அரசையும் ,ஈழப்போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்களின் இருப்பையும் மிக இலகுவாக உணர முடியம்.இதன் வாயிலாகத் தமிழீழம் என்பது பகற்கனவு என்பதல்ல.அது,தமிழ் மக்களை முட்டாளாக்கிக் கொன்று குவித்த பெரும் நாசகார அரசியல் என்பது புரியும்.எனவே, நான் கூறும் தீர்வுநோக்கிய பாதையானது"நீண்டதொடர்ச்சியான, முழு இலங்கைக்குமான புதியஜனநாயகப் புரட்சியாகும்.இதுதாம் மனிதவிடுதலையையும்,இனங்களுக்கிடையிலான உண்மையான ஐக்கியத்தையும்பேணி சமத்துவ அரசியலைத் தரும். இது,குறித்து நீண்ட விவாதம்தேவை இப்போது இதைவிட்டுவிடுவோம்.


புரட்சிகர அரசியல் பார்வையும்,வரலாற்றுப் புரிதலும்:


இளையோரே,ஈழமென்பது குருதி தோய்ந்த பொய்க்கோசமானது.இது, கனவிலும் சாத்தியமாகாது.வேண்டுமானல் அவரவர் விருப்புக்கேற்றவாறு தரைத்தோற்றத்தை-நில அமைப்பை வரைந்து கனவை வளர்க்கலாம்!இளைஞர்களே,நீங்கள் ஐரோப்பிய மொழிகளில் அந்ததந்த மூலமொழிகளில் கற்பவர்கள்.உங்கள் அரசியல் வாழ்வைச் சகதியான தமிழீழக் குருதி தோய்ந்த கொலைக் கோசத்துக்குள் திணிக்கமால் உலக அரசியலில் புதிய லிபரல்களின் பொருளாதார முன்னெடுப்பையும் அது சார்ந்த அரசியல் மற்றும் குடிசார் முறைமைகளையும் படிக்கத் தொடங்குங்கள்.ஐரோப்பியக் கூட்டமைப்பு என்பது என்ன?அதன் தேவை என்ன?,லிசபொண் ஒப்பந்தம் குடிசார் உரிமைகளோடும் முதலாளித்துவ ஜனநாயக்த்தோடும் விளையாடும் புதிய லிபரல்களின்வழி புரிய முனையும் உலகு என்ன?என்பதையும் பாருங்கள்.நேட்டோவினது பாத்திரமும், உலக எண்ணைவள உலகங்களின் அரசியலுக்கும் குறிப்பாக இருஷ்சியாவின்அரசியலுக்கும் உள்ள முரண்பாட்டை கவனியுங்கள்.இதை தவிர்த்துவிட்டுத் தமிழீழக் கோசம் போடுவதால் நீங்கள் தமிழ்ச் சமுதாயத்துக்கு எதுவுமே செய்துவிட முடியாது.


இன்றைய நமது அரசியல் வாழ்வானது-பிரச்சனையானது இலங்கைப் பாராளுமன்றத்துக்குள் இல்லை.அது டெல்லியூடாய் நீங்கள் வதியும் நாடுகளது பெரும் கம்பனிகள்வரை கிடப்பதை நீங்கள் அறிவீர்கள்.அப்போ நாம் நாடென்றவொரு அமைப்புக்குள் வாழமுடியவில்லை.மாறாக, நாடுகளென்ற அமைப்புகளுக்குள் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்.எமது பிரச்சனை அந்நிய நாடுகளோடு சம்பந்தப் படுகிறது.இலங்கை பிளவுபட உலகப் பொருளியல் நலன் விடவே விடா.புலிகள் இதைப் புரிந்து விட்டார்கள்?


உலக நாடுகள் தத்தம் எல்லைகளைத் தகர்த்துக்கொண்டு இப்போ கண்ட-உலக அரசவடிவத்துக்குள் வந்து விடுகின்றன,இதுதாம் இன்றைய நிதிமூலதனத்தின் அதிகூடிய உற்பத்திப்பொறி முறை.புதிய லிபரல்களின் இந்த விய+கம் வெறும் தேங்காய்ச் சிரட்டை அரசியல் வியூகமில்லையென்பதை நீங்கள் முதலில் புரிந்தாகவேண்டும்.இது, வர்க்கச் சமுதாயம்,இங்கு வர்க்க அரசியலே அடிப்படையானது.இதைவிட்ட எந்த மாயமுமில்லை.



முழுமொத்தமக்களுக்குமான விடுதலை சுதந்திரமென்பதெல்லாம் வெறும் போலிக்கோசமானதாகும்.தேசியக் கோசமானது-தேசிய விடுதலைக்கோசமானது எப்போது முற்போக்கானதாக இருக்குமென்றால் அது தேசிய முதலாளியம் ஏகாதிபத்தியத்துடன் முரண்படும்போது.நமது நாட்டிலோ தேசிய முதலாளியம் முளையோடு கருகிவிட்டது.இப்போது வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட இது கிடையாது. அப்போ எமது தேசிய விடுதலைக்கோசமானது தரகு முதலாளிகளின் கோசமாக விருப்பினும்,அது சிங்கள இனவொடுக்குமுறைக்கு எதிரானதாகவும்,தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமைக்கானதாகவும்(கவனிக்க:இது தமிழீழத்தைக் குறிப்பதல்ல) கோசமாக வளர்த்தெடுக்கப்பட்டது.இந்த நிலையில் இது முற்போக்கானது.ஆனால்,பாருங்கள் இந்தக்கோசம் எப்படிப்பட்ட இயக்க நலத்துடன் பிணைவுற்று அது குறிப்பிட்டவொரு இயக்க நலனாக மாறுகிறது.இதன் வாயிலாக மாற்று அரசியற் பாதையுடைய அமைப்புகள் அழிக்கப்படும் நிலைக்கு குறிப்பிட்ட இயக்க நலன் உந்தித் தள்ள, இந்த முக்கியமான முரண்பாட்டை நம்மையொடுக்கமுனையும் அந்நிய நாடுகள் தமது நலனுக்கேற்றவாறு பயன் படுத்தி ஈழத்தில் குருதியாற்றைத் தோண்டி விட்டார்கள்.நிலைமை மோசமாகி யாருக்கெதிராகப் போராட நாம் திரண்டோமோ அவர்களிடமே நம்மில் ஒருபகுதி சரணடையவேண்டிய இழிநிலை தோன்றுகிறது.இங்கே,கிழக்குப் பிரிகிறது.வடக்கு இராணுவத்தின் காலடியில்,வன்னியில் சிக்கியவர்கள் புலிகளாலும்,சிங்கள இராணுவத்தாலும் மாறிமாறிக் கொல்லப்படத் தமிழீழக்கோசத்தை நீங்கள் மேற்குலக வீதிகளில் வைப்பதால் இந்த நிலை மாற்றமுடையாது.


கடந்த சில தினங்களுக்குமுன் நெதர்லாந்த அரசியல்வாதி உங்களுக்குச் சொன்ன அரசியல் புரிந்ததா?"தமது கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு செவிக் கொடுத்து யுத்த நிறுத்தத்துக்குச் சம்மதிக்க மறுப்பதால் தாம் எதுவுஞ் செய்வதற்கில்லை"என்பதன் பொருள் என்ன? ஐரோப்பியக் கூட்டமைப்பினது முடிவையே தடுக்க முடியாத ஐரோப்பிய நாடுகளது அரசியலில் புதிய லிபரல்களது பொருளாதார இலக்குக்கு („Uns steht bevor, die weiteren Schritte (in den Beziehungen Russland-NATO), inklusive einer möglichen Wiederaufnahme der Arbeit des Russland-NATO-Rates, zu besprechen", sagte Scheffer.)முதலாளித்துவ ஜனநாயகமே தடைக்கல்லு.இதைப் புரியும்போது இலங்கையினது அரசியல் போக்குக்குப் புலிகளது பாத்திரம் என்னவென்பதைப் புரிந்துகொள்ளப் போகிறீர்கள்.உலகம் புலிப்பாணி அரசியலுக்குள் விரியவில்லை.சிந்திக்க முனையுங்கள்.கோசங்களின் பின்னே அணிவகுக்காது கோசங்கள் உருவாகும் அரசியலைப் புரிய முனையுங்கள் முதலில்!இதுவே,புரட்சிகர அரசியலின் முதற்படி.


இன்றெமது காலச் சூழலானது மெலினப்பட்டவொரு கருத்தியற்றளத்தையும்,புரிதற்தடுப்புக்கான மாறாட்டங்களையும் கொண்டிருக்கிறது.இதன் பன்முகத் தாக்குதலானது பின் தங்கிய சமூகச் சக்திகளிடம் மிகவும் மோசமாவொரு உள-உடலரசியல் வகைப்பட்ட "மாதிரி பரப்புரைகள்"மலிந்து கிடக்கிறது.இந்தக் கருத்தியற் தளத்தின் எல்லையிலிருந்துகொண்டு மக்கள் சாhந்த மதிப்பீடுகளை அணுகுவது மிகப் பெரும் ஆபத்தானது.இதை முன் நிபந்தனையாகக் கொள்வோமானால் கருத்துகளின் மைய வலுவானது அந்தந்தச் சமுதாய இருப்பை ஆட்டிப் படைக்கும் அனைத்துக் கூறுகளையும் மட்டுப்படுத்துவதும்-புரட்டிப்போடுவதும் உணரப்படும்.எனவே இதன்பாலான புரிதல், மீள் கருத்தியற் சுதந்திரம்,மக்களாண்மைத்துவ திரட்சிப் பெருங்கூட்டக் கருத்தாளுமை,பன்மைத்துவ வெளிபாட்டுச் சுதந்திரம்போன்ற ஜனநாயகக் கூறுகளையும்,அதன் விளைவாகவெழும் தெளிந்த அறிவுக்கட்டமைப்பையும் வலியுறுத்தி நாம் செயலூக்கம் பெறவும்-மாற்றுச் சிந்தனைக்கும் வழிதோன்றும்.


எனவே கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதும் அதன் வாயிலாகவொரு நீண்ட வலுவுள்ள சிந்தனைக்கான தோற்றுவாயைத் திறப்பதும்(http://www.eu-buergerbegehren.org/wp/) சமுதாய வளர்ச்சிக்கும்,அதன் இருப்புக்கும் அவசியமானது.இந்தப் பொறுப்புணர்வை நோக்காகவுணர்வோமானால் எமது செயற்பாடுகளில் அறிவைப் "பெறுதலும்-வழங்குதலும்" சமூக சீவியமாக உருப்பெறுவதும்,அதற்காக நீண்ட திட்டங்கள்-படிப்பு வட்டங்கள்(http://www.mehr-demokratie.de),செயற்கூட்டு முன்மாதிரிகள் தோன்றிக் கொண்டேயிருக்கும்.


வாருங்கள் தமிழீழக் கோசத்தை அப்படியே விட்டெறிந்துவிட்டு.நம்மால் முடியும் இளைஞர்களே!நாம் யாருக்கும் குடியல்லோம்.இதிலிருந்து தொடங்கும் அரசியலை மிக நேர்த்தியாகக் கறக்வில்லையானால் நாம் உலகத்தில் அடிமைப்படுவதென்பது இலங்கை அரசால்மட்டும்தானெனக் கருதிவிடுவோம்.அடக்குமுறை புதிய புதியவடிவில் உலகத்தின் பொது ஒத்துழைப்போடு நம்மையும் நெருங்குகிறது.கவனியுங்கள் நம்மையும் என்பதை!

வேறென்ன?

மீண்டும் தொடருவோம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
08.03.2009