புல்காரில் 2ஆம் உலக யுத்த முடிவில் அங்கு போராடிய கம்யூனிஸ்ட்டுக்களும் அந் நாட்டை மீட்ட செம்படையும் இணைந்து சோசலிச அரசை நிறுவின. இந்த ஆரம்ப முயற்சியை 1950ன் இறுதியில் ஆட்சிக்கு வந்த குருசேவ் தடுத்து நிறுத்தியதுடன் முதலாளித்துவ மீட்சியை தொடங்கியதுடன் மக்களில் இருந்து அந்நியப்பட சர்வாதிகாரத்தை கம்மியூனிசத்தின் பெயரால் நிறுவிக் கொண்டனர்.

இந்த முதலாளித்தவ மீட்சி உள்ளுக்குள் தேசிpய முதலாளிகளை வளர்த்து எடுத்ததுடன் சமுக ஏகாதிபத்தியமான சோவியத் ய+னியனுக்கு சார்பாக ஒரு திறந்த சந்தையாகவும், பனிப்போர் தளமாகவும் மாறியது. இந்த குறிப்பிட்ட சந்தையை உடைப்பதன் மூலம் மேற்கு நாடுகளால் வர்ணிக்கப்பட்ட இரும்புத் திரை தகர்ந்து போயின. தமக்குத் திறந்துவிடும் சந்தையை மெச்சும் அரசி யல் தான் ஜனநாயகமாக அவர்கள் முன்னெடுக்கின்றனர்.

மறுபுறம் இந்த உடைந்த இரும்புத் திரை மக்களுக்கு எந்த விதமான ஜனநாயகத்தை வழங்கியுள்ளது என ஆராய்வோம். இன்று திடீர் என பொருட்களின் விலை 380 வீதத்தால் அதிகரிக்க, வேலையின்மை 20 வீதத்தால் அதிகரித்துள்ளது. பணவீக்கம் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. 1992 இல் 23 லிவாவாக இருந்த டொலர் 1993 இல் 45 லிவாகவும் 1994 இல் 95 இல் 75 லிவாகவும் 96 இல் 150 ஆகவும் 97 இல் 1000 லிவாகவும் திடீர் என அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் 500 லிவாவாக இருந்த டொலர் பெப்ப்pரவரியில் 1000 லிவாவாக அதாவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க ஓய்வு ஊதியம் பெறும் ஒருவனின் சம்பளமாக 4000 லிவாக மதிப்பு (4 டொலர்) இழந்து போயுள்ள அதேநேரம் ஒரு தொழிலாளியின் சம்பளம் 20 000 லிவாவாக (20 டொலரால்) மாறியுள்ளது இதைக் கொண்டு பிச்சைக்கார வாழ்க்கையை வாழ்ந்த மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக மார்ச் மாதம் பொருட்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கோப்பியின் விலை ஓர் ஓய்வ+தியம் பெறுபவரின் சம்பளத்துக்கு சமனாக அதாவது 4000 லிவாவாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மாட்டு இறைச்சியின் விலை 2600 லிவாவாகவும் 700 கிராம் ரொட்டி விலை 155 லிவாகவும் அதிகரித்துள்ளது.

1994 இல் புல்காரின் கடன் 1047 கோடி டொலராக இருந்து இன்று எட்டாத கொப்பில் தொங்குகிறது. இரும்புத் திரை உடைத்து ஜனநாயத்தின் பெயரால் அந்நிய ஏகாதிபத்தியங்களும் உள்நாட்டு முதலாளிகளும் மக்களின் அற்ப சில்லறைகளைக் கூட கொள்ளையடித்துச் செல்லுகின்றனர்.;

ஆட்சியிலுள்ள முன்னாள் கம்ய+னிஸ கட்சிகளும் தமது நிறத்தை மாற்றி சோசலிசக் கட்சி என்ற பெயரால் சொள்ளையடிக்கின்றன. மக்கள் தமது கடந்த கால வெற்றிகளை மீளவென்றெடுக்க போலிகளை இனம் கண்டு வீதியில் இறங்குகின்றனர். அந்த மக்கள் மீளவும் போராடவும் புரட்சியின் தேவையையும் இனம் காண்கின்றனர். அந்த மண் மீண்டும் சிவக்கும். போலிகளை மீறி அந்த மக்களும் அந்த மண்ணும் மக்களின் வெற்றிக்காகப் போராடும் ஒரு சகாப்தத்தை தொடங்;க தமது கைகளை உயர்த்த தொடங்கி விட்டனர்.