12072022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

தொலைபேசி மூலம் பாலியல் ரீதியாக பெண்களை இழிவுபடுத்தல்

இவை தனிப்பட்ட பெண்களை அணுகுவதாக இருந்தபோதும், இது ஆணாதிக்க சமூக நோய். சமூகம் என்ற அறநெறிகளை இழந்து வரும் சமூகத்தில், இவை போன்றன தனிப்பட்ட சம்பவங்களாக மிக வக்கிரமாக வெடித்துக் கிளம்புகின்றது.

 தமிழ் சினிமா இப்படி வக்கிரமாக அணுகிக் கூத்தடிப்பதையே, தமிழ் காதலாக, உயர்வான கதாநாயகத் தன்மை கொண்டதாக காட்டுகின்றது. இதை சமூகமே ஜிரணிக்கும் பண்பாடாகி வருகின்றது.இதையே அரசியல் தளத்தில் சிலர் செய்கின்றனர். தமிழ்மண இணையத்தில் செயல்படும் தமிழச்சிக்கு, பாலியல் ரீதியான மிரட்டல் விடப்பட்டுள்ளது. 'தமிழச்சியின் நிர்வாணப் புகைப்படத்தை வெளியிடுவோம் - இணையப் பொறுக்கிகள் பகீரங்க மிரட்டல்! -தமிழச்சி" அவரின் கருத்துக்களை எதிர் கொள்ளமுடியாது பாலியல் ரீதியாக மிரட்டி அச்சுறுத்துவதன் மூலம், ஒரு பெண்ணின் எழுத்துரிமையை நிறுத்தமுனைகின்றனர். அவள் ஒரு பெண்ணாக இருப்பதால், பெண்ணை பாலியல் ஊடாக மிரட்டும் இழிவான ஆணாதிக்க வக்கிரங்களே பொறுக்கி அரசியலாக அரங்கேறுகின்றது.கருத்தியல் ரீதியாக கருத்தை எதிர்கொள்ள முடியாதவர்களின் கோழைத்தனமான, இழிவான செயல்கள், ஆணாதிக்கம் ஊடாக வெளிப்படுகின்றது. இது இந்த வர்க்க சமூக அமைப்பின், தரம் கெட்ட நடத்தைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.பிரான்சில் அதாவது பாரிசைச் சுற்றி இந்தச் சம்பவம் நடக்கின்றது. தமிழச்சி பாரிசில் வாழ்ந்த போதும், நாம் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இணையம் மூலம் தெரிந்து கொண்ட ஒரு நிலையில், கருத்து மற்றும் நடைமுறைகள் தொடர்பாக எமக்கு மாறுபட்ட அபிப்பிராயங்கள் உண்டு. ஆனால் சமூகத்தின் ஒரு இழிவான பக்கத்தை சாட முனைகின்ற அந்த துணிச்சலை, அந்த நேர்மையை நாம் மதிக்கின்றோம்;. இதற்கு எதிரான எந்த முயற்சியையும் நாம் அனுமதிக்க முடியாது.எந்தக் கருத்தின் மீது, எந்தத் தரப்பால் இவை விடப்படுகின்றது என்பதை தமிழச்சி வெளியிடவில்லை. அதாவது இதன் பின்னணியை பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால் அவை மேலும் இந்தச் சம்பவத்தின் பின்னணியை கூர்மையாக்க கூடியவையாக இருக்கும்.பாரிசில் நாம் அறிய தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் பெண் குழந்தைகளை குறிவைத்து, தொலைபேசி மூலம் பாலியல் வக்கிரத்தைக் கொட்டுகின்ற சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றது. இவர்கள் எல்லாம் தமிழர்கள் தான். தம்மைத் தாம் தமிழர் என்றும், தமிழ்ப்; பண்பாட்டின் வாரிசுகள் என்றும் கூறிக்கொள்பவர்கள் தான். இதனால் தமிழ் ஊடகங்கள் இதை மூடிமறைக்கின்றன, அதை பூசி மொழுகுகின்றன. தந்தை அல்லது தாயை அல்லது அண்ணையைக் கொன்று விடுவோம் என்று கூறி, மிக இளம் வயது பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக அணுகுகின்ற தமிழ் வீரர்களைக் கொண்டதே எமது தமிழ் சமூகம். இப்படி தமது பாலியல் வக்கிரங்கள் அவர்களால் அன்றாடம் கொட்டித் தீர்க்கப்படுகின்றது.தமிழச்சிக்கு நடந்தது இதில் இருந்து வேறுபட்டது. அரசியல் ரீதியாக நடக்கின்றது. ஆளும் வர்க்க, கருத்து தளத்தின் இயலாமையில் இருந்து வக்கிரமாகி கொட்டுகின்றது. அவர் இதன் பின்னணி பற்றி எதையும் தெரிவிக்கவில்லை என்ற போதும், இந்த வக்கிரம் என்பது இந்த ஆணாதிக்க சமூகத்தின் கடைகெட்டுப்போன போன உதிரி பொறுக்கிகளின் மானம் கெட்ட ஒழுக்கமாகின்றது. இது போன்ற வம்புகளால் தான், முன்பு இதே பாரிசில் நிதர்சினி படுகொலையும், கற்பழிப்பும்; நடந்தது.தான் ஒரு ஆண் என்ற அகங்காரத்துடன், தன்னால் எந்தப் பெண்ணையம் எப்படியும் இழிவுபடுத்த முடியும் என்ற ஆணாதிக்க திமிர். இந்த இழிவை வாழ்வாக கொண்டவர்களின்;, இழிவான பண்பாடற்ற காடடு;மிராண்டி நடத்தைகள் இவை. இந்த அற்பர்கள் தம்மை இந்த சமூகத்தின் முன் மூடிமறைத்துக் கொண்டு, இயங்குகின்ற கோழைகள். ஆனால் இவர்கள் தான் புரையோடிப்போன இந்த அமைப்பின், முதுகெலும்புகளாக, வாழ்வில் நடித்துக்கொண்டும் இருப்பவர்கள்.தமிழச்சிக்கு எதிராக மூன்று பிரதானமான போக்கில் இருந்து, இந்த இழிவாடல் மிரட்டலும்; விடப்பட்டு இருக்கும்.1. பெரியார் இந்து மதம் தொடர்பான கருத்துக்களையும், மற்றைய அவரின் கருத்துகளையும் தொடர்ச்சியாக வெளியிடும் தமிழச்சி செயலை சகிக்க முடியாதவர்கள் செயலாக அமையலாம்.


2. அண்மையில் பாரிஸ்சில் நடைபெற்ற தேர் தொடர்பாக வெளியிட்ட துண்டுப்பிரசுரம், அது பற்றி பிரச்சாரத்தையும் கண்டு குலைக்கும் கூட்டம்


3. புலிகளுக்கு எதிராக, அவர் வெளியிட்ட சில கருத்துகள்இந்த மிரட்டல் பின்னணியில் இதில் ஒன்று முதன்மை காரணமாக இருக்கும். ஆனால் இந்த மூன்று போக்கும், இந்த சமூக அமைப்பில் இழிந்து சீரழிந்து கிடக்கின்றது. அவர்களின் எதிர் ஆயுதம் என்பது அறிவு அல்ல. மாறாக அந்த அமைப்பின் இழிவான, கேவலமான குறுக்கு வழிகள் தான். அதிலும் ஒரு பெண், தனது சொந்தப் படத்தைப் போட்டு, இந்த அமைப்பின் சீர்கேட்டை அதன் இழிவை அம்பலமாக்குவதை, ஆணாதிக்கமுடைய இந்த இழிவான அமைப்பால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதை கருத்தியல் தளத்தில் எதிர்கொள்ளும், கருத்தியல் ஆண்மை அதனிடம் கிடையாது.ஆகவே ஆண் பெண் என்ற வேறுபாட்டை உருவாக்கியதன் மூலம் கிடைத்த, ஆணாதிக்க மேன்மையைக் கொண்டு மிரட்டுகின்றது.பெண்களை பெண் அடையாளம் மூலம் இழிவுபடுத்துவது, கொச்சைப்படுத்துவது, பாலியல் ரீதியாக மிரட்டுவது, பாலியல் ரீதியாக உரசிபார்ப்பது, பாலியல்; ரீதியான நுகர முனைவது, இந்த அமைப்பில் சர்வசாதாரணமாகிவிட்டது.பெண் என்பவள் பாலியல் நுகர்வுப்பண்டம் என்பதே, தமிழ் ஆணாதிக்க அமைப்பில் புளுத்துவிடடது. பாரிஸ் லாச்சப்பலின் வீதிகள் தோறும் இந்த கும்பலைச் சேர்ந்த நாய்கள் கூட்டம் கூட்டமாக, வீதிகளில் வீணிவடிய காற்சட்டையை திறந்து வைத்துக் கொண்டு காத்துக் கிடக்கின்றனர். எந்த பெண்ணும் தனியாகவோ, குடும்பத்துடனோ செல்ல முடியாது. ஒரு ரவுடித்தனத்துடன் பாலியல் வக்கிரத்தை தீர்க்க முனைகின்ற பொதுஅவலமே அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. லாச்சப்பலுக்கு எந்த பெண்ணும் சுதந்திரமாக செல்ல முடியாது. தமிழ் பாடசாலைகள் கூட இதை அங்கீரித்து, அனுசரித்து இதற்குள் இயங்குகின்றது.இப்படி பட்டப்பகலில் லாச்சப்பலில் இந்த நிலை நீடிக்கும்; போது, கம்யூட்டர் மூலமும் தொலைபேசி மூலமும் இதுவே நடக்கின்றது இந்த அசிங்கம் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, பயங்கரமானது. சம்பந்தப்பட்ட பெண், அந்தக் குடும்பதின் உளவியல் அவலம் கடுமையானதும், சித்திரவதையை கொண்டதுமாகும்;.இந்த இழிவான சமூகத்தை வழிநடத்தும் அரசியல் பிரிவினரே நேரடியாக களமிறங்கி, மூகத்தை மூடிக்கொண்டு பாலியல் வக்கிரத்தை தமிழச்சிக்கு எதிராக கொட்டுகின்றனர். இந்த ஈனச்; செயலை எதிர்த்து, தமிழச்சி எதிர்கொள்ளும் திறன் பெண்களுக்கே முன்மாதிரியானது.எந்தப் பண்பாடுமற்று, நாகரிகமற்று காற்சட்டை போட்டு திரிகின்ற இந்த மூகமுடிக் கும்பலை, அதை அனுசரிக்கும் இந்த சமூக அமைப்பை எதிர்த்து நிற்பது, போராட்டத்தின் ஒரு கூறாகிவிடுகின்றது.

 

பி.இரயாகரன்
05.10.2007