பம்பாய் தாக்குதலை நடத்தியவர்கள், இந்து பயங்கரவாத அடையாளங்களை  தரித்திருந்தனரே, ஏன்!?

 

பம்பாய் தாக்குதலை நடத்தியவர்கள (முஸ்லீம் தனிநபர் பயங்கரவாதம் மூலம்), இந்து பயங்கரவாத அடையாளங்களையே தம் கவசமாக பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. இதன் மூலம் தான் மிக வெற்றிகரமான, முழு உலகை அதிரவைத்த ஒரு தாக்குதலை அவர்கள் இலகுவாக நடத்த முடிந்தது.

இதுவும் எமக்கு ஒரு தெளிவான செய்தியைத் தருகின்றது. இந்து பயங்கரவாதிகள் தம்மை அடையாளப்படுத்தும் அடையாளங்களை 'பயங்கரவாதிகள்" தரித்ததன் மூலம், இலகுவாக அவர்கள் தம் இலக்கை அடையமுடியும் என்பதை நிறுவியுள்ளது. கடலில் தொடங்கி ஆடம்பர சொகுசு விடுதி வரை சுதந்திரமாக தாக்குதலை நடத்திச் செல்ல அனுமதித்துள்ளது.

 

இந்து பாசிச பயங்கரவாதிகள் நடத்திய பாபர் மசூதி தகர்ப்பாகட்டும்;, குஜராத் படுகொலையாகட்டும், இந்தியாவெங்கும் அவர்கள் சில குறிப்பான அடையாளச் சின்னங்களை தரித்தபடிதான், தாக்குதலை நடத்தினர், நடத்துகின்றனர்.

 

இதன் மூலம் தாம் யார் என்;பதை பறைசாற்றியபடி தான் செயல்படுகின்றனர். சட்டம், நீதி இவர்களின் அடையாளம் மூலம் பயங்கரவாத செயலைக் கண்டகொள்ளாது இருப்பதுடன், இந்து பயங்கரவாதத்துக்கு ஆதரவாக தலைவணங்குகின்றது.

 

இதைத்தான் பம்பாய் தாக்குதலை நடத்திய தனிநபர் முஸ்லீம் பயங்கரவாதக் குழு, மிக நுட்பமாக பயன்படுத்தி பார்ப்பனிய பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

 

இந்து பயங்கரவாதிகள் அணியும் அடையாளம் மூலம், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட கிடைக்கும் சுதந்திரம், அனைத்து அரசு இயந்திரத்தையும் செயலிழக்கவைக்கும் அளவுக்கு மிகப் பலமானது. சட்டம், நீதி அதற்கு இலகுவாக வளைந்து கொடுக்கும். இந்திய அரசே காவிமயமாகி, இந்து பயங்கரவாதத்தின் முதுகெலும்பாக இயங்குவதை, தாக்குதலை நடத்தியவர்கள் தம் இலக்கை அடைய தம்மை மறைத்துக் கொண்ட வழிமூலம் உலகுக்கு நிறுவிக் காட்டியுள்ளனர்.

 

இதன் மூலம் தான், முஸ்லீம் தனிநபர் பயங்கரவாதம், இந்தியாவின் பொருளாதார தலைநகரான பம்பாயை அதிரவைத்தது. இந்து பயங்கரவாதம் தான், இந்தத் தாக்குதலை வழிநடத்தியுள்ளது.

 

பி.இரயாகரன்
30.11.2008