NLFT யின் வரலாற்று தொடர்ச்சி...
குமரன்
1983இல் மத்திய குழுவுக்கு தெரிவு செய்யபட முன்பே இவர் பிரதேசக் கொமிட்டியில் இருந்தவர். இவர் தீவிர இயஙகு சக்தியாக செயல்பட்டவர். 1980-81 முதல் என்-எல்-எவ்-டியில் வேலை செய்தார்.
மார்க்;சிசத்தில் ஆழாமான அறிவைக் கொண்டிருக்காவிட்டாலும் அனைத்து விடயங்களிலும் தீவிர விமர்சகராக இருந்தவர். சில வேளைகளில் தன்னிச்சைப் போக்கை கடைப்பிடிப்பார் இவர் ஒரு ஸ்தாபகர் என்ற நிலையை விட்டு இவர் ஒரு ஊழியராக எப்போதும் செயற்பட்டவர். எந்தப் பிரச்சனை மீதும் உடனடியாக விமர்சனத்தை முன்வைப்பதுடன், அமைப்பில் நெருக்கடி ஏற்படும் போது உடனடியாக முடிவுகளை எடுக்கக் கூடியவர். அமைப்பின் நெருக்கடியின் போது போராட்டங்களில் முன்னிலை நின்று போராடுபவர், இவர் 1987 ஆரம்பகாலங்களில் இருந்து படிப்படியாக ஒதுங்கிக் கொண்டவர்.
.ஜோர்ஜ்
இவர் 1980-81 இற்கு முதலே என்-எல்-எவ்-டி யில் வேலை செய்தவர். இவர் 1983 இல் மத்திய குழுவுக்கு தெரிவு செய்யப்பட முன் பிரதேச கொமிட்டியில் இருந்தவர். இவர் மார்க்சியத்தில் ஆழமான அறிவை கொண்டிருக்காவிட்டாலும், ஒரு ஸ்தாபகர் என்ற நிலைக்கப்பால் ஒரு ஊழியராகவே கூடுதலாக செயற்பட முனைந்தவர். இவர் 1983 இல் மத்திய குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டவுடன் மத்திய குழு செயலாளாராக தெரிவு செய்யப்பட்டார். இதற்கான தகுதியில்லாமலேயே இத் தெரிவு நிகழ்த்தப்பட்டது. இதைச் செய்வதில் விசு, ராகவன் என்ன நோக்கு நிலையில் நின்று செய்தார்கள் என்பதை கட்டுரையின் தொடர்ச்சியில் ஆராய்வோம். இவர் எபபோதும் நெருக்கடியின் போது முடிவுகள் எடுப்பதில் தயககம் காட்டுவார். மத்திய குழு அல்லது மத்திய குழுவில் வேறொருவருரின் துணையுடனேயே எப்போதும் முடிவெடுப்பபவர். அவர் தனக்கு என்ற வேலையில் தீவிர இயங்கு சக்தியாக செயற்பட்டவர். இவர் 1987 இன் ஆரம்பத்திலிருந்து படிப்படியாக அமைப்பிலிருந்து விலகினார்.
சண்முகம்
இவர் 1984 இல் என்-எல்-எவ்-டி யின் மத்திய குழுவிக்குத் தெரிவு செய்யப்பட்டவர். இவர் 1984 இன் ஆரம்பத்தில் அமைப்பில் இணைந்து கொண்டவர். இவர் முன்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர். அவ் வமைப்பின் ஆரம்பகால உறுப்பினர். இவர் இந்தியாவில் என்-எல்-எவ்-டியின் நிதி இராணுவப் பொறுப்பாளராக இருந்தவர். இவர் மார்க்சிச அறிவை பெரிதாக கொண்டிருக்காவிட்டாலும், தீவிர விமர்சகராக இருந்தவர். தீவிர இயங்கும் தன்மை கொண்டவர். ஊழியர்களின் பால் மிகுந்த அக்கறையுடைய இவர் அமைப்பை நிர்வகிக்கும் தன்மையைக் கொண்டிருந்தார்;. இவர் என்-எல்-எவ்-டியில் இணைந்த பின் ஈழத்தில் வேலை செய்யாதமையால் இவரின் அரசியல் வளர்ச்சி மட்டுப்படுத்தப்படு விட்டது. இவர் 1988 இல் அமைப்பிலிருந்து விலகினார்.
1983 இல் மேதினம் என்-எல்-எவ்-டி-யினால் கிளிநொச்சியில் நடத்தப்பட்டது இது கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக நடாத்தப்பட்டது. இக்கூட்டம் அன்று பொலிஸினால் சற்றி வளைக்கப்பட்டு கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டது.
1983 இல் முந்திய காலத்திலிருந்தே மாணவர் அமைப்பு, பெண்கள் அமைப்பு என்பன கட்டப்பட்டன. இவற்றை கட்டுவதில் என்-எல்-எவ்-டி நேரடியாகவே செயற்பட்டது. இவ் வமைப்புக்களை கட்டுவதில் எந்தவொரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. இப்படி திட்டம் இன்றி உருவான மாணவர் அமைப்பில் பலர் பின்னால் என்-எல்-எவ்-டி வேலை செய்தனர் தனியொரு பகுதியாக மாணவர் அமைப்பு இல்லாமையினால் அத் தொடர்புகள் படிப்படியாக அறுபட்டுப் போய்விட்டது. இன்னொரு பகுதியினர் பல்வேறு இயக்கங்களில் இணைந்தும் கொண்டனர். என்-எல்-எவ்-டியில் இணைந்த மாணவர்கள் பின் என்-எல்-எவ்-டி உருவாக்கிய புதிய ஜனநாயக மாணவரமைப்பில் வேலை செய்தனர். பாடசாலைகளை முடித்தவர்கள் என்-எல்-எவ்-டி யின் இளைஞரணியான முற்போக்கு இளைஞரணியில் இணைந்து செயற்பட்டனர். உருவாகிய பெண்கள் அமைப்பு பெண்விடுதலை தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. பெண்கள் கொண்ட அமைப்பு வடிவத்தை மட்டும் கொண்டு பெண்கள் இணைக்கப்பட்டனர். இப் பெண்கள் அமைப்பு அரசியல் அறிவெதையும் பெரிதாக கொண்டிராத நிலையில் அவ் அமைப்பை பிரபாவே கூடுதலாக வகுப்புக்களையும் மற்றும் நெறிப்படுத்தல்களையும் செய்தார். இதில் மூன்று நான்கு பெண்கள் ஓர் அளவு வளர்ச்சி நிலையையடைந்தனர். பின் இவர்களே யாழ் மாவட்டத்தின் பல பாகங்களில் பெண்கள் அமைப்புக்களை உருவாக்கினர். அதே நேரம்(சக்தி) ஒரு பெண்கள் சஞ்சிகை வெளியிடப்பட்டது. இது ஒரு இதழ் மட்டுமே வெளிவந்தது. இச்சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரைகளில் பெரும்பாலானவை ஆண்களாலேயே எழுதப்பட்டது. வடமராட்சியில் தெங்குபனம் பொருள் கூட்டுஸ்தாபனத்தில் வேலை செய்த பெண்கள் ஒரு பெண்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ் அமைப்பில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் அரசியல் கதைக்க முற்பட்டபோது கூக்குரலிட்டு தடுக்கப்பட்டது. இந் நிகழ்வைத் தொடர்ந்து பெண்கள் அமைப்பில் அரசியல் தரம் பற்றியும், திட்டம் தொடர்பாகவும் கேள்விகள் எழுந்தது. இப்படியான பெண்கள் அமைப்பின் அவசியமின்மையைச் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அரசியலில் முன்னேறிய பெண்கள் மட்டும் தொடர்ந்தும் அமைப்புடன் இயங்கினர். உருவாகிய பெண்கள் அமைப்பு கைவிடப்பட்டது. அது இயல்பாக செயலிழந்து போனது. எஞ்சிய பெண்கள் (10ற்கு உட்பட்ட) தொடர்ந்து என்-எல்.-எவ்-டி யுடன் இணைந்து வேலை செய்தனர். பின்னால் இவர்கள் ஒரு பெண்களமைப்பை உருவாக்கவில்லை. என்-எல்-எவ்-டி- யும் உருவாக்கிக் கொடுக்கவில்லை. ஆனால் அமைப்பில் மத்திய குழுவில் இருந்த சிலர் தனியான பெண்களமைப்பின் தேவையை உணர்ந்தாலும் நாட்டில் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் தனியான பெண்களமைப்பின் உருவாக்கத்திற்கு தடையாகவும் இருநதது.
1983 இல் என்-எல்-எவ்-டி யின் உருவாக்கத்தின் முன்பே பகிரங்கமாக வெளிப்பட முடியாத கருத்துக்களைத் தாங்கிய ஒரு பத்திரிகை வெளிவந்தது. அப் பத்திரிகையின் பெயர் பயணம் ஆகும். அது என்-எல்-எவ்-டியால் வெளியிடப்பட்டது. இப் பத்திரிகை என்-எல்-எவ்-டி க்குள்ளும் வெளியிலும் முன்னேறிய சக்திகளுக்கு விநியோகிக்கப்பட்டது. இப் பத்திரிகை 4 இதழ்கள் மட்டும் வெளிவந்தது. 4ம் இதழ் வெளியிடப்படாமல் முற்றாக எரிக்கப்பட்டது. இவ் இதழில் (4ம் இதழ்) அமைப்பிற்கு வெளியிலிருந்த சேரனால் சேகுவோராவின் போராட்டத்தை ஆதரித்து கட்டுரை எழுதப்பட்டது. இவை தனிநபர் பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. கியூபா புரட்சி தனிநபர் பயங்கரவாதத்தின் மூலம் பெற்றுக் கொண்டதை நியாயப்படுத்துவது, ஈழத்தில் தனிநபர் பயங்காரவாதத்தை, அது சார்ந்த குழுக்களை அங்கீகரிப்பதில் இட்டுச் செல்லும் என்ற விமர்சனத்தினூடாக பயணம் இதழ் எரிக்கப்பட்டது.
1983 இல் மாநாட்டைத் தொடர்ந்து ஒரு பத்திரிகை வெளியிடப்படுவதென முடிவெடுக்கப்பட்டதையடுத்து இலக்கு எனும் இதழ் இந்தியாவிலிருந்து வெளிவந்தது. இவ் விதழ்கள் 1986 இல் 6 இதழ்களும் 1988 இல் ஓரிதழும் வெளிவந்தது. இவ ;விதழ்களின் கட்டுரைகள் ஒரு சில இலங்கையில் எழுதப்பட்டாலும், பெரும்பாலானவை இந்தியாவிலிருந்து விசுவால் எழுதப்பட்டவையே. விசுவின் கட்டுரைகள் தொடர்பாக அமைப்புக்குள் முரண்பாடுகள் கூட இருந்தன. இலக்கு இதழ்கள் விற்பனைக்கு என்று தயாரிக்கப்பட்ட போதிலும் நடைமுறையில் இலவசமாவே விநியோகிக்கப்பட்டது. 1984 இல் இப் பத்திரிகைக்கப்பால் இலங்கையிலிருந்து செய்திகளைக் கூடுதலாகக் கொண்ட முன்னணிச் செய்தி என்னும் பத்திரிகை வெளியிடப்பட்டது. இப் பத்திரிகையை அமைப்பினால் வெளியிடும் பொறுப்பை சிறீ என்பவர் கொண்டிருந்தார். இப் பத்திரிகை 7 இதழ்கள் வெளிவந்தன. இவ்விதழ்கள் றோனியோ செய்யப்பட்டே வெளியிடப்பட்டது. பின் 1986 இன் ஆரம்பத்தில் என்-எல்-எவ்-டி க்குள்ளிருந்த கட்சியினால் லெனினிசம் எனறொரு பத்திரிகை வெளியிடப்பட்டது. இப் பத்திரிகையில் முழுமையாக அரசியல் கட்டுரைகளையே தாங்கி ஒரேயொரு இதழ் மட்டுமே வெளிவந்தது.
1983 முடிந்தவுடன் விசு, சிறீ உட்பட நான்கு பேர் இந்தியா அனுப்பப்பட்டனர். மற்றைய இருவரும் இராணுவத்தைச் சேர்ந்தோர். அவர்கள் இருவரும் ஆயுதம் சேகரித்தல், பயிற்சி முகாம் தயாரித்தல்;;;;;....போன்ற வேலைகளுக்காக அனுப்பப்பட்டனர். சிறீ இந்தியாவில் பகிரங்க தொடர்புகளுக்கும், பகிரங்க வேலைக்கும் என அனுப்பப்பட்டார். இவர்கள் இந்தியா செல்வதற்கு முன்பே விசு அங்கு நீண்டகாலம் இருந்தவர். இவர்கள் நால்வரும் நெடுந்தீவிலிருந்து வள்ளம் மூலம் இந்தியா செல்ல நெடுந்தீவு சென்ற போது நால்வரும் செல்வதற்கு வள்ளம் கிடைக்காமையினால் விசும், சுரேனும் முதலில் இந்தியா சென்றனர். சிறீயும், ரமேசும் ஒரு வாரத்தின் பின்பே வள்ளம் மூலம் சென்றனர். இவர்கள் சென்ற வள்ளம் இடைநடுவில் பழுதுபட்டதனால் 4---5 மணிநேர தாமதத்தின் பின்பு இராமேஸ்வரம் கரையில் இறக்கப்பட்டனர். இவர்கள் உடமைகள் யாவும் அவ்வூரிலிருந்த சிலரால் வழிமறித்துப் பறிக்கப்பட்டன.
இந்தியாவில் விசுவுடன் இணைந்து கொண்ட இவர்கள் விசுவின் இந்திய நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினர். அவருடன் மேலும் இருவர் இருந்தனர். அந் நண்பரின் பொருளாதார நெருக்கடிக்குள் நாம் அவரைச் சார்ந்திருந்தோம். எம் கைகளிலும் பெரிதாகப் பணம் இருக்கவில்லை. நாம் சாப்பிடுவதற்குக் கூட பணமில்லாத நிலையில் அவர்கள் சமைப்பதில் இரவில் தரும் உணவுடன் ஒரு மாதம் ஒடியது. எமது அடுத்தகட்ட வேலைக்கு பணம் இலங்கையிலிருந்து (ஒருகொள்ளையினூடாகவே) எதிர்பார்க்கப்பட்டது. அதாவது குறித்த திகதிக்கு முன் பணம் அனுப்புவதாக கூறிய உத்திரவாதத்தை மட்டும் கொண்டு சில அடிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இந்தியாவில் இருந்தோர் பயிற்சி முகாம் போடுவதற்கென்று சில இடங்களைக் கூட சென்று பார்த்தனர். அங்கு செல்வதற்காக கையிலிருந்த அனைத்துப் பொருட்களும் விற்கப்பட்டன. ஊட்டி வரை சென்று சில காடுகன் தொடர்பாக ஆராயப்பட்டது. அங்கு விசுவுக்கு நண்பர்கள் இருந்தனர். இப்படி பார்க்கப்பட்ட காடு தொடர்பாக இராணுவம் சார்பாக வந்த ரமேஸ் இவ்வளவு தூரம் நடந்து சென்று பயிற்சி எடுக்க வேண்டுமா? கால் உளைகிறது என்று சொல்லி ஒரு கடினமான போராட்டத்துக்கு தயாரின்மையை நடைமுறையில் காட்டினார். இவர் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமாவார். இவரின் இச் செயற்பாடு தொடர்பாக விசு,சிறீ, சுரேன் ஆகியோரால் விமர்சிக்கப்பட்டது.
மேலும் விசு நக்சல்பாரி குழுவான (மக்கள் யுத்தக் குழுவுடன்) தொடர்பு வைத்திருந்தார். அவர்கள் மூலம் ஒரு வீடு எடுக்கப்பட்டு நால்வரும் அவ் வீட்டில் தங்கினர். இக் காலத்தில் மக்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் என்-எல்-எவ்-டி யில் அடிக்கடி தொடர்பு கொண்டு விவாதித்தார். இந் நிலையில் முன்பு புலிகளிலிருந்த சண்முகம் என்பவருடனும் தொடர்ந்து விவாதித்தோம். அதை தொடர்ந்து அவர் என்-எல்-எவ்-டியுடன் இணைந்து வேலை செய்ய முன் வந்தார். அங்கு ஏற்பட்ட பண நெருக்கடியைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து பணம் வராமையால் விசு நாடு திரும்ப முடிவு செய்தார். பணம் நெருக்கடி ஏற்படின் சண்முகத்திடம் கோரும்படி கூறிச் சென்றார். விசு நாடு திரும்பும் போது சிறீயையும் கூட்டிசசென்றார். விசு, சிறீ நாடு திரும்பியபோதும் அங்கு எக் கொள்ளைகளும் செயற்பட்டு இருக்கவில்லை. அமைப்பு மொத்தத்தில் நிதி நெருக்கடிக்குள் மூழ்கியிருந்தது.
விசு சிறீ நாடு திரும்பியவுடன் கூட்டப்பட்ட மத்திய குழுக் கூட்டத்தில் மத்திய குழுவுக்கப்பால் ராகவனும் கலந்து கொண்டார். நிதி நெருக்கடியைத் தீர்க்க மிக விரைவில் கொள்ளைகளுடாகத் தீர்ப்பதாக கூறி உத்திரவாதம் அளித்தனர். மேலும் விசுவின் கருத்துக்களைத் தொடர்ந்து இந்தியாவுககு இராணுவப் பயிற்சி தொடங்கவென ஆட்களை இந்தியா அனுப்புவதென முடிவெடுக்கப்பட்டது. இராணுவப்பயிற்சி தொடர்பாக இந்தியாவிலிருந்து வந்த சிறீ அந்த கூட்டத்தில் பெரிதாக கருத்துச் சொல்லாமல் அங்கீகரித்தார். மேலும் அங்கிருந்த உணவுப் பிரச்சனை, இடப்பிரச்னை, மற்றும் நிதியின்மை போன்ற நெருக்கடிகள் தொடர்பாகவும் கருத்துச் சொல்ல தயங்கினார். சிறீ போன்றோர் விசு, ராகவன் போன்றோரின் வாதத் திறமைக்கெதிராக ஒரு கருத்தைக் கூட சொல்லி விடும் தகுதி அவர்களுக்கு இருக்கவில்லை. விசு இந்தியாவிலிருந்து ஒரு சில ஆயுதங்களை பணம் அனுப்பின் எடுத்துக் கொடுத்து விடுவதாக உத்திரவாதம் வழங்கினார். அதையடுத்து ரகு என்பவரை அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரகு மேலும் ஜவர் பயிற்சிக்காக புதிதாக சிறீயுடன் அனுப்பப்பட்டனர்.
இவர்கள் இந்தியா செல்வதற்கான வள்ளம் எமது அமைப்பிலிருந்த செல்வம் என்பவர் ஒழுங்கு செய்தார். இவர் சிறிய பிளாஸ்டிக் போட் ஒன்றை அவரின் நண்பரிடம் மீன் பிடிக்க செல்லவெனச் சொல்லி இரவல் வாங்கினார். அவ் வள்ளத்தின் இயந்திரம் வலு 15 குதிரைச் சக்தியை மட்டுமே கொண்டிருந்தது. இச் செயற்பாட்டிற்குப் பொறுப்பாக இராணுவக் குழுவே இருந்தது. குறித்த நடவடிக்கையில் முன் அனுபவமற்ற நிலையில் இதில் அனுப்பியிருந்த தவம், மோகன்,(இவர்கள் இராணுவப பிரிவில் இருந்தவர்கள்)ஆகியோரே வள்ளத்தை ஒழுங்கு செய்தனர். வள்ளத்தில் தவத்துடன் வேறொருவர் ஓட்டியாக வந்தார். சில புத்தகப் பார்சல்களுடன் (மாவோவின் நூல் திரட்டுக்கள். இவை பின் மக்கள் யுத்தக் குழுவிற்கு கொடுக்கப்பட்டது.) புறப்பட்ட வள்ளம் இடைநடுவில் இயந்திரம் பழுதாகி நடுக்கடலில் கடும் மழைக்கும் காற்றுக்கும் மத்தியில் நீண்டநேரம் தததளித்தது. நீண்ட நேரமுயற்சியின் பின் வள்ளம் மீண்டும் ஒடத்தொடங்கியது. வள்ளம் புறப்பட்டு இரு மணித்தியாலங்களின் பின் வள்ளம் இலங்கையை நோக்கி வருவதை காங்கேசன்துறை வெளிச்சக் கோபுரத்தைக் கொண்டு அறிய முடிந்தது. பின் மீண்டும் வள்ளம் திருப்ப்பபட்டு இந்தியா நோக்கி செலுத்தப்பட்டது. விடியற்காலை 5-6 மணியளவில் தெரிந்த வெளிச்சக் கோபுரத்தைக் கண்டு இலங்கையா, இந்தியாவா எனக் குழம்பினர். பின் மெதுவாக செலுத்தி சென்ற போது இந்தியா எனத் தெரிந்தது. அந்தளவுக்கு உயிர்களைப் பற்றிய எச்சரிக்கையின்றி அமைப்பு ஆரம்பிக்கத் தொடங்கியது. வள்ளத்தின் இயந்திரம் காலை ஒப்படைக்கப்பட வேண்டியிருந்தும் மறு நாள் காலையே கரை வந்து சேர்ந்தது. இயந்திரம் குறித்த நேரத்தில் ஒப்படைக்கப்படாமையால் இயந்திர உரிமையாளர் பொலிஸ்சில் புகார் செய்திருந்தார். இவைகளெல்லாம் அமைப்பின் மிக மோசமான நிலைமையைச் சுட்டிக்காட்டியது.
NLFT யின் வரலாற்று தொடர்ச்சி...
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode