சிலகாலங்களுக்கு முன்னர் விடுதலையில் பெரியாரின் ஆக்கங்களுக்கான காப்புரிமை தொடர்பான கருத்து வெளிவந்து சர்ச்சைக்குள்ளான நேரம் இப்பதிவினை எழுத நினைத்திருந்தேன்.
இப்போது மறுபடி அந்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இனியும் தள்ளிப்போட விருப்பமில்லாமலிருக்கிறது.
புலமைச்சொத்துக்களை சொந்தம் கொண்டாடுதல் தொடர்பான எனது சேகரிப்புக்களைப் பகிர்ந்துகொள்ளும் இத்தொடரின் இந்த முதல் பகுதியில் ஒரு கேலிச்சித்திரம்.!
இக்கேலிச்சித்திரம் இன்று thepiratebay.org இன் முகப்பில் காணப்பட்டது.
piratebay மீதான தொடர் வழக்குகள் விசாரிக்கப்பட்டுவரும் நடப்பு நிலவரத்தை ஒட்டியதாக இக்கேலிச்சித்திரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இத்தமிழாக்கத்தை முதலில் பாருங்கள். அடுத்தடுத்த பதிவுகளில் இதுபற்றி மேலும் உரையாடலாம்.
படத்தின் மீது சொடுக்கிப் பெரிதாக்கிப்பாருங்கள்..