முன்குறிப்பு :
கட்டுரை உணர்வு சார்ந்ததாம், ஜெயமோகன் கூறியுள்ளார். முற்றிலும் உண்மை, எனவே தான் அவருடைய பக்கச்சாய்வும் அவரை பளீரென்று பச்சையாக காட்டிக்கொடுக்கிறது. உணர்ச்சிகள் அடிமனத்தில் கிட‌க்கும் உண்மைகளை காட்டிவிடும் என்பார்கள் அது ஜெ வினுடைய கட்டுரையின் இறுதி சொல் வரை கானக்கிடைக்கிற‌து. ஆனால் அவருடைய உணர்ச்சிகளை நாம் பொய் என்று சொல்லவில்லை மாறாக அவருடைய இந்த உணர்ச்சி இந்த நாட்டினுடைய உணர்ச்சி அல்ல, இந்த மக்களுடைய உணர்ச்சி அல்ல ஏனெனில் அவருக்குள் பொங்கிப்பிரவாகமெடுத்து இணையத்தின் வழியே கொட்டியோடிய இந்த உணர்ச்சிக்கான நியாயங்களை அவர் ஓரிடத்திலும் கூறவில்லை, தருக்கம் இல்லை, ஏனெனில் ஜெயமோக‌னுக்கு அவற்றிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நேரமில்லை, விருப்பமில்லை,மனமில்லை [பார்க்க‍ கடிதங்கள்]  உண்மையான உணர்ச்சிக்கான நியாயம்,பெரும்பாண்மை மக்களின் நலனிலிருந்து எழும் உணர்ச்சிக்கான தருக்கம் ஆகியவை இயல்பாக வரும். உண்மைகளிலிருந்து எழும் மகிழ்ச்சி,துயரம் போன்ற பல வகையான உணர்ச்சிகள் அந்த உண்மை விவரங்களிலிருந்தே தன் உணர்ச்சிக்கான நியாயத்தை முன் வைக்கும்,தருக்கம் புரியும். ஆனால் ஆயிரம் பக்கம் இரண்டாயிரம் பக்கம் என்று கைகளாலும், கால்களாலும் எழுதும் ஓர் எழுத்தாளனுக்கு தன் பக்க நியாயத்தை நாலு பக்கம் கூட எழுத முடியவில்லை,ஆனால் அவரது உணர்ச்சிகளை  புரிந்து கொண்டு எல்லோரும் தன்னைப்போலவே ஜெய்ஹிந்த் கோக்ஷம் மட்டும் போட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நியாயமும், உண்மையுமற்ற தன்னுடைய உணர்ச்சிகளுக்காக அது உண்மையா,பொய்யா,சரியா,தவறா என்று கூட பார்க்காமல் ஊரே கூடி அழ வேண்டும் அல்லது ஊரே கூடி சிரிக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது பக்கா மிடில் கிளாஸ் அரசியலாகும்.

இந்த நாட்டை உருவாக்கிய கோடிக்கணக்கான மக்களுக்கு தங்களின் வறுமைக்கும்,தூயருக்கும் யார் காரணம் ,என்ன காரணம் என்று தெரியாமல் துயருற்று தவித்து மூடப்பழக்கங்களில் சரணடையும் இத்தருணத்தில் எழுத்துக்களும்,பேச்சுக்களும் அவர்களின் இந்நிலைக்கு யார் காரணம் என்பதை அடையாளம் காட்டி [இதைதான் இந்தியாவிற்கு எதிரான செயல் என்கிறார் ஜெயமோகன்] போராட கற்றுக்கொடுக்க வேண்டிய இத்தருணத்தில் இது போன்ற குறுக்கீடுகளும் இல்லாமல் இல்லை. ஆயினும் இவற்றையெல்லாம் புறங்கையால் ஒதுக்கித்தள்ளிவிட்டு அடுத்த வேலையை பார்க்க கிளம்பலாம் என்று கிளம்பவும் முடிவதில்லை ஏனெனில் இது போன்ற இலக்கிய அற்பர்களுக்குள் உறங்கிக்கிடக்கும் அபாயகர‌மான அரசியலின் உணர்ச்சிகள் பீறிட்டு எழும் போது அது குறிப்பிட்ட பகுதியினையும் அதன் போலி உணர்ச்சிக்குள் இழுக்கிறது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தை. எனவே அதனுடைய நடு நிலைமையின் அரசியலை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒவ்வொரு தருணங்களின் போதும் தவறாமல் அதை திரை விலக்கிக்காட்ட வேண்டியுள்ளது. அவருக்கு இப்போது இந்தியாவின் நிலை குறித்து ஏற்பட்டுள்ள மனத்துயருக்கு நாமும் அழ வேண்டும் என்கிறார்.

 

உண்மையில் நாம் காக்ஷ்மீரைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் புள்ளி விவரங்களையும்,வரலாற்று ஆதாரங்களையும் எடுத்துக்காட்டி அங்கே என்ன நடக்கிறது, இந்த கொடூர மரணங்களுக்கு யார் காரணம் என்று நிரூபித்து விடலாம், ஆனால் அவற்றை ஜெ போன்றவர்களிடம் காட்டி என்ன பயன் என்பதே கேள்வி. எனது இந்தியா கட்டுரைக்கு நான் ஒரு கடிதத்தை ஜெயமோகனுக்கு அனுப்பியிருந்தேன் அதற்கு ஜெயமோகன் இவ்வாறு பதிலனுப்பியிருந்தார்,

 

அன்புள்ள ஸ்டாலின்

எழுதுங்கள். உங்கள் கருத்துக்கள் அவை. துவேஷமும் எதிர்மறை எண்ணாமும் தகவல் சார்ந்த மூடத்தனமும் அன்றி எதையும் உங்கள் வரிகளில் நான் காணாவில்லை

உங்களைப்போன்றவர்கள் இந்நாட்டின் துரதிருஷ்டம். வேறென்ன சொல்ல?

ஜெ.

 நாம் கேட்கும் கேள்விகளுக்கு, விவரங்களுக்கு பதில் கூறாமல் முகத்தை திருப்பிக்கொள்வது, பிறகு பத்து,பதினைந்து பக்கங்களுக்கு மொன்னைத்தனமாக மழுப்புவதுமே மிஞ்சுகிறது, இருந்தபோதிலும் எதிர்வினையாற்றுவது தவிர்க்கவியலாதது.

 

ஜெயமோகனுடைய புனைவுனர்ச்சிக்கட்டுரைக்கு அய்யா அரவிந்தன் நீலகண்டன் மூவர்ணத்தில் கண்ணீரே வடித்துவிட்டார். அவர் அதை மூன்று முறை படித்தாராம்,

இதை எழுதியதற்காக ஜெ விற்கு இந்த தமிழர் சமுதாயமே கடமை பட்டுள்ளதாம்,ஒவ்வொருவரும்[அவர் உட்பட] ஜெயமோகனுடைய உணர்ச்சி பெருக்கெடுக்கும் வார்த்தைகளை உணர்ந்து கொண்டு நடப்பது தான் நாட்டுக்கு நல்லது என்று கூறியுள்ளார். அரவிந்தன் நீலகண்டன் ஒரு பாபு பஜ்ரங்கி என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஜெயமோகன் அவருக்கு நண்பர். இந்நேரத்திற்கு அவர் [அ.நீ] க்ஷாகாவிற்கு வரும் R.S.S ஜீக்களுக்கு அந்த கட்டுரையை நகல் எடுத்துக்கொடுத்திருப்பார் என்பதை உறுதியாக நம்பலாம், அப்பேர்பட்ட தேசபக்த கட்டுரை அது.

பார்ப்பனியம் சிறுபான்மை மக்களை தாக்கி வெறியாட்டம் போடும் போதெல்லாம் ஜெயமோகனுடைய பேனா முனையும் வெறிகொண்ட சொற்களால் காகிதங்களை நிரப்புகிறது. தன்னுடைய சிந்தனை ஒன்றாகவும் எழுத்து வேறாகவும் இருக்க முடியாது என்பதை ஜெயமோகனுடைய எழுத்துக்கள் மெய்ப்பித்து வருகின்றன. அவரது ஒரு பக்கச்சாய்வு அரசியல், உலகக்கண்ணோட்டம் ஆகியவற்றை மீண்டும் ஒரு முறை எனது இந்தியா கட்டுரை சந்தேகத்திற்கிடமற்ற முறையில் அம்பலப்படுத்தியுள்ளது. இனி அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்,அவருடைய ஒவ்வொரு பொய்யின் மீது சுட்டுப்பொசுக்கும் உண்மைகளை வைப்போம்.

 

அந்த கட்டுரை நாட்டுப்பற்றாளர்களுக்கு மீண்டும்,மீண்டும் உணர்த்துவது இதைத்தான். உண்மையில் இந்த நாடு உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், அனைத்து தேசிய இனங்களுக்கும் ‘இந்தியன்’ என்கிற உணர்வு அப்படியே பீறிட்டு எழுவதாகவும் அதை அருந்ததிராய் முதல் நக்சல்பாரிகள் வரை அனைவருமே ஏற்காமல் இல்லாத ஒன்றை கற்பனை செய்தும், வலிந்து எழுதியும் இந்த நாட்டு மக்களை கலகம் செய்ய தூன்டுகிறார்கள். இங்கு பிரச்சனை இல்லை,ஒடுக்குமுறை இல்லை என்று சொல்லவில்லை ஆனால் அந்த சின்னச்சின்ன பிரச்சனைகளை [குஜராத் இனப்படுகொலைகள்,சாதி வெறி ஒடுக்குமுறைகள்,காக்ஷ்மீரின் விடுதலை போராட்டம்,வடகிழக்கு மாநிலங்களின் சுய நிர்னய உரிமை,விதர்பா தற்கொலைகள் இன்னும் பலபல..] எல்லாம் ஊதிப்பெருக்குவதாகவும், அவர்களின் இச்செயல் வளர்ந்து வரும் இந்தியாவிற்கு ஆபத்தானது, ஊறு செய்யும் வேலை என்று கதறியுள்ளார். இசுலாமிய தீவிரவாதம் இந்நாட்டிற்கு கேடானது என்று கூறி அதை கண்டிக்கும் போக்கில் மொத்த இசுலாமியர்களையும் தீவிரவாதத்திற்குள் பொதுமைப்படுத்து புனிதப்பனியையும் செய்துள்ளார்.காக்ஷ்மீர் மக்களின் போராட்டங்கள் ஒரு இசுலாமிய அடிப்படைவாதத்தால் கட்டியமைக்கப்படுகிறது என்றும் பாகிஸ்தானிய,அல்லது தாலிபானிய அரசுகளை உருவாக்கத்துடிக்கும் சக்திகளிடமிருந்து கையூட்டு பெற்றும், மதவெறியூட்டப்பட்டும் அந்த போராட்டங்கள் நடக்கிறது என்றும் ஒரு பச்சை பொய்யையை புழுகுகிறார்.

 

இந்த தேசபக்த அறிவுரைகளும்,எச்சரிக்கைகளும் நமக்கொன்றும் புதிதாக கூறப்படுபவை அல்ல. இதையெல்லாம் படிக்கும் போது ‘எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கே’ என்று பல‌ர் நினைக்கக்கூடும், சிலருக்கு புல்லரித்தும் போகலாம் ஆனால் இந்தியாவில் இது தேடி அலையும் ஒரு விசயம் அல்ல, ஒரு முப்பது ரூபாய் கொடுத்து ‘புரட்சிக்கலைஞரின்’ DVD-களை வாங்கிப்பாருங்கள் முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் காட்சி வரை தேசபக்தி உணர்ச்சி உங்களுக்குள் மிண்சார வேகத்தில் பாய்ந்து முடிகளை நட்டுக்கொண்டு நிற்க வைக்கும்.

   

இந்தியா டுடே,தினமலர்,டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற தேசிய வெறியூட்டும் இதழ்கள் அச்சிட்டுக்கொண்டிருக்கும் வெற்றுப்புணர்ச்சியின் செய்திகளுக்கு ஜெயமோகன் பொழிப்புரை எழுதியுள்ளார், அவ்வளவே. அவரது கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளது போலவே புள்ளி விவரங்கள் என்கிற மிதவைகளை மிதக்க விடாமல் வாசக உள்ளங்களை உணர்ச்சி வெள்ள‌த்தில் தத்தளிக்க விட்டுள்ளார். உள்விவரங்களுக்குள் போக மறுப்பவர்களுக்கு, விருப்பமற்றவர்களுக்கு உண்மை என்றுமே உரைப்பதில்லை.

 

காக்ஷ்மீரின் இரத்தச்சகதியான பாதைகள் கொடூரமானது,வலி நிரம்பியது என்பதாலும்,அவற்றை போகிற போக்கில் ஒரு சில வரிகளில் குறிப்பிட முடியாது என்பதாலும் ‘காக்ஷ்மீர்’ குறித்து தனிப்பதிவாக எழுத வேண்டிய தேவை உள்ளது அதை விரைவில் எழுதுவதாகவும் இருக்கிறேன், எனினும் இந்த கட்டுரையின் தேவைக்கேற்ப சில வரிகளில் மட்டும் குறிப்பிட்டு செல்கிறேன்.

 

கோல்வால்கரின் முயற்சியால் காக்ஷ்மீரின் இந்து ராஜா அரிசிங்கிடம் தூதனுப்பப்பட்டு இந்தியாவுடன் இணைய பேரம் பேசப்பட்டது [காக்ஷ்மீர் என்றைக்கும் இந்தியாவோடு இணைத்திருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்] காக்ஷ்மீரில் பெரும்பான்மையாக இருப்பது இசுலாமியர்கள், நாம் காக்ஷ்மீரை இந்தியாவில் ஆட்சியதிகார மாற்றம் ஏற்பட்டதிலிருந்து காண்பது உத்தமம் அல்லாமல் அதற்கும் முந்தைய, அதற்கும் முந்தைய என்று பார்த்துக்கொண்டே போனால் உண்மையில் இந்தியாவிலிருந்து முதலில் விரட்ட வேண்டியது ஆரிய பார்ப்பன மதத்தையும், அதை தாங்கிப்பிடித்து பல்லக்கும் தூக்கும் ஜெ போன்ற சூத்திரர்களையும் தான். எனவே 47 க்கு பிறகு தற்காலிக இணைப்பு என்கிற உறுதி மொழியோடு உதவிக்கு சென்ற இந்திய இராணுவப்படை பிறகு அங்கே டென்ட் அடிக்கத் தொடங்கியது. வலுக்கட்டாயமான இணைப்பிற்கான வேலைகளை அதன் பிறகு இந்திய அரசு தான் அளித்திருந்த வாக்குறுதிகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு செயல்படுத்த துவங்கியது. இந்துமதவெறியர்களின் அகண்டபாரத கனவு ஆப்கானிஸ்தான் வரை நீள்கிறது என்பதால் காக்ஷ்மீரின் இணைப்பு இன்னும் முக்கியத்துவமுடையதானது, அது காக்ஷ்மீரி மக்களின் பிணங்களின் மீது தான் நடந்தது.

இந்த வெறிபிடித்த ஆக்கிரமிப்பு இணைப்பிற்கு எதிராக கிளர்ந்த்தெழுந்த மக்களுக்கு ‘இந்தியாவோடு இணைவதா தனி நாடாக செல்வதா’ என்பதை முடிவு செய்ய ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துகிறோம் என்று கூறி சாந்தப்படுத்த முயன்றார்கள். ஆம்,அதை இன்று வரை நடத்திக்கொண்டிருக்கிறார்கள், இந்தியாவின் சிறந்த ஜனநாயக ஆயுதங்களான‌‌ துப்பாக்கிகளாலும், வன்புணர்ச்சிகளாலும், இந்திய பயங்கரவாத ஊடகங்களின் பொய் பிரச்சாரத்தாலும் அவர்கள் அங்கே ஜனநாயகத்தை நிலை நாட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அதை இங்கே தாங்கிப்பிடித்து ‘தேசபக்தி’ என்கிற பெயரில் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார் கள் ஜெயமோகன்கள்.

 

அருந்த்ததிராய் போன்றவர்கள் இந்த நாடு அநீதிகளால் கட்டப்பட்டு, ஒவ்வொரு நிமிடமும் அநீதிகளால் இயக்கப்படுவதை ‘போன்று’ சித்தரிக்கிறார்களாம்.அப்படியானால் ஜெயமோகனுடைய கூற்றுப்படி இந்த நாடு நீதி மான்களால் நிரம்பியுள்ளது, ஒவ்வொரு நிமிடமும் வழுவாத நீதியால் வழி நடத்தப்படுகிறது என்று தானே பொருள் ?


இல்லையில்லை சில நேரங்களில் நீதி வழுவுகிறது,ஒடுக்குமுறை உள்ளது,சுரண்டல் உள்ளது என்று தான் சொல்கிறேன் என்கிறார் ஜெயமோகன்.

ஆனால் இது உண்மையா ?

இருபத்தைந்து ஆண்டுகளாக இந்த நாடு முழுவதும் சிறுபான்மை மக்களான இசுலாமியர்களும், கிறித்தவர்களும் இந்து மதவெறியர்களால் ஆயிரக்கணக்கில் காக்கை, குருவிகளை போல வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டார்கள். அதன் பிறகும் இசுலாமியர்கள் தான் குற்ற‌வாளிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் இந்த நாட்டு மக்களுக்கு அடையாள‌ம் காட்டப்பட்டு இன்றும் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள் மறுபக்கம் கொலை செய்த, கற்பழித்த, குடலை உருவிய காட்டுமிராண்டிகள் எவ்வித அச்சமுமின்றி இந்த நாட்டில் ந‌டமாடுகிறார்கள். இதெற்கெல்லாம் தலைமை தாங்கிய மோடி என்கிற நச்சு மிருகம் ஒரு மாநிலத்தின் முதல்வராக ஆட்சியிலிருக்கிறான். இது தான் நீதியா ?           இது தான் ஜனநாயக நாடா ?

 

மனசாட்சியுள்ள அனைவரையும் உறைய வைத்த, இரத்தக்களரியான குஜராத் இனப்படுகொலைகளை ‘நாங்கள் தான் செய்தோம், நாங்கள் தான் கற்பழித்தோம், நான் மட்டுமே பத்து பேரை கொன்றேன்’ என்று பாசிஸ இந்து வெறியர்கள் பகிரங்கமாக பேட்டியளித்தார்களே அவர்களில் யாருமே கைது செய்யப்படவில்லையே ? இதற்கு யாரிடம் போய் நீதி கேட்பது என்பதை ஜெயமோகன் சொல்ல முடியுமா ?

 

எத்தனை பெண்கள் கணவனை இழந்து விதவைகளானார்கள்,எத்தனை பிள்ளைகள் அநாதைகளாக்கப்பட்டன, எத்தனை பேருக்கு மன நிலை பாதிக்கப்பட்டிருக்கும் அவற்றுக்கெல்லாம் நீதி கிடைத்ததா ?


குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா ? இல்லை, மாறாக பள்ளிகளுக்கு செல்லும் அப்பாவி இசுலாமிய சிறுவர்களை கூட பயங்கரவாதிகள் என்று கைது செய்து சிறைகளில் அடைக்கிறது இந்த அரசு. ஒரு இசுலாமியனாக இந்த நாட்டில் வாழ முடியுமா ? யாருக்கேனும் துணிவிருந்த்தால்,


இந்திய ஜனநாயகத்தின் மீது மாளாக்காதலும், நம்பிக்கையும் உள்ளவர்கள் உங்கள் குடும்பத்தோடு ஒரே ஒரு மாதம் குஜராத்தில் போய் இசுலாமியராக வாழ்ந்துவிட்டு வாருங்கள், இந்த நாட்டின் நீதி உங்கள் கண்ணுக்கு முன்னால் டான்ஸ் ஆடுவது பிறகு தெரியும். இந்த நாட்டில் நீதி வாழ்வது பற்றி பெருமை பேசும் ஜெயமோகன் முதலில் அதை செய்துவிட்டு பிறகு வந்து தேசபக்தி பஜனை பாடட்டும்.

அப்ச‌ல் குரு ப‌ற்றியும்,கீலானி ப‌ற்றியும் எழுதியுள்ளீர்க‌ள் உங்க‌ள் க‌ருத்துப்ப‌டி அவ‌ர்க‌ள‌ தூக்கிலிட‌ப்பட‌ வேண்டும் என்ப‌து தான் நீதி, உங்க‌ளின் ஆசையும் கூட‌! நீதியின் பால் உங்க‌ளுக்குள்ள‌ பற்றுதல் புரிகிறது. ஆனால் பேரா.கீலானி மீது சாற்றப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பச்சைபொய் என்று இந்திய நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது அசாதாரனமான செயல். நீதிமன்றம் வேறு வழியின்றி [ஆதாரங்களின்றி] தான் அவரை விடுதலை செய்தது,விடுவிக்கப்பட்ட பிறகு அவரிடம் ‘நீங்கள் ஏன் கைது செய்யப்பட்டீர்கள் ? ‘ என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் “நான் கைது செய்யப்பட்டதற்கு எனக்கு தெரிந்த ஒரே காரணம் நான் காக்ஷ்மீரிகாரன் என்பது மட்டும் தான்” அப்போதும் அவர் தன்னை இசுலாமியராக வெளிப்படுத்திக்கொள்ளாமல் தனது தேசிய அடையாளத்தை முன் நிறுத்தியே பேசியுள்ளார். ஆனால் அவர் மீது எவ்வளவு வண்மம் இந்துவெறியர்களுக்கு. இன்றுவரை அப்சல் குரு மீதான குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை, அவரை குற்றவாளியாக்குவதற்கு அரசு செய்த சூழ்ச்சிகள் தான் நிறைய அம்பலமாகியுள்ளது. அப்சல் குரு பற்றி பேசும் போது இல.கனேசனுக்கு எப்படி கோபம் வருமோ அப்படி வருகிறது ஜெயமோகனுக்கு. அவர் தான் குற்றவாளி என்று பேசுகிற நீங்கள் அதை நிறுவுவதற்கு வேண்டுமானால் ஒரு கட்டுரையை எழுதுங்கள், அதில் சான்றுகளை அடுக்குங்கள் பிறகு பிறகு அவரை தூக்கில் போட்டு கொல்லுவோம். ஆனால் அவ்வாறு நீங்கள் அவரை தூக்கிலிடுவதற்கான கட்டுரையை தீட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தான் கருதுகிறேன், உங்களால் அப்படி உண்மைகளை உணர்ச்சிகளால் மட்டும் தான் பொய்களாக்க முடியும். உங்க‌ள் கூற்றுப்ப‌டி ஒடுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்களை வாழ‌ அனும‌தி அளிப்ப‌தே ஜனநாயகம்,நீதி என்று நீங்க‌ள் க‌ருதினால் நாங்க‌ள் உயிர் வாழ்வ‌த‌ற்கான‌ அனும‌தி நீங்க‌ள் போடும் பிச்சை என்பீர்க‌ளா? எவ்வ‌ள‌வு கேவ‌ல‌மான‌ சிந்த‌னை இது !  


இந்த சிந்தனைகள் எல்லாம் உங்களுக்குள் இயல்பாகவே உள்ளது ஜெயமோக‌ன், நீங்கள் இவற்றையெல்லாம் வலிந்து எழுதவில்லை என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.

“இசுலாமியர்கள் சிறுபான்மையினராக இருக்கும் நாடுகளிலாவது பிற தேசியங்களுடன் ஒத்துப்போக அதற்கு கற்பிப்பதே இன்று அவசியம்”
என்று எழுதியுள்ளீர்களே,

 

காட்டுமிராண்டி மோடியும் இதையே தான் சொல்கிறான்,சிறுபான்மை கூட்டமா இருக்கும் போது அடங்கி வாழ கத்துக்கனும் என்று தெக்காடியாவும் விக்ஷம் கக்குகிறான்,இலங்கை இராணுவ தளபதி பொசேகாவும் சில நாட்களுக்கு முன்பு இதையே ப்தான் சொன்னான் “தமிழ் மக்கள் இரண்டாட்ந்த‌ரகுடிமக்களாக வாழக்கத்துக்கனும்” பாசிஸ்டுகள் என்றைக்குமே ஒரே போலத்தான் பேசுவார்கள் நீங்கள் எழுதியத‌ற்கு இதற்கும் என்ன பெரிய வித்தியாசம் உள்ளது ? அந்த பாசிஸ்டுகளிடம் அதிகாரம் இருக்கிறது உங்களிடம் அது இல்லை என்பதைத்தவிர வேறு வித்தியாசம் ஒன்றும் இல்லை.

 

இசுலாமியர்களை விடுவோம், இந்துக்களின் வாழ்வில் மட்டும் என்ன நீதி பூத்துக்குலுங்குகிறதா ? இந்த கம்ப்யூட்டர் கபடாவையெல்லாம் கொஞ்சம் ஓரமாக தூக்கி வைத்துவிட்டு சாதாரண இந்துவின் ஒரு நாள் வாழ்க்கையை இந்தியாவில் ஒரு வாரத்திற்கு மட்டுமாவது வாழ முடியுமா உங்களால் ?


விதர்பா பகுதியில் ஒவ்வொரு நாளும் விவசாயிகள் தற்கொலைக்குத்தள்ளப்படுகிறார்கள், ஒவ்வொரு இந்து வீட்டிலும் இன்று வரை சாவு விழுந்துகொண்டிருக்கிறதே அப்போதெல்லாம் நீதி எங்கே ஒளிந்துகொண்டிருந்தது?


அப்போது பா.ஜ.க என்ன சொன்னது “இந்தியா ஒளிர்கிறது” இப்போது சரத் பவார் என்ன சொல்கிறார் “அவர்கள் காசுக்காக பொய் சொல்கிறார்கள்”.

 

இதன் பெயர் உண்மையா, பயங்கரவாதமா ?

 

இது தானே உண்மையான பயங்கரவாதம்,அத்வானியும்,சரத்பவரும் தானே உண்மையான பயங்கரவாதிகள். இந்த பயங்கரவாதத்தை பற்றி எங்கேயாவது எழுதியுள்ளீர்களா ஜெயமோகன்?

நந்திகிராமில், ஒரிசாவிலும் நிலம் பறிக்கப்பட்டு நீதி கேட்டு நின்றவர்களுக்கு லத்திக்கம்புகளின் வழியேவும், தோட்டாக்களின் வழியேவும் தானே நீதியின் தரிசனம் கிடைத்தது. பன்னாட்டுக்கம்பெனிகளின் இரக்கமற்ற ஒடுக்குமுறையை எதிர்த்து நின்று சொந்த அரசிடம் முறையிட்ட குர்காவேன் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட நீதியை மறக்கமுடியுமா ? ஊர் ஊராக சுற்றுகிற ஜெயமோகன் கொஞ்ச நாள் டிராஸ்பர் வாங்கிக்கொண்டு போபாலுக்கு போய் நீதி தேவதையின் புகழை பாடிவிட்டு வருவாரா?

 

இவ்வாறு ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக குறள் கொடுக்கும் அருந்த்ததிராய் பற்றி நீங்கள் எழுதியதற்கு வருவோம்.

 

“அடிப்படையன வரலாற்றுணர்வோ சம நிலையோ இல்லாத அருந்த்ததி …
இவர்களுக்கு பின்னால் இந்த தேசத்தை அழிக்க எண்ணும் சக்திகளின் நிதியுதவி உள்ளது”


என்று கூறியுள்ளீர்கள், போகிற போக்கில் மொன்னைத்தனமாக பேச எல்லோராலும் முடியும் ஜெயமோகன்.இதற்கெல்லாம் என்ன ஆதாரம்,அருந்ததிராய் இப்படி எழுதுவதற்கு கையூட்டு வாங்குகிறார் என்பதற்கு சான்றுகள் இருந்தால் அதை வைத்து எழுதுங்கள் அவ்வாறின்றி கைக்கு வந்ததையெல்லாம் எழுதுவீர்களா ? அப்படியானால் நாங்களும் சொல்ல முடியும், மோடி பேசுவது போலவே நீங்களும் பேசுகிறீர்கள் எனவே மோடிக்கும் உங்களுக்கும் நேரடி தொடர்பு உண்டு, அகண்ட பாரத கனவு பற்றி எழுதுவதற்கு ஜெயமோகனுக்கு கையூட்டு வருகிறது என்றெல்லாம் எங்களால் சொல்ல முடியாதா ?

 

கண்மூடித்தனமான இந்திய எதிர்ப்பையா முற்போக்காளர்கள் செய்து வருகிறார்கள் ?

 

வடகிழக்கு மாநிலங்களின் சுயநிர்ண‌ய உரிமையை நசுக்கி நாசம் செய்து அங்கே இராணுவ பாஸிச ஆட்சியை அமலில் வைத்திருப்பதும் மேற்கூறிய அனைத்தும் கண்மூடித்தனமான கற்பனைக்கதைகளா ?

ம‌ணிப்பூரின் வீர‌ப்பெண்க‌ள் த‌ங்க‌ளுக்கு எந்த‌ வ‌ழியிலும் நீதியும், நியாய‌மும் கிடைக்காத‌தால் நிர்வாண‌மாக‌ தெருவில் இற‌ங்கி “இந்திய‌‌ இராணுவ‌மே எங்க‌ளை க‌ற்பழி” என்று இராணுவ அலுவலகத்தை எட்டி உதைத்த போது இந்த நீதி, நேர்மை, ஜனநாயகம் எல்லாம் உலகத்தின் முன்னால் அம்மனமாக ஆடியது. அதையே வண்மமாக கொண்டு பிறகு அந்த மக்களை மேலும் கொடூரமாக ஒடுக்கி வருகிறது இந்திய ராணுவம்.

 

இது தான் நீங்கள் கூறும் நீதியோ ?

எட்டு ஆண்டுக‌ளாக‌ ஒரு பெண், ஐரோம் ச‌ர்மிளா என்கிற போராளி பெண், ஜெயமோகன் தலையில் தூக்கிவைத்து கூத்தாடும் காந்தி ட‌ய‌லாக் பேசிய‌தோடு நிறுத்திக்கொண்ட‌ உண்ணாவிர‌த‌ப்போராட்ட‌ முறையை‌ எட்டு ஆண்டுகளாக சோறு, த‌ண்ணீரின்றி தன்னுட‌லை த‌ன‌க்கே உண‌வாக்கிக்கொண்டு போராடி வ‌ருகிறாளே அவ‌ளைப் ப‌ற்றி, அவ‌ளுடைய‌ போராட்ட‌ம் ஏன், கோரிக்கை என்ன‌ என்ப‌தை ப‌ற்றி ஜெய‌மோக‌ன் என்றைக்காவது எழுதியிருக்கிறாரா? இந்தியா அநீதிக‌ளால் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌து என்ப‌த‌ற்கு ஐரோம் ச‌ர்மிளா உயிரும், பிண‌முமான‌ சாட்சி அல்ல‌வா?

 

அமெரிக்க‌ ஈராக்கில் ‘ஜ‌ன‌நாய‌க‌த்தை’ நிலை நாட்டி வருவதை போல‌, இந்தியா வ‌ட‌கிழ‌க்கு மாநில‌ங்களில் நீதியை நிலை நாட்டி வ‌ருகிற‌து. அந்த‌ நீதியை கொன்றொழித்து இந்தியாவோடு அனுப்பி வைப்பார்க‌ள் அம்ம‌க்க‌ள். ஜெய‌மோக‌ன் அப்பொழுது இன்னும் தூய மொழியில் வசைகளோடும் எழுதக்கூடும், காத்திருப்போம்.
 

“மூதாதையர் மரபின் மீது பிடிப்புண்டு என்று சொன்னால் கூட முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்படுகிற சூழல் இங்கு நிலவுகிறது” 


என்கிறீர்கள், மூதாதையர் மரபுகளின் மீது எனக்கும் தான் பிடிப்புண்டு நீங்கள் எந்த மரபை குறிக்கிறீர்கள் என்பதை சொல்லியிருந்தால் வாசகர்களுக்கு வசதியாக இருந்திருக்கும் அவ்வாறின்றி,இல்ல எல்லாம் நம்ம மரபு,நம்ம மூதாதையர் என்று கதாகாலட்சேபம் செய்ய வேண்டாம்,இதை செய்யும் போது மட்டும் புரிதலுடன் தெரிந்தே செய்வ‌து ஏன்? ஏனென்றால் அழுகி அழியும் அனைத்து பிற்போக்குக‌ளின் மீதும் நாட்ட‌ம் கொண்டு அதை தாங்கிப்பிடிப்ப‌வ‌ர்க‌ளின் அவ‌ல‌ ம‌னம் தான் எதையும் வ‌லின்து,புனைந்து எழுத‌ச்சொல்லும் அது தான் இந்திய‌த‌த்துவ‌ம‌ர‌புக‌ளை வாய்கூசாம‌ல் இந்துத‌த்துவ‌ ம‌ர‌பென்று பேச‌ச்சொல்லும். ஆனால் கால‌ச்ச‌க்க‌ர‌த்தின் ப‌ற்க‌ள் பிற்போக்கை ந‌சுக்கித்தான் முன் ந‌க‌ர்கிற‌து திரு ஜெய‌மோக‌ன் அவ‌ர்க‌ளே என‌வே வெறும் அற்ப‌வாத‌ அழுகினி இத‌ய‌த்தை வைத்துக்கொண்டு தேச‌ம் வாழ்க, ஜெய்ஹிந்த் என்று ஸ்பீக்கர் போட்டு என்னதான் கத்தினாலும் அதில் உயிர் இருக்காது.

 

துலினா,  திண்ணிய‌ம், பாப்பாப‌ட்டி, கீரிப்ப‌ட்டி, க‌ய‌ர்லாஞ்சி என்று பார்ப்ப‌ன‌பாசிச‌ போதை ஏறிய‌ சாதிவெறிய‌ர்க‌ள் ஒடுக்க‌ப்பாட‌ ம‌க்க‌ளை கொன்றுகுவித்தார்க‌ள், இன்றும் கொல்கிறார்க‌ள். மேல‌வள‌வு கொலைகார‌ர்க‌ள் விடுவிக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ளே இது எந்த‌‌ வ‌கை நீதீ ? இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிவெறி வண்முறை, சாதிவெறி வல்லுறவு ஒவ்வொறு அரை மணி நேரத்திற்கும் எவ்வளவு எண்ணிக்கையில் நடக்கிறது தெரியுமா ? அவர்களில் எத்தனை கிரிமிணல்கள் கைது செய்ய‌ப்ப‌டுகிறார்க‌ள், அவ்வாறு கைது செய்ய‌ப்ப‌ட்டாலும் எத்த‌னை பேருக்கு உரிய‌ த‌ண்ட‌னைக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு அத‌ன் மூல‌ம் ஒடுக்குமுறைக்குள்ளான‌ ம‌க்க‌ளுக்கு நீதி வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகிற‌து? இந்த‌‌ விவ‌ர‌ங்க‌லெல்லாம் ஜெய‌மோக‌னுக்கு தெரியுமா? தெரியாது. ஏனெனில் அவ‌ருக்கு அத‌ற்கெல்லாம் நேரமில்லை, மனமில்லை, விருப்பமில்லை எனவே அவற்றிலெல்லாம் நம்பிக்கையும் இல்லை.

ஆனால் நம் ஊரில் திருட்டுபாய் அம்பானி எத்தனை ரிலையன்ஸ்‌ பிர‌க்ஷ் க‌டைக‌ளை திற‌ந்து வைத்திருக்கிறான் என்று எண்ணுவ‌த‌ற்கு ம‌ட்டும் நேர‌ம் உள்ள‌து, ஏனெனில் அவ‌ருக்கு அதில் நாட்டம் உள்ள‌து விருப்பம் உள்ளது, எனில் ஜெயமோகனுடைய ‘இந்தியா’ எது?  

 

 அடுத்த பதிவில் . . .  

 

இந்தியாவில் இறைந்து கிடக்கும்

நீதியை தரிசிக்க சுட்டிகளை கிளிக்கவும்.

அகமதாபாத் குண்டு வெடிப்புகள் : நீதி மறுக்கப்பட்டோர் தொடுத்த போர்

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!

காஷ்மீர் : இந்து தேசியத்தின் பரிதாபத் தோல்வி

காசுமீர் : புதைக்கப்பட்ட உண்மைகள்

காஷ்மீர்: இந்திய இராணுவத்தின் கொலைக்களம்!

காஷ்மீர் பிரச்சனை : மதமா? அரசியலா?

கருத்துரிமைக்குக் கல்லறை

காசுமீர் :’தேச பக்தி”யால் மறைக்கப்படும் சமூக அவலங்கள்

குஜராத் : இந்து பயங்கரவாத்தின் இன்னொரு முகம்

சரப்ஜித் சிங்குக்கு ஒரு நீதி, அப்சல் குருவுக்கு வேறொரு நீதியா?

உச்சநீதி மன்றத்தின் பச்சையான பாசிசம்

இந்தியக் ‘குடியரசின்” இன ஒதுக்கல்

குஜராத் ‘மோதல்” படுகொலைகள்: இதுதான் இந்து ராஷ்டிரம்!   

மீண்டும் படரும் காவி இருள்

உழைத்தவர் மெலிந்தனர் வலுத்தவர் கொழுத்தனர்