08152022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

வெகுளிதனமான வஞ்சகமற்ற நேர்மையான கலைஞனின் கலைப்பண்புக்கு மரியாதை செய்வோம்!

சமூகத்தின் எற்றத்தாழ்வன வாழ்வுகளுக்கிடையில் பல்வேறு கலைஞர்கள் தோன்றிமறைகின்றனர். கலைஞன் இவைகளில் பிரதிபலிப்பாகின்றான். சமுதாயத்தின் ஊக்கிரமான போராட்டங்களிலும்,

 வாழ்வு அனுபவங்களிலும் இருந்து அம்மக்களின் யதார்த்துடன் ஓன்றி ஒன்றுபடும்போது அவன்  மக்களால் நேசிக்கப்டுகின்றனர்.

 

தமிழ்சமுகம் இன்று இருக்கும் சூனியமான குறுகிய எல்லைகுள், ஒரு மனிதன் நேர்மையாக வாழ்வதே மகத்தான பண்பாக அடையாளம் காணும் அளவுக்கு, கலையுலகம் உள்ள நிலையில் கிரகரிதங்கராஜாவின் அறிமுகம் அண்மைக்காலமாக எனக்கு கிடைத்து.

 

அதிகமாக பழகவிட்டாலும், அதிகமாக தெரியவிட்டாலும், அவரின் பல்வேறு நடவடிக்கைகளில் உடன்பாடு அற்ற போதும், அவரின் அரசியல் கோட்பாட்டில் உடன்பாடு அற்ற நிலையிலும் ஒரு கலையானாக நேர்மையாக  வஞ்சகமற்ற வெகுளித்தனத்துடன் அதற்காக வாழ்ந்தான் என்பதே அவனின் தீடிர் இறப்பு அதிர்ச்சியை கொடுத்து. கலகலப்பாக தான்நினைத்தை முன்நின்று செய்வதில் முன்னோடியாக கண்டேன். எல்லா கலைஞர்களையும் வாழும் இடத்தில், வாழும் காலத்துக்கும், இருக்கும் அந்தஸ்துக்கு அப்பால் இலக்கிய உலகம் கண்டு கொள்ள மறுக்கும் போது, இவன் அதை தாண்டி அவர்களை நிணைவுறுத்தி பதிவாக்க முனைவதைக் கண்டேன்.

 

மக்கள் செயல்லற்றவர்களாக கலைஞனை இனம் கண்டு கொள்ளாத இன்றைய வராலாற்றில், இவன் தனிமனித எல்லைக்குள் இதை சாதிக்க கணவு கண்டான். பரிசில்கள் பல கொடுத்தான். பழைய புதிய கலைஞர்களை பதிவாக்க பலவடிவில் முனைந்தான். ஆணால் அவை தனிமனித எல்லைக்குள் கேலிசெய்யப்ட்டன. ஆம் உண்மை, இவை அர்த்தமற்றதாக இருந்த போதும் இவனின் கலைஞன்பாலான மதிப்புடையநோக்கு எல்லாவற்றையும்விட மிகஉயர்ந்த மனிதப்பண்புகளால் ஆனவை.

 

கலைஞன் மக்களிடையே மக்களால் வாழவைக்கப்ட வேண்டியவன் என்பதை புரிந்திருந்தால் இவனின் நோக்கம் வேறுபட்டதாக இருந்திருக்கும். அவை மக்களின் யதார்த்த வாழ்வு மீது தனது கலையுணர்வுகளை ஆழப்பதித்தாயிருந்திருக்கும். ஆணால் அதை அவன் செய்திடவிட்டாலும் கலை மீதான வெகுளித்தனமான வஞ்சகமற்ற பார்வையுடன் நேர்மையாக கடுமையாக உழைத்தான். சமுதாயத்தில் இயல்பாக கிராமங்களில் உருவாகும் கலைஞர்கள் எந்தளவுக்கு கலைகள் மீது அப்பாவியாகவும் நேர்மையாக இருப்பார்களோ அதை என்றும் கைவிட்டதில்லை. அதையே தனது வாழ்வாக கலஞனுக்கே உரிய இயல்பான கலகலப்பான வாழ்ககையை வாழ்ந்தான்.   சமூகம்பற்றி பேசுவதாக காட்டுபவர்களை விட ஆயிரம் மடங்கு  அவர்களைவிட மேலான மனிதனை இழந்துள்ளோம்;. அண்மையில் இவனுக்கு எதிராக ஓட்டப்பட்ட துண்டு காகிதங்கள் இவனின் நேர்மையை விமர்சிக்க முடியாத நேர்மையற்றவர்களின் இழிவான இலக்கிய கழிசடை வக்கிரம் என்பதையே அது காட்டியது.  முன்னேறி சமூகத்தை படைக்க அதன் யதார்த்த வாழ்வுக்காக போராடவிட்டாலும் நேர்மையான ஒரு கலைஞனாக வாழ்ந்துவிட்ட சென்றான். குறைந்தபட்சம் இதை பேனுவதே எம்சமூகத்தின் உயர்ந்த பண்பாக இன்று எம்முன்னுள்ளது. இதை வாழ்ந்து காட்டியுள்ளான் எமக்கு. இதற்காகத்தன்னும் மதிப்பு கொடுக்க கடமைப்பட்டுள்ளோம் நாம்.

 

7.1.2000


பி.இரயாகரன் - சமர்