காலத்தின் தேவையா அல்லது வெறுமனே ஒரு நாகரீக மோகமோ தெரியாது, கார்ல் மாக்ஸின் 'மூலதனம்" அதிகளவில் விற்பனையாகிறது என ஜேர்மனிய பிரசுரிப்பாளரான ஜோர்ன் ~hரம்ப்வ் கூறுகிறார்.


பிராங்ஃபோட் புத்தக விற்பனைக் கூடத்தில் மார்க்ஸ், றோசா லக்ஸம்பேர்க் போன்றோரின் படங்களைக் கொண்ட சுவரொட்டிகள் அலங்கரித்த இடத்தில் நின்று அவர் கூறியதாவது: '2005ம் ஆண்டில் 500 பிரதிகளை விற்றேன். 2006ல் 800 பிரதிகள் விற்பனையாகின. 2007ல் இது 1300 பிரதிகளானது. 2008ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஏற்கனவே 1500 பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. எண்ணிக்கை முக்கியமல்ல. விற்பனையின் வளர்ச்சியே இங்கு கவனிக்க வேண்டும்" என்றுங் கூறினார்.


மார்க்ஸ் சளைக்காது முதலாளித்துவம் பற்றி ஆராய்ந்தும் எழுதியும் வந்த மாபெரும் தொழிலாளி வர்க்கத்தின் ஆசான் ஆவார். ஜேர்மன் ஆங்கில, பிரெஞ்சு மொழிகளில் அவர் நன்கு எழுதக் கூடியவர். ஐம்பது வயதில் ர~;ய மொழியைக் கற்கத் தொடங்கினார். அவரது வாழ்வின் 40 ஆண்டுகளை 'மூலதனம்" எடுத்துக் கொண்டது என்பர். 1948ல் அவர் ஏங்கெல்ஸ்சுடன் இணைந்து உலகத்தொழிலாளி வர்க்கத்திற்கான கம்யூனிஸ்ட் பிரகடனமான 'கம்யூனிஸ்ட அறிக்கையை" வெளியிட்டார். அதுவே கம்யூனிசத்தின் மூலக் கோட்பாடு பற்றிச் சுருங்க எடுத்துரைத்த நூலாகும். அவரின் புகழின் பெரும் பகுதிக்கு ஆதாரமாயுள்ள 'மூலதனம்" 1867 செப்ரம்பர் 14ம் திகதி ஹம்பர்க்கில் பிரசுரமானது. மற்ற இரு பாகங்களையும் எழுதி முடிக்க அவர் உயிருடன் இருக்கவில்லை. அவர் தனது 65வது வயதில் இயற்கை எய்தினார். எனினும் அவர் எழுதி வைத்த பெருந்தொகையான குறிப்புகளைத் தொகுத்து இரண்டாம் மூன்றாம் பாகங்களாக மார்க்சின் மறைவுக்குப்பின் அவரது வாழ்வின் போராட்ட நண்பரான ஏங்கல்ஸ் வெளியிட்டார்.


மாக்சின் கல்லறையின் முன்னால் தனது இரங்கல் உரையை நிகழ்த்திய ஃபிரட்றிக் ஏங்கல்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.


'எவ்வாறு சார்ல்ஸ் டார்வின் உயிர்ப் பொருள் இயல்பின் விருத்தி விதியை எவ்வாறு கண்டறிந்தரரோ அவ்வாறே மனித வரலாற்றின் இயங்கு விதியை மார்க்ஸ் கண்டறிந்தார். அரசியல், விஞ்ஞானம், கலை, சமயம் என்பனவற்றில் ஈடுபடுவதற்கு முதல் மனித இனம் உண்ணவும் அருந்தவும் நிழல் பெறவும் உடுக்கவும் வேண்டும் என்ற எளிய உண்மையைக் கண்டறிந்தார். எனவே மனித வாழ்க்கைக்கு உடனடி அவசியமான பொருள்சார்ந்த வகை முறைகளின் உற்பத்தியும் அதன் விளைவாக ஒரு காலப் பரப்பில் பெறப்பட்ட பொருளியல் வளர்ச்சியுமே அரச நிறுவனங்களினதும் சட்டக்கருத்தாக்கங்களதும் கலைகளதும் ஏன் மதங்கள் பற்றிய சிந்தனைகளதும் அத்தியாரமாக அமைந்ததெனவும் முன்னையவற்றில் அடிப்படையிலேயே பின்னவை விளக்கப்படவேண்டும். என்றும் கூறினார்.


'அது மட்டுமல்ல, இன்றைய முதலாளிய உற்பத்தி முறையையும் அந்த உற்பத்தி முறையின் விளைவாகத் தோன்றிய முதலாளிய சமுதாயத்தையும் ஆளும் சிறப்பு விதியையும் அவர் கண்டறிந்தார். எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முதலாளிய பொருளியலாளர்களும் சோ~லிச விமர்சகர்களும் அது வரை இருளில் வழி தேடிக் கொண்டிருந்தார்களோ அதன் மீது உபரிமதிப்பு என்பதை கண்டறிந்து ஒளியைப் பாய்ச்சியவர் மார்க்ஸ் ஆவார்".


மார்க்ஸ் 'மூலதனம்" என்ற படைப்பில் அவரது பொருளியற் கோட்பாட்டிற்காகவே மிகவும் அறியப்பட்ட வராவார். மூலதனத்தின் முன்னுரையில் 'நவீன சமுதாயத்தின் (அதாவது முதலாளிய சமுதாயத்தின்) இயக்க விதியை அதன் தூய வடிவில் வெளியாக்குவதே இந்த நூலின் இறுதியான இலக்கு" என்றும் மார்க்ஸ் குறிப்பிட்டார். முதலாளித்துவ ஏகாதிபத்திய மூலதனத்தின் மீதான நிதி நெருக்கடி மோசமாகியுள்ள இன்றைய சூழலில் மார்க்ஸ் உலகிற்கு வழங்கிச் சென்றுள்ள 'மூலதனம்" படைப்பு மீண்டும் ஒரு முறை தனது முக்கியத்துவத்தை நிரூபித்து நிற்கின்றது.