Language Selection

சமர் - 8 : 1993
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1. இத்தாலி

கடந்த பல மாதங்களாக புனிதக்கதைகள் மூலம் இத்தாலியில் மிகப்பெரிய அளவில் வெளிக்கொணரப்பட்ட ஊழல் நடவடிக்கை முழுநாட்டையையுமே ஆட்டம் காண வைத்துள்ளது. இந் நடவடிக்கை மூலம் அனைத்து அரசியல் கட்சிகளின் மாபெரும் தலைவர்கள் முதல் நாட்டில் பெரிய அரசு தனியார் ஸ்தாபனங்களின் தலைவர்கள் பல வியாபாரிகள் வரை லஞ்சம் ஊழல் நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்பட்டுமுள்ளனர். இதுவரை ஊழல் பேர்வழிகளின் எண்ணிக்கை 1000 ஜத் தாண்டியுள்ளது. இன்று வரை குற்றம் சாட்டப்பட்டவர்களில் மிக முக்கியமானவர் இத்தாலிய சோசலிசக் கட்சியின்(முன்னைய) தலைவர் பெத்தினேகிருக்கி ஆவார். இவர் கட்சியின் நிதியை தவறாக கையாண்டு ஊழல் செய்தார் எனவும் களவாடப்பட்ட பொருட்களை பெற்றுக்கொண்டார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது கட்சித் தலைவர் பதவியைத் துறந்துள்ளார். இதே போல் இவரது கட்சியைச் சேர்ந்த இன்றைய ஆட்சியில் நான்கு அமைச்சர்களும் புனித கரங்களின் விசாரணைக்கு உட்பட்டிருப்பதால் தமது பதவிகளை இழந்துள்ளனர். கடைசியாக பதவியை இழந்தவர் நிதி அமைச்சர் கிளனிடிமோ மாற்றெல்லியாவார். தனியார் துறையைப் பொறுத்தவரையில் பியட் கார் கொம்பனியின் சிரேஸ்ட தலைவர்கள் இருவரும் அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய ஓயில் கொம்பனியின் தலைவரான கபறியல் கலாகிற இதே கொம்பனியில் சிரேஸ்ட மூன்று அதிகாரிகள்( )என்ற எஞ்சினியரிங் கொம்பனியின் தலைவர் பிராங்கோ சியாத்தி என்போர் கடைசியாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் குறிபிடத்தக்கவர்கள். அடுத்துக் குறிப்பிடத்தக்க அரசியல் தலைவர் றிப்பப்பிளிங்கள் கட்சியின் தலைவர் ஜேர்ஜீயோ மால்பா ஆவார்.'

 

இவ்வாறு முழு அமைப்பும் ஊழல், லஞ்சத்தால் உழுத்துப் போய் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுள்ள வேளையில் சோசலிச கட்சியின் தலைவரும் தற்போதைய அரசின் பிரதமருமான அமாத்தோ( )தனது சகாக்களை காப்பாற்றும் முயற்சியில் மக்களின் விருப்பத்துக்கெதிராக செயல்பட முனைந்துள்ளதை செனட் சபை அங்கத்தவர்கள் முதல் பலரும் கடுமையாக எதிர்த்துள்ளனர். அவர் இந்த அதிகாரவர்க்க பெருச்சாளிகளைக் காப்பாற்றும் நோக்குடன் புதிய கேவலத்துக்குரிய அரசியல் ஆலோசனையை முன் மொழிந்துள்ளார். அதாவது அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் வியாபாரிகளும் தமது தவறுகளை ஏற்று பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டு லஞ்சமாகப் பெற்றுக்கொண்டதைப் போல் மூன்று பங்குபணத்தை திருப்பி கையளித்து பொதுவாழ்விலிருந்து விலகிக் கொண்டால் அவர்களுக்குரிய சிறைத்தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கப்படலாம். அத்துடன் அடுத்த யோசனை அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாகப் பெறும் கள்ளப் பணத்தை ஒரு குற்றமற்ற செயலாகக் கருதல்( )ஆகும். ஆனால் இவ்விரு யோசனைக்கும் எதிராக பரந்து பட்ட மக்களின் ஆத்திரமும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

 

இதன் வெளிப்பாடாக இவ் யோசனைகளுக்குரிய தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி லூயிஜி ஸ்கால் பனோ தனது கையெழுத்திடாமல் நிராகரித்துள்ளார். உண்மையில் தற்போதைய பிரதமர் அமாத்தோவின் இந்த யோசனைகள் குற்றவாளிகளை காப்பாற்றும் ஒரு கண் துடைப்பு நடவடிக்கையே. இந ;நடவடிக்கை பற்றிய தனது விமர்சனத்தில்( )பத்திரிகை சாதாரணத் திருடர்களை விட இந்த கள்வர்கள் ஏன் மேலானவர்களாகக் கணிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டுமென வினா எழுப்பியுள்ளது.

 

ஆனால் இது தான் முதலாளித்துவ அமைப்பின் நடைமுறை என்பது; ஒரு அப்பட்டமான உண்மை. ஏனெனில் எந்தவொரு அமைப்பும் அந்த வர்க்க சார்பானதாகவே செயற்படும்.

 

இதற்கொரு சிறந்த உதாரணம் இந்தியாவில் தமிழ்நாட்டில் மதுரையில் வெண்மணி என்ற கிராமத்தில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய ஏழைக்கூலி விவசாயிகளையும் பெண்கள், குழந்தைகள் வயோதிபர்களையும் ஒரு குடிசையினுள் (அவர்கள் பயந்து ஒளிந்திருந்து)வைத்துக்கொழுத்திய சம்பவத்தில் நிலப்பிரபுக்களும் அவர்களின் அடியாட்களும் நீதிபதியால் அவர்கள் பணக்காரர்கள் நாகரீகமானவர்கள் எனவே அவர்கள் இவ்வாறான குற்றம் செய்திருக்க மாட்டார்கள் என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர். இன்று ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது கைக்கூலிகளும், முன்னை நாள் திரிபுவாதிகளும் இன்றைய முதலாளித்துவ மீட்சியாளர்களும் இந்த உண்மையை மறைக்க முயல்கின்ற வேளையிலேயே இவ் அமைப்பின் உண்மைச் சொருபம் தானாகவே அம்பலப்பட்டுப் போயிருக்கிறது.

 

 

ஜப்பானில் அரசியல் பாவங்கள்.

ஜப்பானிய அரசியலில் ஞானபிதா என அழைக்கப்படும் சின் கனேமாரு இன்று வரி ஏய்ப்பதற்காகவும், லஞ்சம் பெற்றதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசார் இவரது வீட்டிலும், அலுவலகத்திலும் தேடுதல் நடத்திய போது 100 கிலோகிறாம் நிறையான தங்கப்பாளங்களையும் 30 மில்லியின் யு-எஸ் டொலர் பணமும்  கைப்பற்றியுள்ளார்கள். மொத்தப் பெறுமதி 51 மில்லியின் யு-எஸ் டொலர்களாகும். இதற்கு முன்னர் அன்றைய அரசியல் தலைவர் தனாக்கா கொம்பனியின் லஞ்சம் பெற்றதற்காகக் கைது செய்யப்பட்டார் என்பது நினைவு கூறத்தக்கது. ஆனாலும் தனாக்கா நீதி மன்றத்தால் லஞ்சக் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்ட போதிலும் அதற்கு அப்பீல் செய்து சிறை செல்லாததுடன் ஒரு குற்றவாளியாகவே இருந்து கொண்டு நாட்டை ஆண்டார். இந்த இருவருமே ஜப்பானைத் தொடர்ந்து ஆளும் கட்சியின் தலைவர்களாக இருந்து நாட்டை ஆண்டவர்கள், திரு கனேமாறு சென்ற வருடம் இடம் 500 மில்லியன் யென் அன்பளிப்பாக பெற்றுக் கொண்டார். இந்த லஞ்சப் பணம் பெற்றதை கனேமாறு ஏற்றுக் கொண்டு ஆரம்ப தண்டமாக 2 லட்சம் யென்களை செலுத்தி தப்பிக்கொள்ள முயற்சி செய்தார். ஆனால் மக்கள் எதிர்ப்பு மேலோங்கிய நிலையில் பாராளுமன்றத்திலிருந்து விலகிக்கொண்டார். பினனர் கைது செய்யப்பட்டார்.

 

அன்று தனாக்கா தப்பிக் கொண்டார். ஆனால் இன்று கனேமாறு மாட்டிக்கொண்டார். இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது அதாவது ஜப்பானிய மக்கள் சீரழிந்த முதலாளித்துவத்தின் தலைவர்களையும் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளையும் இனியும் சகித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. இன்று ஜப்பானில் இவர்களைப் போன்ற வரி ஏய்ப்பாளருக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் இத்தாலியைப் போன்று பல நூற்றுக்கணக்கான அதிகாரப் பேர்வழிகள் அம்பலப்படலாம்.

 

3) தென்கொரியா

 

தென்கொரியாவின் தற்போதைய அதிபர் தனது அமைச்சரவையில் உள்ள மூவரை ஊழல் காரணங்களுக்காக பதவி நீக்கம் செய்துள்ளார். இதற்கு முன்னர் நாம் அமெரிக்காவின் வாட்டர் கேட், ஈரான் கேட், ஊழல்களையும், இந்திய அதிகாரவர்ககத்தின் போர்பஸ்; ஊழலையும் அறிந்துள்ளோம்.

 

இவ்வாறு ஏகாதிபத்திய முதலாளித்துவ சமுக அமைப்பு அம்பலப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தான் இவர்கள் கையாலாகாத்தனமான செயலாக நவ நாஜிகள் அமைப்புக்கள் புதிய வேகத்தில் முளைத்து வருகின்றன. ஏகாதிபத்தியவாதிகளின் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்கு பாசிசத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். இதை அனைத்துலக மக்களும் விழிப்புடன் இருந்து ஆரம்பத்திலிருந்தே முறியடிக்காவிட்டால் எதிர்காலம் பயங்கரமான அழிவுகளை மனித சமூகத்திற்கு ஏற்படுத்திவிடும்.

 

தமிழ் ஈழ அரசியல் இயக்கங்களின் ஆரம்ப காலத்தில் அவர்களும் இதே வர்க்க சார்பு நிலையை கொண்டிருந்தனர். அன்று பசி பட்டினியால் பத்து ரூபாய் களவு எடுத்தவர்களையும் கோழி திருடியவர்களையும் கூட மரணதண்டனை வழங்கி கொலை செய்தார்கள். அதேவேளை மக்களை கொள்ளையடித்த முதலாளிகளையும் பதுக்கல்காரர்களையும் பாதுகாத்தார்கள். அன்று பல இயக்கங்களும் இந்த வழியில் செயற்பட்டாலும் ஒரு உறுதியான முதலாளித்துவ வர்க்கச்சார்பான நிலைப்பபாட்டில் செயற்பட்டவர்கள் புலிகள் மட்டுமே. எனவே தான் தமிழ் தரகு முதலாளித்துவம் அவர்களை தனக்குள் இன்று முற்று முழுதாக ஆகர்சித்துக் கொண்டது.

 

----- நிர்மலன்------

 

இது போன்ற ஊழல் மறறும் இன்று உலகு எங்கும் பல போராட்டடங்கள் நடைபெறுகின்றன. இப்படி நடைபெறும் போராட்டங்களை சில பிழைப்புவாத கட்சிகள் ஒழுங்கு செய்வதும், சில தன்னிச்சையாகவும் நிகழ்கின்றன. மூறாம் உலக நாடுகளில் நடைபெறும் போராட்டஙகள் ஒரு சரியான கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமையில் கீழ் நடைபெறவில்லை. தமது நலன்களின் அடிப்படையில் இப்போராட்டத்தை நடத்துவதன் மூலம் இந் நாடுகளின் தொழிலாளர் வர்க்கம் ஏமாற்றப்படுகின்றனர்.

 

இன்று, உலகில் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி இரண்டு வழிகளில் மட்டுமே தீர்கக முடியும். ஒன்று உலகை மறுபடி பங்கிட ஒரு உலக யுத்தத்தை நடத்துவது. இரண்டாவது ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்துவது. இன்று மேற்கு நாடுகளில் தீவிரம் அடைந்து வரும் பொருளாதார நெருக்கடியை ஒரு சில உதாரணம் ஊடாக பார்ப்போம். பிரான்சில் மாசி மாதம் நடைபெற்ற தேர்தல் காலத்தில் 30 இலட்சமாக இருந்த வேலையில்லாத திண்டாட்டம் மே மாதம் 35.5 இலட்சம் உயர்ந்துள்ளது.

 

அதாவது மாதம் சராசரியாக 45 ஆயிரம் பேர் வேலை இழக்கின்ற அதேநேரம் வருடம் 60ஆயிரம் தொழில் நிலையங்கள் மூடப்படுகின்றன. இங்கிலாந்தில் 30 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இது ஜரோப்பாவை மட்டுமல்ல உலகம் முழுமையாக இதுவே இன்றைய நிலை. இன்று அமெரிக்கா, ஜப்பான், ஜரோப்பாவுக்கு இடையில் நடைபெறும் பொருளாதார போராட்டம் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள சிறு தேசிய உற்பத்திகளை கூட முற்றாக ஒழித்து விடுகின்றனர். இந் நெருக்கடியை ஒரு உலக யுத்தத்தின் ஊடாக உலகை மறுபங்கீடு செய்வதன் மூலம் மீண்டும் சமநிலையடைய முயல்வர்.

 

இவ் நெருக்கடியையொட்டி சிலர் தற்காலிகமானது என வாதிடுகின்றனர். ஒரு உலக யுத்தமின்றி வாக்கப் போராட்டமின்றி இடைத்தீர்வை பெறமுடியும் என வாதிடுகின்றனர். இதில் எம்மவர்கள் தமது மேற்கத்தைய இருப்பிலான நம்பிக்கை சிதைந்து போகாத வகையில் கூறிக் கொள்ளும் சமாதானமே. இன்றைய பொருளாதார நெருக்கடி மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும். இதை சுருக்கமாக பார்ப்போம். இன்று அமெரிக்கா, ஜரோப்பா இடையில் தமது பொருட்களை விற்பதில் போட்டியிடுகின்றனர். முன்னைய சந்தை போட்டியின் இடையில் சிக்கி சமநிலை உடைந்து மேலும் மேலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக மூன்றாம் உலக நாடுகளில் இருந்த தேசிய உற்பத்திகள் நிர்ப்பந்தம் மூலம் மூடப்பட்டு வருகின்றன. இவ் ஏகாதிபத்திய நாடுகளில் உற்பத்தியைச் சந்தைப்படுத்த முடியாத வகையில் தேங்கி விடுகின்றன. இன்னொரு பக்கத்தில் மக்கள் பொருட்களை வாங்கும் சக்தியை இழந்து விடுகின்றனர். பொருட்களின் உற்பத்தியின் குறைப்புடன் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுகின்றனர். வேலை நீக்கமும், பொருட்களின் விலை அதிகரிப்பும் காரணமாய் மேலும் மக்கள் வாங்கும் சக்தியை இழக்கின்றனர். இதனால் மேலும் உற்பத்தி தேக்கம் நிகழ்கின்றது. இதனால் மேலும் மேலும் உறபத்தி குறைப்பும் வேலை நீக்கமும் சுழற்சியாக நிகழ்கின்ற போது மேலும் பொருளாதர நெருக்கடி தீவிரம் அடைகிறது. அத்துடன் இவ் ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான போட்டியை மேலும் தீவிரமடையச் செய்கின்றது. தொடரும் இந் நிலை சீர்திருத்த முடியாத வகையில் இன்று உலகை இராணுவப்பலம் கொண்டு அடக்க ஆரம்பித்துள்ளனர். இது மூன்றாம் உலக யுத்தத் தயாரிப்பின் ஆரம்பக் கட்டங்களே.

 

இன்றுள்ள உலகப் பொருளாதார நெருக்கடியில் ஒரு வர்க்கப் போராட்டம் சாத்தியமா? மேற்கு நாடுகளைப் பொறுத்தவரையில் ஒரு சரியான கம்யூனிஸ்ட கட்சிகள் இல்லை என்றே அடித்துக் கூறலாம். சில நபர்கள் இருக்கின்ற இன்றைய நிலையில் இவர்கள் அறைகூவல் எதிர்காலத்தில் சரியான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் சந்தர்ப்பத்தை தீவிர பொருளாதார நெருக்கடிகள் உருவாக்கும். மூன்றாம் உலக நாடுகள் மற்றும் கிழக்கு ஜரோப்பிய நாடுகள் என அனைத்திலும் சிறிய பெரிய சரியான கம்யூனிஸ்ட் கட்சியைக் கொண்டுள்ளன. இவையே இன்று வர்க்கப் போராட்டத்தின் சாதக, பாதக அம்சங்கள். இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்தில் சரியான வகையில் மக்களை அணிதிரட்ட ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சியின் தேவையை இன்று உலகம் கோருகின்றது. அதுவே மக்களின் எதிர்கால நம்பிக்கையைக் கொடுக்கக் கூடிய ஒரே தீர்வாகும்.

 

ஆசிரியர் குழு