ஈழம் தொடர்பாக தமிழகத்தில் நடந்துக் கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்களை முடக்க தமிழக அரசு மோசமான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்கிறது. சமீபத்தில் உச்சநீதி மன்றத்திலேயே நீதிபதி உட்பட வழக்கறிஞர் பலர் மீது கடுமையான தாக்குதலை கையாண்ட போலீஸ் அதே

 வேகத்தில் மாணவர்கள் மீதும் கடும் அடக்குமுறைகளை எதிர்கொள்கிறது. இதுவரையில் இப்படியொரு சம்பவம் தமிழக வரலாற்றில் நடைப்பெற்றதில்லை என்னும் அளவுக்கு பொது மக்கள் மீது தமிழக அரசு வன்முறையை கையாள்கிறது என்று கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்,

 

"புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி"யை சேர்ந்த மாணவர்கள் ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராகவும், சென்னையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநில கல்லூரியின் முன்பு அமைதியான முறையில் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது போலீஸ் ஆபாசமான வார்த்தைகளால் பேசி தாக்கி இருக்கின்றனர். எதிர்த்து கேட்ட மாணவர்களில் 5- பேரை கைது செய்து கொண்டு போய் இருக்கின்றது. இச் செய்திகள் ஊடகத்தில் வராமலும் மறைக்கப்பட்டிருக்கிறது.

 

மாணவர் போராட்டம் என்பது சமூகத்தில் எப்போதும் விமர்சனத்திற்குள்ளாகும் செயல்பாடுகளில் ஒன்றாகவே ஆதிக்க வர்க்கத்தால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. ´படிக்கும் மாணவர்களுக்கு எதற்காக போராட்டங்கள்´ என்னும் கேள்வியே நாளைய தலைமுறையின் சமுக அக்கரைகளை வெறுத்து ஒதுக்க காரணங்களாகி விடுவதோடு, ஆதிக்க வர்க்கமும் கேள்வி கேட்க விரும்பாத சமூகத்தையே விரும்புகிறது. இச்சந்தர்ப்பவாத அரசியலை நாம் எவ்வாறு எதிர்கொள்ளுவது? அதற்கான உரிமைகள் நமக்கில்லையா? என்பதை மையப்படுத்தியே சமூக நிகழ்வுகளை ஆராய முற்படவேண்டும்.

 

"Pசயஉவiஉயவவைல" உலகியல் அறிந்து செயலாற்றும் திறன் என்பார்கள். இடம், காலம் "ஊழ-ழசனiயெவநள" இருக்கின்றன. இரண்டையும் இணைத்து செயலாற்றிக் கொண்டிருப்பது தான் நமது வாழ்க்கை சூழ்நிலைகள். அச்சூழ்நிலையை நாம், நம்முடைய சகமனிதர்கள் எப்படி எதிர் கொள்கிறோம் என்பதைப் பொறுத்து சூழ்நிலைகளை மாற்ற முற்படுகின்றது மனிதசக்திகள். நம்முடைய வலிமை, பலவீனம், இடம், காலம் பொறுத்த செயற்பாடுகளே சமூகத்தை நெறிப்படுத்தி கொண்டு செல்கின்றது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அக்கிரமங்கள் அதிகரிக்கும் போது, "பரமாத்தா அவதரிப்பான், எமக்கென்ன" என்று ஞானம் பேசிக் கொண்டிருக்க வேண்டுமானால், அது உலகத்திலேயே நாம் மட்டுமாகத் தான் இருக்க முடியும். இதற்குள் மாணவர்களுக்கு, முதியவர்களுக்கு, இளைஞர்களுக்கென்று சமூக உணர்வுகளின் சக்திகளை பிரித்துப் பார்ப்பது மிககேவலமாக இருக்கிறது.

 

சமூக நிகழ்வுகள் நல்லதோ, தீயதோ நமக்குள் அதன் தாக்கங்கள் எழுச்சியை ஏற்படுத்தும் போதுதான் மகத்தான மாற்றங்களை உருவாக்குகிறது என்பதை வரலாறுகளில் இருந்து நாம் அறிந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

 

"அது என்ன வரலாறோ? இந்த மாணவர் போராட்டங்களில் கற்களை வீசுவதும், பஸ்களை ஹைஜாக் செய்து அடித்து நொருக்குவதும், கொளுத்துவதும், பெரியவர்களை மரியாதைக் குறைவாக பேசுவதும், பொறுக்கிகளாகவும், காலிகளாகவும் திரிந்துக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் வக்கலாத்தா..." என புலம்பும் பெரும் கூட்டம் நம் சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

 

இப்பொழுதெல்லாம் "புநநெசயவழைn பயி" பற்றி அதிகமாக பேசப்படுகிறது. தலைமுறை இடைவெளிக்கு காரணமே ´காலம்´ என்கிறார்கள் ஆய்வாளர்கள். முப்பது வயதிற்கு மேற்பட்ட நன்கு படிப்பறிவு உள்ள உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் கூட இளைய சமூகத்தின் புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். புதிய கருத்துக்களை முட்டாள்தனம், அறிவீனம், அயோக்கியத்தனம், தறுதலைகள் என்ற விமர்சன கண்ணோட்டத்தோடு நோட்டம் விட ஆரம்பித்துவிடுகிறார்கள் என்கிறார்கள் இவர்கள்.

 

காலம் எப்போதும் ஒரே சிந்தனைகளை சுற்றிக் கொண்டே இருப்பதில்லை. எண்ணங்கள், கருத்துக்கள், உணர்வுகள், மரபுகள் கணந்தோரும் மாறிக் கொண்டே இருக்கின்றன. சுதந்திரப் போராட்ட கால உணர்ச்சிகளை இன்றைய இளைஞர்களால் எப்படி உணர்ந்து கொள்ள முடியாதோ அதேப்போல் 2009-ஆம் வருட ஈழ இனப்படுகொலைக்கு எதிராக எழுந்துள்ள எழுச்சிமிக்க உணர்ச்சிகளை நாளைய இளைஞர்களால் புரிந்து கொள்ள முடியாது என்பதும் காலத்தின் எழுதப்படாத சட்டம்.

 

இன்றைய காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்துக் கொண்டிருக்கும் இப்படுகொலையும், அதற்கு எதிராக பொங்கி எழும் மக்களிடமும், அமைப்புகளிடமும், அடக்குமுறையும், வன்முறையும் திணிக்கப்படும் போது கடைசி ஆயுதமாக பொங்கியெழுகின்றது மாணவர் சமூகம். உலகத்தில் பல சமூகங்களிளும் நடக்கும் கடைசி போராட்டத்தின் எழுச்சியாகவே மாணவர் சமூகம் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கின்றன. ஆளும் வர்க்கம் மாணவர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க முற்படும் போது அங்கே மாபெரும் கலகம் தோன்றுவது நியதியாகிறது.

 

மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தில் அதற்கெதிரான குரல் யாரிடமிருந்து வந்தாலும் அது வரவேற்கப்பட வேண்டியது. அரசாங்கம் அவ்வுணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசாங்கம் என்பது மக்களுக்கானது என பொறுப்புகளை உணர்ந்து கவனமாகச் செயல்பட வேண்டும். பொது மக்களிடம் வன்முறையை காட்டுவதென்பது ஜனநாயக மரபாகாது என்று மாணவர்கள் மீது நடத்திய வன்முறைக்கு எமது கடும் கண்டனங்களையும் பதிவு செய்கிறோம்.


தமிழச்சி
07ஃ03ஃ2009