08052021வி
Last updateபு, 28 ஜூலை 2021 10am

மனங்கள் வேதனைகளில் திளைத்தாலும் சரியான ஒன்றுக்கான தேடலில் முரன்பாடுகள் தவிர்கமுடியாதவை

அன்புள்ள குருபரன்,

முதலில் உங்களது “சுதந்திரம் ஜனநாயகம் மாற்றுக்க கருத்துக்கள்.”என்ற ஆசிரியர் தலையங்கமாக வந்த கட்டுரையை படித்தேன்.அதில் என்னை நோக்கியும் கேள்வி எழுப்பியுள்ளீர்கள் என்பதை புரிந்து கொள்கின்றேன். நான் கூறியவை இப்போதும் சரி என்றே நினைக்கின்றேன். நாம் நிநைய பேசவேண்டும்.

 


முதலாவது உங்கள் ஆசிரியர் தலையங்கம்.தலையங்கம் என்றை வரையறையை தாண்டி கட்டுரைகளாக வருகின்றது.கட்டுரைகளுக்கு என தனியான பிரிவையும் வைத்திருக்கின்றீhகள்.ஆசிரியர் தலையங்கம் என்பது நறுக்குத் தெறித்தால் போல் நச்சின்று சிலகருத்துக்களை வாசகர் மனதில் பதியும்படி செய்வது. ஆசிரியர் தனது கருத்தை உறுதியாக தெரிவிப்பது.இதுதான் எனக்குத் தெரிந்த ஆசிரியர் தலையங்கம் பற்றிய வரைவிலக்கணம்.

உங்களது கட்டுரையில் ஆசிரியாரான நீங்கள் விடுதலைப்புலிகள் தொடர்பாக ஏதாவது உங்கள் கருத்து என உறுதியாக தெரிவித்திருக்கிறீர்களா? இல்லை அவர்கள் சொன்னார்கள் இவர்களர் சொன்னார்கள் என்றுதான்’ குறிப்பிடுகிறீர்களே ஒழிய. உங்கள் கருத்தை காணவில்லை. இலங்கை அரசாங்கம் பற்றியும் மாற்றுக்கருத்தாளர்கள் என்று என்னையும் உள்ளடக்கியவர்கள் தொடர்பாகத்தான்’ உங்கள் கருத்த இருக்கின்றது. 

இத்துடன் கடைசியாக வெளிவந்த வைகறை பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தை இணைத்துன்ளேன்.ஆதில் எப்படி ஆசிரியர் தனது கருத்தை எல்லோர் நோக்கியும் வைத்திருக்கிறார்ன் என்பது தெரிகின்றது. ஆசிரியர் தலையங்கமே ஒரு ஊடகத்தை வாசகர்கள் எடைபோடுவதற்கான பகுதி அது கவனமாக எழுதப்பட வேண்டும் உங்கள் எழுத்துக்களில் உணர்சிகளைத் தான் கான்கின்றேன் விவேகத்தை நடுநிலமையையும் காணவில்லை. 

புலிகளுக்கு என எத்தனையோ இணையத்தளங்கள் இருக்கின்றன.. புலிகளுக்கு எதிரானவர்;களுக்கும் தேனீ உட்பட ஏராளமான இணையத்தளங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழ்மக்களுக்கு என எதாவது இணையத்தளம் இருக்கின்றதா என்றால் இல்லை.. அதுவாக GTN .இருக்கவேண்டும் என்பதே எதிர்பார்பு. நீங்கள் இலங்கையில் இருந்து லன்டன் வந்த நேரத்தில் றேடியோ ஒன்று ஆரம்பிக்கவேண்டும் என என்னுடன் கதைத்த நேரத்தில் நாம் இருபற்றி கலந்துரையாடி இருக்கின்றோம். 

ஆனால் உங்களது இணையத்தளம் புலிகளின் இன்னுமோர் பிரச்சார ஊடகம் போலவே எனக்குத் தெரிகின்றது. அதற்கு ஏற்கனவே பல இருக்கின்றன. அவற்றுடன் உங்களால் போட்டி போடமுடியாது. தமிழ் மக்களுக்கு உண்மைகள் தெரிய வேண்டுமானால் எம்பற்றிய உண்மைகளையும் அவர்கள் தெரிந்த கொள்ளவேண்டும் தனிய இலங்கை அரசு பற்றியது மட்டும் அல்ல… இலங்கை அரசுபற்றி எல்லோருக்கும் எல்லாம் தெரியும் அதனால் தானே இந்தப்போராட்டம். எனவே இலங்கைச அரசுபற்றி அதிகம் எழுதவேண்டிய தேவை இல்லை. தமிழ்மக்களுக்கு தமிழர்களால் மறைக்கப்படுகின்ற உண்மைகளும் தெரிய வேண்டும். எமது முப்பது வருடகாலம் பற்றி போராட்டத்தின் சரிபிழைகளை மக்கள் தெரிந்து கொள்ளாமல் மக்களாகிய அவர்கள் சிந்தனையிலும் செயலிலும் அவர்கள் விட்ட தவறுகளை புரிந்த கொள்ளப்பண்ணவேண்டியது ஓர் ஊடகத்தின் கடமை என்றே நான் நினைக்கின்றேன். ஓர் விடுதலைப்போராட்டத்தில் ஊடகங்கள் பெரும் பங்குவகிக்கின்றன.

 
இராணுவக்கட்டுபாட்டுப்பிரதேசத்தில் இருந்து வெளியேறிய மக்களை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றது. எங்காவது உங்கள் இணையத்தளத்தில் வந்ததுண்டா. இது எனக்கு கிடைத்ததகவல் இதனை என்னால் உறுதிப்படுத்தமுடியும். GTN செய்தியாளருக்கு ஏன இவைகள் மட்டும் கிடைக்கவில்லை. தற்போதைய தற்கொலை தாக்குதல் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. 

உங்களது எழுத்துக்கள் எல்லாம் இராணுவகட்டுப்பாட்டுப்பகுதிக்கு மக்கள் போய்விடக்சுடாது என்பதை ஊக்குவிப்பதாகவே இருக்கின்றது. அதுதான் புலியின் நிலைப்பாடு. மக்களை கேடையமாக பயன்படுத்தி உலக நாடுகளை வலியுறுத்தி ஓர் போர் நிறுத்தத்தை உருவாக்குவது.. அதற்கு உரம் சேர்ப்பது போலவே உங்கள் எழுத்துக்கள் உள்ளன. வன்னிப்பிரதேசத்தில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியே வருவத பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காத தமிழ்தேசியகூட்டமைப்பு மாதிரியுள்ளது. 

இந்தமக்களை பாதுகாப்பாக விடுதலைப்புலிகள் எப்போ அனுப்பியிருப்பார்களானால் இந்த உலகநாடுகள் எல்லாம் இணைந்து ஓர் போர்நிறுத்தத்தை கொண்டு வந்திருக்கும். மக்களை கேடயமாக பயன்படுத்தும் இந்த உண்மையை தமிழர்களுக்கு மட்டும் தமிழ்ஊடகங்கள் மறைக்கலாம். ஆனால் உலகநாடுகள் எல்லாமே இதனை தெளிவாக தெரிந்து கொண்டுள்ளது. 

ஏந்த மக்களை பாதுகாக்கவென ஆயுதம் ஏந்தப்பட்டதோ அந்தமக்களை பயன்படுத்தி சாகக்கொடுத்து தமது இருப்பை காப்பற்றிக்கொள்ளும் அமைப்பு நிட்சயம் விடுதலை அமைப்பாக இருக்கமுடியாது. இறுதியில் நோர்வே உட்பட அனைத்து நாடுகளும் ஆயுதங்களை போடுங்கள் என கூறவேண்டிய நிலைக்கு வந்துள்ளது.எமது முப்பது வருட காலஉழைப்பு, இறந்த போராளிகள், மக்கள் அழிக்கப்பட்ட சொத்தக்கள் அத்தனையும் அர்தமில்லாததாக்கப்பட்டிருக்கின்றது. 

ரணில் பிரபாகரன் ஒப்பந்த காலத்தில் இரு நாடுகள் போலவே சர்வதேச சமூகம் இலங்கையை கருதிச் செயற்பட்டது.கொழும்பு வரும் எந்த ராஜதந்திரிகளும் கிளிநொச்சி செல்லாமல் செல்வதில்லை.அநத நிலையில் இருந்து மேலும் ஒருபடி போவதற்கு பதிலாக இராணுவபலமே இல்லாதவர்களாக நாங்கள் மாற்றப்பட்டிருக்கின்றோம். 

இவற்றுக்கு யார் காரணம்  மாற்று இயக்ககாரர்களா ? அல்லது 
மாற்று கருத்துக்காரர்களா?  புலிகளே காரணம்.

 

பிழை எனத்தெரிந்தும் அதனை தொடர்து ஆதரித்துக் கொண்டிருந்த புலி ஆதரவாளர்களே காரணம்.. பிழை எனத்தெரிந்தும் அதனை தைரியமாக சொல்வதற்கான சூழல் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் வியாபாரத்துக்கா அதன தமிழ்மக்களுக்கு சொல்ல மறுத்த தமிழ் ஊடகங்களே காரணம். இத்தனை இழப்புக்களுக்கும் இவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். மற்றவர்களை துரோகிகள் என்று கூறி இன்று ஒட்டுமொத்த போராட்டத்தையுமே,அத்தனை இழப்புக்களையும் அர்தமற்றதாக்கிய விடுதலைப்புலிகளின் துரோகத்தனம் மக்களுக்கு எடுத்தியம்பப்பட வேண்டும். அப்போது தான் இனியாவது சரியானது ஒன்று வரும். இதனைத்தான் நான் ஊடகசுதந்திரம் தர்மம் என்று GTN னிடம் எதிர்பாக்கின்றேன்.

அகதிமுகாம்கள் பற்றி நீங்கள் சொல்லயது அத்தனையும் உண்மை அதனை நான் மறுக்கவில்லை. நிலமை மாற்றப்பட வேண்டும். இந்த நிலமைக்கள் ஆங்கிலத்தில் மற்றைய நாட்டுக்காரர்களுக்கு ராஜதந்திரிகளுக்கு தெரிவதற்காக எழுதப்படவேண்டியவை அவர்களால் மட்டுமே இந்த நிலையை மாற்றமுடியும்.

அதற்கான வேலைகளை இந்த மாற்று இயக்கக்காரர்களும் .மற்றவர்களும் செய்யவேண்டும் அதற்கான கேள்விகளை நீங்கள் எழுப்பியிருப்பதும் ..சரி புலியை அழித்தாகிவிட்டது அடுத்தது என்ன என்று அவர்களிடம் கேளுங்கள் அவர்களிடம் பதில் இருக்காது தங்களது இயலாமைக்கு புலிகளை காரணம் காட்டிக்கொண்டு வேலையற்ற வீனர்களாய் திரிபவர்கள்.. இவர்கள் இந்தியா இலங்கை ஒப்பந்த அமுலாக்க காலத்திலும் இப்படியே இருந்தவர்கள். இவர்களால் ஒன்றையும் உருவாக்க முடியாது. ஏதிர் போராட்டம் மட்டும்தான் நடத்தமுடியும்.. யதார்தத்தை உணராது கற்பனையில் மிதப்பவர்கள். இலங்கை அரசுக்கு எதிராக ஒரு கல்லை ஒரே ஒருகல்லை இவர்கள் இந்தக்காலங்களில் எறிந்திருப்பார்க்ளோ தெரிவாது. 

GTN பத்தோடு பதினொன்றாக வருவதை நான் விருப்பவில்லை. அத்தப்ப பத்துக்குள் ஒன்றாக மிளிர்வதையெ விரும்புகின்றேன். நீங்கள் பிழைப்புக்காக இந்த இணைத்தளத்தை நடத்தவில்லை என்ற புரிதலின் ;அடிப்படையிலேயே இவற்றை எழுதுகின்றேன். இல்லையாயின் இப்படி நேரம் செலவழித்து எழுதவேண்டிய தேவை இல்லை. 

இதனை நீங்கள் இணைத்தளத்திபிரசுரித்தாலும் பிரசுரிக்கலாம். ஆனால் கருத்துக் கூறவருபவர்களுக்கு எனது இந்த ஆழும் புரியாது. மாயாவை குத்தலாட்டக்காரி என்று சொன்னது போல் தான் இதையும் பார்பபார்கள். 

GTN அனைத்துத் தரப்பாலும் விரும்பிபார்கப்படும் இணையத்தளமாக இருக்கவேண்டும். செய்தியின் நம்பகத்தன்மைக்கு உத்தரவானமானதாக எல்லோராரும் எப்படி பி.பி.சி யை பார்கின்றார்களே அப்படி பார்கவேண்டும் இதுவே எனது விருப்பம

இப்படியான எனது விமர்சனத்தை நீங்கள் விரும்பவில்லை என்றால் நேரடியாகவே எனக்குச் சொல்லலாம். அது உங்களுக்கு கடினமானதாக இருந்தால் மறைமுகமாகவும் தெரிவிக்கலாம் நான் அதனை புரிந்துகொள்வேன். நான் எனது விமர்சனத்தை நிறுத்திவிடுகின்றேன்.

http://www.vaikarai.com/

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்