தற்கொலைகளே அரசியலாகிப்போன தமிழ்மக்கள் வாழ்வில் முத்துக்குமாரு போன்ற இளைஞர்களின் தற்கொலைகள் எந்தவௌhரு மாற்றத்தையும் ஏறபடுத்திவிடாது. மாறாக மக்களின் அழிவில் அரசியல் புரியும் புலிகளுக்கு ஆதரவாக நடாத்தப்படும் கூத்துக்களுக்கு, ஓர் தென்புகோலாக அமையும். அதுவே வாக்கு வங்கிகளாகவும் மாறும்!
 
இலங்கையில் சிவகுமாரன் தற்கொலை அரசியலின் பிதாமகன். தமிழ்த்தேசிய அரசியலில் அவன் அன்று எடுத்த நஞ்சுக்குப்பி இன்று சகல புலிகளினதும் கழுத்தில் 'விடுதலைக்" குப்பிகளாக தொங்குகின்றது.
 
உலகில் எந்தவொரு விடுதலைப் போராட்ட இயக்கமும் கழுத்தில் நஞ்சுக்குப்பியை தொங்கவிட்டு, தற்கொலைப் போரையே வாழ்வாதாரமாகக் கொண்டு, விடுதலைப்போர் நடாத்தியதாக வரலாறு இல்லை. குறைந்தபட்சம் கொள்ளையடிக்கும்  பயங்கரவாதக் கும்பல்கள் கூட இதைச் செய்வதில்லை.
 
புலிகளுக்கு தலைவர் சயனைற் குப்பியை கையில் கொடுக்கும்போது, நீ யாரிடமும் பிடிபடும் சந்தர்ப்பத்தில் இதை அருந்தி அழிந்து போகக் கடவாய் என சபித்தே அனுப்புவார். அதன் விளைவு விடுதலைப் போராளிக்குரிய சகல தன்மைகளையும் இழந்து, ஓர் சாதாரண இராணுவ சிப்பாய் போன்றே களம் செல்கின்றான். நீ எப்படியாவது போராடி மடிந்தால் உன்கடமை முடிந்துவிடும் அவன் கழுத்தில தொங்கும் குப்பி நாளாந்தம் அவனுக்கு அதைச் சொல்லிக் கொணடேயிருக்கும்.
 
உண்மையான விடுதலை இயக்கங்களினதும்,  புரட்சிகர வெகுஐனப் போராளிகளினதும் நிலை அதுவல்ல. உன் உடல் பொருள் ஆவி அத்தனையும் மக்களுக்கே! நீ எதிரியிடம் பிடிபடும்போதும் எத்தகைய அடக்குமுறை சித்திரவதைகளுக்கு உட்படும்போதும் உன் உயிர் அவர்களால் போனாலன்றி உன்னால் தன்னழிப்பாக மாறக்கூடாதென்ற திடசங்கற்பத்;தோடு அவர்கள் களம் செல்கின்றார்கள். புரட்சிவாதியாகின்றார்கள், மக்களுக்கு சேவை செய்யும் மக்கள்படையாக பரிணமிக்கின்றார்கள். அவர்கள் வாழ்வதற்காக போராடுகின்றார்கள். யாரும் மரணிப்பதற்காக போhராடுவதில்லை. 
 
இவ்வகையில் முத்துக்குமாரு போன்ற இளைஞர்களின் தன்னழிப்பு நிகழ்வுகளை உற்றுநோகக்கினால், இன்று தமிழகத்தில் காட்டாறுபோல் பாய்ந்தோடுகின்ற குறுந்தேசிய உணர்வாளர்களின் தமிழ்ஈழ (புலி) உணர்ச்சிப் பேராட்ட வெள்ளத்தில் சிக்கி மூழ்கியதன் விளைவே எனலாம். இதை அவரது இறுதிப் பதிவுகள் சொல்கின்றன.
 
காசி ஆனந்தனின் பாடல்களை அறிவாயுதமாக பாவியுங்கள், தமிழீழம் என்பது ஈழத்தமிழ் மக்களுக்கு மடடுமல்ல, தமிகத்தின் தேவையும் கூட உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கு இல்லையே, ராஐPவ் காந்தி மீது புலிகளுக்கு வருத்தமே தவிர கோபமில்லை, என அவரால் எழுதப்பட்ட 'மேற்கோள்களை" அறிவுபூர்வமாகவும், ஆக்கபூர்வமான விமர்சனக்கண் கொண்டும் பார்த்தால் முத்துக்குமாரு எங்கே சங்கமமாகினார் என்பது கண்கூடு. 
இப்படி குறுந்தேசிய இனவெறிச்சகதிக்குள் மூழ்கிய முத்துக்குமாருவை, அவர் உணர்ச்சிவசப்படவில்லை, உணர்ச்சிவசப்படடு தன்னை அழிக்கவில்லை. உணர்வுபூர்வமாக சிந்தித்தே தன் இறுதி பதிவுகளை செய்தாரேன தமிழரங்கத்தில் சில நண்பர்கள விவாதிக்கின்றார்கள். இதற்கு மாவோவையும் பகவத்சிங்கையும் துணைக்கு அழைத்துள்ளார்கள்.
மாவோ தன்னழிப்பை பிழையான இச்சமுதாய அமைப்பிற்கெதிரான கலகமென்றாரே தவிர, அதை சீனப்புரட்சியின் வாழ்வாதாரமாகக் கொள்ளவில்லை. அதை முன்னிறுத்தி யப்பானுக்கு எதிரான போரையோ, சீனப்புரட்சியையோ நடாத்தவில்லை. தன்னழிப்பை 'கலகமென்று" இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தி குறுந்தேசிய அரசியல் ஓட்டத்தில் ஓடவோ, சங்கமிக்கவோ, சாகடிக்கவோ விடவில்லை. மாறாக இளைஞர்களை சமூக விஞ்ஞானமான மாக்சிச-லெனினிசத்தால் ஆயுதபாணியாக்கினார். சுயவிமர்சனத்தை பயிலச்செய்தார். மக்களுக்காக வாழவும் போராடவும்; செய்தார். மக்களே வரலாற்றின் உந்துசக்தியென உணரவைத்தார்கள்.
மறுபுறத்தில் புலிகளை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு தன்னழிப்புப் போராட்டம் 'கலகமல்ல". தன்னளிப்பே. அவர்;களின் வாழ்வாதார அரசியல். இவ்வரசியலின் மூலம் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக எத்தனை ஆயிரம் இளைஞர்களை தற்கொலைப் போராளிகளாக்கி எவ்வளவு அழிவுகள் கொலைகளைச் (விடுதலைப்போரின் பெயரால்) செய்தார்கள். இதன் விளைவுகளைக் கண்ணாரக் காண்கின்றோம். கொலைகளும், தற்கொலைகளுமே அரசியலாகிப்போன வாழ்வால், தமிழ்மக்கள் களைத்தும், சலித்தும்; போய்விட்டார்;கள். மக்கள் தற்போது அரசினதும், புலிகளினதும் போர்ப் பொறியில் சிக்கி மரணத்துள் வாழ்கின்கின்றார்கள்;. அவர்களின் மரணத்துள் வாழ்விற்கு, தமிழக இளைஞர்களின்; அவசரப்பட்ட உணர்ச்சிவசப்பட்ட தன்னழிப்புப் போர் எவ்வித பரிகாரத்தையும் தந்துவிடாது.  எனவே இளைஞர்கள் இப்போரை நிறுத்தவேண்டும்;! சமூகமேம்பாட்டில் அக்கறை கொண்டோர், முற்போக்கு புரட்சிகர சக்திகள் இதைத் தடுத்து நிறுத்தவேண்டும்! இதற்கு உந்துசக்தியாயிருக்கும் 'உணர்வாளர்களை" அம்பலப்படுத்தவேண்டும்!
தமிழ் மக்களின்; இன்றைய அவசரத் தேவை நின்மதிப் பெருமூச்சு விட்டு வாழ ஓர் அமைதியே!. இதற்கு அரசின் போர் நிறுத்தமும், புலிகளின் பிடியில் கேடயமாகவுள்ள மக்களை விடுவிப்பதுவுமே. இதை வலியுறுத்தி நடவடிக்கைகளை, போராட்டங்களை முன்னெடுப்பதே சர்வதேச சமூகத்தின் தார்மீகக் கடமையாகும். இதில் தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இலங்கையின் பேரினவாத அரசையும் புலிகளையும் அமபலப்படுத்தி புரட்சிகர வெகுஐனப் போரட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.      
 
அகிலன்
11.02.2009