06242022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

ஈழம்: திருச்சிஈழம்: திருச்சியில் இராணுவ அலுவலகத்தை மாணவர் முற்றுகை - படங்கள்!

ஈழத்தில் இறுதி தாக்குதல் என்ற பெயரில் தமிழ் மக்களின் மீது சிங்கள இனவெறி இராணுவம் தொடுத்திருக்கும் போரில் அன்றாடம் பல பத்து மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்தப் போரில் இந்தியா ஈடுபட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரங்களும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழக மாணவர்களிடம்

 ஈழம் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு வந்திருப்பதை தடை செய்ய நினைத்த அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்து 12.02.09 அன்று திறப்பதாக அறிவித்து செயல்படுத்தியது. திறந்த அன்றே திருச்சி நகரின் எல்லாக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை அணிதிரட்டிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திருச்சி மத்திய பேருந்து அருகே உள்ள 117ஆவது பிரேதச இராணுவப்படை தலைமை அலுவலகத்தை

 

 முற்றுகை இட்டது. இந்தியாவின் இராணுவ அமைப்பையே எதிர்த்து மாணவர்கள் போராடியதைக் கண்டு அதிர்ச்சியுற்ற போலீசு உடனே வந்து போராட்டத்தை நிறுத்துவதற்கு முயன்றது. ஆனால் மாணவர்கள் உறுதியாக நின்று முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.

 

திருச்சி அரசு சட்டக்கல்லூரியின் மாணவரும் பு.மா.இ.மு மாவட்ட இணைச் செயலாளருமான த.கிளர்ச்சியாளன் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பு.மா.இ.மு வின் ஆல்பர்ட் முன்னிலை வகித்தார். உருமு தனலட்சுமி கல்லூரி பு.மா.இ.முவின் கிளைச் செயலாளர் சங்கத்தமிழன் கண்டன உரையாற்றினார். கல்லூரி திறந்த அன்றே இந்த போராட்டத்தை நடத்தியதைக் கண்டு அஞ்சிய போலீசு முன்னணியாளர்களை கைது செய்வதற்கு திட்டம் தீட்டியிருப்பதாக தெரிகிறது. மாணவர்களும் இதை எதிர்பார்த்து போராட்டத்தை தீவிரமாக நடத்துவதற்கும் தயாராகி வருகின்றனர்.

 

trichy_01

trichy_02

trichy_03

trichy_04

trichy_05

trichy_06

trichy_07

trichy_08

trichy_09

trichy_10

trichy_11trichy_12

trichy_13

trichy_14

trichy_151

trichy_16

trichy_171


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்