Language Selection

பு.மா.இ.மு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
உழைக்கும் மக்களின் விடுதலைக்கு பாதை
அமைத்த மாமேதை மார்க்ஸ் போராட்ட கவிதை
வாழ்நாள் முழுவதும் மார்க்ஸை துரத்திய
வறுமை துயரத்தின் கவிதை


மாமேதை மார்க்சின் ஏங்கெல்ஸ் நட்பின் கவிதை.
மார்க்ஸிய எதிரி புருனே பழமைவாதத்தின் கவிதை.
மனிதநேயத்தை உற்பத்தி செய்யும் மார்க்சியம் தத்துவ கவிதை
கொலை,கொள்ளை,கற்பழிப்பு, திருட்டுத்தனம்
விபச்சாரம், சுயநலன், மூடநம்பிக்கை என
மனித அவலங்களை உற்பத்தி செய்யும் முதலாளித்துவம்
அருவறுப்பின் கவிதை.

பெண்ணியத்திற்கே முன்னுதாரணம் தந்த
மார்க்ஸின் ஜென்னி பண்பின் கவிதை
கணவன் இருக்க மாற்றான் இராவணனுக்கு
மடிவிரித்த இராமனின் சீதை கழிச்சடையின் கவிதை.

உலகை குலுக்கிய ரஷ்ய சோசலிச புரட்சி
சரத்திரத்தின் கவிதை
அதை சீரழித்த குருஷேவ் கும்பலின் எதிர்ப்புரட்சி
வக்கிரமான முதலாளியத்தின் மீட்சி கவிதை

உலகின் முதல் சோசலிச புரட்சியின் நாயகன்
லெனின் நடைமுறை கவிதை
மூன்றாம் அகிலத்தின் மார்க்சிய துரோகி காவுட்ஸ்கி
பிற்ப்போக்கின் கவிதைலெனினின் கனவை நனவாக்கிய, பாசிச ஹிட்லருக்கு
பாடை கட்டிய மாமேதை ஸ்டாலின்
பாட்டாளி வர்க்க சர்வாதிகார கவிதை
மார்க்சியன் என்று கூறிக்கொண்டே மார்க்சியத்தை
கற்பழிக்க முயன்ற துரோகி ட்ராட்ஸ்கி
ஓடுகாலி கவிதை

ஆசியாவின் நோயாளி சீனாவை செஞ்சீனாமாய்
மாற்றிகாட்டிய மாமேதை மாவோ
சீனவானின் சிவப்பு நட்சத்திரத்தின் கவிதை
சீனாவில் மாவோவின் கல்லறையிலேயே சோசலிசத்தை
குழித்தோண்டி புதைத்த துரோகி டெங் சியாவோ பிங்
சி.பி.எம்.மின் குருத்துவத்தின் கவிதை.

அமெரிக்க-பிரெஞ்ச்-ஜப்பானிய ஏகாதிபத்தியங்களுக்கு
மரண அடி கொடுத்து மீண்டு எழுந்த
ஹோசிமினின் வியட்நாம் பினிக்ஸ் கவிதை
வியட்நாமில் புரட்சியாளர்களை எதிர்க்க
துப்பில்லாமல் டயாக்சின் இராசாயன குண்டுகளால்
20 இலட்சம் வியட்நாமிய உழைக்கும்
மக்களை கொன்றுபோட்ட அமெரிக்கா
பயங்கரவாத்தின் கவிதை

அமெரிக்க ஏகாதிபத்தியங்களுக்கு சிம்மசொப்பணமாய்
திகழும் ·பிடல் காஸ்ட்ரோ துடிப்பின் கவிதை
50 ஆண்டுகால பொருளாதார தடைகளால் கியூபாவை
சீரழிக்கும் அமெரிக்க பயங்கரவாதம் வயிற்றெரிச்சலின் கவிதை

ஸ்டாலின் காலத்து கிழக்கி ஐரோப்பா
சோசலிசத்தின் கவிதை
அமெரிக்க கைப்பாவை மேற்கு ஐரோப்பா
ஆக்கிரமிப்பின் கவிதை

பெண்ணடிமைத்தனமும், சுரண்டலும் அற்ற
தாய்வழி சமுதாயம் தூய்மையின் கவிதை
மனித அவலங்களை ஈன்றெடுத்த தந்தை வழி
சமுதாயம் சுரண்டலின் கவிதை

கடவுள் மனிதனை படைத்தான் என்ற கருத்துக்கு சவக்குழி
தோண்டிய சார்லஸ் டார்வின் பரிணாமத்தின் கவிதை.
மனிததோற்றத்தை பொய்யாலும், புரட்டாலும் இழிவுபடுத்தும்
பைபிளின் ஆதியாகமம் மூடனின் கவிதை.

தேசிய இன விடுதலை போராட்டத்தை நடத்திகொண்டிருக்கும்
ஈழம், பாலஸ்தீனம், காஷ்மீர், அசாம் தொடர் கவிதைகள்
அத்தீம்பிழம்புகளை அணைக்க முயலும் இலங்கை,
இஸ்ரேல், இந்திய ஆளும்வர்க்கம் விட்டில் பூச்சிகளின் கவிதை

இடைகாலத்தில் பார்ப்பீனியத்துக்கு மரண அடி கொடுத்த
புத்தம் கொடுமைக்கு எதிரான கவிதை.
அதனை கொன்றுபோட்ட பார்ப்பன கூட்டம்
வஞ்சகத்தின் கவிதை


23 வயதில் தாய்மண்னின் விடுதலைக்காக தூக்குகயிறை
முத்தமிட்ட மாவீரன் பகத்சிங் தன்மானத்தின் கவிதை
வெள்ளை துறையிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து
விடுதலை போராட்டத்துக்கு துரோகமிழைத்த
பாரதி கோழைத்தனத்தின் கவிதை.

பார்ப்பனியத்தையும், அதன் மிதவாத வடிவமான
காந்தியிசத்தையும் இறுதிவரை எதிர்த்த
டாக்டர் அம்பேத்கார் சாதி ஒழிப்பின் கவிதை
துரோகத்தையே அரசியலாக்கி
துரோகத்தையே அஹிம்சையாக்கி, துரோகத்தையே விடுதலை
போராட்டமாக்கிய இந்திய உழைக்கும் மக்களுக்கு
துரோகமிழைத்த பொக்கைவாய் காந்தி துரோகத்தின் கவிதை.


தன்மானத்தை தமிழனுக்கு ஊட்டிய கலககார கிழவன்
பெரியார் சுயமரியாதையின் கவிதை.
பெரியார் கொள்கைக்கு துரோகமிழைத்த அண்ணாதுரை
பிழைப்புவாதத்தின் கவிதை.

உழைக்கும் மக்களின் விளையாட்டான கபடி
வீரத்தமிழின் கவிதை
பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்தியாவை வேட்டை
காடாய் மாற்றும் ஏகாதிபத்திய கிரிக்கெட்
இளைஞர்களை சீரழிக்கும் போதை கவிதை.

இந்திய ஆளும்வர்க்கத்தை அதிரவைத்த தெலுங்கானா
போராட்டம் இந்தியாவின் சோசலிச தாகத்தின் கவிதை.
அதனை ஈவுயிரக்கமில்லாமல் ஒடுக்கிய பண்டித
நேரு பாசிசத்தின் கவிதை

உலகை அதிரவைத்த நக்சல்பாரி பேரெழுச்சி
வசந்தத்தின் இடிமுழக்க கவிதை.
அதனை இரத்தத்தால் முழ்கடித்த
இந்திய அதிகாரவக்கம்-சி.பி.எம்.மின் துரோகம்
கம்யூனிச துரோகிகளின் சங்கம கவிதை.

21 ம் நூற்றாண்டின் முதல் புரட்சியை பெற்றெடுத்த
எங்கள் நேபாளம் புரட்சிகர கவிதை
அதனை சீரழிக்க முயலும் இந்திய ஏகாதிபத்திய
துரோக அரசு போலி ஜனநாயகத்தின் கவிதை

இந்திய விடுதலைக்கு கட்டியம் கூறும்,
நக்சல்பாரிய புரட்சியாளர்கள்
இன்றைய நம்பிக்கை கவிதை
புரட்சி புரட்சி என்று
இந்திய உழைக்கும் மக்களை ஏமாற்றும் சிபிஐ-சிபிஎம்
ஒழிக்கபட வேண்டிய துரோக வரலாற்றின் கவிதை.
http://rsyf.blogspot.com/2009/02/1.html