10042023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

பூணூலில் மலரும் ஈழம்

இந்து தேசியத்தின் புதிய அடியாட்படையாக பரிணமிக்கும் புலிகள் தமிழீழ மக்களின்  போராட்டத்தின் ஆதரவிற்காக  இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.திரு சிவலிங்கம் அவர்கள் தனது பயணத்தின் முத்தாய்பாக சிறீ சிறீ பிரம்ம சிறீ ஜெயேந்திர சங்கராச்சார்ய சுவாமிகளை சந்தித்து ஈழத்தின் இந்து மக்களுக்காக   அருளாசி கோரினார்.சங்கரலாயாத்திற்கு 

 வெளியே வந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த எம்.பி”ஈழத்தில் இது வரை 1800 இந்து கோஇல்கள் இடிக்கப்பட்டு இருப்பதாகவும் அங்கே பாதிக்கப்படுபவர் எல்லாம் இந்துக்கள் என்பதால் அல்கில உலக இந்துக்களின் தலைவராகிய சுவாமிகள் ஈழப்பிரச்சினையில் தலையிட வலியுறுத்த வேண்டும் ,மேலும் அடுத்த வாரம் சுவாமிகள் டெல்லி செல்ல இருப்பதாலும் அஙு அத்வானியை சந்திது ஈழ மக்கள் சார்பாக பேசுவார் “என வும் நம்பிக்கை தெரிவித்தார்.

 

இவாரம் செவ்வாயன்று சேலத்தில் நடந்த ஈழத்தமிழர் ஆதரவு மானாட்டில் யார் கூப்பிடாலும் கூப்பிடாவிட்டாலும் போகும் ” நெடு” மாறனோடு சிவலிங்கம் கந்து கொண்டு “ஈழத்திலே இந்து மக்கள் கொல்லப்படுகின்றனர்  இந்துக்களின் நாடான இந்தியா தான் உதவ வேண்டும்.ஈழப் பிரச்சினையில் இந்தியா தலையிடகூடாது என்பதற்காகத்தான் மும்பையில் குண்டு வெடிப்பை பாக். திட்டமிட்டு நடத்தியது. சீனா பாக் போன்ற நாடுகள் இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்கின்றன,இது இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாக முடியும்.

 

கடந்த வாரம் நிருபர்களை சந்eezhamiipsdதித்த மருத்துவர் ராமதாசு ” ஈழத்திலே இந்து மக்கள்  செத்து கொண்டிருக்கின்றார்கள் இந்துக்களின் நாடாகிய இந்தியாதான் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.இதுவே ஈழத்தில் கிறித்துவர்கள் அதிகமெனில் அமெரிக்கா போர் தொடுத்திருக்கும்.”

 

மேற்கண்ட சம்பவங்களை பாதிக்கப்பட்டவர்களின்  அந்த மக்களின் சார்பாக பேசப்படும் பேச்சாக மட்டும் எடுத்துக்கொள்ளமுடியுமா?
ஈழத்திலிருப்பவர்கள் எல்லாம் நமது தொப்புள் கொடி உறவுகள் அவர்களை அடித்தால் உனக்கு வலிக்கவில்லையா என்று முழங்கிய நெடுக்கள்,ராமதாசுக்கள்,பினாமிகள் த்ற்போது ஈழவிடுதலைக்கு புதிய பாதையையும் நமக்கு காட்டி அவர்களும் ப்திய இனமாக பரிணமித்திருக்கின்றார்கள்.

அதன் படி ஈழ விடுதலை முன்னெப்போதை காட்டிலும் இப்போது மிக மிக பிரகாசமாய் மிளிர்ந்து கொண்டிருக்கின்றது.அதற்கு பரந்து மக்களின் போராட்டமோ தார்மீக ஆதரவோ  தேவைஇல்லை,அந்த ஊத்தைவாயனின் அருளாசிமட்டும் போதும்.அவனின் ஊதக்காத்து பட்டால் ஈழம் மோட்சம் பெறும்,அக்கணமே த.தே.தலைவர் உலகின் ஒரே இந்து நாட்டின் மன்னராக பதவியேற்கவும் ஆத்மார்த்த குருவாக சுவாமிகளும் பங்கேற்கவும் வாய்ப்பிருக்கின்றது. அதற்கு மண்டியிடத்தான் சிவலிங்கம் வந்திருக்கின்றார்.

 

உலகின் ஒரே இந்து நாடாக இருந்த நேபாளம் மக்கட் புரட்சியினால் வீழ்த்தப்பட்டு ஞானேனேந்திரனோ சிறீ ராம¨ன்ப்போல் சகல வசதிகளோடு வனவாசத்திலிருக்கின்றார்.ஒரே இந்து நாடு என மார்த்தட்டிய ஆர்.எஸ்.எஸ்.அம்பிகள்  மீண்டுமொருஇந்து தேசத்திற்கா நாக்கை தொங்கபோட்டிருக்கின்றார்கல்.அவர்களுக்கு பிரஷ்ஷாக கிடைத்த எலும்பூ துண்டு தான் ஈழம்.

 

ஈழத்தமிழருக்காக 1980 களின் பிற்பகுதிகளின் நடந்த போராட்டங்கள் மிக எழுச்சியானவை.மக்கள் தன் சொந்தங்கள் செத்துக்கொண்டிருப்பதை கண்டு தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்தனர்.அமைதிப்படை ஈழத்தில் தமிழர்களை கொன்று பெண்களை கொடுமைப்படுதிய போது இந்திய அரசே தமிழகத்திற்கு எதிராய் அமைந்தது.

 

ஆனால் ராஜீவ் சாவுக்குப்பின் ஈழத்தமிழர்களை பற்றி பேசுவதே ராஜ துரோகமாக சித்தரிக்கப்பட்டது.யின்று வரை ஈன நிலை தொடர்கின்றது.இன்னிலைக்கு முக்கிய காரணம் காங்கிரசு,பிஜேபி,ஆர்.எஸ்.எஸ்,மற்றும் பார்ப்பன ஊடகங்கள்.ஈழ விடுதலைப்போரட்டமானது முன்பு இந்தியமேலாதிக்கத்திற்கு தேவயை இருந்தது,தற்போது அதற்கு எதிராய் இருக்கின்றது.ஒவ்வொரு முறை சிங்களப்படை வெற்றிபெறும் போது த்ங்களின் வெற்றியாக வும்,புலிகளின் வெற்றியை பயங்கரவாததின் வெற்றியாகவும் சித்தரித்தன..ஈழ அகதிகள் புலிகளாகவும்,திருடர்காளாகவும் எழுதிவருகின்றன.இப்படி ஈழத்தமிழரின் வாழ்வுரிமையை பறித்த வர்களிடமே மண்டிபோட அனுப்பியிருக்கின்றார் பிரபாகரன்.


“ஈழத்தமிழரின் கதறல் கள் உங்களுக்கு கேட்கவில்லையா” என்ற அந்த குரல் இஙு பலரையும் அசைத்துப்போட்டுக்கொண்டிருக்கின்றது.எந்த அமைப்பின் சார்பாகஈழப்பிரச்சினை போராட்டம் நடந்தாலும்  மக்கள் தங்கலால் இயன்ற அனைத்தையும் கொடுத்து உதவுகின்றனர்.அவர்களுக்கு இக்கணம் வரை தெரியாது பாதிக்கப்படுபவர் இந்துக்கள் என்று.தமிழனாய் மட்டும் பார்த்தார்கள் மனிதனாய் மட்டும்பார்த்தார்கள். இப்போது ஒரு குரல் புதியதாய் ஒலிக்கின்றது “அவர்கள் தமிழர்கள் அல்ல இந்துக்கள்”

 

தமிழ்த்தேசியர்கள் இப்போதாவது அதிர்ச்சியடைவார்களா என்பது சந்தேகமே?ஈழத்தில் நடக்கும் போரானது இந்திய அரசால் நடத்த்ப்படுகின்றது,இலங்கையை கூறு போடுவதற்காக,தரகர்களின் தேவைக்காக,தனது மேலாதிக்கத்திற்காக இப்போது அமைதி தேவைப்படுகின்றது.அதனால் தான் சிங்களன் மக்களின் தலையின் குண்டுபோட்டு அமைதிக்கு  தள்ளுகின்றான்.தமிழகத்தில் பல அமைப்புகளும் இலங்கைக்கு ஆயுத உதவி செய்யாதே என்ற குரல்கள் ஒலிக்கின்றன.அதனிடமே தலையீடு செய்,தலையீடு செய் என ஒப்பாரி வஐத்தால் என்ன அர்த்தம் மீண்டுமொரு அமைதிப்படையை எதிர்பார்க்கின்றீகளா?”சீன,பாக் சிங்களனுக்கு உதவுவதால் இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் ,நாங்கள் நம்பகமானவர்கள்”ஈழத்தமிழனுக்காக இந்தத்தமிழர்களால் கொடுக்க முடிந்ததை விட இந்து பாசிஸ்டுகளாலு,அரசாலும் அதிகம் தர முடியும்.இந்திய அரசி ஒட்டுறுப்பாக சில ஆண்டுகள் அனுபவித்த புலிகள் மீடும் சுகத்திற்காக ஏங்குகின்றனர்.இழந்த சொர்க்கத்தினை மீட்க ஈழதமிழன் த்யாராய் இருக்கும் போது இவர்களுக்கென்ன கவலை.


பிரபாகரனோ இப்போதும் சொல்கிறார்”இந்தியா எங்கள் தந்தை நாடு உங்கள் இறையாண்மைக்கு எப்போதாவது ஊறு விளைவித்து இருக்கின்றோமா? உதவுங்கள்”

 

நாம் இன்னிகழ்ச்சிக்காக அதிரத்தேவையில்லை பிராந்திய மேலாதிக்கத்துக்காக இந்திய அரசால் வளர்த்துவிடப்பட்ட புலிகள் எதையும் செய்யத்துணிந்தவர்களே.சிங்கள இனவெறிக்கு ஈடாக உழைக்கு சிங்கள மக்கலை கொல்வது,மாற்று அமைப்பினரை அழிப்பது மூலம் மட்டுமே தமிழ் தேசியத்தின் மாபெரும் தலைமையாக புலிகளும் பிரபாகரனும் விளங்குகின்றனர்.அதற்கு மாபெரும் உதாரனம் யாழ் மாணவர் போராட்டம்.ராஜிணி உள்ளிட்ட சனனாயக சக்திகள் கூட இல்லாமல் ஆக்கப்பட்டனர்.மக்கலை கசக்கி பிழிந்து துப்பாக்கி முனையில் தான் தந்து தமிழ் தேசியத்தை  நிருவினர்.தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என் உருமுவோர்  ஒர்ன்றை தெரிந்து கொல்லட்டும் .கடந்த 2002 பேச்சு வார்த்தையின் போதே தாயக கோரிக்கை கைவிட்ட் அம்மணமாய் நின்றது புலிகள்.

 

“ஒரு நாட்டின் வர்க்கப்போராட்டமானது உலகத்தின் மற்ற நாடுகளின் வர்க்கப்போராட்டத்தோடு தொடர்புடையதே”அதே போல ஈழத்தில்  நடப்பது இனப்போராட்டமாவது இருக்கின்றதா? அவ்ர்கள் இனப்போராளிகள் எனில் அசாம் ,காசுமீர்,இனப்போராட்டதிற்கு புலிகள் ஆதரவு அளிக்கின்றார்களா?ஏன் தமிழ்த்தேசிய போராட்டத்தையாவது ஆதரிக்கின்றார்களா?இப்படி வர்க்கப்போராட்டத்திற்கோ இனப்போராட்டதிற்கோ எந்த கூறுகலையும் பெறாத புலிகள் எப்படி இன விடுதலை போராளிகளாவார்கல்.இப்போது ஏன்  என்ன வேண்டும் உங்களுக்கு? இலங்கையில் ஈழத்தை இந்து ராட்டிரமாக்குவதையா?தாழ்த்த்ப்பட்ட தமிழர்கள் தோலுரித்து கொல்லப்படுவதையா?புலிகள் தெளிவாய் சொல்லிவிட்டார்கள் இது இனப்போராட்டம் அல்ல.மதக்கலவரம்.இந்து தேசியத்தின் நாக்குகள்மீண்டும் தயாராகி விட்டன உழைக்கும் மக்களின் குருதியை  சுவைப்பதற்கு.

 

பால்தாக்கரே சொல்வார்”பிராபகனை காஷ்மீருக்கு அனுப்பினால் பாக்,காஷ்ம்ர் போராளிகலை ஒழிப்பார்.”.இது தான் பிரபாகனின் ஆசையும் கூட.இந்து,இந்திய ஆளும் வர்க்கத்தின் செல்லப்பிள்ளை ஸ்தானத்திற்காக மீண்டும் களத்திலிறங்கிவிட்டார். இழந்த சொர்க்கத்தை மீட்டெடுக்க தமிழர்க¨ள் இந்துக்களாகவும் தன்னை இந்து தேசிய தளபதியாகவும் பரிணமித்துக்கொண்டார்.


ஒரு விடுதலை போராட்டம் எப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்பதனை புலிகளிடமிருந்து நாம் படிப்பினையை பெற வேண்டும்.


அவர்களின் ஆதரவாளர்கள் இப்பொதும் தொடரலாம்”புலிகள் தானே இப்போது களத்தி நிற்கின்றார்கள்”


செத்துகொண்டிருக்கும் தமிழர்கள் இனி எரியூட்டப்படுவார்கள் இந்துக்களாக.

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்