நேற்று வரை
நினைத்திருந்தேன்
புனிதங்கள் புதைக்கப்பட
வேண்டியவை என்று…..
எனக்கு
சொல்லப்பட்ட
புனிதமெல்லாம்
பறையனை ஒடுக்கும்
நால்வர்ணம்
சங்கரனின்
மலங்கழித்த இலை
பஞ்சைக்கு கிடைக்காத
அதிகாரம்
கேள்விகளுக்கு
பதில் சொல்லும்
துப்பாக்கியின் ரவைகள்
வறுமையின் வயிற்றை
பார்த்து எக்காளச்
சிரிப்புகள்
மூடிய ஆலையின்
முன்னால்
உண்ணாவிரதத்தில்
அமர்ந்திருந்த
தொழிலாளிகள்
“ஐந்து விரல்களும்
ஒன்றாய்
இருக்கமுடியாது”
எப்போதும்
புனிதங்களுக்காக
வக்கீல்கள்
வாதாடிக்கொண்டே
இருந்தனர்….
அதனால் தான்
நானும் நினைத்து
கொண்டிருந்தேன் புனிதங்கள்
அழிக்கப்படவேண்டியவை என்று….
பாசிசத்தை புனிதத்தால்
பாயாசமாக்கி
தந்தன பத்திரிக்கைகள்
அதிகாரத்தை
ஆப்பம் என்றனர்
செய்தியாளர்கள்
ஒவ்வொரு முறையிலும்
என் கோபத்துக்கு
பதிலளித்தார்கள்
அது தான் விதி
அது புனிதம் என்று…..
அதனால் தான்
நானும் நினைத்து
கொண்டிருந்தேன் புனிதங்கள்
மட்டுமல்ல புனிதர்களும்
ஒடுக்கப்படவேண்டியவர்கள் என்று….
ஈராக்கிய
எண்ணை வயல்கள்
பற்றி எரிய
அம்மண்ணெங்கும்
ரத்தத்தால்
சிவந்திருக்க
அமெரிக்க நாய்களால்
அம்மணமாய்
வைக்கப்பட்ட
கைதிகள்
சிதைக்கப்பட்ட
தாய்மார்கள்
அவன்
பெருமையாய்
சொன்னான்
” அப்படி செய்திருக்க
மாட்டார்கள்
நான் அறிந்த அமெரிக்கர்கள்
புனிதமானவர்கள்”….
ஒரு
புனிதர்
புனிதத்தால்
அந்த
புனிதக்காட்சியை
செய்தார்….
இறுதியில்
நானும் ஒத்துக்
கொண்டேன்
புனிதம் இருப்பதாக
ஆம் தன்
புனித செருப்பால்
“அத்துமீறி
நுழைந்த நாயே”
என்ற புனித
வார்த்தையால்
அந்தப் புனிதர்
அந்தப்பாவியை
செருப்பாலடித்தார்
அவனோதான்
குனிந்து தன்
நாட்டுகொடிக்கு
செருப்படி
விழ வைத்தான்
” தம்மை
இப்படியெல்லாம்
மிரட்ட முடியாது,
அவரினெண்ணம்
புரியவில்லை”
என்றான்தன் முகத்தின்
பயந்து போன
வடுக்களோடு…
பாவிகளின்
பாவங்கள்
அந்த புனிதச்
செருப்படியால்
மட்டும் தீராது.
செருப்பின் புனிதம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode