Tactics of the class Struggle of the Pruletariat.
மார்க்ஸீயத்தில் "தத்துவத்தின் வறுமை" (Poverty of Philosophy) என்ற நூலில் பாட்டாளி வர்க்கத்தின் பொருளாதாரப் போராட்டத்தையும், பொருளாதார ஸ்தாபனங்களையும் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மற்றும் "கம்யூனிஸ்ட் அறிக்கை"யில் காணப்படுகின்ற பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கடமைகள் பற்றியும் மார்க்ஸீயம் சொல்கிறது :
"பெரிய அளவு தொழிற்சாலை, முன்பின் அறியாத ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை ஒரிடத்தில் சேர்க்கிறது. போட்டி மனப்பான்மை அவர்களுடைய நலன்களைப் பிரிக்கிறது. ஆனால், கூலியைப் பாதுகாத்துக் கொள்ளல் என்ற அவர்களுடைய முதலாளிக்கு எதிரான பொது நலன் தற்காத்துக் கொள்ளும் எண்ணத்தின் அடிப்படையில் அவர்களை ஒன்று சேர்க்கிறது. முதலில் தனித்தனியான சிறு கூட்டங்களாக இந்த ஒற்றுமை ஏற்படுகிறது. ஒன்றுபட்ட மூலதனத்தின் முன்னிலையில் தொழிலாளர்களுக்குத் தங்கள் சங்கத்தைப் பாதுகாப்பது, கூலியைப் பாதுகாத்துக் கொள்வதைவிட முக்கியமானதாகிறது. இந்தப் போராட்டத்தில் வருகிற போருக்குத் தேவையான எல்லாப் பகுதிகளும் வளர்ச்சி அடையப்பட்டு ஒன்று சேர்க்கப்படுகின்றன. இந்தக் குறிக்கோளை அடைந்ததும்; சங்கம் அரசியல் பண்பை மேற்கொண்டு விடுகிறது. இங்கே நமக்குப் பொருளாதாரப் போராட்டத்திற்கும், தொழிற்சங்க இயக்கத்திற்கும் ஆன பல நூற்றாண்டுகளுக்கு உதவுகிற திட்டமும், போர்த் தந்திமும் கிடைக்கின்றன. இந்தக் காலம் தொழிலாளி வர்க்கம் தன் வருங்காலப் போருக்கு தயார்படுத்திக் கொள்ளும் காலமாகும்."
மேற் சுட்டிக்காட்டிய மார்க்ஸீயத்தின் கூற்றை இன்றைய சமூகச் சூழ்நிலையோடு பாட்டாளி வர்க்கம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
கம்யூனிஸ்ட் அறிக்கையிலும், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் போராட்டத்தின் போர்த் தந்திரங்கள் பற்றிய மார்க்ஸீய தத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகளை முன்வைக்கின்றது. கம்யூனிஸ்ட்கள் பாட்டாளி வர்க்கத்தின் அன்றாடக் கோரிக்கைகளை அடைவதற்கான போராட்டத்தில் 
இதற்கு உதாரணமாக மார்க்ஸ் தன் காலகட்டத்தில் நடந்த பல நாட்டு சமூக இயக்கங்கள் செயல்படுத்திய கொள்கைகளை எடுத்துக் காட்டுகிறார். பிரெஞ்ச் புரட்சியைப் பற்றியும், ஜெர்மனியில் சோசலிஸ்ட் எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, சோசல் டெமாக்ரடிக் கட்சி பயத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காததைப் பற்றியும் சுட்டிக்காட்டுகிறார்.
பாட்டாளி வர்க்கத்தின் ´மார்க்ஸீய போர்த் தந்திரம்´ எந்தச் சமயத்திலும் முதலாளித்துவ தாக்குதல்களுக்குப் அடிபணிந்து கொடுக்காமல், அதே சமயம் தன் வளர்ச்சியில் கவனமாக இருந்து ஒரு புரட்சிக்கு வேண்டிய வளர்ச்சியும், சாதகமான சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கும் போது அதை வெற்றிகரமாக நிறைவேற்றி முடிக்கும் வழிகளையும் கூறுகிறது. 
மார்க்ஸ் பாட்டாளி வர்க்கத்தின் போர்த் தந்திரங்களின் அடிப்படையை தர்க்கவியல் பொருள் முதல் வாதத் தத்துவத்திற்குப் பொருந்தும்படியாக விளக்குகிறார். ஒரு சமூதாயத்தில் காணப்படுகின்ற எல்லா வர்க்கங்களின் உள் தொடர்பகளின் முழுமையையும், அந்த சமூதாயத்தின் யதார்த்த வளர்ச்சி நிலையையும், அதற்கும் மற்ற சமூதாயங்களுக்கும் உள்ள உறவுகளையும் நன்கு கவனிக்கின்ற பொழுதுதான் முன்னேறிய பாட்டாளி வர்க்கத்தின் போர்த் தந்திரங்களுக்குச் சரியான அடிப்படையை உணர முடியும். அதே சமயத்தில் எல்லா நாடுகளுக்கும், எல்லா வர்க்கங்களுக்கும் அவை அப்படியே நிலையாக இருப்பவை என்ற அடிப்படையில் அல்லாமல் அவற்றின் ஒவ்வொரு வர்க்கத்தின் பொருளாதார இயக்கத்தாலும், ஏற்படுகின்ற இயங்கும் தன்மையையும் கணக்கில் கொண்ட கணிக்கப்பட வேண்டும்.
இயக்கம் என்பது சென்ற காலத்தின் அடிப்படையிலிருந்து மாத்திரமல்லாமல், எதிர்காலத்தின் அடிப்படியிலும் தானாக மாறி வளர்ந்து வரும். Evolutiontses என்று கருதுகிறவர்களின் நோக்கத்தில் அல்லாமல், தர்க்கவியல்படி ஒரே நாளில் சாதித்து விடுகிற சரித்திர வளர்ச்சிகளின் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு கணத்திலும் தவீர்க்க முடியாத தர்க்கவியல் தத்துவங்களை பாட்டாளி வர்க்கத்தின் போர்த்தந்திரத்தில் கணக்கிடப்பட்டிருக்க வேண்டும். ஒரு பக்கத்தில் அரசியல் தேக்கங்கள் அமைதியான வளர்ச்சி காலத்தை வர்க்க உணர்வை வளர்க்கப் பயன்படுத்திக் கொள்வதும், மறுபக்கத்தில் பாட்டாளி வர்க்கம் தன் இயக்கத்தின் இறுதி லட்சியத்தை நோக்கிப் பெரிய கடமைகளைச் செயலாக்கி நிறைவேற்றத் தகுதியைப் பெறச் செய்வதும் கவனிக்கப்பட வேண்டும். 
தொழிலாளர் இயக்கத்தின் பொதுப்படையான போக்கும் அதன் பொருளாதாரப் போராட்டத்தின் போர்த் தந்திரத்திற்கும் இடையில் உள்ள தொடர்பில் முதலாளித்துவத்தின் தந்திரத்தையும், மார்க்ஸீம், ஏஞ்கெல்சும் பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்தைப்பற்றி தொழில் வளமானது எப்படித் தொழிலாளர்களை விலைக்கு வாங்கும் முயற்சியை ஏற்படுத்துகின்றது என்பதையும், தொழிலாளர்களின் போராட்டத்தை நிறுத்த அவர்களின் வர்க்க உணர்வை கெடுத்து முதலாளித்துவமாக்கி மற்ற நாடுகளை விட அதிகம் வளர்ச்சியடைந்துள்ள பிரிட்டிஷ் முதலாளித்துவம் முதலாளித்துவச் சீமான்களும், முதலாளித்துவப் பாட்டாளிகளும் பக்கம் பக்கமாக முதலாளித்துவக் கட்டுக் கோப்புக்குள் இருக்கும்படியாகச் செய்ய முயலப்படுகின்றதென்பதும், பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிக் குணம் எப்படி மங்கி வருகிறது. 
பிரிட்டிஷ் தொழிலாளர்கள் முதலாளித்துச் சீர்குலைவிலிருந்து விழிப்படைய எப்படி நெடுங்காலம் செல்ல வேண்டியிருக்கின்றது. பிரிட்டிஷ் முற்போக்கு முதலாளிகளுக்கும் இடைத்தட்டு மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகபோகத்வம் நிலை இருக்கும் வரை பிரிட்டிஷ் தொழிலாளி ஏன் விழிப்படைய முடியாது என்பதையும் வர்கக்ப் போராட்டத்தில் முதலாளித்துவ தலையீடு பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். 
இப்படியாக மார்க்ஸ் தன் தத்துவ ஆராய்ச்சிகளோடு தன் வாழ்நாள் முழுவதும் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் போர்த் தந்திரங்களை உன்னிப்பாக கவனித்து வந்தார். தன்னுடைய சமூகக் கணிப்புகளைக் குறித்து ஏஞ்கெல்சோடு கடிதம் மூலமாக விவாதித்தும் இருக்கின்றார். அக்கடிதங்கள் இன்னும் தொகுக்கப்படாமல் இருக்கின்றது. 
தமிழச்சி
19/12/2008