Wed02192020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் இந்தியா மாயை

இந்தியா மாயை

  • PDF

கிளிநொச்சி வீழ்ச்சியோடு இந்தியா இந்திரா காலத்து இந்தியா இல்லையென ஆதங்கப்படுவோரும் உள்ளனர்.  இந்திராகாந்தி இறந்தபோது தமிழ்மக்களின் சோகம் சொல்லில் அடங்காது. ஓர் தமிழ்த் தலைவியாகவே கண்டனர். இந்திராகாந்தியின் காலமோ, இளைஞர் இயக்கங்கள் தனித் தமிழ் ஈழம் காணப் புறப்பட்டகாலம்.

 புலிகள் உட்பட பல பிரதான இயக்கங்களை, இந்தியாவும் இந்திராவுமே தம் கூலிப்படையாக வளர்த்தெடுத்தனர். அது அவர்களின் பின்புலமாகவும் இருந்தது. தமிழ்நாட்டில் இயக்கங்களுக்கு பயிற்சி அளிக்கப்;படுகின்றதது, பல முகாம்கள் உள்ளன, பிரபாகரன் உட்பட பல தலைவர்கள் உங்கேயே உள்ளார்கள் என இலங்கையரசு கேட்டால், தற்போது பாகிஸ்;தான் சொல்லும் பாணியில் இல்லையேன்றே இந்திரா பாராளுமன்றத்தில்கூட பதிலளிப்பார். அப்பேர்ப்பட்ட இனிப்பான காலமது.

 

தமிழ்த்தேசிய இயக்கங்களை வலுவேகமாக - வலுவாக வளர்த்தெடுத்த இந்தியா இன்று அதில் ஒன்றான புலிகளை தோற்கடிப்பதில் முன்னணிப் பாத்திரம் வகிக்கின்றது. இன்றைய புலிகளின் கிளிநொச்சி வீழ்ச்சிக்கு இந்தியாவின் பங்கு முக்கியமானதே.

 

புலிகளுக்கும் இந்தியாவிற்கும் ஏற்பட்ட முறுகல் நிலைக்கு ராஜீவ்  படுகொலையும் ஓருகாரணம். அதனாலேயே பிரபாகரன் பிடிபட்டால் தாருங்கள் என்கின்றது இந்தியா.

 

புலிகள் ராஜீவை கொலை செய்ததன் மூலம் மிகவேகமாகவே சர்வதேச பயங்கரவாதப் பட்டியலுக்குள் வந்தனர். ராஜீவ்கொலை தனிப்பட்ட பழிவங்கும் மனபாவமும், புலிகளின் குறுந்தேசிய வெறியின் மொத்த வெளிப்பாடாக இலந்தது. ரஜீவை கொலையை மிகச்சிரமப்பட்டே, அது ஓர் துன்பியல் நிகழ்வு என்கின்றார் பிரபாபரன். ஆனால் ராஜீவை கொலை செய்ததற்காகத்தான், தமிழ்மக்கள் பிரச்சினையில் புலிகளோடு இந்தியா இப்படி நடந்துகொள்கின்றது என்பது ஓர் பகுதியே உண்மையே!

 

சுதந்திரமடைந்த காலகட்டங்களில் பஞ்சசீலக்கொள்கை, அணிசேராக்கொள்கை, காந்திய அகிம்சைக் கொள்கைகளோடு ஓர் பெரிய ஐனநாயக நாடென உலக அரங்கில் சொல்லப்பட்ட காலமுமுண்டு.

 

மன்;னராட்சியில் தனிநாடாக திகழ்ந்த காஸ்மீரை ஆக்கிரமித்து அதை இந்தியாவின் மாநிலமாக்கியதுடன், இந்தியாவின் ஐனநாயக முகமூடி கிழிய ஆரம்பித்துவிட்டது. இதனுடே தென்னாசியாவில் இந்தியா தன் மேலாதிக்க நிலையை நிறுவும் நோக்கி புறப்பட்டது. இன்றைய இந்தியா காஸ்;மீர், அசாம், திரிபுரா, மணிப்பூர் போன்ற மாநிலங்களின் மக்களை இனரீதியாக அடக்கியொடுக்கி வருகின்றது. அவர்களின் சுயநிர்ணயத்திற்கு எதிரான ஒடுக்குமுறைகளையே செய்துவருகின்றது. ஓரு காலத்தில் ஐhர் மன்னனின் ரூசியாவில், தேசிய இனங்களின் சிறைக் கூடமாக இருந்தது. இது இன்று இந்தியாவிற்கும் மிகமிகப் பொருந்தும். இந்தியா  ஐ.நாசபையில் வீட்டோ அதிகாரமில்லாத நாடே தவிர, மற்றப்படி வல்லரசிற்கான சகல கோலங்களும் கொண்டேவிட்டது. ஓரு வல்லரசின் உச்சகட்ட வடிவமும், ஓட்டமும் ஏகாதிபத்;திய நடவடக்கைகளாகவே இருக்கும்.

 

இந்நிரையை எடுத்த இந்தியா தேசிய இனப்பிரச்சினையில் சிக்குண்ட இலங்கையை, Nஐ.ஆர் ஆட்சிக்காலத்திலேயே தன்காலடிக்கு கீழ் கொணடுவந்துவிட்டது. இலங்கையின் யதார்த்த நிலைமைகளை கணக்கில் எடுக்காது, - குறிப்பாக தமிழ்பேசும் மக்களின் அபிலாசைகளை கணக்கில் கொள்ளாது தனக்குப் பிடித்த ஓர் ஒப்பந்தத்தைத் திணித்தது. Nஐ.ஆரின். பூரண விருப்பின்பேரில் இந்திய ராணுவம் இலங்கை செல்லவில்லை. மாறாக Nஐ.ஆரை.யும் - பிரபாகரனையும் மிரட்டியே, ராஐPவ் தலைமையிலான இந்தியா தன் மேலாதிக்க பாசையில் அரசியல் வேலைகளை இலங்;கையில் செய்தது. அன்றிலிருந்து இன்றுவரை இலங்கை இந்தியாவின் உத்தியோகப்பற்றற்ற ஓர் மாநிலமே!

 

அதற்கேற்ற வகையில் தொடர்ந்து வந்த பேரினவாத அரசுத்தலைவர்கள் இலங்கையை ஓர் அரசியல் விபச்சார விடுதியாக மாற்றிக்கொடுத்தனர். இம்மாநிலத்தின் ஒருபகுதியில் பிரபாகரனின் மன்னராட்சியை இந்திய மேலாதிக்கம் விரும்புமா? அல்லது பார்த்;துக் கொண்டுதான் இருக்குமா? புலிகள் ஏற்கனவே இந்திய மேலாதிக்கத்திற்;கு கீழ்ப்படியாத - அதன் இசைவுக்கேற்ப நடக்காத பல சம்பவங்களும் உண்டு. இச் சம்பவங்களின் முரண்பாடுகள் உச்சகட்டமாகி, மகிந்தா அரசுடன் இணைந்து புலிகளை தோற்கடிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டது இந்திய மேலாதிக்கம். அதன் ஓர் விளைவே புலிகளின் கிளிநொச்சி வீழ்ச்சி.

 

புலிகள ஓர் விடுதலை இயக்கமே இல்லை. தமிழ்மக்களின் அரசியல் வாழ்வில் பேரினவாதத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராடிய ஓர் அமசத்தை தவிர, விடுதலை இயக்கமாக பரிணாமிக்க வேண்டிய பல பரிமாணங்களை, புலிகள் எப்போதோ இழந்துவிட்டனர்.

 

25வருடங்களுக்கு மேற்பட்ட போராட்டம், 20,000ற்கு மேற்பட்ட போராளிகளின் உயிர்தியாகம், 60,000றகு மேற்பட்ட தமிழ்மக்களின் உயிர் இழப்புக்களுடன், அவர்களின் பாரம்பரிய பிரதேசங்கள், தேசிய அரசியல் பொருளாதார, வாழ்வு வளங்கள் அத்தனையையும், இல்லாதொழித்து பல பத்து வருடங்களுக்கு பின்நோக்கி இழுத்துச் சென்றுள்ளார்கள்.

 

குறுந்தேசிய இனவெறி, அரசியலில் இருந்நு விடுபட்டு, பிரதான எதிரி யார்? நண்பர்கள் யார்? என பகுத்தறிய முனையவில்லை. முலோபாயம் - தந்திரோபாயகங்களை கையாண்டு, பிரதான எதிரிக்கு எதிராக ஐக்கியப்படக்கூடிய சகல சக்திகளையும் ஐக்கியப்படுத்த முடியவில்லை. தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப்போரை நடாத்தியிருந்தால், இன்று கிளிநொச்சியின்  வீழ்ச்சியே வந்திருக்காது. இந்திய மேலாதிக்கமும் பாடங்கள் படித்திருக்கும்.

 

சமகால உலக ஓட்டதில் தென்னாசியாவில் இந்திய மேலாதிக்க நிலை, வெளிநாட்டுக் கொள்கை நடவடிக்கைகள் ஓர் புதிய பரிமாண ஓட்டதில் உள்ளன. இது பற்றி புலிகள் மாத்திரமல்ல, தமிழ்நாட்டின் புலி ஆதரவாளர்களும் கணக்கில் கொள்வதில்லை. அண்மையில் மகிந்தாவின் இந்திய விஐயத்தின்போது, மகிந்தா இந்தியாவில் அளித்த் திமிர்த்தனமான பேட்டி, இலங்கையிலுள்ள இந்தியத் தூதரின் நடவடிக்கைகள் பற்றி எல்லாம்  தமிழகத் தலைவர்கள் கவலையடைகின்றனர். இதற்கும் மேலாக தமிழக அரசியல் தலைவர்களை இலங்கை அரசு கோமாளிகளாகவே பார்க்கின்றது. இதை மத்திய அரசு கண்டுகொள்வதேயில்லை. தமிழக முதல்வர் தலைமையில் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள எல்லாம் சென்று போரை நிறுத்ததக்கோரி கொடுத்த மனுவிற்கு என்ன நடந்தது.  முதல்வர் மன்றாடுகின்றார்! கண்ணீர் விடுகின்றார்! பிரதமரை காணும்போதெல்லாம் ஞாபகப்படுத்துகின்றார்.

 

இவ்வளவிற்கும் கலைஞரின் பிச்சையிலே இந்திய அரசின் வாழ்வே ஓடுகின்றது.? இவையெல்லாவற்றையும் கணக்கில் கொள்ளாது இந்திய ஆளும்வர்க்கம் கடந்த காலங்களில் மகிந்த அரசிற்கு எதை செய்து வந்ததோ, அதை மேலும் வலுவாகவும், விடாப்பிடியாகவும் செய்து வருகின்றது. அந்த வர்க்க உறவிலேயே பிரபாகரன் பிடிபட்டால் தா என்கின்றது இந்தியா. தமிழ்த்தேசியவாதிகளும்,  புலிகளும்  அரசியல் பொறுப்பாளர் நடேசனும் இன்னமும் இந்தியாவை நம்பி வேண்டுகோள்கள் விட்ட வண்ணம் இருக்கினறனர். ரோவின் உளவு விமானங்கள் புலிகளின் நிலைகளுக்கு மேல்பறந்து நோட்டம் விடுகின்றன. நவீன ஆயுதங்களையும், நிபுணர்களையும் கொடுத்தவண்ணமே இருக்கின்றது இந்தியா. இவையெல்லாம் மக்கள் மேல் குண்டுகளாகவே பொழியப்படுகின்றன. தமிழ்மக்கள் அழிகின்றனர், அங்கவீனமாகின்றனர். இப்படி தமிழ்மக்களின் அழிவுகள் பற்றி கிஞ்சித்தும் செயற்படாத இந்தியப் பேயரசிடம் யுத்தத்தை நிறுத்தக்கோரி, பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கி செல் என்று கேட்பது 'கசாப்புக் கடைக்காரனிடம் ஐPவகாருPண்ணிய சங்கத்திற்கு தலைமைதாங்கு" என்று கேடபதுபோல் உள்ளது.

 

இலங்கையில் இந்திய மேலாதிக்கத்தின் இருப்பிற்கான பிரதான காரணம் போர் மேகங்கள் சூழ்ந்த அமைதியற்ற நிலையே. இது தொடர்வதையே இந்தியா விரும்புகின்றது. தமிழ்மக்களின் அழிவில் இந்திய மேலாதிக்கம் இன்பம் காண்கின்றது. இதைப்புரியாத தமிழ்த்தேசியமும், அதன் கூட்டாளிகளும் இந்திய மாயையில் மூழ்குகின்றனர். இந்தியா பற்றி மாயையே, தமிழ் மக்களை அழிக்கின்றது. இந்திய மாயைக்கெதிரான செயற்பாடுகள்,   மக்களின் சொந்த விடுதலைக்கு வழிகாட்டும். இந்த வகையில் இதை பல தளங்களில் அம்பலப்படுத்தி முன்னெடுக்கப்படவேண்டும்.

 

அகிலன்
14.01.2009

Last Updated on Wednesday, 14 January 2009 07:05