Language Selection

சமர் - 8 : 1993
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சமருக்கு மறுப்பு என மனிதம் 21 இல் ஆசிரியர் குழு ஒரு விமர்சனத்தை முன் வைத்துள்ளனர். மனிதம் 18 இல் ஆசிரியர் குழு வைத்த விமர்சனத்துக்கான எமது பதில் விமர்சனத்தில் நாம் வைத்த சில பிரச்சனைகளை விமர்சிக்காமலேயே நழுவியுள்ளனர். அவைகளை ஒட்டியும், மார்க்சியத்தை பாதுகாத்து வளர்த்து எடுக்கும் நோக்கில் மீண்டும் நாம் மனிதத்தின் விமர்சனத்தை விமர்சிக்கின்றோம். மற்றும் மனிதம் 20 இல் சிவகுமாரன் எழுதிய கட்டுரையை ஒட்டியே எமது விமர்சனம் ஒன்றை மனிதத்தில் பிரசுப்பதற்காக மனிதம் 21 வெளிவரும் முன்னே அனுப்பியுள்ளோம்.

 

திரிபுவாதம் முதலாளித்துவ மீட்சி சமூக ஏகாதிபத்தியம் போன்ற பதப் பிரயோகம் 20 வருடங்களுக்கு முன் ஒரு வித தார்மீக கலகத்தைத் தான் கொண்டிருந்தது. ஆனால் இன்றைய சர்வதேச சூழல் இப் பதப் பிரயோகங்கள் ஒரு கேலிக்குரியதாகவே தோன்றுகின்றது. என மனிதம் ஆசிரியர் குழு (கரிகாலன் அல்ல) கூறுகின்றனர். இதில் கேலிக்குரியதென கூறி சமரை கேலி செய்துள்ளனர். நீங்கள் எம் மீதும் மார்க்சிசத்தின் மீதும் தவறான எநத விமர்சனத்தையும் முன்வைத்தாலும் அதை கருத்துப்பலம் மூலம் எதிர்கொள்ளும் நம்பிக்கையுடையவர்கள.; நீங்கள் குறிப்பிடாமல் விட்டுவிட்ட சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், பச்சோந்தித்தனம், ஓடுகாலித்தனம், ஏகாதிபத்தியம், நிலபிரபுத்துவம் என எல்லாக் கருத்துக்களும் வாக்க சார்புடையது. மார்க்சியத்தின் கருத்துக்களுக்கு அர்த்தமுடைய இவைகள் கூட மனிதத்துக்கு கேலிக்குரியவையே. திரிபுவாதம், முதலாளித்துவ மீட்சி, ஏகாதிபத்தியம் போன்ற சொற்பதங்கள் கேலி செய்யப்படுவது உண்மையே. யாரால் என்பதே இங்கு பிரச்சனை. முதலாளித்துவ வாதிகள் ஏகாதிபத்தியவாதிகள் திரிபுவாதிகள், பிழைப்புவாதிகள்..... போன்றோரே மார்க்சிசத்தை கேலி செய்கின்றனர். இதில் மனிதம் தனது ஊசலாட்டத்தை கைவிட்டு இவர்களுடன் இணைந்துள்ளனர். திரிபுவாதம் சோசலிசத்தின் பின்னடைவுடன் முன்வைக்கப்பட்டதாக உண்மைக்கு மாறாக மனிதம் ஆசிரியர் குழு முன் வைத்துள்ளனர். திரிபுவாதம் என்ற பதம் மார்க்கிசம், சமூக விஞ்ஞானமாக உருவான நாள் முதல் மார்க்சிசத்தை சமூகவிஞ்ஞானத்துக்கு முரணாக திரித்தபோது பயன்படுத்திய சொற்பதங்களே. இவைகள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ... என அனைத்து மார்க்சிஸ்ட்டுக்களும் பயன்படுத்தியதே. இன்று மார்க்சிசத்தை திரிப்பது அற்று விட்டது(எனக்கேலி செய்தனர்) எனக் கூறியுள்ளனர். இது இருபது வருடங்களுக்கு முன் நடந்தது என்றும் கூறியுள்ளனர். சமூகம் ஏதோ(?) வகையாக மாறித் திரிப்பது அற்றுவிட்டது என வாதிட்டு திரிபை பாதுகாக்க முயன்றுள்ளனர். உதாரணமாக, இன்று எம் மண்ணில் நடக்கும் ஒரு சம்பவம் ஊதிப்பெருக்கி திரிபுபடுத்தி வருவதில்லை என்று வாதாடுகின்றனர். இதே மனிதத்தில் வெளியாகிய கேள்ளிக்குறியான என்ற கதையில் ஒரு பெண் பற்றி, முற்போக்கு பற்றி கதைப்படி ஒருவர் செய்த அவதூற்றை சந்தப்பவாதம், பச்சோந்தி என இனம் காட்டுகின்றார் தமயந்தி. அம் முற்போக்குவாதியின் செயற்பாட்டைக் குறித்தே அவர் பெண் பற்றி திரித்து கூறியது என்பது திரிபுவாதமே. இவைகள் எல்லாம் 20 வருடங்கள் முந்தைய நிலையில் மட்டுமல்ல இன்றுமுள்ளது. இவைகளையெல்லாம் கேலிக்குரியதென சொல்லி திரிபை பாதுகாக்க முயன்றுள்ளனர். இதில் சோவியத்தில் நடந்ததை பின்னடைவு என்று வாதிட்டுள்ளனர். இவர்களின் பின்னடைவு என்ற வாதத்தில் ஏதோ சோசலிச அமைப்புக்கள் ஏதோ தத்துவக் குறைபாட்டால் தற்காலிகமாக பின்னடைவு ஏற்பட்டதாக ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளனர். இப் பின்னடைவை நிவர்த்திசெய்வதனூடாக (இவர்கள்; குறிப்பிட்ட நபர்களின் தத்துவத்தை பார்ப்பதனுடாக ) மீண்டும் சோவியத்தில் இருந்த திரிபுவாதகட்சிக் கூடாக சோசலிசத்தை நிறுவ முடியுமென வாதிட்டுள்ளனர். இதிலிருந்தே முதலாளித்துவ மீட்சியை கேலி செய்துள்ளனர். குருசேவ் முதல் ஜெல்சின் வரை சோவியத்தில் முதலாளித்துவ மீட்சியை படிப்படியாக செய்து வருவதை கேலிக்குரியதென சொல்லி, இதை பின்னடைவு என கூறி தமது திணிப்பை எவ்வாதாரமும் இன்றி திணித்துள்ளனர். ஒரு கட்சி, ஒரு நபர் கம்யூனிஸ்ச கோட்பாட்டை கைவிட்டு திரிபை, முதலாளித்துவ பாதையை முன்னெடுக்க முடியும். இதை மனிதம் மறுப்பதனூடாக இயங்கியலையும், சமூகத்திலுள்ள முரண்பாட்டையும் மறுக்கின்றனர். இதை இல்லையென கேலிக்குரியது என்ற விடயத்துக்கு ஊடாக மனிதம் மறுக்கமுடியுமா? இலங்கை கம்யூனிசகட்சி, புதிய ஜனநாயககட்சி, இந்திய கம்யூனிஸ்ச கட்சி சீன கம்யூனிஸ்ச கட்சி ,சோவியத் கம்யூனிசகட்சி ... என நீண்ட இக் கட்சிகள் மார்க்சிசத்தை கைவிட்டு முதலாளித்துவத்தை மீட்டு வருபவர்களே. இது கேலிக்குரியதல்ல. இவைகள் பின்னடைவுகள் அல்ல. ஏதோ தத்ததுவக் குறைபாடு ஏற்பட்டே (மனிதம் குறிப்பிட்ட நபர்களின் தத்துவம் ஆராயாமல்) இவர்கள் பின்னடைவை ஏற்படுத்தியதாம். இவர்கள் முதலாளித்துவத்தை மீட்டபோது அக் காலத்தில் முன்வைத்த திட்டமே இவர்கள் மார்க்சிசத்தை திரித்ததையும் முதலாளிதுவத்தை மீட்டதையும் தெளிவுபடுத்தி விடுகின்றது. இதற்கு ஏதிராக காலத்துக்கு காலம் கம்யூனிஸ்ட்டுகள் (இவர்கள் மரபு வாதிகள் அல்ல) போராடி வருவதனால் இன்றும் மார்க்சிசம் உலகை சரியாக ஆராய்கின்றது. இந்த வகையில் இரண்டாம் அகிலத்துக்கு ஏதிராக லெனின், சோவியத்துக்கு எதிராக சீனாவும் என அனைவரும் காலத்துக்கு காலம் போராடினார்கள். அப்போது போராடியவர்களை பழைமைவாதம் மரபுவாதிகள் எனக் கூக்குரல் இட்டனா.; மனிதம் ஆசிரியர் குழு முழுமையானதல்ல எனச் சொல்லி அந் நாடுகளின் கம்யூனிஸ்ட் தலைமை, நபர்கள் செய்யும் துரோகத்தனத்தை அங்கீகரிக்கின்றனர். அவர்கள் திரிக்கமுடியாது, முதலாளித்துவத்தை மீட்க முடியாது என்ற வாதத்தினுடாக திரிபை பாதுகாத்து முதலாளித்துவத்தை காப்பாற்றுகின்றனர். இக் கட்டுரையில் ஒரே பந்தியில் தமக்கு இடையில் முரண்பட்டுள்ளனர். உலகின் அனைத்தும் புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்களும் சோசலிச நிர்மாணத்திலிருந்து விடுபட்டுள்ளன அல்லது இச் சமுதாயங்களிலும் முதாலித்துவ மீட்சி ஏற்பட்டுள்ளது என வாதிட்ட மனிதம் கீழ் முதலாளித்துவ மீட்சி போன்ற காரணங்கள் இன்றைய சூழ்நிலையில் முழுமையானதல்ல. என ஒன்றுக்கு பின் ஒன்றாக முரண்பட்டுமுள்ளனர். நடந்தது முதலாளித்துவ மீட்சியே என்பதை சோவியத்,சீனா என அனைத்திலும் நடந்தது என்பதை முரண்பட்டுக் கொண்டே தங்களை அறியாமல் சொல்கின்றனர்.

 

நடைமுறைத்தத்துவங்கள் வரை நீண்டு செல்லும் கட்சி அமைப்பு முறை, கட்சி நடைமுறை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இன்னும் சோசலிச கட்டுமானம் என அனைத்தும் ஆய்வுகள் விவாதங்கள் ஒளிவு மறைவின்றி எவ்வித அச்சமுமின்றி மேற்கொள்ள வேண்டிய சூழல் இது என கூறியுள்ளனர். உண்மையில் எந்த மார்க்சிஸ்ட்டும் மார்சிசத்தை ஏற்றுக்கொண்ட நாள் முதல் கடைப்பிடிப்பவையே. இவை இன்று மட்டும் சிறப்பாக செய்யும் சூழல் இதுவென சொல்வனுடாக மார்க்சிசத்தை கொச்சைப்படுத்தியுள்ளனர். மார்க்சிசம் உருவான நாள் முதல் இவ் விவாதம் நடைபெறுவதையும், நாட்டுக்கு நாடு வேறுபட்ட தன்மையில் போராட்ட வடிவு மாறுபாட்டுடன், இவர்கள் அடிப்படை மார்சிசத்தை கடைப்பிடிப்பதையும் மனிதம் மறுத்துள்ளனர். ஏதோ இயங்கியல் மாhக்சிசம் நிராகரித்து நிலையாக இருந்ததாகவும், வளராமல் செயலற்றுப் போய் இருந்தமையால் இன்று ஆராயவேண்டிய சூழல் எனச் சொல்லி மார்சிசத்தை கொச்சைப்படுத்தி திரிபுபடுத்தியுள்ளனர். இன்று நடைபெறும் போராட்டங்கள் ஆகிய பிலிப்பையின்ஸ், பெரு, பர்மா, எல்சல்வடோர்,....என அனைத்தும் மார்க்சியத்தை இயங்கியல் நிலையிலிருந்து விலக்கி வெறும் நிலையானதாக கருதி செயற்படுவதாக மனிதம் கேலி செய்துள்ளனர். மார்சிஸ்ட்டுக்கள் சமூகத்தை ஆய்வு செய்யும் போது மார்க்சியத்தின் இயங்கியலை நிராகரித்து மார்க்சியத்தை திரிபுபடுத்துவதை கடுமையாக அம்பலப்படுத்தி வருகின்றனர். அப்படி அம்பலப்படுத்தும் போதும் முத்திரைகுத்தல், சாவாதிகாரம்....என கூக்குரல் இடுகின்றனர். உதாரணமாக எம் மண்ணில் நடைபெறும் சம்பவங்களை விமர்சிக்கின்றோம். அதே நேரம் திரிபுபடுத்தி வரும் தகவல்களை முற்றாக அம்பலப்படுத்துகின்றோம்.

 

நூறு மலர்கள் மலரட்டும் நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்பதற்கான சூழலிது, இதில் கருத்துக்கள் கருத்துக்களால் வெல்லப்பட வேண்டும். பதிலாக முத்திரை குத்துகின்ற விமர்சனங்கள் மூலம் கருத்துக்களை தடைசெய்யக்கூடாது என மனிதம் எம் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்பதற்கான சூழலிது என்பது இன்றைய நமது நிலையை நியாயப்படுத்தவே. ஏன் எனில் கருத்துக்கள் மனித இனம் உள்ள வரை நூறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணமே இருக்கும் இங்கு சூழலிது என்பதற்கூடாக கட்சியமைப்பு உருவாக்கிய பின் நூறு கருத்துக்கு இடம் இல்லை என வாதிடும் வகையில் இவ் விவாதம் அமைந்துள்ளது. சமர் கூட மாற்றுக்கருத்தை பிரசுரிக்க தயாராக உள்ள அதே நேரம் அதன் மீது விமர்சனத்தை முன்வைக்க தயாராகவுள்ளோம். எமது விமர்சனம் முத்திரை குத்தியதாக மனிதம் முந்திய விமர்சனத்திலும் இன்றைய விமர்சனத்திலும் கூறியுள்ளனர். அப்படி முத்திரை குத்தல் எனின் ஆதாரங்கள் விளக்;கங்கள்---------ஊடாக முன்வைக்க வேண்டும். இதை எமது முந்தைய விமர்சனத்திலும் சுட்டிக் காட்டினோம். ஆனால் அது பற்றி இவ் விமர்சனத்தில் விளங்கப்படுத்தாமல் தமது முயலுக்கு மூன்று கால் தான் என வாசகர் மீது திணித்துள்ளனர். முதல் வரியில் கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டும் எனச் சொன்னவர்கள் எமது விமர்சனத்தை முத்திரை குத்தல் எனச் சொல்லி அதற்கான விளக்கத்தை அளிக்க தவறியுள்ளனர். இது கட்டுரையில் பலவிடயங்களில் கையாண்டுள்ளனர். கட்டுரையை திரித்திருந்தால் நாம் திரிபுபென எமது கட்டுரையில் விளககங்களுடாகச் சொன்னோம். இது முத்திரை குத்தல அல்ல. இது மார்க்சிசத்தை திரித்து முதலாளித்துவத்துக்கு சேவை செய்யும் ஒரு கோட்பாடே. ஒரு சம்பவத்தை, கோட்பாட்டை திரித்து கூறினால் அது திரிபு தானே. இது முத்திரை குத்தல் எனச் சொன்னால் வால் வைத்த திரிபை அங்கீகரிக்கக் கோருவதே. இதைத்தான் மனிதம் செய்கின்றனர். ஒரு முதலாளித்துவ வாதியே (ஏன் பாசிசப் புலிகளே) தமக்கெதிராகக் கருத்து வரும் போது எதிர்த்துப் போராடுகின்றனர். இந் நிலையை கரிகாலன் முன்னெடுக்கவோ, மனிதம் முன்னெடுக்கவோ கருத்துப் பலம் இன்மையே கருத்துக் கூறாமையும், முத்திரை குத்தல் (ஆதாரமின்றி) எனச் சொல்லி இதைத் தாக்குதலா? விமர்சனமா? என பிரச்சனையைத் திசை திருப்பியுள்ளனர். உங்களுககு கருத்துத்தடை இல்லைத்தானே. முடிவெடுக்க முடிந்தால் திரிபு தொடர்பாக நாம் சொன்ன திரிபு என்ற வாதத்திற்கெதிராக வாதிட்டிருக்கலாம் தானே.

 

பொதுவாக திரிபுவாதம் போன்ற பதப்பிரயோகங்களை வன்மையாக மறுக்கின்றோம் என்னும் நீங்கள் அப்படியாயின் ஏன் புலிகளை பாசிச சக்திகள் என்ற பதங்களை பயன்படுத்துகின்றீர்கள். தேசிய சக்திகள் என வாதிடும் ஒரு பகுதியினர் (முற்போக்கு பிரிவினர்) புலிகள் நடவடிக்கையை பாசிசம் என்பதை எற்கவில்லை. ஏகாதிபத்தியம் முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம்.... என்ற பதங்களையும் பயன்படுத்துவதை கூட மறுக்கின்றார்களா? அப்படி இல்லையெனில், ஏன் திரிபு போன்ற பதங்களை எதிர்க்கின்றீர்கள். இவை எல்லாம் ஒவ்வொரு கருத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காய் பயன்படுத்தப்படுபபை தான். சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், பிரமுகத்தனம், பச்சோந்தி..... போன்ற பதங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லையா? ஏற்றுக்கொள்ளவில்லையெனின் மேற்கூறிய நபர்கள் கட்சியில் இருக்க முடியாது என வாதிடும் பலம் உங்களுக்கு உண்டா? ஏற்றுக்கொள்ளின் ஏன் திரிபை மட்டும் எதிர்கின்றீர்கள். இது அடிப்படையில் திரிபை பாதுகாத்து முதலாளித்துவத்தையும், சீரழிந்த பண்பாட்டையும்(திரித்துப்பரப்புவோர்) அங்கீகரிப்பதாகும். இதை விட பழைமைவாதம், மரபுவாதி போன்ற பதங்களுக்கு உரியவர்கள் கேலிக்குரியவர்கள் ஆக தெரியும் உங்களுக்கு அவைகளை ஆதாரங்கள், விளக்கங்களுடன் வைக்கும் பண்பாடு தெரியாமல் போனது ஏன்? மனிதத்துக்கு மதிப்பீடு என்பது அவ்வளவு எளிமையானதா என்ன?

 

இக் கருத்துகளைப் (இன்றைய இச்சர்வதேசச சூழல்) புரிந்து கொள்வதற்கு முதலில் மார்க்சிய இயங்கியல் விதியினை ஓரளவேனும் விளங்கிக் கொண்டு மார்க்சியத்தையொரு மரபாகக் கருதுகின்ற குறைப்பார்வையிலிருந்து சமர் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். என்ற வேண்டுகோளுடன் சமரின்... .... நன்றி. இப்படி சொன்னவர்கள் நாம் இன்றைய சூழலுடன் இயங்கியலை கைவிட்டு மரபாக பயன்படுத்தியதை ஆதாரங்கள் விளககங்களு,டன் புரிய வைத்திருக்க வேண்டும். என்ன மனிதத்துக்கு மதிப்பீடுகள் கற்பனையில் உருவாக்கி அதை மேதாவித்தனத்துடன் கூறி வாசகர்களுக்கு திணிப்பதாக (ஆதாரங்கள இன்றி) புகுத்திவிட முயல்கின்றனர். நாம் இன்றைய சர்வதேச நிலையை இயங்கியலுக்கு அமைய எப்படிப் புரிந்து கொள்ளவில்லையென புரிய வைக்க முடியாத நிலையில் தமது திரிபை (இங்கு கரிகாலனின் வாதம் திரிபு இல்லையென மனிதம் வாதிடுகின்றது) திணிப்பதாக வெளியிட்டுள்ளனர். இன்றைய சர்வதேச நிலைமையில் மார்க்;;;;;;;;;;;;ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ..... போன்றோரின் மார்க்சிச வாதங்கள் எப்படித் தவறாகியுள்ளது என்பதை கரிகாலன், சிவகுமாரன், மனிதம் ஆசிரியர் குழு என எவரும் ஆதாரங்கள் விளக்கங்களுடன். புரியவைக்க முடியாதவாகளாக இருந்து கொண்டு, இவர்களின் வாதங்களைப் பழமைவாதம், மரபு எனக் கூறி அவைகளைக் கேலிக்குரியதாக்கியது மட்டுமின்றி ஆதாரங்களற்ற தமது கருத்தை திணிப்பாக நிகழ்த்தியுள்ளனர். மனிதத்தின் விவாதத்தில் வார்த்தைகளுக்கப்பால் எநத விளக்கங்களோ, ஆதாரங்களோ கிடையாது. எந்த ஆதாரங்களுமின்றி மார்க்சிசத்தை மரபாக பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டுபவர்கள், மார்க்சிசம் இயங்கியல் அடிப்படையில் இயங்குவதை ஏற்றுக்கொண்டவர்களல்லர். மார்க்சிசத்தை மரபாக பயன்படுத்துவதாகக் கூறும் இவர்கள் மார்க்சிசம் சரியான பக்கத்தில் வளர்வதைக் கண்டு இப்படியொரு குற்றச்சாட்டை வைத்தபடி வாக்கப்போராட்டத்துக்கு எதிராக நின்று எதிர்ப்புரட்சிக்குப் சேவை செய்கின்றனர். இன்று உலகில் எழும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மார்க்சிசம் விளக்கம் தரும் வல்லமை கொண்டுள்ளது. அதற்கு தீர்வை வைக்கும் வல்லமையும் உள்ளது. மனிதம் எம்மை மரபாக பயன்படுத்துவதாக கூறியவர்கள் எந்த ஆதாரமோ விளக்கமோ இன்றி கொச்சைத்தனமாக முன்வைத்ததுடன் கேலியும் செய்துள்ளனர். மனிதம் இவைக்கு ஆதாரம் வைக்கும் தகுதியை இழந்ததோ என்னவோ அதிலிருந்N,த சமருக்கு புரியவருகிறதோ இல்லையோ---- எனச் சொல்லி தமது திணிப்பை நிகழ்த்தி திரிபை பாதுகாக்க முயன்றுள்ளனர். மனிதம் இப் புத்தகத்தில் வேறு ஒரு கட்டுரையில பயன்படுத்தியது போல் மதிப்பீடு என்பது அவ்வளவு எளிமையானதா, என்ன? இதற்கு ஆதாரங்கள் விளக்கங்கள் தேவை. இதுவே பத்திரிகை தர்மம் மட்டுமின்றி விமர்சன பண்பும் கூட.

 

எமது அமைப்பு வடிவம் சமரை பொறுத்த வரையில் ஆச்சரியப்படக் கூடிய ஒன்றாகவோ, அல்லது சில வேளை ஜீரணிக்க முடியாததாகக் கூட இருக்கலாம். என மனிதம் தமது அமைப்பு வடிவம் பற்றி குறிபிட்டு உள்ளனர். இவ் விமர்சனங்கள வரும் முன்பே மனிதத்தில் பிரசுரிக்க என (இனனும் பிரசுரிக்கப்படவில்லை) அனுப்பிய எமது விமர்சனத்தில் மனிதம் குழு தொடர்பாக விளங்கப்படுத்தியுள்ளோம். இருந்தும் மீண்டும் ஆராய்வோம். மனிதத்தை பார்த்து ஆச்சரியப்படவோ, ஜீரணிக்க முடியாத வகையில் சமர் உலகை ஆராயும் தகுதியை இழந்து ஒற்றை வரியில் (உங்களைப் போல்) முடிவுகளை வைத்து விடுபர்கள் அல்ல. கடந்தகாலப் போராட்டத்தில் பல குழுக்கள் வீங்கி பல கருத்துடன் அரசுக்கு எதிராக மட்டும் இருந்தபோது அவர்களை விமர்சித்தோம். அரசே எமது பிரதான எதிரி என சொன்னபடி சொந்த இயக்கத்துக்குள்ளும் தமக்கிடையிலும் விமர்சனத்தை முன்வைக்க வராமையும், தமது கருத்துக்களை பகிரங்கமாகச் சொலலாமையும் (அமைப்புக்குள் சில குழுக்கள் தனிபபட்ட பலர் மாறுபட்ட பல கருத்தை கூறினர்) மனிதத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. நாம் அன்றும் இன்றும் இப் போக்கை கண்டு ஆசசரியப்படவில்லை. அது போல் ஜீரணிக்க முடியாமல் அவதியுறவுமில்லை. இவர்களின அழிவை உணாந்த போதும் நாம் இவர்களுக்கு எதிராக அணிதிரட்டுவதில் பல தவறுகளை(முரண்பாடுகளுடன்) இழைத்தோம். மனிதம் குழு சிறப்பாக புளொட்டை ஞாபகப்படுத்துகின்றது. புளொட்டுக்கும், மனிதத்துக்கும் உள்ள ஒரே வேறுபாடு ஆயுதம் ஏந்தாமையும், அதன் வெளிப்பாடாக அதன் தன்மையை(வேறுபட்ட கருத்துடையோர்)வெளிக்காட்டாமையுமே. மற்றபடி பி-எல்-ஒ-டி(புளொட்) க்குள் மேலிருந்து கீழ் வரை வேறுபட்ட பல கருத்துகள் இருந்ததே அது போல் தான் மனிதமும் உள்ளது. பி-எல்-ஒ-டி இல் பிற்போக்குகள் படிப்படியாக முன்னேறி பி-எல்-ஒ-டி-யை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது போல் மனிதத்துக்குள் திரிபுவாதம் படிப்படியக முன்னேறி வருகிறது. இந் நிலையில் தமக்கிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளனவாம். அதனால் கருத்துக் கூற முடியாதாம். ஒரு பத்திரிகை என்பது ஒரு ஆசிரியர் குழுவைக் கொண்டது. இவர்கள் இச் சமூகத்தில் நிகழும் பிரச்சனைகள் மீது கருத்துக் கூற வேண்டும். அதுவே பத்திரிகை. இல்லாத போது பலரை திருப்திப்படுத்த(பி-எல்-ஒ-டி போல்) யார் யாருக்கு உடன்பாடில்லையோ அவர்களை கைவிட்டு சமரசத்தை நாடுவதே. இது (ஈறோஸ்) மற்ற இயக்கத்துக்கும் மககளுக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டங்களில் கருத்தில்லை(முடிவில்லை) எனக் கூறியபடி சந்தர்ப்;பவாதமாக நடந்ததை மனிதம் மீண்டும் நினைவுபடுத்துகின்றனர். இங்கு மனிதம் ஈறோஸ் பி-எல்-ஒ-டி-க்கிடையில் சில சில, விடயஙகள் வேறுபட்டபோதும் சாரத்தில் அவை ஒன்றே. அன்று அரசு எதிரியெனக்கூறி தமக்கிடையில் ஜக்கியம் போல் நடித்தனர். இவை போல் மனிதம், அரசு, புலிகள் போன்ற ஒரிரு விடயத்தில் உடன்பட்டபடி மற்றய கருத்துக்களை விரும்பியபடி(பி-எல்-ஒ-டியை போல்) யாரும் எதையும் கூற முடியும் என்கின்றனர். இதிலிருந்தே மனிதம் முடியாதாம். இதை சிறப்பாக வேறு ஒரு உதாரணம் மூலம் பார்ப்போம். ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் சமூகவிடுதலைக்கு எனப் போராடும்போது, மனைவி, குடும்பம் தடுப்பார்களாயின் குடும்பம் ஒத்த முடிவுக்கு வரும் வரை போராடக்கூடாதா? (மனிதம் கருத்து சொல்லக்கூடாதா?) இதே போல் ஒரு பெண் பெண்விடுதலைக்குப் போராட முற்படும்போது கணவன், குடும்பம் தடுப்பார்களாயின் அப் பெண் போராடக்கூடாதா? இதில் மனிதம் நிலை போராடக்கூடாது என்பதே. ஏன் மனிதம் கூறிப்பிட்ட விடயங்களில் ஒரு பொதுமுடிவுக்கு (கருத்து முரண்பாடற்ற) வந்துவிட முடியுமா? அப்படி வந்துவிட முடியுமாயின் மாற்றுக்கருத்தை மறுக்கும் வாதமே. நீங்கள் உடன்பாட்டுக்கு வந்த ஒரு விடயத்தில் முரண்பாடு ஏற்படின் அதை மனிதம் சார்பாக கருத்துக் கூற மாட்டீர்கள் தானே. இவையெல்லாம் ஒரு பக்கத்தில் கருத்து மறுப்பாக பரிணமிக்கின்றது. நீங்கள் முடிவுக்கு வராத விடயங்களில் ஒரு பொது முடிவை அடைந்தபின் ஒரு போராட்டத்துக்கு தலைமை தாங்குகின்றீர்கள் என வைப்போம். அப்போது புதிய பல பிரச்சனைகள் உருவாகியபடி (இதுவே இயங்கியல்) இருக்கும். அப்போது உடனடித் தீர்வுக்கு வரும்போது எமக்கு முரண்பாடு எனக்கூறி (உங்கள் வாதப்படி) வழிகாட்டத் தவறின் போராட்ட சக்திகள் மட்டுமின்றி மக்களும் அழிக்கப்படுவர். இவை தான் மரபு வாதம். பிரச்சனையை நிலையானதாக கருதுவதும் புதிய பிரச்சனைகள் உருவாகாது எனப் பார்ப்பதும் இயங்கியலை நிராகரிப்பதாகும். இன்று உள்ள பிரச்சனை நாளை மறந்து போகலாம். பிரச்சனை உள்ள நேரம் கருத்துக்கூற மறுப்பது இயங்கியலை ஏற்காமையே. மனிதர்கள் உள்ளவரை பிரச்சனைகள் தோன்றும். முரண்பாடுகள் உருவாகும். அவைகளுக்கு அக் காலத்தில் கருத்தும் தீர்வும் சொல்லாமல் சந்தர்ப்பவாதமாக இயங்குவது, பிரச்சனைகள் தோன்றிக் கொண்டிருக்கும் வரை மனிதம் இந் நிலையையே தொடரமுடியும். மாறிக்கொண்டிருக்கும் சமூகத்தில் எழும் பிரச்சனைகளுக்கு முடிவு சொல்ல முடியாத சந்தர்ப்பவாதிகள் ஒருக்காலும் போராட்டத்துக்கு தலைமை தாங்க முடியாது. . நீங்கள் குறிப்பிட்டது போல் உங்களை நாம் கட்சியாகப் பார்க்கவில்லை. உலகில் உருவாகும் எப் பிரச்சனைக்கும் வர்க்க மூலம் உண்டு. உங்கள் குழுவிற்கும் வர்க்கத்தன்மையுண்டு. அதில் எந்த வர்க்கம் வெல்லும் என்பது கருத்து சொல்லும் போது வெளிப்படும். அப்போது மனிதம் பி-எல்-ஒ-டி-போல் சிதறும். கருத்து கூறாமல் சந்தர்ப்பவாதப் போக்கை கடைப்பிடித்தால் சிலர் விரக்தியடைவார்... எனத் தொடரும். நாம் கருத்து கூறும்படி கோருவது எதிர்காலத் தலைமையை உருவாக்க அணிகளின் சேர்க்கையை ஊக்குவிக்கவே. இங்கு மாற்றுக்கருத்தை பிரசுரிக்கும் போது பெரும்பான்மை, சிறுபான்மை எனச் சொல்வதனூடாக, எல்லாக் கருத்தின் மீதும் பெரும்பான்மை தனது கருத்தைக் கூற வேண்டும். இதுவே போராட்டத்தை விரும்பும் ஒரு பத்திரிகையின் கடமை. இது உங்கள் பார்வையில் சமரின் அடம்பிடிக்கும் போக்கு ஆக மட்டுமே தெரிகின்றது.

 

ஒரு சிலர் மட்டும் சேர்ந்து பத்திரிகை விடும் போது அல்லது ஒரு குழுவின் ஒரு சிலரின் கருத்துக்கள் மட்டும் மேலாண்மை செலுத்தும் பட்சத்தில் ஒவ்வொரு கட்டுரை சார்பாகவும் கருத்தை தெரிவிக்கவேண்டும். மனிதத்தின் இவ் விவாதம் தவறானது. மனிதம் கருதுவது போல் கருத்துக்கூறுபவர்கள் ஒரு சிலர் சேர்ந்து பத்திரிகை நடத்துபவர்கள் அல்ல. ஒரு பெரியகட்சி, பல நபர்கள் கொண்ட வடிவம் கூட கருத்து கூறமுடியும். இது வரலாறு முழுக்க நீண்டுள்ளது. மற்றும் ஒரு சிலரின் கருத்து மேலாண்மை செலுத்துவது என்பது அவர்களின் கருத்தை அவ்வமைப்பு ஏற்பதினால் தான். இவை எல்லா அமைப்பு வடிவத்துக்கும் பொருந்தும். எல்லா அமைப்பு வடிவத்திலும் கருத்து மேலாண்மையிருக்கும். அதுவே பெரும்பான்மை. இதை நிராகரிப்பவர்கள் அராஜகவாதிகளாக (மார்க்சியத்தில் அராஜகம் என்ற சொல்லின் அர்த்தத்தில்) இருக்கின்றனர். மனிதம் அராஜகவாதிகளாக அமைப்பு வடிவ ஒழுங்கை நிராகரிக்கின்றனர். தமக்கு கருத்து கூறுவது பொருந்தவில்லை என வாதிடின் அவர்கள் சமரசவாதியாகவும் உள்ளனர். மனிதம் இதழில் வெளிவந்த தேசியசக்திகள் தொடர்பான நான்கு கட்டுரைகளையும் பார்ப்போம். இதில் இரு கட்டுரை திரிபை திணிப்பாக நிகழத்தியுள்ளனர். சிவசேகரத்தின் கட்டுரை பிரச்சனையிலிருந்து விலகி பாசிசம் என்ற சொற்பிரயோகத்தின் மீது விவாதிதுள்ளார். ஈழத்திலிருந்து வந்த கட்டுரைத் தலைப்பை விட்டு விலகி புதிய வேறு பிரச்சனைக்குள் சென்றுள்ளது. அவரின் ஒரு இரு வாதத்தை பார்ப்போம். (தமிழ் மார்க்சிஸ்டுக்கள் மத்தியில் தமிழீழப்போராட்டத்திற்கூடாகவே எல்லாப் பிரச்சனைகளையும் பார்க்கும் குறுகியபார்வை காணப்படுகின்றது. அதனால் தான் சிங்கள மார்க்சிஸ்ட்டுகளைப் பற்றி வெறுமனே நையான்டி பண்ணும் ... என தொடர்கிறார். இங்கு சரியான மார்க்சிஸ்ட்டுக்கள் எனக் கூறி எந்த பிழைப்புவாத மார்க்சிஸ்டுக்கு வக்காலத்து வாஙகு;கின்றார்? குறிப்பாக தமிழீழப்போராட்டத்தினூடாக மார்க்;சிசத்துக்கு அறிமுகமான எமது தமிழ் இளைஞர்கள் என திமிராக இருந்தபடி நக்கலடித்துள்ளார். இங்கு மார்க்சியத்துக்கு அவர் போன்ற பழம்பெரும் புத்திஜீவிகளே இருக்க முடியும் என கூறியுள்ளார். கடந்த 15 வருடப் போராட்டத்தில் காணாமல் போன இவர் மீண்டும் புதிய மார்க்சிஸ்ட்டுக்கள் என நக்கல் வேறு. இப்படிப் பல, அவை தனியான ஒரு பெரிய கட்டுரையாகவே அமையும். இவைகளின் கட்டுரைகள் கருத்துக்களை கருத்துக்களால் வெல்லும் தன்மையில் சமர், தூண்டில், உயிர்ப்பு கருத்துக்களை விளக்கங்கள் ஆதாரங்கள்.... உடன் ஆராயாமையை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதில் தூண்டில், சமர் இடையில் தத்தம் கருத்துக்களை விளக்கங்களுடன் ஆராய்ந்துள்ளனர். உயிர்ப்பு ஒரளவு ஆராய்ந்த போதும் மேல் எழுந்தவாரியாக அமைந்துள்ளது. இந் நிலையில் மனிதத்தில் வெளிவந்த கருத்துக்காக (ஆதாரமற்ற) மனிதம் வாதிட முற்படுவது (கருத்துமுரண்பாடு என கூறியபடி )திரிபை பாதுகாத்தபடி தமது சந்தர்ப்பவாதத்தை பேணவே.

 

ஒரு கட்டுரையில் கருத்தாடல் எனத் தலைப்பிட்டால் அதில் ஆசிரியர் குழுவிற்குப் பொறுப்பில்லையென வாதிட்டுள்ளனர். இங்கு மனிதம் பொறுப்பு ஏற்பது வழக்கு, வன்முறை, திரிபை பாதுகாத்தல்..... போன்றவைக்கு மட்டுமே. இங்கு கருத்துக்கு அல்ல. கருத்தாடல் என போட்ட சிவகுமாரனின் கட்டுரையில் கருத்தாடல் நிராகரித்ததை அங்கிகரீத்துள்ளனர். இதை மனிதத்துக்கு எழுதிய விமர்சனத்தில் (மனிதத்தில் பிரசுரிக்க) விளக்கியுள்ளோம். நாம் எல்லா வகையான கருத்தையும் பிரசுரிக்கமாட்டோம் என மனிதம் 13 ஆசிரியர் தலையங்கத்தில் கூறியவர்கள் எந்த வகையான கருத்தை பிரசுரிப்பீர்கள் என்பதற்;கான மனிதத்தின் குறைந்த பட்ச வேலைத்திட்டத்தை முன்வைக்கவில்லை. இதில் எல்லாக் கருத்தையும்; பிரசுரிக்கமாட்டோம் என்ற வாதத்தினூடாக பிரசுரிக்கும் கருத்துக்கு ஏதோ ஒரு வகையில் மனிதம் பொறுப்பேற்கின்றது. பிரச்சனையென வரும் போது எம் கருத்தில்லை, அது கரிகாலனின் கருத்து என கூறி நழுவிவிடுவதனூடாக அக் கருத்திலுள்ள திரிபை பாதுகாக்க அதைக் கருத்தில்லையெனக் கூறி வக்காளத்து வாங்கியுள்ளனர். திரிபுபென்பது ஒரு கருத்தின் வகையே. தமக்குப் பொறுப்பில்லை அது கரிகாலன் கட்டுரையென சொன்னவர்கள் இதே மனிதத்தில் சக்தி தொடர்பான ஒரு விமர்சனத்தை வைத்துள்ளனர். கருக்கலைப்புத் தொடர்பாக சக்தியில் ஒரு பெண்ணின் கருத்தை (மனிதத்தின் கரிகாலன் கட்டுரைபோல்) ஒட்டி சக்தியின் மீது (மனிதத்தின் பத்திரிகை தர்மத்தை) குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். இது எந்த (மனிதத்தின் பாணியில்) பத்திரிகை தர்மம். உண்மை ஒன்றாயிருக்க (தம்மையறியாமல் வெளியிடுவது) தமது சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த முயல்வதே சமர் மீதான மனிதத்தின் நிலை. இதே போன்றே கருக்கலைப்பு தொடர்பாக (உண்மைநிலையை தங்களையறியாமல் மனிதம்16 இல் கூறியவர்கள்) சொன்னவர்கள் இன்று அதற்கு எதிராக கருத்து கூறியுள்ளனர். இது தொடர்பாக ஒரு விவாதம் நிகழ்ந்து வரும் இன்றைய நிலையில் ஒற்றைவரியில் ஆ-கு முடிவைச் சொல்லி திணிப்பை நிகழ்த்தியுள்ளனர். மனிதத்துக்கு ஆதாரங்கள், விளக்கங்கள் தேவையில்லை. கருவை சுமப்பதுடன், உளரீதியில் அனுபவிப்பது பெண்கள் தான் என்பதால் கருக்கலைப்புச சுதந்திரம் பெண்களின் உரிமையென்பதே எமது நிலைப்பாடு. அப்படியாயின் பெண் உடல் உள சம்மந்தப்பட்ட விபச்சாரம், குழந்தைக்கு பால் கொடாமையைக் கூட மனிதம் அங்கீகரிக்கின்றனர். இதே போல் உடல், உள சம்பந்தப்பட்ட தன்னினச்சேர்க்கையை கூட மனிதம் அங்கீகரிக்கின்றனர். கருக்கலைப்பு தொடர்பாக சமர், சக்தியில் வெளிவந்த வெளிவரவுள்ள கருத்துக்களை ஒட்டி பதில் அளிக்கக் கோரும் அதேநேரம் திணிப்பை நிகழ்த்துவதை (விளக்கமற்ற) கைவிடக் கோருகிறோம்.

 

தமக்கு இருந்த பொறுப்புணர்வு காரணமாக திரிபுவாதம் என்ற முத்திரை குத்தல் பிரயோகத்தை வன்மையாக மறுக்கின்றோம் என மனிதம் முழுதாக விட்டுவிட்டு என்ற நிலையை நியாயப்படுத்தியுள்ளனர். இவை தொடர்பாகவும் நாம் மேலே விவாதித்துள்ளோம். இதில் கருத்து வேறு, விளைவு வேறான ஒன்றுடன் ஒன்று சம்மந்தம் இல்லாததாக பிரச்சனையை காட்ட முற்பட்டுள்ளன. கருத்தும் விளைவும் வேறுவேறானது அல்ல. இரணடும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததே. இரண்டும் தனித்தனியாகப் பார்ப்பது என்பது கருத்துச் சொல்ல சில மேதாவிகள் இருப்பர், நடைமுறைப்படுத்த சில அப்பாவிகள் இருப்பார், நடைமுறைப்படுத்தி பெறப்படும் வெற்றியை மேதாவிகள் கைப்பற்றுவர். இதுவே மனிதத்தின் நிலை. கருத்தின் தன்மையை அது வெளிப்படுத்திய பரிணாமத்தின் விளைவே திரிபு. இதே இடத்தில் இதே மனிதத்தில் வெளியாகிய தமயந்தியின் சிறுகதையான கேள்விக்குறிகள் என்ற கதையைப் பார்ப்போம். கதையில் தமயந்தி பயன்படுத்திய சந்தர்பவாதியோட, ஒரு பச்சோந்தியோட என்ற சொற்பிரயோகங்களை மனிதம் ஏன் வன்மையாக கண்டிக்கவில்லை. இவை கூட முத்திரை குத்தல்(உங்கள் பார்வையில்) தானே. தமயந்தி கதையாக எழுதிய விடயத்தை நாம் நேரடியாக கருத்துக்கள் மீது பயன்படுத்துகின்றோம். தமயந்தியின் கதையில் கற்பனைப்பாத்திரத்தில் உள்ளவை எமது விமர்சனத்தில் நேரடியாக அமைந்துள்ளது. இரண்டும் ஒரே விடயத்தைதான் சொல்லுகின்றது. ஒன்று கதை மற்றது நேரடி விமர்சனம். இவை ஏன் புரியாமல் போனது. இக் கதையில் ஒரு பெண் பற்றி திரித்துக் கூறியது திரிபாகவுள்ளது. நபர் சந்தர்ப்பவாதியாக, பச்சோந்தியாக நடந்தபடி ஒரு பெண் பற்றி திரித்துக்கூறும் முற்போக்கின் தன்மையை அம்பலப்படுத்துகிறார். இதில் முற்போக்கு என்பது கதையில் பயன்படுத்தியது போல் முற்போக்கு எனச் சொல்லித் திரியும் அணியில் (மனிதத்துக்குள்ளும் இருப்பர்) சந்தர்ப்பவாதமும்.... இருப்பர். அவர்களை திரிபு, சந்தர்ப்பவாதம்... எனச் சொல்வதெல்லாம் முத்திரை குத்தலாக இருப்பது இல்லை. இவைகளை ஆதாரங்கள், விளக்கங்கள் உடன் புரியவைக்கும் போது ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதை மறுக்கும் மனிதம் திரிபை பாதுகாத்து தனது சந்தர்ப்பவாத நிலையை பேணுகின்றனர்.

 

வசனத்தை பிரித்து எடுத்து கருத்தை சிதைத்துள்ளது என மீண்டும் எந்த ஆதாரத்தையும் முன்வைக்காமல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். இப்படிச் சொன்னவர்கள் மாவோவின் மேற்கோளை வசனத்தை பிரித்தெடுத்து கருத்தை சிதைத்ததை மேற்கோளை ஆராயும்போது விளக்குகின்றோம். நாம் கடந்த விமர்சனத்தில் ஆதாரத்தை முன்வைக்க கோரியும் முன்வைக்காமல் மீண்டும் இதை ஒரு குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளனர். எமது கடந்த விமர்சனத்தில் கூறினோம் அப்படி சிதைத்ததை ஆதாரமாக வைத்தால் நாம் சுயவிமர்சனம் செய்ய தயாராக உள்ளோம் என கூறியிருந்தோம். மீண்டும் இதை கூறும் நாம் ஆதாரமாக வைக்கக் கோரும் அதே நேரம் திணிப்புக்களை கைவிடக் கோருகின்றோம். அப்படி ஆதாரமாக வைக்காத வரை இது விமர்சனத்தை தடைசெய்யும் நோக்கில், திரிபை பாதுகாக்கும் நோக்கில் செய்யப்படும் திசைதிருப்பலே.

 

எதிர் நிலைக்கு செல்லல் என்பது முற்போக்கு, பிற்போக்கு என இரண்டாக பிரிய முடியும். இதில் பிற்போக்கு பகுதியில் புலிகள் இருப்பதால் எதிரணிக்குள் அடங்கி விடுகின்றனர். இங்கு நடுநிலை எனச் சொல்பவர்கள் இதில் ஏதோ ஒரு பகுதியை தெரிந்தோ, தெரியாமலோ ஆதரிப்பவர்களே. இது விமர்சனத்துக்கு (மனிதம் பார்ப்பது போல்) உரியது அல்ல. உளவியல் சம்மந்தப்பட்டது எனச் சொல்லி சமரசத்தை நிலைநிறுத்த முன்னெடுத்த வாதமே. எப் பிரச்சனையும் உளவியலுக்கு உள்ளாகிறது. அது அல்லது இது என உளவியலுக்கு உட்பட்டு முடிவுக்கு வருகிறது. வெறுப்பூட்டும் விமர்சனத்துக்கு ஊடாக எதிர் நிலைக்கு தள்ளுவதை தாம் குறிப்பிடுவதாக மனிதம் கூறிய இக் கூற்றில் எந்த வாதமும் ஒருவருக்கு பிடிக்கும் ஒருவருக்கு பிடிக்காது. வாதத்தின் கருத்தை பார்க்கும் தன்மையை இழந்த எவருக்கும். வெறுப்பூட்டுவதாகவே அமையும். அப்படியானவர்களை கருத்தைப் பார்க்கும்படியே கோரமுடியும். அவரின் நிலைக்கு கீழ் இறங்கி(மனிதம் போல்) வெறுப்பூட்டுவதாக கூறியபடி கருத்தை ஆராயாமல் செல்பவர்கள் எதிர் நிலைக்கே செல்வர். இவர்கள் இயல்பாக நீண்டகாலத்தில் பிற்போக்கைக் கடைப்பிடிப்பர். எமது விமர்சனத்தில் உள்ள திரிபை திரிபல்ல எனச் சொல்லும் மனிதம் ஆதாரங்கள், விளக்கங்கள்..... ஊடாக புரிய வைக்கமுடியாத நிலையில், இதை மரபு,வெறுப்பூட்டுவதாக சொல்லி ஒற்றை வரியில் திரிபை பாதுகாத்து அதை திணித்து விடுகின்றனர்.

 

மனிதம் மாவோவின் மேற்கோளை கருத்தைச் சிதைக்கும் வகையில் வசனத்தை பிரித்தெடுத்து, மேற்கோளை தவறான இடத்தில் பயன்படுத்தியுள்ளனர். நாம் மாவோவின் மேற்கோளை முழுமையாக தருகிறோம். இதில் கீழ் கோடிட்டது மட்டும் மனிதம் பிரசுரித்து கருத்தை சிதைத்து தவறான இடத்தில் பிரசுரித்து இருந்தனர். இதில் வசனத்தில் உள்ள மாற்றம் பற்றியது அல்ல. வசன மாற்றத்திலுள்ள விடயம் ஒன்றே.

 

......பிழைகளை அம்பலப்படுத்தி, குறைபாடுகளை விமர்சனம் செய்வதில் நமக்குள்ள நோக்கம் வைத்தியர் ஒருவர் நோய்க்குச் சிகிச்சை அளிப்பது போல, நோயாளியைக் காப்பாற்றுவதற்ன்றி அவர் இறப்பதற்குச் சிகிச்சை அளிப்பதல்ல. குடல் வால் நோயுடைய ஒருவர், அறுவை வைத்தியர் அவருடைய குடல்வாலை அகற்றியதும் காப்பாற்றப்படுகிறார். தவறுகள் இழைத்த ஒருவர் சிகிச்சைக்கு அஞ்சித் தனது நோயை மறைக்காத வரையில் அல்லது சிகிச்சை செய்ய முடியாமல் போகுமளவுக்கு தனது பிழைகளில் அழுந்தி நிற்காத வரையில், அவர் உண்மையாகவும் விசுவாசமகவும் குணப்படுத்த விரும்பி தனது தவறுகளைத் திருத்தும் வரையில் நாம் அவரை வரவேற்று அவர் நல்ல ஒரு தோழராய் மாறுவதற்காக அவருடைய நோய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

---- கட்சி நடைமுறையைச் சீர் செய்வோம்-----மாவோ-1942------

 

நீங்கள் கருத்தைச் சிதைத்து வெளியிட்ட மேற்கோள் எல்லோருக்கும் பயன்படுத்த முடியாது என்பதை மாவோ தெளிவாக கூறியுள்ளார். அதை திரித்த மனிதம் பிழையான இடத்தில் இம் மேற்கோளை பயன்படுத்தியுள்ளனர். குறைபாடுகளை, பிழைகளை ஏற்றுக் கொண்டு வருபவர் இடத்தில் மட்டும் மட்டும் இவ் வாதம் பயன்படமுடியும். தனது நிலையில் அழுந்தி நிற்காத வரையில் கையாள முடியும். தனது நோயை சொல்ல வேண்டும். விமர்சனத்துக்கு அஞ்சக்கூடாது. தனது நிலையை தெளிவான விளக்கங்கள், ஆதாரத்துடன் சொல்லவேண்டும்.

 

மாற்றுக் கருத்தை தனது ஆதாரத்துடன், விளக்கத்துடன் விமர்சிக்க வேண்டும். இதைச் செய்ய மறுக்கும் போது அம்பலப்படுத்தி அக் கருத்தை அழிக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்திய(கருத்தை சிதைத்து) அவ் விடயத்தை மட்டும் பார்ப்போம். நோயாளி யார்? இங்கு நோயாளி கிடையாது. இரண்டு வைத்தியர் மருந்து கொடுப்பது தொடர்பாக விவாதிக்கின்றனர். ஒரு மருந்து(எமது) வழமையாக கொடுத்துவருவது. அது நோயை தீர்க்கும் வல்லமை கொண்டது. உ-ம்- முன்னைய சோவியத், முன்னைய சீனா, பிலிப்பைன்ஸ், பெரு,.... இரண்டாவது வைத்தியரின் மருந்து முன்பே பலரைக் கொன்றது. ஆனால் கொல்லாது என்கிறார். (2ம் அகிலம் சோவியத்---)அவ் வைத்தியர் எமது மருந்து கொல்லும் என்கிறார். ஆனால் ஆதாரத்தை முன்வைக்க முடியவில்லை. இரண்டாவது வைத்தியரின் மருந்து எமது மருந்துடன் கலந்து இருந்தமையால் சிலர் இறந்து போகின்றனர். (உ-ம்-முன்னைய சோவியத், சீனா முதலாளித்துவ மீட்பு.....) உடனே எமது மருந்து தான் கொன்றது என மற்றய வைத்தியர் வாதாடுகிறார். 2வது வைத்தியரின் மருந்தைக் கைக்கொண்ட சிலர் இறந்து போகின்றனர். (உ-ம் திரிபை கொண்ட கட்சிகள்) இங்கு பிரச்சனை ஒரு வைத்தியருக்கு உட்பட்ட மருந்துக்கள் அல்ல. இது அல்லது அது எனத் தீர்மானிக்க. இரண்டு வேறுபட்ட வைத்தியர் இரண்டு வகையாக சிந்திக்கின்றார்கள். இதுவே பிரச்சனை. இதை பிழையான இடத்தில் பயன்படுத்தி கருத்தை சிதைத்துள்ளனர்.

 

இதில் சமருக்கு புரியுதோ இல்லையோ வாசகர்களுக்கு (சமர், மனிதம்) நிச்சயம் புரிய வரும் எனக்கூறி, தமது சமரசத்துடன் கூடிய திரிபை பாதுகாத்து திணிப்பாக புகுத்த முயன்றுள்ளனர். திரிபு இல்லையென கருத்தியல் ரீதியில் வாதிட வக்கற்று, எம்மை மரபுவாதிகள் எனச் சொல்லி கேலி செய்ததுடன் தமது வாதம்(சந்தர்ப்பவாதம்) சமருக்குப் புரியாதென கூறி வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் எனச் சொல்லி கருத்தை பின்பக்க கதவுகள் மூலம் திணிக்க முயன்றுள்ளனர்.

 

குறிப்பு இக்கட்டுரையில் நாம் குறிப்பிட்டபடி மனிதத்துக்கு அனுப்பிய கட்டுரை எமக்கு மனிதம் ஆசிரியர் குழு திருப்பியனுப்பியுள்ளனர். மனிதம் பிரசுரிக்க மறுத்த நிலையையொட்டி ஒரு கடிதத்தை இணைத்துள்ளளர். அக் கடிதம் உட்பட எமது கட்டுரை அடுத்த இதழ் 9 இல் பிரசுரிக்கப்படும்.