உலகம் போற்றும் இந்து மதம்

இணையதளத்தில் குறிப்பாக ஆர்க்குட்டில் பார்ப்பன‌ர்களை நான் வெறித்தனமாக சாடி எழுதுவதாக‌ சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.அவ்வாறு நடக்கும் விவாதங்களில் நான் கேட்கும் வினாக்களுக்கு பதில் தெரியாததாலும் கேள்விகளை கேட்கும் நான் ஒரு பெண்ணாக இருப்பதாலும் எனக்கு சொல்ல அவர்களிடம் திருத்தமான பதில்கள் இல்லாத கட்டாய சூழலுக்குள் அவர்கள் அடைபட்டிருப்பதாலும் இவற்றை பொறுக்க இயலாமல் அவர்களுக்கு உரிய‌ இயல்பான ஆணாதிக்க வெறியோடு என்னென்னமோ பேசி வருகிறார்கள். ஆனால் பதில்கள் மட்டும் வரவில்லை. இதற்கு ஒரு உதாரணமாக ‍‍‍…அரசு என்பவர்

//PENMAI ENDRAAL MENMAI
PENMAI ENDRAAL VANMAI ALளா
//THE FIRSTLADY TO SAY THAT BRAHMANISM IS TERRORIஸ்ம் .//

என்று ஆனாதிக்கம் கொப்பளிக்க ஸ்கிராப் போட்டுள்ளார்.

TERRORISM

 இவர் பார்ப்பனரா சூத்திரரா என்று தெரியவில்லை.ஆனால் இணையத்தில் நிறைய சூத்திரர்கள் பார்ப்பனர்களுக்காக‌ பேசுவதும்,எழுதுவதுமாக இருக்கிறார்கள்.பார்ப்பனர்களுக்கு கோபம் வருவதற்கு முன்னால் இந்த அடிமைகளுக்கு தான் முதலில் பொத்துக்கொண்டு வந்து விடுகிறது.உதாரணத்திற்கு கிரிமின‌ல் புக்ஷ்சை திட்டினால் மன்மோக‌னுக்கு வருவதை போல.

 

ஒரிசாவில் இன்று வரை இந்துமதவெறியர்கள் தாழ்த்தப்பட்ட,பழங்குடி மக்களின் வீடுகளுக்கு தீ வைத்து வெறியாட்டம் போட்டு வருகிறார்கள். ஆனால் இன்று வரை ஒரு மதவெறியன் கூட தண்டிக்கப்படவில்லை.


நாடு முழுவது போராடி உரிமைகளை பெற்றுத்தர ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் போது,உதாரணமாக விலைவாசி உயர்வு பெரும் பிரச்சனையாக உள்ளது ஆனால் இதையெல்லாம் ஒரு மூலையில் தூக்கி வீசிவிட்டு காக்ஷ்மீரில் அமர்நாத் கோவில் நிலப்பிரச்சணைக்காக கடந்த ஒரு சில‌ மாதங்களாக தேசிய வெறியை ஊட்டும் விதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தியதோடு வன்முறை வெறியாட்டமும் போட்டு வருகிறது பாசிச கும்பல். ஆனால் இந்த பாசிச வெறியர்களில் ஒருவனை கூட இந்த அரசு இதுவரை தண்டிக்கவில்லை மாறாக அமைதியாக போராட்டங்களை நடத்திய காக்ஷ்மீரி முசுலீம்களில் ஒரு ஆறு வயது சிறுவன் உட்பட மொத்தம் எட்டு பேரின் உயிரை குடித்திருக்கிறது கோழைத்தமான இந்திய இராணுவம். தமிழ்நாட்டில் இயக்குனர் சீமான் பேசிய கூட்டத்தில் துணிச்சலாக இந்துமதவெறியர்கள் முழக்கமிட்டபடி தாக்கியும் இருக்கிறார்கள் சி.பி.எம் போலி கம்யூனிஸ்டுகள் இந்து மத வெறியர்களிடம் அடி வாங்கிக்கொண்டு வெட்கங்கெட்டத்தனமாக பொன்னாடை வேறு போர்த்திக் கொள்கிறார்கள். ஒரிசாவை தொடர்ந்து தமிழ் நாட்டிலும் தேவாலயங்கள் தாக்கப்பட்டு வருகிறது.எச்சையிலை ராஜா என்பவன் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு பெரியாரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆகக்கீழ்த்தரமான மொழிகளில் தைரியமாக தமிழக‌ மேடைகளில் பேசி வருகிறான்.அவனுக்கு எதிராக‌ எந்த எதிர்வினையும் இல்லை.பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் பெற்றுத்தந்த‌ இடஒதுக்கீட்டால் படித்து பயன் பெற்று இன்று ஓரளவிற்கு மேல் நிலைக்கு வந்துள்ளவர்கள் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான‌வர்கள் இருந்தும்‌ இதற்கு எந்த எதிர்வினையும் இல்லை என்பது தான் அபாயகரமான சூழல்.எச்சையிலை ராஜா இவ்வாறு பேசிய அடுத்த நொடியே அவனை எச்சையிலையாக்கி பெரியாருக்கு தமது நன்றியை செலுத்தியிருக்க வேண்டாமா சொரணை உள்ள தமிழர்கள்.அவ்வாறு செய்யவில்லை என்பது மட்டுமில்லை.அதற்கு நேர் எதிராக வெட்கங்கெட்டத்தனமாக‌ பார்ப்பனர்களின் அணிகளில் போய் ஒட்டுண்ணிகளாய் வாழ முயற்சிக்கின்றன சில புழுக்கள்.

 

இது தான் மிகவும் அபாயகரமான சூழல்.வர்க்கம் என்கிற வகையில் ஓரளவிற்கு மேல் நிலைக்கு வந்துவிட்ட மிடிள் கிளாசுக்கு சாதிய மேல் நிலையும் தேவைபடுகிறது.தன்னுடைய வர்க்க நிலைக்கு தனது சாதி கீழானது என்று அவமானப்படும் சூத்திரன் பார்ப்பனனுக்காவது பிறந்திருக்கலாம் என்றும் கூட‌ கருதுகிறான் இனி பார்ப்பானாக முடியாத அவனுடைய “அவலமான” வாழ்க்கை சூழலில் பார்ப்பனனை போல ‘வந்துன்ட்ருக்கேன்’ ‘போயின்ட்ருக்கேன்’ என்று பேச்சை மாற்றுவது,பார்ப்பன கொண்டாட்ட நாட்களை தவறாமல் கொண்டாடுவது,சடங்குகளை கடை பிடிப்பது,எப்படியாவது ஒரு பாப்பானை தேடி பிடித்து நணபனாக்கிக்கொள்வது இந்த செயல்களின் மூலம் சூத்திர இழிவுகளை மறைத்துக்கொண்டு நடை முறையில் பார்ப்பானை போல வாழ முற்படுகிறார்கள்.

 

இதனுடைய எதிரொலி ஆர்க்குட்டிலும் பிரதிபலிக்கிறது.
ஆர்க்குட்டில் பல சூத்திரர்கள் பார்ப்பனர்களையும் இந்துமதத்தையும் தாங்கிப்பிடித்துக்கொண்டு தள்ளாடுகிறார்கள்.


இவ‌ர்களில் யாருக்கும் இந்துமதத்தை பற்றியோ அல்லது தன்னுடைய சாதியின் இழிவு பற்றியோ எதுவும் தெரிவதில்லை.இந்துமதம்,இந்துமதம் என்று இவர்கள் பேசுவது எல்லாம் பொது புத்தி என்பதிலிருந்து மட்டும் தான். இந்துமதத்தை பற்றிய ஒரு கேள்விக்கும் யாருக்கும் பதில் தெரியவில்லை அதற்கெல்லாம் ஒரே பதில் இந்து மதம் என்னுடையது இதை நான் நம்புகிறேன் என்னை யாரும் கேள்வி கேட்க வேண்டாம் என்னுடைய மதத்தை இழிவு செய்பவர்கள்,கேள்வி கேட்பவர்கள் மூசுலீம் ஆதரவாளர்கள் அவர்கள் இந்தியாவிலிருக்ககூடாது என்றும் கூட‌ இந்த கூமுட்டைகள் கூறுகின்றன. இவர்கள் தான் யானையை தடவிய குருடர்களோ?

 

HINDU BARBARIANS

HINDU BARBARIANS

 

இது போன்றவர்களுக்கு தாத்தா பாட்டி இருந்தால் அவர்களிடம் போய் கேளுங்கள்
“தாத்தா தாத்தா நாம என்ன சாதி,அந்த காலத்தில கோவிலுக்குள்ள நம்மள உள்ள‌விடுவாங்களா, உங்க அப்பா தாத்தா எல்லாம் படிச்ச்சாங்களா,யார் யாரெலாம் பெரிய வேலைகளில் இருந்‌தாங்க,”
என்று இந்துமதத்திற்காக பேச வருபவர்கள் முதலில் உங்கள் தாத்தா பாட்டியிடம் போய் கேட்டுப்பாருங்கள்.

 

இருண்டு கிடந்த இந்தியாவில் ஆட்டம் போட்ட பார்ப்பனர்களின் சாதி இனவெறித்தனம் என்ன என்பதை அறிந்துகொள்வீர்கள்.பிரிட்டீஸ் ஆட்சிகாலத்திற்கு பிறகு பார்ப்பன அடிமைத்தனத்தை நேரடியாக,கொடூரமான‌ முறைகளில் மனுவின் சொல்படி செலுத்த வாய்ப்பற்று போன பார்ப்பனியம் முழு நிலப்பிரபுத்துவம் சிதைந்து உருவாகி எழுந்த‌ நவீன காலத்திற்கு ஏற்ப அதன் ஜனநாயக தன்மைக்கு ஏற்ப‌ தன்னை தகவைமைத்துக்கொண்டு பழைய முறைகளில் தனது ஒடுக்கு முறைகளை செலுத்த வாய்ப்பற்று போனது. இதனால் பார்ப்பனியத்திற்குள் ஜனநாயக கூறுகள் வந்துவிட்டதாக கருதக்கூடாது.அது தனது பழைய ஒடுக்குமுறைகளை மீண்டும் இந்த நாட்டு மக்கள் மீது செலுத்த காத்திருக்கிறது.தற்காலிகமாக ஜனநாயக வேடமிடும் பர்ப்பனியம் தனது ராமராஜிய கன‌வை நிறைவேற்ற‌ பாஸிசமாக அவதாரம் எடுத்துள்ளது. அதுவரை தான் இந்துக்கள் சகோதரர்கள் அதன் பிறகு உனது சாதி என்னவோ அதற்கான தர்மம் என்னவோ அதை செய்ய வேண்டும். நாம் அவ்வளவு தூரமெல்லாம் போக வேண்டாம் குஜராத்தை நோக்கினாலே போதுமானது. மோடி என்கிற அந்த பாஸிஸ்ட் என்ன பேசினான் ‘பீ’ அள்ளினால் சொர்கத்திற்கு போகலாம் என்றான்.


அதுவரை தான் உன்னுடைய இந்துமதத்தை முட்டாள் தனமாக தலையில் வைத்து ஆடுவாய்.அதன் பிறகு பெரியார் காலத்தில் எப்படி இருந்ததோ அப்படி ஆகிவிடும்.
பெரியார் காலத்தில் எப்படி இருந்தது?

 

ஒரே வ‌ரியில் சொல்ல‌ வேண்டும் என்றால் உன் பிள்ளை உன் சொந்த‌ பந்த‌மெல்லாம் பார்ப்பானுக்கு எடுபிடி வேலையும், தோட்டி வேலையும் தான் செய்து கொண்டிருந்தது. வீட்டு வாசலில் கூட நிற்க விட மாட்டான்.

 

இதெற்கெல்லாம் மூல வேரான‌‌ இந்து ம‌தத்தின் அருமை பெருமைக‌ளை அறிந்து கொள்ள‌ வேண்டுமா ?

 

இதோ அதை 1940ல் தமிழ்நாடு ஆரியர் மாநாட்டுக்கு தலைமை வகித்த‌ பாக்ஷ்யம் அய்யங்கார் வாயாலேயே கேளுங்கள்.

 

“நாம் அனைவரும் ஆரிய மதத்தை சேர்ந்தவர்களாவோம் இந்துமதம் என்பதாக ஒரு மதம் கிடையாது.இந்து என்கிற பெயர் நமக்கு அன்னியர் கொடுத்ததே ஆகும். நாம் ஆரியர்கள்,ஆரிய பழக்க வழக்கங்களை அணுசரிக்கிறவர்கள்”

 

“கண்டவர்களையெல்லாம் நமது மதத்தில் சேர்த்து கொண்டதானது நமது மதத்தின் பலகீனமே ஆகும்”.


இது 1940ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி சென்னை திருவலிக்கேனியிலுள்ள மணி ஐய்யர் மண்டபத்தில் நடந்த தமிழ்நாடு ஆரியர் மாநாட்டில் பேசியதாகும்.


இவை தி இண்டு,மெயில்,சுதேசமித்திரன்,தினமணி,விடுதலை ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

 

இதையெல்லாம் கேட்ட‌ பிற‌கு,இவற்றை படித்த பிறகு என‌து த‌மிழ் இனத்தை சேர்ந்த‌ ச‌கோத‌ர, ச‌கோத‌ரிக‌ள் இந்து ம‌தம் பற்றியும் அதன் மனித குல விரோத வரலாற்றையும் படித்து அறிந்துகொள்ள வேண்டும். அந்த அறிதலின் துவக்கத்திலே அது எப்படிபட்ட சாக்கடை என்ப‌தையும் அந்த‌‌ கொலைகார‌ ம‌த‌ம் ச‌ம்புக‌ன்,ஏக‌லைவ‌ன் என்று தொட‌ர்ச்சியாக‌ ந‌ம‌து பாட்ட‌ன்மார்க‌ளின் உயிர்க‌ளை அநீதியாக‌ ப‌றித்தெடுத்த‌தையும் அறிந்து கொள்வீர்க‌ள்.‌


அது நம்முடைய மதம் அல்ல என்பதையும் அறிந்து கொள்வீர்க‌ள்.


இந்த‌ ப‌திவு சில‌ருக்காவ‌து இந்தும‌த‌ம் ப‌ற்றிய‌ ஒரு உண்மையான‌ தேட‌லை நோக்கித்த‌ள்ளும் என்று க‌ருதுகிறேன்.


மீண்டும் இந்து ம‌த‌த்திற்காக, என்ன இருந்தாலும் அது நம்முடைய மதம் என்று விள‌க்க‌ம் த‌ர‌ வ‌ருப‌வ‌ர்க‌ள் தாராள‌மாக‌ வ‌ர‌லாம் த‌க்க‌ சான்றுக‌ளுட‌ன்.‌

http://brahmanicalterrorism.wordpress.com/2008/10/07/83/#comments