Language Selection

சுப்பர்லிங்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வி.பி. சிங்கை இழிவுபடுத்தும் 'புதிய ஜனநாயகம்'என்கிற பெயரில் ஒரு க‌ட்டுரையை பெரியார் முழ‌க்க‌ம் இத‌ழில் விடுத‌லை ராசேந்திர‌ன் எழுதியுள்ளார்.

 

வி.பி.சிங்கை நாம் என்னமோ 2009 ல் தான் முதல் முறையாக விமர்சனம் செய்து எழுதியுள்ளதை போலவும் அதைக்கண்டு அவர் அதிர்ச்சியடைந்தவரை போலவும் கட்டுரையை இவ்வாறு துவங்கி எழுதியுள்ளார்.

 

'மக்கள் கலை இலக்கியக் கழக'த்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழமை சக்தியாகவே கருதுகிறோம். களப் பணிகளில் பல்வேறு சூழல்களில் கரம் கோர்த்து நிற்கும் இயல்பான சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் இரு சக்திகளும் கரம் கோர்த்தே களமிறங்கி வருகின்றன. குறிப்பாக 'இந்து' எதிர்ப்பு; பார்ப்பன எதிர்ப்பு என்ற கோட்பாடுகள் - இரு அணியின் தோழர்களையும் நெருக்கமாக்கியுள்ளன. ஆனாலும்கூட அண்மையில் அவர்களின் 'புதிய ஜனநாயகம்' ஏட்டில் வி.பி.சிங் பற்றி வெளிவந்த ஒருகட்டுரை - 'புதிய ஜனநாயகத்தின்' பார்ப்பன எதிர்ப்புப் பற்றிய பல்வேறு அய்யங்களை எழுப்பியிருப்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

 

 

அவரைப் பற்றி நாம் கட்டுரை மட்டும் எழுதவில்லை நையாண்டியாக‌ பாட்டு கூட‌ பாடியுள்ளோம்,கிட்டத்தட்ட‌ ப‌தினைந்து ஆண்டுக‌ளுக்கு முன்பே. எனவே நாம் வி.பி.சிங் கால‌த்திலிருந்தே அவரை அம்ப‌ல‌ப்ப‌டுத்தி தான் எழுதி வ‌ருகிறோம்.ஒருவேளை விடுத‌லை ராசேந்திர‌னுக்கு அப்போதெல்லாம் புஜ‌,புக வும் நமது பாடல்களும் கிடைக்க‌வில்லையோ என்ன‌வோ?அந்த பாடலின் சுட்டி கீழே உள்ள‌து.

 

 

 

 

 

விடுதலை ராசேந்திரன் இவ்வாறு ஒரு கட்டுரையை எழுதியிருப்பதில் நமக்கு ஒன்றும் வியப்பில்லை தான், அவரால் அதற்கு மேலே இந்த விமர்சனம் தொடர்பாக அதன் எல்லையை கடந்து நோக்க முடியாது தான்,

 

காரணம் அப்படியான ஒரு விமர்சன எல்லையை அவருடைய கண்னோட்டம் கடக்கும் எனில் அந்த விமர்சனம் வி.பி.சிங்குடன் நிற்காது என்பதை அவர் அறிவார் என நான் கருதுகிறேன். புஜ விமர்சனங்களுக்கு எதிராக அவர் வைக்கும்‌ வாத‌ங்க‌ள் அனைத்தும் சொத்தை க‌த்த‌ரிக்காயாக‌த்தான் இருக்கிற‌து. வி.பி.சிங் மீது பு.ஜ‌ முன்‌வைத்துள்ள‌ வரிசையான அனைத்து விம‌ர்ச‌ன‌ங்க‌ளுக்கும் க‌ட்டுரையாளர் த‌க்க‌ ப‌தில்களை கூறி அதை ம‌றுக்க‌ முற்ப‌ட‌வில்லை,மாறாக தம‌து உப்புச்சப்பற்ற வாதங்களோடு அவர் தொடர்ந்து பார்ப்பனியம் பார்ப்பனியம் என்பதை மட்டும் தான் கூறிக்கொண்டிருக்கிறார்.

 

 

ம‌.க‌.இ.க‌ வை தாங்கள் எப்போதும் தோழ‌மை அமைப்பாக‌ தான் க‌ருதி வ‌ருகிறார்க‌ளாம் இந்நிலையில் வி.பி.சிங்கை புதிய ஜனநாயகம் இழிவுபடுத்திவிட்டதால் ம‌.க‌.இ.க வின் பார்ப்பன எதிர்ப்புப் பற்றி அவர்களுக்கு பல்வேறு அய்யங்கள் எழுந்துவிட்ட‌தாம்!

 

அந்த‌ அய்ய‌ங்க‌ளை தீர்த்துக்கொள்வ‌து மிக‌வும் அவ‌சியம்.

 

ஆனால் எவ்வாறு இவர்களின் அய்யங்களை தீர்த்து வைப்பது?

 

இவர்களுடைய கட்டுரைக்கு ப‌திலுக்கு ப‌தில் என்று நாம் வரிந்து கட்டிக்கொண்டு ப‌தில் கூறிக்கொண்டிருப்ப‌தால் ஒன்றும் இவ‌ர்க‌ளின் அய்ய‌ங்க‌ள் தீராப்போவ‌து இல்லை !

 

 

உதார‌ண‌த்திற்கு ம‌.க‌.இ.க‌ இட‌ஒதுக்கீட்டுக்கு எதிரான‌‌ அமைப்பு என்கிற‌ பொய்யை யார் திரும்பத் திரும்ப‌ சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ?

 

சாதி ஒடுக்குமுறையை அனுப‌விக்காத‌ ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கி பார்ப்பனியத்திற்கு சேவை செய்து கொண்டே தானும் ஒடுக்கப்பட்டவன் தான் அதனால் எனக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று வெட்கமில்லாமல் கைகளை நீட்டிக்கொண்டு நிற்கும் ஆதிக்க சாதி இந்துக்களின் பிரதிநிதிகளாக கட்சிகளை நடத்திக்கொண்டிருப்பவர்கள்‌‌ தான் ம‌.க‌.இ.க‌ இட‌ஒதுக்கீட்டிற்கு எதிரான‌ அமைப்பு என்கிற‌ பொய் பிர‌ச்சார‌த்தை கூச்ச‌மின்றி தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள், அந்த பொய் பிரச்சாரத்திற்கு வஞ்சகமாக‌ தாழ்த்தப்பட்டவர்களையும் சேர்த்துக்கொள்கிறார்கள். அவ‌ர்க‌ளுக்கு நாம் ப‌க்க‌ம் ப‌க்க‌மாக‌ ப‌தில் கூறினாலும் மண்‌டையில் ஏறுவ‌தில்லையே ஏன் ?

 

 

ஏனென்றால் அவர்கள் சாதிய‌ ஒடுக்குமுறையின் கொடூர‌த்தை அனுப‌வித்த‌வ‌ர்க‌ள் அல்ல‌ அதை ஏட்ட‌ள‌வில் மட்டுமே வாசித்திருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு நாம் என்ன‌ விள‌க்க‌ங்க‌ள் த‌ந்தாலும் ம‌.க‌.இ.க‌ இட‌ஒதுக்கீட்டுக்கு எதிரான‌ அமைப்பு என்கிற‌‌ பொய்யை தான் சொல்லிக்கொண்டிருப்பார்க‌ள்.

 

என‌வே அவ‌ர்க‌ள் சாதி இந்து க‌ண்ணோட்ட‌த்திலிருந்து விடுப‌டாத‌வ‌ரை,தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை ஒடுக்கும் அவ்வகை க‌ண்ணோட்ட‌த்திலிருந்து இட‌ஒதுக்கீடை நோக்கும் வ‌ரை ம‌.க‌.இ.க‌ இவ‌ர்க‌ளுக்கு எதிரியாக‌த்தான் தெரியும்.என‌வே அவ‌ர்க‌ள் அதிலிருந்து‌ விடுப‌டாத‌வ‌ரை இட‌ஒதுக்கீடு, ம‌.க‌.இ.க‌ போன்ற‌ வார்த்தைக‌ளை உச்ச‌ரிக்க‌ அவ‌ர்க‌ளுக்கு எந்த தகுதியுமில்லை.

 

 

அதுவே தான் விடுத‌லை ராசேந்திர‌னுக்கும் பொருந்தும் என்று க‌ருதுகிறேன். என‌வே இத‌ற்கு ஒரே தீர்வு அவ‌ர் மீண்டும் புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌ம் க‌ட்டுரையை நேர்மையாக‌ வாசிக்க‌ முயல்வது மட்டுமே,அவ‌தூறு செய்ய‌ வேண்டும் என்கிற‌‌ நோக்க‌த்தையும்,தமது விமர்சன கோட்டைத்தாண்டாமலும் க‌ட்டுரைக்குள் குதித்து புரண்டல் இப்ப‌டி தான்‌ ம‌.க‌.இ.க‌ க‌ன்ணுக்குத்தெரியும்,

 

எனினும் கான‌ல் நீர் நீர‌ல்ல‌வே.