10192021செ
Last updateச, 09 அக் 2021 9am

புரிந்து கொள்ள முடியாத ஞானிகள்!

பழம்பெரும் ஞானிகள்
நம்மால்
புரிந்து கொள்ள
முடியாதவர்கள்
திகைப்பூட்டுபவர்கள்
ஆழமும், நுட்பமும் நிறைந்த
மேதைகள்.* சீனத் தத்துவஞானி லாட்சு


உள்ளுணர்வு கைவரப்
பெற்றவர்கள்,
அவர்கள் அடக்கமாயிருப்பதால்
அவர்கள் ஆழம் தெரிவதில்லை.
அவர்களை வெளி உலகம்,
உள்ளே நடப்பதை
புரிந்து கொள்ள முடியாததால்
வெளியே தெரியும் அவர்களது
செயல்களை மட்டுமே
சொல்ல வேண்டியிருக்கிறது.

அவ்வளவு கவனம் -
ஓடையின் குறுக்கே
பனிக்காலத்தில்
பனிப்படலம் மீது
நடப்பவனைப் போல் -
மென்மையான பெருந்தன்மை.

சமூதாயத்தில் எங்கு பார்த்தாலும்
இல்லாமை இருப்பது போல -
கனிவான உள்ளம்.
பனிக்கட்டி உருகத்
தயாராயிருப்பது போல
அடக்கம்.
கல்யாண வீட்டில் ஆசி கூற
வந்தவர் போல -
எளிமை.

உளியினால் தொடப்படாத
மரம் போல -
திறந்த மனம்.
பரந்து கிடக்கும்
பள்ளத்தாக்கு போல்.


ஒடுவதோ கலங்கிய சேறாக
அடங்கியவுடன் தெரிவதோ
தெளிந்த நீராக,
இருப்பதோ அமைதியாக,
பழகுவதோ சான்றோராக,
சகஜமாக.

பிரபஞ்ச இயக்கத்தில்
ஒன்றியவர்கள் இன்னும்
வேண்டும் என்ற
ஆசை இல்லாதவர்கள்.
நிரம்பாமலிருந்தாலும் எடுக்க
எடுக்கக் குறையாத
நில ஊற்றுப் போல!