03042021வி
Last updateபு, 03 மார் 2021 9pm

பிணங்களைப் புணர்வதில் உலகமே உடந்தையாக!

அன்பு வாசகர்களே,வணக்கம்!

மகிந்த இராஜபக்ஷ போப்பாண்டவரோடு கைகுலுக்கியபடி தனது வன்கொடுமை இராணுவத்தைக் காத்தபடி, தமிழ்பேசும் மக்களின் போராளிப் பெண்களைக் கொன்று புணருகிறான்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியென்றபடி தமிழ்பேசும் மக்களைப் பாலியல் ரீதியாத்தாக்கிச் சிதைத்து,மானபங்கப்படுத்திக் கொன்று குவிக்கும் இராணுவச் சர்வதிகாரியாக  இந்த இலங்கையின் சிங்களத் தலைவன் புத்தனுக்கும்,கிறிஸ்த்துவுக்கும் புகழ்பாடுகிறான் இன்றைய தினங்களில்!.ஆனால், உயிரோடிருக்கும் மனிதரைக் குண்டுகள்போட்டுக் கொன்றபடி...
இலங்கையின் தேவாலயங்களின் அழகாக உடைத்தரித்து வழிபடும் பெண்கள் தமது சகோதரிகளைப் புணரும் ஒரு தேசத்தில் கிறிஸ்துவுக்குக் கொண்டாட்டஞ் செய்து பூரிப்படைகிறார்கள்!நாளை இவர்களையும் புணரும் இன்னொரு வடிவமாக இந்தப் பாசிச அரசுமாறும்போது, இவர்கள் எவரைத்தாம் துதிப்பாரோ?
எமது,மக்களின்-போராளிகளின் வாழ்வைச் சிதைப்பதற்கு எத்தனை வடிவங்களிலிருந்து இந்த இராஜபக்ஷ முனைகிறான்!
மக்களுக்குத் தலைமை தரும் உத்தமனாகத் தன்னைவுலுகுக்காட்ட போப்பாண்டவரிடம் ஆசிபெறப் போகிறான்.அங்கே,தமிழ்பேசும் மக்களைப் புணர்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுவிடுகிறான்.இதே உலகத்திடம் அமெரிக்காப் பாணியில் "ஜனநாயகம்,சமத்துவம்,சகோதரத்துவம்" பேசி, நமது மக்களைப் பூண்டோடு அழிப்பதற்குப் புலியினது பாசிசம் மகிந்தாவுக்குக் கைகொடுக்கிறது.
இன்றோ,இவ்வுலகு கிறிஸ்த்துவின் இன்னொரு பிறந்த நாளையும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.எனினும்,நமது மக்களும்,போராளிகளும் இலங்கைச் சிங்களப் பாசிச இராணுவத்தால் குண்டுகள்போட்டுக் கொல்லப்படுவதுமட்டுமல்ல,அவர்களால்(சிங்கள வன்கொடுமை இராணுவத்தால்) கொல்லப்பட்ட புலிப்போராளிப் பெண்களை மிகவும் கேவலமாக அம்மணப்படுத்திப் புணருகிறது-அம்மணமானவுடலை இரசித்து,மேலும் பல தடவைகள் கொன்று வருகிறது, சிங்களப் பாசிச இராணுவம்!
ஈராக்கில்,யுக்கோஸ்லோவியாவில்,அவ்கானிஸ்தானில் அமெரிக்க வன்கொடுமை இராணுவஞ் செய்த அதே கொடுமைகளை இலங்கை வன்கொடுமை இராணுவமும் தமிழ்பேசும் மக்களுக்கும்,புலிகளின் போராளிப் பெண்களுக்கும் கட்டவிழ்த்துவிடுகிறது.
இதை அம்பலப்படுத்தி உலக நாடுகளின் பல பொதுநல அமைப்புகளுக்கு இதுவரை மின்னஞ்சல் அனுப்பியும் எவருமே நம்மைக் கண்டுகொள்ளவில்லை.இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட புலிப் போராளிகளை மனிதாபிமானமுறையில் நடாத்தாமல், மிருங்கங்களைப்போல் அம்மணப்படுத்தி இரசித்து மகிழ்கிறது இலங்கை அரசபயங்கரவாதம்.எனினும், மக்களின் நல்வாழ்வுக்காக கிறிஸ்மஸ்வாழ்த்து உரையாற்றுகிறார் இலங்கை ஜனாதிபதி.அவரது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இராணுவமோ தமிழ் மக்களைக் குண்டுகள்போட்டுச் சிதைத்தபடி, அவர்களது போராளிப் பெண்களைப் பிணமாக்கிப் புணரகிறது.இதை எவர்களால் அங்கீகரிக்கமுடியும்?அல்லது,மௌனமாக இருக்கத்தான் முடியுமா?மனிதாபிமானமுள்ள எவரும் இதுகுறித்துப் பேசவே முற்படுவார்.ஆனால்,களத்தில் மரணமான இப் போராளிப் பெண்களை மனிதர்களாகக்கூட நமது உணர்வுகள் அங்கீகரக்க மறுத்து போர்க்களத்தில் எல்லாஞ் சாத்தியமெனக் கிடக்கிறதான நமது போக்குகள் மெல்லச் சிங்கள வன் கொடுமை இராணுவத்துக்கு அருகினல் நிற்கிறது!
பொதுப் புத்திக்கு இவ்வீடியோ(சிங்கள இராணுவம் மரணித்த புலிப்போராளிப் பெண்களோடு ஆணாதிக்க முறையில் பாலியல் பலாத்தகாரஞ் செய்வது) ஒழுக்கக் குறைவான நிகழ்வுகளை மறுவிளைவாக்கிறதாம்.எனவே,அதைப் பார்க்காமல் தவிர்த்து, இலங்கை இராணுவம் கோணேஸ்வரியின் யோனிக்குள் குண்டுவைத்தை-வைப்பதை மேலும் தொடரும்போது மௌனமாக அங்கீகரிக்கட்டாம்.தூ...மக்கள் விரோதிகளே!
இன்று, நாம் படும் வேதனைகளுக்கெல்லாம் இலங்கைப்பாசிச இராணுவம் மட்டமல்ல உங்களைப் போன்று "ஓழுக்க"வாதிகளுமேதாம் காரணமாகிறார்கள்.நாலு சுவருக்குள் நீலப்படங்காட்டும் நீங்கள் "பீப் சோவ்" மன நிலை குறித்துப் புலம்புகிறீர்கள்!எது, அரசியல் சார்ந்த நிகழ்வு-எது,கிரிமனல்சார்ந்த நிகழ்வு என்பதை தனித்தனியே அரசியலை துண்டித்து இனம்காண்பவர்கள் நீங்கள்.நாங்கள் இவையனைத்தும் அரசியல்-சமூகப் பிரச்சனைகளின் இருவேறு முகங்களாகப் பார்க்கிறோம்.
உலகு தழுவிய முறையில் இலங்கைப்பாசிச அரசின் ஒடுக்குமுறைகளை அங்கீகரிக்கும்போது, அவற்றை மௌனமாக அங்கீகரிக்க முனையும் இந்தப் பேடித்தனம் இன்னும் எத்தனை புலிப் போராளிப் பெண்களை மானபங்கப்படுத்துமோ நாம் அறியோம்.போர் வீரப் பெண்களைக் கௌரவமாக நடாத்த முடியாதளவுக்கு ஆணாதிக்கத் திமிராக போராளிப் பென்களின் உயிரற்றவுடல்களை பாலியல்ரீதியாக அனுபவிக்கும் மனோவியாதி பிடித்த சிங்கள இராணுவத்தை உலக நீதிக்கு முன் நிறுத்துவதும், அதன் தலைவன் இராஜபக்ஷவைச் சட்டத்தின் முன் நிறுத்துவதும் அவசியமானது.இது, ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரதும் அவசியமானபணி!
பாசிசத்தைத் தமிழ்மக்கள்மீதும் சிங்கள இராணுவமும் உலகமும் கட்டவிழ்த்துவிடுவதற்குத் துணையான பலகூறுகளை நமக்குள் விதைத் பாசிசப் புலிகளால்-இதன் பாத்திரமாக அவர்களது போராளிப் பெண்களையே சிங்கள இராணுவம் கொன்று புணருவதுவரை நமது வாழ்வு சிதைந்துகிடக்கிறது.புலிகள் இயகத்தின் மிகக் கீழ்த்தரமான போராட்டப் பாசிச நடவடிக்கைசார்ந்த கூறுகளால் மக்கள் சிங்கள வன் கொடுமை இராணுவத்திடம் பலியாகியும் பாலியல் பலாத்தகாரத்திலிருந்து விடுதலை பெறவில்லை!
இத்தகைய முறைமையில் நாம் பல வெளிநாட்டு பொது நிறுவனங்களுக்கு இவ் நிகழ்வை அம்பலப்படுத்தி வெகுஜனப்படுத்தப்பட்ட போராட்டத்தை ஆரம்பிக்வேண்டும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
25.12.2008

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்