ஒரு வேலைவிசயமாக திருப்பூர் வரை செல்லவேண்டும்,மாலை 4.30க்கு ரயில் சூப்பர் பாஸ்ட்.மணி , ஞாயிறு என்பதால் பேருந்தும் அதிகமில்லை ரொம்ப நேரம் காத்திருந்து ஏறினேன் .நகர பேருந்தில் கூட்டம்
அதிகமில்லை . ஒரு சென்ட்ரல் கொடுங்க என்றேன் .ரொம்ப பொறுமையாக அவ்ர் இந்தாங்க என்ற படி சில்லரையை கொடுத்தார்.கூட்டம் இல்லாதபோதுதான் அவர் முகத்தில் சிரிப்பும் சந்தோசமும் இருக்கும்.மிக விரைவாக வந்து சேர்ந்தது.அப்படியே இறங்கி ரயில்வே நிலைத்துக்குள் சென்றேன்.கியூ ரொம்ப நீளமாக இருந்தது,அரை மணி நேரம் காத்திருந்து டிக்கெட்ட் ஐ வாங்கினேன் . நான் 2வது பிளாட்பாரம் செல்வதற்கும் ரயில் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.. அப்பெட்டியில் நான் தான் முதல் ஆள் மற்ற நாளில் அன்ரிசர்வு பெட்டிகலில் ஏற வேண்டுமெனில் தற்காப்பு கலை தெரியமல் உள்ளேயே செல்ல முடியாது .இன்னும் அரை மணினேரம் இருக்கின்றது. மெதுவாய் புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தேன். சரியாய் 30 நிமிடம் ஆக ரயில் கிளம்பியது.
எதிரில் ஒருவர் பொறியியல் புத்தகத்தை வைத்து கொண்டிருந்தார் ஒரு கல்லூரியின் புரபசர் என்றார்.அவருக்கு அருகி சுமார் நாலு மலையாளிகள்.மற்றவர்கள் யாரென தெரியவில்லை.அந்த மலையாளிகள் தொன தொன என்று பேசிக்கொண்டே வந்தனர்.அவர்களின் பேச்சு கேரளாவை மிதமிஞ்சி புகழ்ந்து கொண்டே வந்தார்கள்.இந்தியத்தை தூக்கி வைத்து ஆடிக்கொண்டு வந்தார்கள் . அங்கு எல்லோரும் படித்த்வர்கள்,எல்லோரும் அறிவாளிகள்என்று, பேசுவது மலையாளமாக இருந்தாலும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.ரயில் கிளம்பி 1.30 மணி நேரம் ஆகிவிட்டது. என்னால் தாங்க முடியவில்லை ,களத்திலிறங்க முடிவு செய்து விட்டேன்.
அதிலே அதிகம் பேசிய நபரிடம் கேட்டேன் ” நீங்க பாலக்காடா ? இங்கேயிருந்து போவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்”, நாங்க பாலக்காடில்ல,திருவனந்தபுரம் எப்படியும் போக 8 அவர்ஸ் ஆகும். சம்பிரதாயமாக சடங்கு கேள்விகளை கேட்டு இப்போது ஆரம்பித்தேன்.”ஆமா,னீங்க என்ன கட்சி ஒருவர் ” நாங்கள் எல்லோரும் CPM,ஒருவரை சுட்டிக்காட்டி இவர் தான் டைபி நகரச்செயலாளர்”.”ரொம்ப வசதியாய் போச்சு என்ற படியே “கேரளாவுல கோக்குக்கு எதிரா - நீங்க தான போராட்டம் செஞ்சீங்க? “ ஆமாம் நாங்க தான், எப்பவுமே மக்களோட பிரச்சினைக்காக நாங்க தான் போராடுறோம்.அப்படியா பிளாச்சிமடா வில போராடுனது red flag ன்னு படிச்சேன். நீங்களோ மார்க்ஸிஸ்டுன்னு சொல்லுறீங்க.”இல்ல அவங்க மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் டெர்ரெர்ரிஸ்ட், நக்சலைட்ஸ்.”என்ன நக்சலைட்ன்னு சொல்லுறீங்கபோலீசு காரன் கிட்ட அடிவாங்கி மண்ட உடஞ்சு நிக்கறாங்க,உண்ணாவிரதமெல்லாம் இருக்காங்க.உலகத்திலேயே உண்ணாவிரதம் இருந்து அட்வாங்கி திருப்பி அடிக்காத பயங்க வாதி அவங்க தனோ” என்றேன்.அந்த இரு வரிசையில் இருந்தவர்களும் விவாதத்தை கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள்.அத நானும் அவர்களும் உணர்ந்தனர்.உடனே அவர் ” நீங்க ரெட் பிளாக்கா?”என்றார். அதுவரை ரசித்த் ஆமோதித்த அருகிலிருந்தவர்களோ நான் தீவிரவாதியா என பார்க்க் ஆரம்பித்தார்கள்.
நான் ரெட் பிளாக் இல்லை அப்படியே இருந்தாலும் சொல்லறதுக்கு எனக்கு தயக்கம் இல்லை.சொல்லுங்க உங்க மார்க்சிஸ்டு அரசாங்கத்தால் ஏன் கோக்கை தடை செய்ய முடியவில்ல? ” அது சென்ட்ரல் கையில் இருக்கு நாங்க என்ன செய்ய முடியும்.
“அப்படியா சரி பெரியாறு பிரச்சினை என்னங்க? என்றேன். ஆக்சுவலா கேரளா மன்னருக்கு சொந்தமான இடம் அங்கே தமிழ் தன்ணீ கேட் தொல்ல பண்ணறாங்க. கேரளா மன்னருக்கு சொந்தமான இடம்னா கேரளாவுக்கு சொந்தமானதா,அப்படீன்னாஒரு காலத்துல சேர மன்னன் கேரளாவை ஆண்டான்னு சொல்லுறாங்க,அதுக்காக கேரளாவை தமிழன் சொந்தம் கொண்டாட முடியுமா. (அப்போதுபு.ஜ வில் பெரியாறு சம்பந்தப்பட்ட கட்டுரை வந்திருந்தது) .கையிலிருந்த புத்த்கத்தை எடுத்து புள்ளி விவரத்தோடு பெரியாறு அணை குறித்து சொல்ல ஆரம்பித்தேன்.அவர் வாய் திறக்க முடியவில்லை.
அது சரி அணையோட நீர் மட்டத்தை உயர்த்தலாம்ன்னு supreme court சொன்ன பிறகும் உங்களால சட்டசபையில சட்டம் போட்டு தடுக்க முடியுது? ஆனா 1 லி கோக் கழிவால 8 லி நல்ல தண்ணீ பாதிக்கப்படுது,விளை நிலமெல்லாம் அழிஞ்சு போகுது அதை சட்டசபை கூட்டி தடுக்க முடியாதா? . அட ஆமா என்றார்கள் பெட்டியிலிருந்தவர்கள். “டைபி கோக் பேக்டரிய உடைச்சதா பெருமை பட்டீங்கன்னா அதே டைபி தானே த்மிழ் நாட்டுக்கு தண்ணீ தரக்கூடாதுன்னு மறியல் செஞ்சங்க? அங்க ஒண்ணு பேசற்து,கர்னாடகாவுல தமிழகத்துக்கு நீர் தரக்கூடாதுன்னு சொல்லறது.இங்கேயும் தண்ணீ கொடுன்னு போராடுறதுன்னா? நீங்க எல்லாம் ஒரே கட்சின்னு சொல்லிக்குறீங்க எதுக்கு இந்த பித்தலாட்டம்.இப்படி இனவெறியோட செயல் படுற முதல்வரை மார்க்சிஸ்டு தன் கட்சியிலிருந்து நீக்கியிருக்கணுமா வேண்டாமா? நீக்க மாட்டாங்க ஏனா அது போர்ஜரி பார்ட்டி ஆப் இந்தியா.
” நீங்க சொல்றது சரி தான் நாமெல்லாம் இந்தியர்கள் மொழி இன பேதம் இருக்கக்கூடாது ஆமா நாங்க தப்புதான் பண்ணறோம்”வேறு வழியின்றி உண்மையை ஒத்துக்கொண்டார்”. நான் தீர்க்கமாய் சொன்னேன் “தோழர் லெனின் சொல்லியிருக்கின்றார் கம்யூனிஸ்டுக்கு நாடு மொழி எல்லை கிடையாது என்று நீஙக்ள் பேரை மாற்றிக்கொள்ளுங்கள்”கம்யூனிசத்தை கேவலப்படுத்தாதீர்கள் என்றேன். அவரை தன் வாயாலேயே சொல்ல வைத்தேன் போர்ஜரி கம்யூனிஸ்டு என்று.
இந்த விவாதத்தின் போது என்னுடன் பயணம் செய்த சுமார் 15 பேர் எனக்கு அதிகமாய் உதவினார்,பல ஆங்கில வார்த்தைகளை கல்லூரி பேராசிரியர் சொல்லிக்கொடுத்தார்.,சேலத்திலிருந்து திருப்பூர் நான் செல்லும் வரை அந்த நான்கு” தோல”ர்களும் வாய் திறக்கவேயில்லை.
————————————————————————————
இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் இருக்கும் . அவரிடம் நான் கேட்ட கேள்விகளை விடுதலை,சந்திப்பு போன்ற போலிகளிடம் இப்போது கேட்டால் கூட பதில் சொல்ல மாட்டார்கள்.அந்த ரயிலில் வந்த நால்வராவது கொஞ்சம் நாணயமாக அரசியல் பேசினார்கள் .இவர்களோ தன்னை அறிவாளி என்று கூறிக்கொள்கிறார்கள் . வினவோ,மற்ற தோழர்களோ கேட்ட கேள்விக்கு அரசியல் ரீதியாக பதிலளிக்க திராணியற்ற்வர்கள் எழுப்பிய முழக்கம் தான் மருதையன் பார்ப்பனன் என்பது.பார்ப்பனன் என்று சொன்னதாலே மனம் புண்பட்டு சித்ம்பரத்தில் கழன்று கொண்டவர்கள் சொல்கிறார்கள் மருதையன் பார்ப்பனன் . இதற்கு ஏற்கனவே தோழர் பதில் சொல்லிவிட்டிருந்தாலும் நாமும் சொல்வோம் “அவரின் நடைமுறை வாழ்வில் பார்ப்பனீயத்தை இம்மி அளவாவது காட்ட முடியுமா”.அவரின் பேச்சில் உள்ள பார்ப்பனீய எதிர்ப்பை எந்த சி.பி.எம் காரனின் பேச்சில் கேட்க முடியும்?.
கிடாவெட்டு தடை சட்டம்,சிறீ ரங்கம் கோயிலில் நுழைதல் ,சிதம்பரம் கோயில் பிரச்சினை போன்ற பல போராட்டங்கள் பார்ப்பனீய எதிர்ப்பை பறை சாற்றியிருக்கின்றன.போலிகளின் பார்ப்ப்ன தலைமயோ என்ன சொல்கிறது ” நான் முதலில் பிராமணன் அப்புறம் கம்யூனிஸ்டு”.போலிகளில் இனியும் புரட்சிகர அணிகள் இருந்தார்கள் எனில் பதில் சொல்லுங்கள்”தூய்மையின் வடிவம் என்று இப்போது பாராட்டும் நிரூபன் சக்கரவர்த்தியை பைத்தியக்காரன் ஆக்கியது யார்?,” “எம்ஜிஆர் செயாவுக்கு தரகு வேல பார்ப்பதயே வேலையாக வைத்துக்கொண்டு திரிவது யார்” இந்த கேள்விகளுக்கு உங்கள் தலைமை கண்டிப்பாய் பதில் தராது, நாங்கள் சொல்கிறோம் ஏனெனில் அவர்கள் போலி கம்யூனிஸ்டுகள்.
வினவு,கலகம், உள்ளிட்டோரின் கேள்விக்கு உங்கள் தலைமை சொல்லும் பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா? புரட்சி கர அமைப்புகளின் முகவரிகளை அளித்த் பின்னும் எதற்கெடுத்தாலும் மறைமுகத்தலைமை என்று குற்றம் சாட்டிக்கொண்டு இருப்பது எதை காட்டுகின்றது? போலிகளில் உள்ள புரட்சிகரம் என சொல்லும் அணிகளே உங்களுக்கு அரசியல் சித்தாந்தத்தையும் அவர்கள் அளிக்கவில்லை என்பது தான் உண்மை.தனது பித்தலாட்ட கொள்கைகளை மறைக்க பயங்கரவாத பீதியூட்டுகிறார்கள். நீ£ங்களும் உடனே அமைதியாகிவிடுகிறீர்கள் இல்லையா. கடந்த வருடம் லயோலா கல்லூரியில் நடந்த எஸ் எப் ஐ மா நாட்டில் சிவக்குமாரை எதற்காக அழைத்தீர்கள் .R.S.S. கருத்துக்களை உமிழும் அவர் உங்களுக்கு தேனாய் இனிக்கிறார்.புத்த்ககண்காட்சியில் போய் பார்த்தீர்களா மொட்டை சோவின் அல்லயன்ஸ் ல் கையெழுத்து போட்டு சீன் காட்டிக்கொண்டிருந்தார்.போலி விடுதலை சொன்னாரே R.S.S.BJP ஐ நாங்கள் எதிர்க்கின்றோம் என்று எப்படி சிவக்குமார் உங்களுக்கும், R.S.S.க்கும் வேண்டப்பட்டவராயிருக்கிறார்.
போலிகளுக்கு எதிராய் எழுந்த மாபெரும் நக்சல்பாரி எழுச்சியை “வாதம்” என்று அழைக்கின்றார்கள்.தோழர் ஸ்டாலினின் சோவியத்தை சிதைவுற்ற சோசலிசம் என்று குறிப்பிடுகின்றார்கள்.ரணதிவேவோ தோழர் மாவோ அவர்களை போலி மருத்துவர் என்றார்.இந்த சீபிஎம் சீ பி ஐ போலிகளோ மந்திரம் போட்டே புரட்சியை சாதித்து விடு வார்கள் போலிருக்கின்றது.
சந்திப்பு தனது தளத்தில் “மாமா வேலை செய்பவர்களுக்கு” என எழுதியிருக்கிறார்.அய்யா சந்திப்பு மாமா வேலை செய்வது யார்?
உங்களின் மாபெரும் தரகன் அரிகிஷன் சுர்ஜிட் செஇத காரியங்கள் என்ன? எப்போது பார்த்தாலும் செயாவின் தோட்டத்திலேயே வந்து கழுவிக்கொண்டிருந்தாரே அதை பற்றி என்ன எழுதுவீர்கள் கூட்டணி வேந்தர் என்றா? போலிகளின் இன்னொரு வாதம் எங்கல் பெயரை பயன்படுத்துகிறார்கள்.ஏன் சந்திப்பு உங்களை போல எங்களையும் முட்டாள் என நினைத்தீர்களா? சீபிஎம் பெர்ரை சொன்னாலே மக்கள் செருப்பை கழட்டும்போது அந்த பேரை யார்தான் சொல்வார்கள். ஆனால் ம க இ க வின் பாடல்களின் மெட்டை நீங்கள் பயன்படுத்துவது எல்லோருக்கும் தெரியும் .
கலகம் தயார் ம க இ க உள்ளிட்ட புரட்சிகர அமைப்பின் வேலைகளில் பார்ப்பனீயம் இல்லையென்றும் உங்கள் மாமா வேலைகளை பட்டியலிடவும் , நீ தயாரா? கருத்திலும் களத்திலும் உங்களைப்போன்ற போலிகளை ம க இ க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் எதிர் கொள்ளாமல் இல்லை.ஆனால் உங்களின் பரிணாம வளர்ச்சி எங்கு தான் போய் முடியும் என்பது தான் தெரியவில்லை.
பின்குறிப்பு : அந்த ரயிலில் வந்த நபர்களின் முகவரியோ கூட வந்தவர்களின் முகவரியோ தெரியாது. அந்த நாலு பேரின் முகவைரியை கொடு என்பார்கள் போலிகள்.
இதைதான் விவாதப் பொருளாய் மாற்றுவார்களே தவிர கண்டிப்பாய் நம் அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்கமாட்டார்கள்.