எந்த குறிப்பும் இல்லாமல் ஓர் படம். தட்டில் கருப்பு இளைஞனின் தலை. சுற்றி சில மனிதர்கள் கண்கள் மட்டும் தெரியும்படி, நீண்ட வெள்ளை நிற அங்கியைப் போட்டுக் கொண்டு போஸ் கொடுப்பதைப் பார்த்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? ஏதோ மேஜிக் காட்சியாக இருக்குமோ என்று நினைக்கத்தோன்றும்.
ஆனால் உண்மை அதுவல்ல,
ஈரக்குலையை நடுங்க வைத்துவிடும் திகில் வரலாறுகள் அதற்குள் இருக்கின்றது. இத்தனைக்கும் அமெரிக்காவில் இப்படி நடந்தது, நடக்கிறது, இனியும் நடந்துக் கொண்டிருக்கும் என்றால் மனிதாபிமானம் உள்ளவர்கள் உறைந்து போய்விட வேண்டியதுதான். கொஞ்சம் பெரிய வரலாறாக இருப்பதால் ஒரு நூற்றாண்டு பின்னோக்கிச் செல்வோம்.
24.12.1865- இல் ஜிம்மி வால்ஸ் (Jimmy Wales) என்பவனால் தென் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட அமைப்பு Ku Klux Klan (சில காலத்திற்கு பின் KKK என்றும் சுருக்கமாக அழைக்கப்பட்டது) இவன் இராணுவத்தில் பணிப்புரிந்தவன். இனவெறி உடையவன். இவனுடன் மற்ற 5- அமெரிக்க இராணுவ வீரர்களும் இணைந்து ஒரு சில கொலைவெறி கொள்கைகளுக்காக அமைப்பு ரீதியாக செயல்பட முடிவு செய்தனர். இவர்கள் கிறிஸ்தவமதத்தின் Protestante பிரிவைச் சேர்ந்தவர்கள். கத்தோலிக்க கிறிஸ்தவர்களை வெறுப்பவர்கள். "க்கூ க்ளக்ஸ் க்ளான்" என்றால் துப்பாக்கியின் விசையை அழுத்தும் போது வரும் சத்தத்தின் குறியீடு. இந்த சத்தமே அமைப்பின் பெயராகியது. 
அக்காலத்தில் இயல்பாகவே மக்களிடம் கருப்பர்களை கண்டால் இழிவாகவும், அடிமைகளாவும் நடத்தும் பழக்கம் இருந்ததால் எளிதில் இந்த அமைப்புக்கு ஆதரவு கிடைத்து விட்டது. இவ்வமைப்பு White anglo - Saxon Protestes வெள்ளை இனத்தவர்களுக்காக மட்டும் வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தது. உலகில் அந்த இனத்தினர் மட்டுமே உயர்ந்தவர்கள் என்ற சிந்தனையை உருவாக்க முற்பட்டது.
Ku Klux Klan அமைப்பின் உடை வெள்ளை அங்கி. கண்கள் மட்டுமே பார்க்க முடியும். முகத்தையும் உடலையும் மூடியபடி இருக்கும். தலையின் மேற்புறம் கூம்பாக தொப்பி போன்ற வடிவில் காணப்படும். இந்த அங்கியை தங்கள் இரகசிய சந்திப்பின் போதும், வன்முறையில் ஈடுபடும் போதும் அணிந்து கொள்கிறார்கள். தொடக்க காலத்தில் முகம் தெரியும்படியான வெள்ளை அங்கிகளையே அணிந்திருந்தனர். அமைப்பு தடை செய்யப்பட்ட பிறகு தங்களை க்ளான்களான அடையாளங்களுடன் வெளி உலகத்திற்கு தங்களை அடையாளப்படுத்த முடியாமல் போனதால், முகத்தை மறைத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டனர். 
இரவு நேரங்களில் கருப்பு குதிரையின் மீது வெள்ளை அங்கியை அணிந்து முகத்தை மூடிக் கொண்டு குதிரையின் முகத்திலும் கண்களை தவீர முகத்தை மூடும்படியான கூம்பிய தொப்பி போன்ற மறைப்பை அணிவித்து குழுக்களாக கருப்பர்களை கொலை செய்யவும், வன்முறையில் ஈடுபடவும் செல்கின்றனர். ஸ்பெயின் நாட்டில் கைதிகளை வெளியில் அழைத்துக் கொண்டு போகும் போது அக்காலத்தில் கூம்பிய தொப்பி போன்ற இவ்வகை மாடலில் தான் முகத்தை மறைத்து கருப்பு குதிரைகளில் அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஐரோப்பாவில் இருந்து அக்காலத்தில் அமெரிக்காவுக்கு சென்றவர்களில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்களும் இருப்பதால் இவை ஸ்பெயின் வழக்கம் என்றும் சொல்லப்படுகிறது.
1861- இல் அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டதற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று அடிமைமுறை ஒழிப்பு. தெற்கு அமெரிக்க மாநிலங்களில் ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக உள்நாட்டு கலகம் வந்திருந்தது. 1865- இல் போர் முடிவுக்கு வந்திருந்த போது ஏராளமான உயிர் இழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டிருந்தன. 620.000 இராணுவ வீரர்களும், கணக்கில் அடங்காத பொது மக்களும் கொல்லப்பட்டிருந்தனர். தெற்கு அமெரிக்காவில் இருக்கும் மாநிலங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு தான் ஜிம்மி வால்ஸ் Ku Klux Klan அமைப்பை உருவாக்கி வெள்ளை இனத்தின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அடாவடியான செயல்களில் தம் அமைப்பினரை ஈடுபடும்படி தூண்டினான்.
கிறிஸ்தவ மதச் சின்னமான சிலுவை சின்னங்களை எரிப்பது, கருப்பர்கள் எங்களின் அடிமைகள் என்று இழிவுபடுத்துவது, கருப்பு இனத்தவர்கள் தங்களுக்கு சமமாக அமெரிக்க நாட்டில் இருக்கத் தகுதியற்றவர்கள் என்றும், மனிதர்களாக இருக்கத் தகுதி இல்லாத கருப்பு இனத்தவர்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்று பல கருப்பர்களை கொலை செய்ததும், யூதர்கள், ஆப்பிரிக்க வெள்ளை இனத்தவர்களை அமெரிக்காவில் இருந்துவெளியேறும்படி சொல்லியும் வன்முறையில் ஈடுபட்டது.
சக வெள்ளை நிற மனிதர்களையே இவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கியவர்கள். கத்தோலிக்கர்கள் வேற்று நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர்கள். அவர்கள் மதம் இருக்கக் கூடாது அவர்கள் அமெரிக்காவில் இருக்கக் கூடாது என்பவர்களுக்கு, கருப்பர்களை எந்த அளவுக்கு இழிவாக நடத்தியிருப்பர் என்பதை உணரலாம். கருப்பர்களை கொலை செய்ய முயன்ற விதங்களும் மிகக் கொடுமையானவை. கண்ணில் படும் கருப்பர்களை சித்திரவதை செய்து கடைசியில் கொலை செய்துவிடுவர். இதர வெள்ளை மனிதர்களைப் பிடித்து தங்கள் அமைப்பின் சின்னமான KKK என்ற எழுத்தால் செதுக்கப்பட்டிருக்கும் அச்சில் தார் ஊற்றி மனிதர்களின் உடல்களில் கொதிக்க கொதிக்க முத்திரை பதிக்கப்பட்டு அதில் கோழியின் இறகுகளை தூவி விடுவார்கள்.
அக்காலக்கட்டங்களில் KKK மக்களிடம் மிகப் பெரும் பயத்தைக் கொடுத்திருந்தது அவர்களின் வன்முறைச் செயல்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், இதர மதத்தைச் செர்ந்தவர்கள், கருப்பர்கள், பெண்ணுரிமை பற்றி பேசுபவர்கள் அமெரிக்காவை விட்டு ஓடிப்போங்கள் என்று மிரட்டிப்பட்டனர். பல இடங்களில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டும், உதைத்தும் மிரட்டப்பட்டனர். சில பெண்கள் நாகரிமான உடையணிந்தால் இரவு நேரங்களில் அப்பெண்ணின் வீடுகளுக்குச் சென்று மார்புகளை கத்தியால் கீறி சித்திரவதைக்குள்ளாக்கினர். Memphis - என்ற ஊரில் இருந்த அனேக கருப்பர்களையும் மிகக் கொடுரமான முறையில் KKK அமைப்பினர் சாகடித்தனர்.
1865- இல் ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கனை படுகொலை செய்தது இவர்கள் தான். அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்க அப்போதைய குடியரசு தலைவராக இருந்த ஆப்ரகாம் லிங்கன் 13- வது அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்து அடிமை முறையை அமெரிக்காவில் ஒழித்ததற்காக ஜான் வில்கிஸ் பூத் என்பவனை அனுப்பி KKK அமைப்பு தான் சாகடித்தது.
20.04.1871- இல் வன்முறைகள் உச்சக்கட்டம் அடைந்தபோது, அமெரிக்க அரசு அமைப்பு செயல்படுவதை தடை செய்தது. 35- வருடங்களுக்கு பிறகு பழைய சம்பவங்களின் பாதிப்புக்கள் மறைந்து போக ஆரம்பிக்க... மீண்டும் 1906- இல் Willam J.Simmons என்பவனால் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய அமைப்பாக உருவாகியது. வழக்கம் போல் மக்களை வன்முறைக்குள்ளாக்கிதோடல்லாமல் அரசியலில் பிண்ணனியிலும் முக்கியத்துவத்துடன் செயல்பட்டது. 
1937- இல் Fran Klin Roosevelt தேர்தலில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்து அவர்கள் மூலம் தேர்தலில் வெற்றி பெற்றார் என்றால் அவ்வமைப்பின் செல்வாக்கை புரிந்து கொள்ளலாம். வெள்ளை இனத்தவரில் இனவெறி உடைய செல்வாக்குள்ள வசதிப்படைத்தவரின் ஆதரவால் மிக வேகமான வளர்ச்சி ஏற்பட்டது. பணத்தால் எதையும் சாதிக்கும் குணம் இவர்களிடம் இருந்தது. வட அமெரிக்கர்ளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர லஞ்சம், மிரட்டல், கொலை போன்ற வன்முறைகள் மூலம் முயன்று முடியாமல் தோல்வியைக் கண்டது.
இரண்டாவது யுத்தம் வந்த போது ஜப்பான் நாட்டின் மீது ஏவப்பட்ட அனுகுண்டுகளுக்கு பிண்ணனியில் இவ்வமைப்பின் தூண்டுதலும், ஆதரவும் இருந்ததது. மெல்ல மெல்ல மீண்டும் வன்முறை விஸ்வருபம் எடுத்து உச்சக்கட்டத்தை அடைந்தபோது 1944- இல் மீண்டும் அமைப்பு அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. அதில் இருந்தவர்கள் தலைமறைவாகிவிட்டனர். தலைமறைவு நடவடிக்கைகளுக்கு பிறகு KKK 4- பிரிவுகளாக பிரிந்துவிட்டது.
1 - Aryan nations
2 - Wasp
3 - The Order
4 - Posse Comitatus
இந்த நான்கு பிரிவுகளும் அரசு அங்கீகாரத்தில் செயர்படவில்லை. தன்னிச்சையாக "ரவுடீஸம்" செய்துக் கொண்டிருந்தது. 
இந்த நான்கு பிரிவுகளிலும் 179- உட்பிரிவுகளாக இப்போதும் அமெரிக்காவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. முதன்முதலாக Ku Klux Klan அமைப்பு ஆரம்பித்த போது 1865- இல் இருந்து 1870- வரையில் 550.000 உறுப்பினர்கள் இருந்தனர். தடை செய்யப்பட்டு மீண்டும் இரண்டாம் முறையாக சில மாறுதல்களுடன் Ku Klux Klan தொடங்கப்பட்ட போது 1915- இல் இருந்து 1944- வரையில் 4.000.000 உறுப்பினர்கள் இருந்தனர். இது முதல் அமைப்பில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட அதிக அளவு எண்ணிக்கையைக் கொண்டதும் அல்லாமல் அரசியலிலும் மிகுந்த செல்வாக்கோடு இருந்தது. இரண்டாவது முறையும் அமைப்பு தடைசெய்யப்பட்ட பின் 1945- இல் மூன்றாவது முறையாக உருவானபோது 8000- உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஆனால் சட்டம் அங்கீகரிக்காத தீவிரவாத அமைப்பாக இருக்கின்றது. ஆக ஒரளவு கணக்கின்படி எட்டாயிரம் "க்ளான்கள்" இருக்கிறார்கள். வெளியில் தெரியாத எண்ணிக்கை எவ்வளவோ? 
கருப்புக் குதிரை... 
வெள்ளை அங்கி... 
கருப்பு மனிதன்... 
கொலை எங்கேயாவது ஏதாவது ஒரு ருபத்தில் நடந்துக் கொண்டிருக்கலாம்.
தமிழச்சி
27/12/2008