பொருளாதார வளர்ச்சியானது இரண்டு காலாண்டுக் காலப்பகுதியில் வீழ்ச்சி கண்டால் குறிப்பிட்ட நாட்டில் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்து விட்டதெனக் கொள்ளப்படும். இந்த நிலையை முதலில் அயர்லாந்தும் பின்னர்

 பிரிட்டன், பிரான்ஸ் என்பன அடைந்துள்ளன. அமெரிக்கா, பிருட்டன், ஜேர்மனி, யப்பான் என்பன உலக எண்ணெயில் நாற்பது சதவீதத்தை (40மூ) பயன்படுத்தி வருகின்றன. அந்த நாடுகள் பொருளாதார மந்த நிலையை நோக்கிச் செல்வதால் எண்ணெய்விலை உலக சந்தையில் பீப்பா 82 டொலராக குறைவடைந்துள்ளது.


எழுபதாயிரம் கோடி டொலர்களைக் கொடுத்து வங்குறோத்து நிலையை எட்டவுள்ள வங்கிகள் நிதி நிறுவனங்கள் என்பவற்றைக் காப்பாற்ற அமெரிக்க அதிபர் பு~; படாத பாடுபடுகிறார். இவரின் மீட்புப்பணியை தேசியமய நடவடிக்கையென சிலர் கூறுகின்றனர்.


எதுவித கட்டுப்பாடுமின்றி எனது மூலதனம் எனது கம்பனி எனது வேலையாட்கள் எனக்கே லாபம் அதிக லாபம் எனக் கொண்டு வசதியுடன் இருந்த முதலாளிகள் நட்டம் கூட்டம் அடைந்தவுடன் மக்களின் வரிப்பணத்தைக் கொடுத்து சேடமிழுக்கும் முதலாளித்துவத்திற்கு ஒட்சிசன் கொடுக்கிறார் பு~;. இதனால் அமெரிக்க மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பை எதிர் நோக்கியுள்ளார்.


முன்பு ஒரு காலத்தில் மாஸ்கோவில் மழை பெய்தால் இங்கே கம்யூனிஸ்டுகள் குடைபிடிப்பார்கள் எனத் தமிழ் தேசியவாதிகள் கூறினார்கள். ஆனால் இன்று அமெரிக்காவின் வால் ஸ்ரீற்றில் தும்மல் ஏற்பட்டதால் திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பங்குச் சந்தைகள் யாவும் சன்னி பிடித்துத் தத்தளிக்கின்றன. இது தான் ஏகபோக முதலாளித்துவத்தின் விதி, முதலாளித்துவம் ஏகாதிபதிதியமாகி இன்றைய உலகமயமாகல் என்பதன் கதி.


2007ம் நிதி ஆண்டில் அமெரிக்காவில் அறவிட முடியாக் கடனாகப் பிரபல வங்கிகள் பின்வரும் தொகையை பதிவழித்துள்ளன:-


மெறில் லின்ச் ................... 2240 கோடி டொலர்
சிற்றி குழுமம் ................... 1990 கோடி டொலர்
யூ பீ எஸ் .......................... 1400 கோடி டொலர்
மோர்கன் ஸ்ரான்லி ........ 940 கோடி டொலர்
எச் எஸ் பீ சி ................... 750 கோடி டொலர்
கிறெடிற் அக்றிகொல .... 360 கோடி டொலர்
டொச்ச பாங்க ................... 320 கோடி டொலர்
பாங்க் ஒல் அமெரிக்கா.. 300 கோடி டொலர்


டானியஸ் குறொஸ் என்ற பொருளாதார நிருபர் 'நியூஸ்வீக்"கிற்கு எழுதிய கட்டுரையில் மேற் கூறிய தகவலைத் தந்துள்ளார்.


2007ம் ஆண்டில் ஒரு கோடி ஐம்தொன்பது லட்சத்து எண்ணாயிரத்து எண்ணூற்றி எழுபத்தைந்து (1,59,08875) ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.


சில மாதங்களுக்குப் பெருமளவு பொருளாதார நடவடிக்கைகள் சுருக்கமடைந்தால் அதை பொருளாதார மந்தம் எனப்படுகினறது. இந்த நிலையை ஆரம்பத்திலேயே உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படுவதில்லை. விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்தால் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடையும். வீழ்ச்சியடையும் அமெரிக்க பொருளாதாரம் அதனுடன் சேர்த்து உலகின் ஏனைய நாடுகளையும் வீழ்த்துமா என்ற கேள்வி ஆய்வாளர்களிடையே வாதப்பிரதிவாதமாகத் திகழ்கிறது.


அண்மையில் சக்வித்தி ரணசிங்காவின் நிதி நிறுவனம் சுமார் நூறு கோடிரூபாவை ஏப்பம் விட்டது. வைப்பிலிட்டவர்கள் அரசாங்கம் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விட்டுள்ளனர். இதற்குப் பதில் அளித்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி கப்பிரால் 'எங்களைக் கேட்டா பணம் போட்டீர்கள? அந்த இழப்புக்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியா"தெனக் கூறியுள்ளார். உலக வங்கியின் ஆணைப்படி செயற்படும் திறந்த பொருளாதாரத்தைக் கடைப்பிடிக்கும் இலங்கையில் மத்திய வங்கி ஆளுனர் இந்த விடத்தில் 'சுதந்திரமாக" செயற்படும் ஆளுனர்போல் அறிக்கை விடுகிறார்.


ஃபிடல் காஸ்ற்ரோ அமெரிக்க ஜனாதிபதி பு~;~pன் உரையைக் கிண்டல் செய்துள்ளார். சுய விமர்சனமென்பது ஜனநாயக முதலாளித்துவத்திற்கு தெரியாமலுள்ளது என கூறும் காஸ்ரோ அமெரிக்க ஜனதிபதி தனது 13 நிமிட உரையின் போது 'முழுப்பொருளாதாரமும் ஆபத்தி லுள்ளது. நீண்ட கசப்பான நெருக்கடியை அனுபவிக்க வேண்டி வரும்" எனக் கூறியதைப் பாராட்டாமல் இருக்கவும் முடியவில்லை எனக் கிண்டல் செய்துள்ளார். நிதி நெருக்கடி காரணமாக உலகில் பெரிய வங்கிகளில் ஒன்றான எச்.எஸ்.பீ.சி. (ர்ளுடீஊ) 1100 பேரை வேலை நீக்கம் செய்யவுள்ளது. இதில் அரைவாசிப்பேர் பிரித்தானியக் கிளைகளில் உள்ள ஊழியர்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க வங்கியான ஜே.ப.P மோர்கன் சிக்கலில் உள்ள வா~pங்டன் மியூச்சுவல் நிறுவனத்தை 190 கோடி டொலருக்கு வாங்கியுள்ளது. அமெரிக்காவிலேயே இரண்டாவது பெரிய சேமிப்பு, கடன் நிதி நிறுவனத்தின் பங்குகள் 2008ம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து எண்பது வீதம் பெறுமதி இழந்துள்ள நிலையிலேயே ஜே.ப.P மோர்கன் அதைப் பொறுப்பேற்கிறது. இந்த இரண்டு வங்கிகளும் இணைந்து கொள்வதால் சுமார் பத்துக் கிளைகள் மூட வேண்டிய நிலை எதிர்வரும் மாதங்களில் நிகழும் என எதிர்வு கூறப்படுகிறது.


பிரிட்டனின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான நொதேர்ன் றொக் நெருக்கடிக்கு உள்ளானதைத் தொடர்ந்து அந்த வங்கி அரசுடமையாக்கப் பட்டுள்ளது.


மேலும் நிதி நிறுவனங்கள் வீழ்ச்சி அடைவதைத் தடுக்கும் முகமாக அமெரிக்காவின் மத்திய வங்கி ஃபெடரல் ரிசேவ் 12000 கோடி டொலர்களையும், பிரிட்டனின் மத்திய வங்கியான பாங்க் ஒவ் இங்கிலண்ட் 6000 கோடி டொலர்களையும் ஐரோப்பிய மத்திய வங்கி 4500 கோடி டொலர்களையும் தத்தம் நிதிச் சந்தைக்கு விட்டுள்ளமை கவனத்தில் கொள்ள வேண்டும்.


அமெரிக்கப் பொருளாதார மந்த நிலை இந்தியாவின் வளர்ச்சி வீதத்தை அரைச்சதம் வீதத்தால் வீழ்ச்சியடையச் செய்யுமென சர்வதேச பொருளாதார ஆய்வு நிலைய பொருளாதார நிபுணர் சங்கர் ஆச்சார்யா கூறுகிறார். வெளிநாடுகளில் உள்ள முதலீடுகளால் நட்டம் அல்லது குறைந்த இலாபம் பெறப்படுவதால் சிற்றிகுறூப் குளோபல் மார்கட், எச்.எஸ்.பீ.சி., மெறில் வின்ச் கப்பிட்டல் மார்கட், மோர்கன் ஸ்ரான்லி, சுவிஸ் ஃபைனான்ஸ் கோப்பறேசன் என்பன இந்த வருட முதல் ஆறு மாதங்களில் இந்தியாவிலிருந்து 62000 கோடி ரூபாவை மீளப் பெற்றுள்ளதாக அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சீ.பி. சந்திரசேகரர் தெரிவித்திருந்தார். அமெரிக்க நிதி நெருக்கடியால் இந்தியாவுக்கும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடுவது அந்த நாடு மன்மோகன் சிங் தலைமையில் திறந்த பொருளாதார முறைமைக்குள் போனதாலேயேயாகும் என்பதை மறந்து விடக் கூடாது.


அமெரிக்காவில் ஆரம்பித்த நிதி நெருக்கடி பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, யப்பான் என்ற முதலாளித்துவ வளர்ச்சியடைந்த நாடுகளையும் படிப்படியாகப் பீடித்து வருவதைக் காணலாம். முதலாளித்துவ நெருக்கடியை உலக பொருளாதார நெருக்கடி என்கிறார்கள். சுருங்கச் சொன்னால் 1930களில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை ஒத்த நிலையிலேயே இன்றைய நிலை உள்ளது. உலக வங்கியின் உதவி பெறும் நாடுகள் சகல கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டுமென்று ஆலோசனை கூறப்படுகிறது. அதே வேளை அமெரிக்காவும், பிருட்டனும் வங்கிகளைத் தேசியமயமாக்குகின்றன. வறிய மக்களுக்கு மான்யம் வழங்கப் படுவதைப் படிப்படியாக குறைக்க வேண்டும் என்கிறவர்கள் கோடீஸ்வரர்களின் நட்டத்தை அரச நிதியிலிருந்தும் மக்கள் வரிப் பணத்திலிருந்தும் ஈடு செய்கிறார்கள். இந்த நாடுகளில் மூலதனமே ஆட்சி செய்கிறதென்பதை நாம் கண்முன்னே காண்கிறோம். இந்த நெருக்கடியால் பல நாடுகளில் ஆட்சிமாற்றம் ஏற்படும் அறிகுறிகளும் தென்படுகின்றன.


அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்தப் பொருளாதாரச் சரிவு முதலாளித்துவத்தினதும் அதன் வளர்ச்சியான ஏகாதிபத்தியத்தினதும் தவிர்க்க முடியாத நெருக்கடியுமாகும். இதனை ஒப்புக்கொள்ள முதலாளித்துவவாதிகள் தயாராக இல்லை. இதனால் வரும் சகல இழப்புகளும் சுமைகளும் அமெரிக்க மக்கள் மீதும் மூன்றாம் உலக மக்கள் மீதுமே சுமத்தப்படும் என்பதில் ஐயமில்லை. உலக மக்களின் வெறுப்புக்குரியவனும் கொலை வெறியனுமான அமெரிக்க ஜனாதிபதி பு~; தனது பதவியை விட்டு வெளியேறும் இறுதி நாட்களில் உள்ளான். அவன் இறுதி நிமிடம் வரை அமெரிக்க ஏகாதிபத்திய நிதிச் சந்தையை நிலைப்படுத்திப் பாதுகாத்துச் செல்லவே முயற்சி செய்து வருகிறான். அந்த இடத்திற்கு ஓபாமாவோ அன்றி மக்கெய்னோ வந்தாலும் அமெரிக்க நிதி நெருக்கடிக்கு உடன் நிவாரணம் அளிக்க முடியாது என்பதே உண்மையாகும். இவ் வேளையில் முதலாளித்துவம் பொருளாதாரம் பற்றிய துல்லியமான ஆய்வையும் முடிவுகளையும் முன்வைத்துச் சென்ற விஞ்ஞான சோ~லிசத்தின் ஆசானான கார்ல் மாக்ஸ்லின் மூலதனக் கட்டுரைகள் படிக்கப்படுவது தேவையாகிறது.