மும்பாயில் கடந்த 26-ம் தேதி நடந்த இந்தியாவின் பாதுகாப்பு குறித்த அச்சம் தேசம் முழுவதும் கிளறி விடப்பட்டு இருக்கின்றது.”பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக போட் மூலம் தீவிரவாதிகள் வந்தனர்.அங்கிருந்து சென்று ஓபராய்,தாஜ், நாரிமன் போன்ற கலாச்சார பெருமை மிக்க வெளினாட்டினருக்காகவே சேவை செய்து கொண்டிருந்த பாரம்பரிய சின்னங்களை குறி வைத்து தாக்கி,9 அமெரிக்கர்கள் உட்பட சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர்.NSG படை வீரர்கள் தான் இந் நாட்டின் பாரம்பரியமிக்க வீரத்தை காட்டி மானத்தை கட்டிக்காத்தனர்.” இவை தான் ஊடகங்களில் வந்த செய்தி.
தாக்குதல் நடந்து 4 நாட்களாகியும் பத்திரிக்கைகள்,t.vக்கள்” நாடு இப்படி அவமானப்பட்டு விட்டதே ,அதுக்கு என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் தீவிரமாய் இருக்கின்றன.இத்தாக்குதலுக்கு தார்மீக பொறுப்பேற்று உள் துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில்,மகாராட்டிர முதல்வர் ,துணை முதல் வர் ஆகியோர் பதவி விலகி யுல்ளனர்.ஆனால் ஊடகங்களோ “இது பத்தாது இன்னும் வேணும்” என ஒப்பாரி வைக்கின்றன நம்மையும் ஒப்பாரி வைக்க சொல்கின்றன.பார்ப்பன ஊடகங்கள் வழக்கம் போல தொடர்ந்து தலையங்கங்களை தீட்டி வருகின்றன.இத்தாக்குதலுக்கு காரணங்களையும் தீர்வுகளையும் வைக்கின்றன.அதன் படி செயலிழந்த நிர்வாகம்,பொறுப்பற்ற தலைமை போன்றவையே இதற்கு காரணம்,தீர்வுகளாக தனி புலனாய்வு அமைப்பு, நாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு,தயவு தாட்சண்யமின்றி விசாரணைக்கு உட்படுத்துதல் ஆகியன வைக்கப்படுகின்றன.மேலும் பங்கு சந்தை சரிவு முதல் சுற்றுலா ஹோட்ட்ல் வளர்ச்சி பாதிப்பு வரை “எல்லவற்றுக்கும் பயங்கரவாதமே காரணம் , நாட்டை முன்னேற்ற பயங்கரவாத்தை வேரறுக்கவேண்டும்.
பயங்கரவாதத்தை வேரறுக்க ஒரே வழி பாகிஸ்தான் மீது போர் தொடுக்கவேண்டும் அல்லது அங்கே உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்.அமெரிக்கா எப்படி தனது “இறையாண்மையை காக்க ஆப்கன் மீது போரிட்டதோ அது போல இந்தியாவும் போரில் இறங்க வேண்டும்” என்ற பார்ப்பன கோட்பாட்டினை பொது கருத்தாக்கும் பணியில் பத்திரிக்கைகளும்,பண்டாரங்களும் ஈடுபட்டிருக்கின்றன.
பயங்கரவாதத்தை வேரறுக்கவேண்டும் என்பதில் நமக்கும் வேறு கருத்துஇல்லை.ஆனால் எது பயங்கரவாதம்? . நாட்டையே அச்சுறுத்திவரும் மாபெரும் பயங்கரவாதம் பார்ப்பன மதவெறி பயங்கரவாதமே .நாட்டில் மதவெறி பயங்கரவாதம்,மறு காலனிபயங்கரவாதம்,அரசு பயங்கரவாதம் போன்றவைகள் நிகழ்த்தபடாத ஒரு நாளை கூட காண முடியாது.
மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் எதிர்க்கப்படவேண்டியதே.இதற்கு மூலக்காரணத்தை தோண்டியெடுக்காமல் தீர்வை தேடுவதி பலனில்லை.
1947க்குமுன் இருந்ததை விட 1947 aug 15க்குப்பின் சிறுபான்மைமக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டது.அன்று முதல் இன்று வரை பல தாக்குதல்கள், நடந்து கொண்டிருக்கின்றன.இதற்கு பலியான அம்முசுலீம் மக்களே சிறையிலடைக்கப்பட்டனர்.தொடர்ச்சியான பகல்பூர்,அயோத்தி,கோவை போன்ற சிறுபான்மைமக்கள் மீதான தாக்குதலுக்கு பிறகு சில இசுலாமிய பயங்கரவாத குழுக்கள் தோன்றின.வினைக்கு எதிர் வினை என்ற வகையில் சில செயல்களில் ஈடுபட்டனர்.இதுவே இசுலாமிய மக்கள் மீதான வரைமுரயற்ற தாக்குதலுக்கு சாக்கு காட்டி இந்து பயங்கரவாதிகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.கோவை,மும்பை குண்டு வெடிப்புக்களில் சற்றும் தொடர்பில்லாத அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.பலருக்கும் கைது செஇது நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது தான் தான் ” தான் தீவிரவாதி” என தெரிந்தது.1948 காந்தியை பார்பான கோட்சே கொன்றிருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் , பார்ப்பன வெறியர்கள் திட்டமிட்டு சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தினர் அன்று முதல் தற்போது நடந்து வரும் பாசிச வெறியாட்டங்கள் வரை அரசின் பாதுகாப்போடு இவை திட்டமிட்டு நடக்கின்றன. கோவை வழ க்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது அன்சாரி உள்ளிட்ட பலரும் ஆயுள் தண்டனைகளில் இருக்க,பாபர் மசூதி வழக்கின் முக்கிய குற்றவாளியான அத்வானி துணை பிரதமராகவும், உமா பாரதி ம.பி.முத்ல்வராகவும் ஆகிவிட்டனர்.இப்படி சிறுபான்மைமக்களின் மீது தாகுதல் தொடுக்கும் அமைப்புகள் அரசை கைப்பற்றிவிட்டன,மீண்டும் கைபற்றவும் முயல்கின்றன.
————————————————————————————
டாடா இந்தியாவின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை வெளிப்படுத்தியதாக ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளி வந்தது.டாடா மட்டுமல்லபிற பார்ப்பன ஊடகங்களுக்கும் இந்திய நாட்டின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் வந்திருக்கின்றது.இந்திய உழைக்கும் மக்கள் தங்கள் பாதுகாப்பின்மையை நாள்தோறும் மக்கள் உணர்ந்து வருகின்றனர்.டாடாவின் ஹோட்டல் குழுமத்தின் 50% லாபத்தை தாஜ் தந்தது.அதை 5 நாட்கள் மூட வேண்டி வந்தவுடன் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து சிந்திக்கும் அளவுக்கு கொண்டுசென்றதை நாம் உணரலாம்.
“ஒரு முதலாளி தன் மூலதனத்தின் பாதிப்பை தேசத்தின் பாதிப்பாகவும்,தன் இழப்பை தேசத்தின் இழப்பாகவும் மாற்றுகின்றான்.”டட நந்திகிராமில் கார் ஆலையைதொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் கொல்லப்பட்டார்களே அதை விட அந்த ஆலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதுதான் தேசிய அவமானமாக கருதப்பட்டது.அப்போது ஊடகங்கள் கீழ் கண்டவாறு எழுதின”ஒரு நாட்டின் முன்னேற்றம் தடை படுகின்றது”. ஒரு முதலாளியின் வளர்ச்சி தடை படுமெனில் அது நாட்டின் வளர்ச்சியை தடை செய்ய்யப்படுவதற்கு சமம்”.மிட்டல் ஆர்சிலரை வளைத்தபோது “இந்தியா கண்டிப்பாய் வல்லரசு ஆயிடும் என் பத்திரிக்கைகள் புளங்காகிதம் அடைந்தன.மூலதன நலனுக்காக மேற்கொள்ளும் எந்த ஒரு நலனும் தேசிய நலனுக்கானதே. ஹோட்டல் பற்றி எறிந்தவுடன் நாடே பற்றி எறிவது போல் கனவு கண்ட டாடா நாட்டுக்கே தீப்பற்ற வைக்கச்சொல்கிறார்.உடனே தேசிய பாதுகாப்பு குறித்த விவாதத்தை கிளறியிருக்கின்றன. .இந்த ஊடகங்கள் எப்போதும் மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியதில்லை.
நந்திகிராமில் நடந்த கார் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது முடிவாகவில்லை,தோண்டுவது மீண்டும் தொடங்கினால் எண்ணிக்கை அதிகமாகும்.மார்க்சிஸ்டு குண்டர்கள் செய்த கொலையும், பாலியல் வன்முறைகளும் மக்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை உண்டு பண்ண வில்லை.ஆனால் கோத்ரா சம்பவம் தேசிய அளவிலான இந்துக்களின் பாதுகாப்பை புதியதாய் கோரியது.கோத்ராவை வெற்றிகரமாக நடத்திய ஆர்.எஸ்.எஸ் கும்பல் குஜராத்தில் 3000 முசுலீம் மக்களை கொன்று குவித்தது.அப்போது மருந்துக்குகூட முசுலீம் மக்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழவேயில்லை.
விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு கொண்டிருப்பதால் இதுவரை லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைசெய்துகொண்டிருக்கின்றார்கள்.விதர்பாவில் கோடை காலம்,மழை காலம் போல “போஸ்ட்மார்டம் சீசன் ” என்று ஒன்று இருக்கின்றது.அது பருத்தி பூ பறிப்பு காலம்.அக்காலத்தில் விவசாயிகளின் பிணங்கள் போஸ்ட்மாடர்த்திற்காக மருத்துவமனையில் இறைந்து கிடக்கும்.இது என்றாவது பத்திரிக்கைகளில் விவாத பொருளாகியிருக்குமா?வாரந்தோறும் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பிடுங்கி எறியப்பட்டு கொண்டிருக்கின்றார்களே அது தான் தேசிய விவாதமாகியிருக்குமா?இல்லை செத்து போன மாட்டின் தோலை உரி¢த்ததற்காக 5 தலித்துகள் கொல்லப்பட்டார்களே அப்போது ஒருவன் சொன்னான்”கோமாதாவை விட 5 தலித்துகள் உயிர் பெரிதல்ல”என்றானே அப்போதும் கயர்லாஞ்சி,மேலவளவு,உள்ளிட்ட உழைக்கும் மக்கள் மீதான் வன்முறைகள் எப்போது தான் தேசிய அளவிலான பாதுகாப்பு குறித்த விவாதமாகியிருக்குமா?மாலேகானி குண்டு வைத சாமியாரை விடுதலை செய்ய சொல்லும் பிஜேபி-ன் மீது குறைப்த பட்சம் நம்பிக்கயை குறித்த சந்தேகமாவது எற்பட்டிருக்குமா என்ன?
இப்படி எத்தனை பேர் செத்தாலும் அது தேசிய விவாதமாகியிறாது.அவைஅதற்கான தகுதியை பெறாது.அதன் தகுதியை நிர்ணயிப்பது பார்ப்பன பணியாக்களே.
—————————————————————————————–
மும்பைதாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தமைக்காக ராணுவ, NSG வீரர்களுக்காக நாம் பெருமைப்படமுடியுமா? பெருமைப்பட முடியுமெனில் குஜராத்தில் 3000 முசுலீம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டதற்காக நாம் அவமானப்பட்டே ஆக வேண்டும்.ராணுவம், NSG எப்போதும் மக்களுகெதிராகவே இருக்கின்றன. இவை தான் இந்த பாசிச அரச உறுப்புக்கள்.அரசின் கூலிப்படைகள் .அசாம்,காசுமீரிகளை கொன்று அப்பெண்களை பாலியல் வன்முறை செய்ததற்காகவும்,மனோரமாவின் உடலெங்கும் குண்டுகளை பதித்தற்காகவும் அவைகள் பரிசுகளை வாங்கி குவித்தன.மும்பை தாக்குதலில் தனது வீரத்தை காட்டியவர்கள் தான் மேற்கண்ட வேலைகளையும் செய்தனர்.இப்பாதக செயல்களுக்காக ,அரசோ வெட்கி தலைகுனியவில்லை,மாறாக தலையை நிமிர்த்தி வெற்றிக்களிப்பில் மிதந்தன.பத்திரிக்கைகளோ வாயே திறக்கவில்லை.ஆம் ஆளும் வர்ர்கங்களின் எச்சில் எலும்புகளுக்கு அலையும்
இவர்களால் எப்போதும் பாசிசத்தை எப்படி நேர்த்தியாக கொண்டு செல்ல முடியும் என்று ஆலோசனைதானே கூறமுடியும்.
———————————————————————————-
26/11 என்ற புது code அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.எப்படி 9/11 என்ற முத்திரை உருவாக்கப்பட்டு ஆப்கன்,ஈரக் மீது போரின ஏவப்பட்டதோ அதே நோக்கத்தோடு இந்த புது முத்திரை உருவாக்கப்பட்டுள்ளது.எப்படியும் பாகிஸ்தான் மீது போர் வெறியூட்டி மீண்டும் ஆட்சியை பிடிக்க பார்ப்பன கும்பல்கள் பரபரப்பாய் செயல் படுகின்றன.செத்துபோன உழைக்கும் மக்களை விட அயல் நாட்டினர் இழப்பு,கலாச்சார சின்னங்களின் மீதான் பாதிப்பே பேரழிவாக முன்னிருத்தப்படுகின்றது.புது ஆண்டான் ஒபாமாவோ பச்சை கொடி காட்டி விட்டார்”தனது பாதுகாப்புக்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு”.பார்ப்பன பாசிஸ்டுகளோ நாக்கை தொங்கபோட்டபடி காத்திருக்கின்றார்கள்.
மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பது போல மறுகாலனியும், பார்ப்பனபாசிசமும் வாசிப்பை தொடர்கின்றன. மறுகாலனிக்கும், பார்ப்பனபாசிசத்திற்கு தடையை இருப்பது கூட பயங்கரவாதமாக சித்தரிக்கப்படுகின்றன.மதவெறியை மறுப்பவர்களும் எதிர்த்து எழுதுபவர்களும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.போதாகுறைக்கு வலைத்தளங்களில் சைபர் கிரைமிற்கு புகார் தரச் சொல்லி சிபாசிசு வேறு. நம்புங்கள் இது தான் உலகின் மாபெரும் சன நாயகம்.