Language Selection

குருத்து
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தில்லி அருகே நொய்டாவில் சாக்கடையை கிளற கிளற கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் மண்டையோடுகள் வந்து கொண்டிருந்தது போல.... அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடியை கிளற கிளற புதிய புதிய வகையிலான ஊழல்கள் வெளிவருகின்றன. புகழ்பெற்ற நிறுவனங்கள் தாங்கள் செய்த தில்லுமுல்லுகளால் திவாலாகி விழுந்து கொண்டேயிருக்கின்றன.

சமீபத்தில், ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தின் தில்லுமுல்லு கதை இதோ! 
*** 
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு, திடீர் திடீரென நிதி நிறுவனங்கள் தோன்றி... மக்கள் கொடுக்கும் பணத்திற்கு வருட வட்டியாக 36% வரை தருவதாக வாக்கு கொடுத்து, சேமிப்புகளை பெற ஆரம்பித்தன. அப்பொழுது தேசிய வங்கிகள் 12% வரை வட்டியாக அளித்துகொண்டிருந்தன. 
சொன்னபடி 1 ஆண்டுக்கு மேலாக கொடுக்கவும் செய்தன. மக்கள் அலை அலையாய் போய் முதலீடு செய்தார்கள். இரண்டாவது ஆண்டின் முடிவில்... இப்படி வாக்கு கொடுத்த எல்லா நிறுவனங்களும் இழுத்து மூடி, மக்கள் தலையில் பெரிய்ய துண்டை போட்டார்கள். 
இதே முறையில் அமெரிக்காவில் ‘பெர்னார்ட் எல். மேட்ஆப் இன்ஸ்வெஸ்ட்மென்ட் செக்யூரிட்டீஸ்’என்ற நிறுவனம் 2 லட்சத்து 45 ஆயிரம் கோடிக்கு மக்கள் தலையில் துண்டை போட்டிருக்கிறது. இந்தியாவின் இந்த ஆண்டு பட்ஜெட் தொகையே 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்தான். மூன்றில் ஒரு பங்கு. 
பெர்னார்ட் மேடாப் தன்னுடைய 22 வயதில் 1960ல் இந்த பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசனை 
நிறுவனத்தை நியூயார்க்கில் துவங்கினார்
பணம் வைத்திருக்கும் நபர்களை பிடித்து மற்றவர்கள் முதலீட்டுக்கு 3% அல்லது 5 % தந்த நிலையில் 10% தருவதாக சொல்லி, கோடிக்கணக்கில் வாங்கினார். சொன்னபடியே தரவும் செய்தார். அவர் புகழ் பரவ ஆரம்பித்து, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் நிறுவனத்தின் கிளைகள் பரவத் தொடங்கின. அமெரிக்க மக்கள், மற்றும் பிரபலங்களும் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு பணத்தைக் கோடி கோடியாய் கொட்டினார்கள். 
ஸ்டெர்லிங் ஈக்யுட்டீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பிரெட் வில்போன், ஹாலிவுட் நடிகர் ராபர்ட் லோகியா, யூதர்கள் அமைப்பான யேஷிவா பல்கலை, அரசு வக்கீல் ஜெர்ரி ரேஸ்மென் போன்ற பிரபலங்கள் இதில் முதலீடு செய்ததில் முதன்மையானவர்கள். 
அமெரிக்கா பொருளாதார நெருக்கடியில் சிக்கி... உலகப் புகழ்பெற்ற வால் ஸ்டீரிட் ஸ்தம்பித்த நிலையில் மக்கள் போட்டிருந்த முதலீடுகள் எல்லாம் மதிப்பிழந்து குப்பைக் காகிதங்களாக மாறிவிட்ட நிலையில்... மக்கள் தாமதமாய் சுதாரித்து தாங்கள் போட்டிருந்த முதலீடுகளை எல்லா இடங்களிலும் இருந்தும் திரும்ப பெற தொடங்கினர். 
இந்த நிலையில் பெர்னார்ட் மேடாப்-பிடம் கேட்டார்கள். அப்பொழுது, சகலரும் அதிரும்படி ஒரு உண்மையை சொன்னார். 
‘‘இத்தனை நாள் நான் நடத்தியது போலி நிறுவனம்தான். என்னிடம் எந்த சொத்தும் கிடையாது. நிறுவனம் திவாலாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது” 
பிறகு, எப்படி தன் நிறுவனத்தை நடத்தி வந்தார் என விளக்கமாய் சொன்னார். 
முதலில் பணம் கொடுத்தவர்களுக்கு அடுத்து வருபவர்களிடம் பணம் வாங்கி வட்டியுடன் திருப்பி கொடுத்தார். அவர்களுக்கு அடுத்தடுத்து பணம் தருபவர்களிடம் வாங்கி வட்டியுடன் திருப்பி கொடுத்தார். இந்த திட்டத்திற்கு அவர் வைத்த பெயர் “பொன் முட்டையிடும் வாத்து” 
இப்பொழுது பெர்னார்ட் சிறையில் கம்பி எண்ணுகிறார். அவருக்கு வயது 70. 1990, 1991, 1993ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான ‘நாஸ்டாக்’கின் தலைவராக இருந்தவர். 
முதல்கட்ட விசாரணையில் 83,300 கோடி ரூபாய் அளவுக்கு பெர்னார்டுக்கு சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடந்து நடந்து கொண்டிருக்கிறது. 
ஒரு டுபாக்கர் நிறுவனத்தை 48 ஆண்டுகளாக புகழ்பெற்ற நிறுவனமாக பல தில்லுமுல்லுகளோடு அமெரிக்காவில் நடத்த முடிந்திருக்கிறது என்றால்... அமெரிக்க அரசு பற்றி, அதன் பொருளாதார கட்டமைப்பு பற்றி நாம் நன்றாக புரிந்து கொள்ளமுடிகிறது. 
முதலாளித்துவத்தின் அடிப்படை மூலதனமே தொழிலாளர்களின் உழைப்பில் எழுந்த சுரண்டல் தானே! அடிப்படையே சுரண்டலாய் இருக்கும் பொழுது, அதன் மீது எழுப்பப்படுகிற எல்லாமே நேர்மையானதாகவா இருக்க முடியும். 
*** 
நன்றி : 
தகவல்களுக்கு ஜே.எஸ்.கே.பாலகுமார், தமிழ் வணிகம். 
மேலும் படிக்க... 
Madoff Hedge Fund Considered A Giant Ponzi Scheme Where Investors Lost 50 Billion Madoff Arrested Bernard Madoff, the former NASDAQ Stock Market chairman faced charges of organizing a ponzi scheme that biked away $50 billion from the investors and consequently he was arrested. It has been discovered that the scheme, which has been running for years, has made use of new investors’ money to pay returns to the other investors. In this way, the founder of Bernard L. Madoff Investment Securities managed to keep up the reputation of the scheme. 
Thanks : 
http://www.encyclocentral.com/32466-Related-Bernard_L._Madoff_Investment_Securities_LIc_Charged_Arrested_For_Fraud_Ponzi_Scheme.html 
Invest Big ‘fesses to $50B ‘Fraud’ A Wall Street legend was busted yesterday on charges of running a scam investment business for the super rich after telling his sons it was just "a big lie" - losing a whopping $50 billion. 
Bernard L. Madoff, 70, a former Nasdaq chairman, was arrested a day after his sons Andrew and Mark, both senior employees, turned him in for running a business that had been insolvent for years, prosecutors said Thanks : New york post … also read. Click below 
http://www.nypost.com/seven/12122008/news/regionalnews/invest_big_fesses_to_50b_fraud_143843.htm