Language Selection

கலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கருமாதி இழவுக்கு காலம் தான் வருமா?

1991,மே மாதம் 22-ம் தேதி காலை 6 மணி கதவைத் தட்டும் சத்தம் கேட்டு ஓட்டினேன் கையில் பாத்திரத்தோடு. பாலை ஊற்றிய படியே  பால் காரர் பக்கத்துவீட்டுக்கார அம்மாவிடம்  சொன்னார் “ராஜீவ் காந்திய கொன்னுட்டாங்களாம்”.எனக்கு ஒரே சந்தோசம் ராஜீவ் செத்ததை எங்கள் வீட்டில் யாரும்  பொருட் படுத்தவே இல்லை.எனக்கு நன்றாய் நினைவிருக்கின்றது காலையிலிருந்து மாலை வரை அப்படி

 ஒரு ஆட்டம் எனக்கு தேவையெல்லாம் ஒரு நாள் விடுமறை. அப்போது நான் சிறுவன்.டிடியில் பாத்திமா பாபு கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருந்தார்.எங்கள் தெருவில் யாரும் அழுததாய் தெரியவில்லை.பல ஆண்டுகளுக்கு பின் தான் தெரிந்தது “ராஜீவிற்காக இந்தியாவே அழுதது” என்று. அப்படி அழுததாய் எங்களுக்கும் ஞாபகம் இல்லை.

 

 

கடந்த வாரம் சீமான்,கொளத்தூர் மணி,மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆங்காங்கே எதிர்ப்பு,காங்கிரசோ வரவேற்பு “திருமாவளவனையும் கைது செய்”என்ற முழக்கத்தோடு ஆரம்பித்து விடுதலை சிறுத்தைகளிடம் செருப்படி வாங்கி  பிளிறிக்கொண்டிருக்கின்றார்கள்.பார்ப்பன ,சூத்திர பத்திரிக்கைகளோ “சத்திய மூர்த்தி பவன் போலீசார் கண்முன்னே தாக்கப்பட்டது” “காங்கிரசார் தாக்கப்பட்டனர்”.”தங்க்க”பாலுவோ புனிதமான சத்திய மூர்த்தி பவன் தாக்கப்பட்டதை எந்த காங்கிரஸ் காரனும் பொறுத்துக்கொள்ள மாட்டான்” பேரரசர் சொல்லுவதற்கு முன்னேயே ம்ற்ற அரசர்கள் சீமான்,திருமாவின் பொம்மைகளை எரிக்க ஆரம்பித்து விட்டார்கள். நாங்க இல்லேன்னா திமுக ஆட்சியே இல்லை தெரியுமா? என தமிழக சாலைகளில் சீன் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.சாலைகளில் மறியல் செய்த  வெள்ளை வேட்டிகள் தனது பின்புறத்தில் அழுக்கு படிய வைத்து விட்டர்களே  என்ற கோபத்தில் உளறுகின்றன.இளங்கோவன் பாலுவும்  சொல்வதை போல சத்திய மூர்த்தி பவன் புனிதமான இடமா,அங்கே நடந்த தாக்குதல் வரலாற்றுப்பிழையா?

 

 

 

cong

 

 

சத்தியமூர்த்தி பவன் என்பது துரோகத்தின் கலங்கரை விளக்கம். மகாத்மாகாந்தி முதல் செத்துப்போன ராஜீவ் காந்தி வரை ஏன் தற்போது குட்டிகுட்டி தலைவர்களாக பரிணமிக்கும் எல்லோரும்  துரோக கம்பெனியின் பங்கு தாரர்கள்.இந்த துரோக கம்பெனியின் தலைவர் பதவிக்காக சத்தியமூர்த்திபவனுக்கு விழுந்த செருப்படிகளும் அர்ச்சனைகளும் கணக்கிலடங்காது.இந்திய நாட்டை எப்படி தொடர்ந்து தம் காட்டுப்பாட்டில் வைப்பது என்ற பிரிட்டிசாரின் கவலைக்கு மருந்தாய் வந்தவர் தான் மஹாத்மா. நீங்கள் இங்கு இருந்தாலும் இல்லையென்றாலும் நாங்கல் எப்போதும் உங்கள் அடிமைதான் என  உறுமியவர்தான்மஹாத்மா.மாவீரன் பகத்சிங்கை தூக்கில் எப்போது போடுவது என வெள்ளையர்கள் கேட்டபோது,லாகூர் மானாட்டுக்கு முன்னே போடுங்க என்று தன் தேச பக்தியை உலகறியச்செய்தார்.ஒவ்வொரு முறையும்  போராட்டத்தை ஆரம்பித்து விட்டு அது மக்களின் கைக்கு சென்ற வுடனே உடனே வாபஸ் வாங்கி ” ,வெள்ளையன் அடித்தால் வாங்க வேண்டும் திருப்பி அடித்த மக்களை (சவுரி சவுரா) காட்டுமிராண்டிகளென்று கண்டித்தார் இந்தப் “பீ”தா.அந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் மஹாத்மா செய்த மாபெரும் துரோகம் தான் அவர் கண்டு பிடித்த அரிசன்.உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை தே…….மகன்களாக்கியது தான் தேசத்தந்தையின் செயல்.ராமராஜ்யமும் பசுகொல்லாமையும் இரு கண்கள் என்ற மஹாத்மா மாபெரும் பித்தலாட்ட பேர்வழி. எதற்கெடுத்தாலும் ராம ராஜ்யம் தான் என் கனவு சொல்லிக்கொண்டிருந்தார்.உடனே மாபெரும் பகுத்தறிவாளர் குத்தூசியார் அவர்கள் ராமனின் லீலைகளை அவிழ்த்து விட அந்த ராமன் வேற நான் மனசிலே  நினைச்ச ராமன் வேற என்றார்  நாம் நம்பித்தான் ஆக வேண்டும் மஹாத்மாவும் அவரது சத்தியசோதனையும் உணமையென்று ஏனென்றால் அவர் தேசப்பிதா.

 

மகாஆத்மாவுக்கு பிறகு ரெண்டு காந்திகள் மக்களின் உயிரை எடுத்தார்கள் அம்மாளும் பையனும் சோடியாக.அம்மாளுக்கு பஞ்சாப்,பையனுக்கோ ஈழம்.இருவரின் கையிலும் பஞ்சாபும் ஈழமும் பிழியப்பட்டன.1983-ல் பொற்கோயிலுக்குள் புகுந்த ராணுவம்சாமி கும்பிடவந்த சீக்கியர்களையெல்லாம்  சொர்க்கம் அனுப்பியது.பஞ்சாபின் இனப்போராட்டம் துப்பாக்கிகளால் கட்டுப்படுத்தப்பட்டது.ஆயிரக்கணக்காண சீக்கியர்கள்  வரன் முறையின்றி கொல்லப்பட்டனர்.எல்லாவற்றுக்கும் இப்போது போலவே இந்திரா பதில் சொன்னார் கச்சிதமாய் “அவர்கள் தீவிரவாதிகள்”இந்திரா காந்தி கொலைக்கு பின்னோ  ராஜீவ் சீக்கியர்களின்மேல் அளவற்ற தாக்குதல் தொடுத்தார்.அரச கலவரங்களை ஏற்படுத்தி சீக்கியர்களை கொன்று விட்டு மவுனமாய் பதில் சொன்னார்”ஆலமரம் விழுந்தால் பூமி அதிரத்தானே செய்யும்”.ஒரு இந்திரா  ஆலமரம் செத்துப்போன மக்கள் எல்லாம் அதிர்வுகளா?

 

தன் கட்டுக்குள்  கொண்டுவர போராளிக்குழுக்களை முறைகேடாக பயன்படுத்தி இலங்கையை அச்சுறுத்திய ராஜீவ்.இலங்கை மண்டியிட்ட வுடனே IPKF என்ற அமைதிப்படை இலங்கை அனுப்பினார்.ஆயிரக்கணக்காண போராளிகளுக்கு எதிராக லட்சக்கணக்காண இந்திய ராணுவம் தனது முப்படைகளோடு முகாமிட்டது.சிங்கள மற்றும் தமிழ்மக்களை கொன்று குவித்தது.தாய்மார்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியது.அதற்குதான் அந்த பயங்கரவாதிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.அதுவே ரா குல் காந்தி வரை பிரதமர் அதிகாரத்திற்கு வருவதற்கான தகுதியாகிவிட்டது.

 

 

இப்போது அலறுகிறார்களே அய்யோ எங்கள் தலைவன்  எங்கள் தலைவன், சத்திய மூர்த்திபவனை தாக்கிய தேசத்துரோகிகள் என்று என்று.செல்லக்குமாரின் ஆதரவாளர்கள் உருட்டுக்கட்டை  அரிவாளோடு  மண்டையை பிளந்தார்களே,மூப்பனார் தமாகா ஆரம்பித்த போது அம்மணமாக்கி துரத்திவிட்டார்களே அப்போதெல்லாம் எங்கே போனது இந்த முழக்கம்.கர்னாடகா,கேரளா,ஆந்திராவில் காங்கிரசு அரசுகள் இருக்கும் போது ஏன் தன்ணீர்பிரச்சினையின் போது சொன்னார்கள்”3 மாநிலம் மட்டும் போதாது இந்த தமிழகமும் எப்போது காங் வசம் வருகிறதோ அப்போது தான் காவிரி,பெரியாறு,பாலாறு பிரச்சினை தீரும்”
.இப்படி எந்த ஒரு தமிழகப்பிரச்சினைக்கும்  “அவர் நல்ல முடிவைஎடுப்பார் என நம்பிக்கை இருக்கின்றது” எனும் பெருச்சாளிகள்.இப்போது மட்டும் ஏன் கத்துகிறார்கள் எனில் ஈழத்த்மிழர்களுக்கு ஆதரவு தரவேண்டுமெனில் அது கண்டிப்பாய் அமைதிப்படையை அனுப்பியது சரியா தவறா என்ற விவாதத்தில் தான் முடியும் .அந்த முடிவில் ராஜீவ் கொல்லப்பட்டது சாதாரணமாகிப்போகும்.பிறகு யார் பேரை சொல்லி ஆட்சியைப்பிடிப்பது.மீண்டும் யாராவது செத்தால் தான் ஆட்சியை பிடிக்கக் முடியும். .அது தான் ஒரு முத்திரை அதன் மேலேயே கைவைத்த்தால் நோகாமலா இருக்கும்.
தங்க பாலு சொல்கிறார்” பாஜக கூட இப்படி செய்ததில்லை”எப்படி செய்வார்கள் காங் காட் ஒப்பந்தம் அமுல் படுத்திய போடு தான் திட்டமிட்டே பாபர் மசூதி இடிக்கப்பட்டது.ஏன் தற்போது நாட்டை அடிமையாக்கும் அணு சக்தி ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டபோது ராமர் பால பிரச்சினையை கையிலெடுத்தார்கள்.இரண்டு பெயரும் தான் வேறே தவிர உள்ளே இருப்பது அதே பார்ப்பன பாசிசமும் அமெரிக்க அடிமைப்புத்தியும் தான்.
ராஜீவ் என்ற அந்த முத்திரை சிதைக்கப்படவேண்டும்  துரோகத்தின் வரலாறான காங்கிரஸ்  விரட்டப்படவேண்டும்.காங்கிரஸ் குட்டிதலைவர்களுக்கு விழுந்த செருப்படி  காங்கிரசுக்கும் விழவேண்டும்.செத்துப்போனவன் என்பதால் ஹிட்லர் யோக்கியனாகிவிடுவானா?ஒரு பாசிஸ்ட் செத்தப்பின்னும்  உயிர்த்தெழுகிறான் அவனை அம்பலப்படுத்தாத வரை.அதனால் தான் காந்தி தேசப்பிதாவாகவும் பஜாரி அம்மாவாகவும்  நீட்டிக்க முடிகிறது.அதற்கான முயற்சியை நாம் தான் மேற்கொள்ள வேண்டும்.

 

பல ஆண்டுகளுக்கு முன் வந்த மகஇக வின் பாடல்”காங்கிரஸ் என்றொரு கட்சி அதன் கருமாதி இழவுக்கு காலம் வந்தாச்சு” அமைதியாய் இருந்தால் மக்களுக்கு அவர்கள் கருமாதி வைத்து விடுவார்கள்.