வாசகர்களும் நாங்களும் 1

வாசகர்களும் நாங்களும்

நட்புடன் சுகனுக்கு.

சமர் ஆசிரிய குழுவிற்கு நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. எழுத்து மூலமான பதிலினைத் தர தாமதித்து விட்டோம் மன்னிக்கவும். எமக்கு உங்கள் நிலைப்பாடு சம்பந்தமாக விளக்கமில்லாமல் உள்ளது. சமர் ஆசிரியர் குழு சார்பாக நாம் உங்களுடன் திரு நித்தியானந்தன் அவர்கள் பற்றிய விமர்சனங்களை முன் வைத்தோமா? அவ்வாறு இல்லாத பட்சத்தில், சமர் எவ்வாறு மக்களின் அடிப்படைச் சுதந்திரமான கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரங்களுக்காக போராடும் முதலாவது கோஷத்திற்;கு இன்றைய நிலையில் முரணாக செயப்படுவதாக குறிப்பிடுவீர்;கள். உங்களது கடிதம் தொடர்பாகவே சமா, திரு நித்தியானந்தன் சம்மந்தமாகக் கொண்டுள்ள விமர்சனத்தை முன்வைக்கின்றது. திரு நித்தியானந்தன் அவர்களது அரசியல் செயல்பாடுகள் எதற்குமே சமர் இடையூறானது அல்ல. ஆனால் சமர் மூன்றில் (3) குறிப்பிட்டிருந்த மக்களின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரங்களுக்காகப் போராடும் நிலைப்பாட்டில் திரு நித்தியானந்தன் அவர்களுடன் இணைந்து செயல்படுதல் எனும் விடயத்தில் சமர் ஒரு திடமான நிலைப்பாட்டிலுள்ளது. திரு நித்தியானந்தன் அவர்கள் ஆரம்ப காலங்களில் இருந்தே விடுதலைப் புலிகளின் உறுப்பினர், மட்டக்களப்பு சிறைமீட்புக்கு பிற்பாடு விடுதலைப் புலிகளின் பத்திரிகை ஆசிரியராகவும் இருந்துள்ளார். மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டு மக்கள் நடைப்பிணங்களாக்கப்பட்டு வந்த நிகழ்வானது விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலம் தொட்டே அடித்தளமிடப்பட்டு வந்ததொன்றாகும். விடுதலை புலிகள் ஆனது ஆரம்பம் தொட்டே எம் தேசத்தின் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து வந்தது. சிலவேளை இன்று ஆயுதம் ஏந்திப் போராடும் எம் சிறார்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் திரு நித்தியானந்தன் அவர்களுக்கும் இதுபற்றி தெரியாதிருந்திருக்கலாம் என நண்பர் சுகன் நினைக்கிறரா என எண்ண வேண்டியுள்ளது. திரு நித்தியானந்தன் அவர்களினால் இங்கு(பிரான்ஸ்சில்) கருத்தரங்கு ஒன்றில் சிலர் திரு நித்தியானந்தன் அவர்களிடம் நீ யார் எனக்கேட்டது நம் எல்லோர் காதுகளிலும் விழுந்தது. இது நண்பர் சுகனின் காதுகளிலும் விழுந்திருக்கும் என நம்புவோம.; திரு நித்தியானந்தன் அவர்களது கடந்த கால அரசியல் வாழ்வில் விமர்சனங்கள் சந்தேகங்கள் இல்லை என அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராக கருதும் தார்மீக துணிவு சிலவேளைகளில் நண்பர் சுகனுக்கு இருக்கலாம். ஆனால் எமக்கு அத்தகைய நிலைப்பாடுகள் மீது நம்பிக்கை இல்லை. இவ்வாறான நிலைகளில் திரு நித்தியானந்தன் அவர்களது கடந்த காலம் மீது விமர்சனங்கள் சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாதுள்ளது. அவரின் கடந்தகால அரசியல் வாழ்வுக் காலங்களில் அவரினால் ஜனநாயக மறுப்புக்கு எதிராக உள்ளுக்குள்ளேயே போராடியிருக்கலாம். அல்லது மௌனித்து(மௌனிக்க)வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது ஆதரித்திருக்கலாம் என்னும் கேள்விகள் எழுவது கூட தவிர்க்க முடியாததல்லவா? எனவே தான் சமர் இணைந்து செயற்படுதல் என்னும் விடயத்தில் விமர்சனம், சுயவிமர்சனம் என்பவற்றிக்கூடாக முரண்பாடுகளை சந்தேகங்களை விளக்கங்களை தெளிவுபடுத்திக் கொண்டு செயற்பட நினைக்கிறது. இவ்விமர்சன நிலைப்பாடானது எந்த ஒரு தனிமனிதனுக்கோ அல்லது சமூகத்துக்கோ அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுப்பதாக அமையாது. அவ்வாறு இல்லை என நண்பர் சுகன்; நினைப்பாராக இருந்தால் சுகனிடம் இருந்து விரிவான பதிலினை சமர் எதிபார்க்கின்றது.

ஆசிரியர் குழு.