Language Selection

ஒன்றா இரண்டா! இல்லை! தமிழ் மக்கள் அனுபவிக்கின்ற வாழ்வியலில், பல எதிரிகளை அவர்களுக்கு அடையாளம் காட்டி வருகின்றது. ஏகாதிபத்தியங்கள், இந்தியா, சிங்கள பேரினவாத அரசு, இலங்கை இந்திய அரசுடன் உள்ள கூலிக் குழுக்கள், புலிகள் என்று, இன்று இவர்கள் வெளிப்படையாகவே தமிழ் மக்களுக்கு எதிராக  இயங்குகின்றனர்.

இதை அண்டி வாழும் ஓட்டுண்ணிகளையும், தமிழ் சமூகம் பல்வேறு தளத்தில், வௌ;வேறு முகத்துடன் அடையாளம் காண்கின்றனர். ஆனால் இந்த எதிரிகள் பற்றி மயக்கம், தெளிவின்மை தமிழ் சமுகத்தில் சூழல் சார்ந்து, ஒரு முரண்பாடாக இருப்பதும் உண்மை. இது மக்களை மக்களுக்காக போராட வைப்பதை தடுத்து நிறுத்துகின்றது.

 

எம் அனைத்து விமர்சனமும், முயற்சிகளும், தமிழ் மக்கள் தமக்காக தாம் போராட வழிகாட்டுவது தான். தமிழ் மக்கள் வௌ;வேறு தளத்தில் சந்திக்கின்ற நெருக்கடிகளை பொதுமைப்படுத்தி, அதை நோக்கி மக்களின் செயலை கோருவதுதான். இதற்கு வெளியில் வேறு எந்த அரசியல் நோக்கமும் எம்மிடம் கிடையாது. எந்த குறுகிய அரசியலை நாம் ஆதரிக்கவும், இதன் பின்னால் செல்லவும் போவதில்லை. மக்களின் விடுதலைக்கு உதவாத, எந்த இடைக்கால வழிகாட்டலையும் தீர்வுகளையும் நாம் எதிர்த்து மக்களை விழிப்பூட்டுவோம். இதுவே எம் வரலாற்றின் கடமை. அனாதையாக செத்தாலும், கோழைத்தனமாக படுகொலை செய்யப்பட்டாலும், மக்களின் எதார்த்த வாழ்வுக்காக போராடுவது எம்முன்னுள்ள அடிப்படையான பணியாக உள்ளது. இதுமட்டும் தான் நேர்மை, இது மட்டும் தான் உண்மை.  

 

எம் மக்கள் மேல் சிங்கள பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள யுத்தம்

அதுவோ 'புலிப்பயங்கரவாதம்" என்று கூறிக்கொண்டு, புலிகளின் தவறுகளை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு தமிழ் இனத்தையே அழிக்கின்றது. ஒரு இன அழிப்பை செய்கின்றது.

 

மக்களை புலிகள் பாதுகாப்பதற்கு பதில், புலிகளே மக்களை கேடயமாக பயன்படுத்துகின்ற நிலை. பேரினவாத சிங்கள அரசோ மக்களின்; மீட்பாளராக கூறிக்கொண்டு, அந்த மக்களைச் சேர்த்துக் கொல்லுகின்றது.

 

இப்படி அரச பயங்கரவாதம் தன் பாசிச வெறியுடன், ஒரு நாட்டின் மக்களை கொன்று குவிக்கின்றது. இதன் பின் இருப்பதோ சிங்கள பேரினவாத பயங்கரவாதமும்;, அரச பயங்;கரவாதமுமாகும். இவை இரண்டும் இணைந்து, தமிழினத்தை குறி வைத்து அழிக்கின்றது. இப்படி சிங்கள பேரினவாதம், அரசு, என்று இரண்டு பயங்கரவாதத்தை தமிழினத்தின் மேல் ஏவுகின்றது.

 

இப்படி அரசு நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில், புலிகளின் கணக்குப்படி தை 1ம் திகதி முதல் மாசி 11ம் திகதி வரை, 1385 தமிழ் மக்கள் கொல்லப்பட, 4058 பேர் காயமடந்துள்ளனர்.

 

இந்த மனித அழிவையும், மனித சிதைவையும், மனித அவலத்தையும், புலிகள் மக்களை பணயமாக்கி நடத்தி முடிக்கின்றனர் என்பது ஒரு பக்க உண்மை. மறுபக்கத்தில் இதை செய்து  முடிப்பது சிங்கள பேரினவாதமும், அரசுமாகும். இதை யாரும் எந்தக்  காரணத்தைக் கூறியும் நியாயப்படுத்த முடியாது.

 

இவையோ அடிப்படையில் தமிழ்மக்கள் மேலான சிங்கள அரச பயங்கரவாதம் தான். புலிகள் இதை மூலதனமாகக் கொண்டு தான், தமிழ் மக்களை இக்கட்டான இழிவான நிலைக்குள் வைத்து, அவர்களை கொல்லக் கோருகின்றனர்.

 

தமிழ் மக்கள் நாள் தோறும் கொல்லப்படுகின்றனர். அவர்களையிட்டு அரசு மற்றும் புலிக்கு எந்த அக்கறையும் கிடையாது. அவர் அவர் தம் சுயநலத்துடன் இதை அணுகுகின்றனர். இந்த மக்களுக்காக யாரும் குரல்கொடுக்கவில்லை. தமிழ் மக்களின் 'ஏகப்பிரதிநிதிகள்" 'மீட்பாளர்கள்" என்று கூறிக்கொண்டு புலிகள், மக்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்புக்கு  பதில், அவர்கள் கொல்லப்படுவதையே தம் அரசியலாக்குகின்றனர். இதில் இருந்து தமிழ் மக்களின் மீட்பாளராகக் கூறிக்கொண்ட அரசு, தமிழ் மக்களை கொல்லுகின்றது.   

 

இதைச் செய்துவிட்டு தம் பிரச்சாரங்களில் குருதியால் அறைந்து நியாயம் பேசுவதும், தாம் தாக்கவில்லை என்பதும், புலிகளின் குண்டுகள் வெடித்து தான் மக்கள் இறப்பதாக பிரச்சாரம் செய்வதும், சிங்கள அரச பயங்கரவாதத்தின் சொந்த முகமாக உள்ளது. அதேநேரம் தம் குண்டு வீச்சுக்களில் காயமடைந்தவர்களை சிகிச்சை அளிக்கமுனைவது தான், சிங்கள அரச பாசிசத்தின் மறுபக்கமாகும். மக்களை ஏமாற்றுகின்ற, அதில் அக்கறை உள்ளதாக காட்டுகின்ற பாசிச வேஷமாகும்.

 

இதைத்தான் புலிகளும் மக்களைக் கொல்ல வைத்துவிட்டு, பின் அதைக் காட்டி அழுவது என்ற அரசியலைச் செய்கின்றனர். அரசோ கொன்றும் காயப்படுத்தியபினனும்; சிகிச்சையும், குண்டுகளை போட்ட மக்களை கட்டாயமாக வெளியேற வைத்தும் மக்களின் மீட்பாளராக காட்டி அரசியல் நாடகமாடுகின்றனர். இப்படி இழுபறியான இரண்டு பாசிசத்தின் பிடியில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். 

 

இப்படி புலிகளின் பிடியில் இருந்து தப்பிவரும் மக்களுக்கு உணவு கொடுத்து, கவுரவமாக நடத்துகின்ற வேஷங்கள். மறுதளத்தில் அனைவரையும் தமிழனாகவும், அதநேரம் புலியாகவும் பார்க்கின்ற சிங்கள பேரினவாத கண்ணோட்டம். பெண்களுக்கு பாலியல் பரிசோதனை செய்வதுடன், அதை ஏன் எதற்காக செய்கின்றனர் என்று தெரியாத எல்லைக்குள், தமிழ்மக்களை சிங்கள பாசிசம் இன அடிமைகளாகவே கையாளுகின்றது.

 

இதை இந்த சிங்கள பேரினவாத பாசிசம், புலிகளின் கொடூரமான நடத்தைகளின் பின்னணி இசையூடாக செல்வதுதான், இதில் உள்ள சூழ்ச்சியாகும். 

 

இப்படி கேவலமான தமிழனாக அணுகி நடத்தும் சிங்கள அரசு, புலிக் கண்ணூடாகவே தப்பி வரும் ஒவ்வொரு மக்களையும் தனிமைப்படுத்துகின்றது. புலிகள் வழங்கிய கட்டாய பயிற்சி, மற்றும் புலிகளின் ஊடுருவலைக் காட்டி, வன்னியில் இருந்து தப்பி வரும் ஒவ்வொரு மக்களையும், சிங்களம் உருவாக்கும் தன் திறந்தவெளி சிறைக்கூடத்தில் தள்ளுகின்றது.

 

யுத்த சூழலில் வாழ்ந்த மக்களின் நிலையை, அதன் ஓப்பீட்டுத் தன்மையில் மேம்படுத்தி, இந்த நயவஞ்சகமான இனவொழிப்பை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துகின்றது.

 

இதற்குள் தனிமைப்படுத்தியவர்களை, மேலும் தனிமைப்படுத்துகின்றது. 1971 களில் 1990 களிலும் பல பத்தாயிரம் ஜே.வி.பி உறுப்பினர்களை பல வருடங்கள் தனிமைப்படுத்திய வழியில், அரசியல் ரீதியாக சிதைக்கும் 'புனர்வாழ்வு" முகாம்களை உருவாக்கி வருகின்றது. அனைத்தையும் மக்களுக்கு பதில், புலி பூதக்கண்ணாடி ஊடாக தமிழன் என்ற அடையாளத்தின் ஊடாக அணுகுகின்றது. பல ஆயிரம் பேரை, இப்படி தனிமைப்படுத்தி அடைக்க திட்டமிட்டுள்ளது.

 

மறுபக்கத்தில் தமிழ்மக்களின் உரிமைகளை யுத்தத்தின் பின் என்று கூறிக்கொண்டு, வாலாட்டும் நாய்களுக்கு ஏற்ப எலும்பைப் போட முனைகின்றது.

 

இப்படி இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதம், சிங்கள பாசிசமாகி, தமிழ் இனத்தின் மேல் சூழல் கொள்கின்றது. இப்படி தமிழினத்தை நாயிலும் கீழாக நடத்துகின்றது, நடத்த முனைகின்றது. இவை அனைத்தையும் புலிப் பாசிசத்தின் பின்னணி இசையுடன் அது செய்து முடிகின்றது. சிங்கள அரச பாசிசத்தை எதிர் கொண்டு போராடுவதற்கு, தமிழ்மக்கள் தமக்காக தாம் போராடுவது அவசியமான முன் நிபந்தனையாகும்.

 

பி.இரயாகரன்
18.02.2009