05192022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

'ஈழ மக்களின் படுகொலைகளுக்கு ‘ஆருடம்’ சொல்வதில் யாருக்கு முதலிடம்? தமிழ் தேசிய வாதிகளுக்கா! இந்திய தேசியவாதிகளுக்கா!’ - என்கிற குழாயடி சண்டை...

தோழர்களே!

ஈழப் பிரச்சினையில் சி.பி.எம். கட்சியின் நிலைப்பாடு சரியா? தவறா? என்பதற்கான கருத்துக் கணிப்பு பெட்டகத்தை கீற்று இணைய தளம் வைத்துள்ளது. அதில் வாக்களிப்பவர்கள் தஙகள் கருத்தைப் பதியலாம் என்றிருந்ததனால் எனது கருத்தையும்  அதில் பதிவிட்டேன். அதனை இங்கே பதிகிறேன். தோழர்களும் நண்பர்களும் தமது கருத்துக்களைப் பதிய கேட்டுக்கொள்கிறேன்.
********************************************************************
"தனி ஈழம் சாத்தியமல்ல, பேச்சுவார்த்தையின் மூலமாக சுமூகமாக முடிவெடுத்து தனித் தனி மாகானங்களாக இயங்குவதே இலங்கைக்கு நல்லது." என்றும் "இலங்கை என்கிற தேசத்தைத் துண்டாட நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. இந்தியா என்கிற தேசத்தை நாம் எப்படி பிரிவினைவாதிகளிடமிருந்து காப்பாற்றப் பாடுபடுகிறோமோ அதே அடிப்படைதான் எமது இலங்கை குறித்தான கண்ணோட்டமும்" என்பது சி.பி.எம். கட்சியின் நிலைப்பாடு.
ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த தேசிய இனப் பிரச்சினையானாலும் அவர்களின் நிலைப்பாடு என்பது இதுதான். காஷ்மீரிலும் அதே நிலைதான். சிபிஎம் கட்சியினரிடமிருந்து ஒரேயொரு உதவியை நாடுகின்றேன். 
இதுபோன்ற தேசிய இனப்பிரச்சினையில் உங்கள் கட்சியின் 'நிலைப்பாட்டிற்கும்' காங்கிரசு, பாஜக உள்ளிட்ட பிற ஓட்டுக் கட்சிகளின் நிலைப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதைக் கொஞ்சம், தயவு செய்து அறிவித்துவிடுங்கள். உங்களுக்கு புன்னியமாப் போகும்.
இந்த கேலிக்கூத்து ஒருபுறமிருக்க, ஈழ மக்களின் (பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய) சுயநிர்ணய உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டுமென்றால், நான் கட்டாயம் விடுதலைப் புலிகளையும் ஆதரித்தே தீரவேண்டும். விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியில் எதிர்த்தாலோ அல்லது விமர்சித்தாலோ ஈழ மக்களுக்கு எதிராகப் பேசுவதாக ஒரு பொதுக்கருத்தை இங்கிருக்கக் கூடிய தமிழ் தேசியவாதிகளும், ராமதாசு, திருமா போன்ற 'தொப்புள் கொடி' உறவினர்கள் உருவாக்கி வைத்திருக்கின்றனர்.

(மேலே ஈழ மக்களின் தாலியறுப்பதைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கும் பாசிஸ்டுகள் மன்மோகனும் ராஜபக்சேவும்)
தமது அக்கம் பக்கத்தில் வசிக்கின்ற அல்லது தமது கட்சியில் உறுப்பினராக இருக்கின்ற அப்பாவிகளுடன் இவர்களது தொப்புள் கொடி உறவு எப்படியிருக்கிறது? அதைத்தான் முருகேசன் - கண்ணகி படுகொலைச் சம்பவத்திலிருந்து இப்போது நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி சம்பவம் வரை அண்ண திருமாவின் தொப்புள் கொடி பாசத்தைப் பார்த்தோமே.

 
தேவர் குருபூசையில் திருமாவின் தொப்புள் கொடி உறவு அறுந்து சிரித்தை அனைவரும் அறிவர். போகட்டும். டாக்டர் அய்யாவைப் பற்றி எதுவும் தனியாகக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஈழ மக்களின் ஈரக் குலையை அறுப்பதற்கு ஏற்பாடு செய்து தரும் மன்மோகன் அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டு தமது 'தொப்புள் கொடி' உறவைப் பராமரித்துவருகிற பித்தலாட்ட நாயகரல்லவா நம்ம டாக்டர் அய்யா.
எனவே, இந்திய ஓட்டுப் பொறுக்கிகள்தான் ஈழ மக்களின் படுகொலைகளுக்கு காரணகர்த்தாவாக இருந்துகொண்டு சிங்கள பேரினவாத பாசிச வெறியன் ராஜபக்சேவுக்கு மறைமுகமாகவும் நேர்முகமாகவும் சேவையாற்றி வருகிறார்கள். இந்திய ஆளும் வர்க்கத்தை அம்பலப்படுத்தி மக்களைத் திரட்டி இயங்குவது. அதன் மூலம் இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து ஈழப் போரில் அதன் தலையீட்டை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள்தான் இப்போது முக்கியத் தேவையாக இருக்கிறது.
நாம் இதைச் சாதித்துவிட்டாலே போதும். தங்களுக்கான அரசியல் தீர்வை ஈழ மக்கள் தங்கள் சொந்த கைகளால் போராடிப் பெற்றுக் கொள்வார்கள். ஈழ மக்களுக்கு அரசியல் - பேச்சுவார்த்தை பொருத்தமானதா, தனி ஈழம் பொருத்தமானதா என்பதை நாம் இங்கிருந்து ஆருடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதனை அவர்கள் முடிவு செய்துகொள்வார்கள்.
சி.பி.எம். மட்டுமல்ல இதில் அனைத்து ஓட்டுப் பொறுக்கிகளும் இனைத்தே விமர்சிக்கப் படவேண்டியவர்கள் என்பது எனது தாழ்மையான - அழுத்தமான கருத்தாக இருக்கிறது.
தோழமையுடன்,
ஏகலைவன்.
--

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்