நேற்று அன்னை இந்திரா காந்தியின் 92 வது பிறந்த நாளை காங்கிரசார் வழக்கம் போல செட் செட்டாக கொண்டாடினர்.இன்றைய தலைமுறை பலருக்கு அன்னையை பற்றி சரியாகத் தெரியாது. சொல்லித்தந்ததெல்லாம் முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. நமக்கும் கொஞ்சம் அந்தத்தாயின் புகழ் பாட ஆசை தான்.அந்தத்தாயின்
புகழினைப்பாட கொல்லப்பட்ட சீக்கியர்களின் கதறல்களும், வித்வையாக்கப்பட்ட மகனை இழந்த தாய்களின் ஒப்பரிகளும் கேட்டுக்கொண்டிருக்கும். நாம் காதுகளில் பஞ்சினை வைத்து அடைத்துக்கொள்வோம்.பிறகு மீண்டு புகழினை பாடுவோம்” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. “” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. “” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. “” முதல் பெண் பாரத பிரதமர். நாட்டின் இறையண்மையை காக்க தன் உயிரையே ஈந்தவர்…………………………………………. “
நவம்பர் 17 1917-ல் இந்திரா ப்ரியதர்சினி காந்தி மாபெரும் மாப்பிள்ளை நேரு மாமாவுக்கு பெண்ணாகப் பிறந்தார். பெண்கள் வீட்டிலே இருக்க வேண்டுமென்ற பார்ப்பன குடும்பத்தில் பிறந்து லண்டன் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடியில் படித்தார். அப்பன் இந்திய விடுத்லைக்கு போராடினார்.மகளை தன் நாட்டை அடிமையாக்கிய லண்டனில் படிக்க வைத்தாரெனில் அந்த தாய் நாட்டுப்பற்றை நாம் பாராட்டித்தானாக வேண்டும்.1941-ல் படித்து கிழித்து விட்டு இந்திய விடுதலையை கொண்டு செல்வதில் நேரு காந்திக்கும் லடாய் இருந்த சமயத்தில் நேருவுக்கு தோள் கொடுக்க வந்தார்.இந்திய மேலாதிக்க கனவில் சீனாவை பிடிக்கும் கனவில் சீன செம்படை மண்னை அள்ளிப்போட்டது.அந்த கவலையில் மண்டையை போட்டார்.பிறகு காமராசர் லால் பகதூர்-ஐ பிரதமராக்கினார்.அவரும் செத்துப்போக. காமராசர் இந்திராவை பிரதமராக்கினார்.அவருக்கு சாகும் தரு வாயில் தான் உணர்ந்திருப்பார். தாம் தேர்தெடுத்துஇ¢ருப்பது பெண் சாதாரண பெண் இல்லை .இநாட்டிற்கே தாய் அதுவும் பாசிசத்தை திறம் பட பேணி வளர்த்த தாய் என்று.
1966-ல் முதல் பெண் பிரதமர் என பேரெடுத்த இந்திரா சில ஆண்டுகளிலேயே தன் பாசிச முகத்தை காட்ட ஆரம்பித்தார்.அவருடைய முதல் ஆட்சி காலத்தில் ரூபாயின் ,மதிப்பு சரிந்தது.1980-ல் இந்திய ரூபாயின் மதிப்பு 40 சதம்சரிந்தது. சர்வாதிகாரமென்றால் என்னவென்று மக்களுக்கு பாடம் நடத்த ஆரம்பித்தார்.அரசு உறுப்புக்கள் அனைத்தும் அவரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அவருக்கு கீழ் படியாத அரசுகள் உடனே கலைக்கப்பட்டது.எமர்ஜென்சியை கொண்டு வந்து இந்தியாவின் மாபெரும் சர்வாதிகாரியாக மாறினார்.செத்து போன அப்பனின் ஆசைகளை ஒவ்வொன்றாய் நிறைவேற்றினார்..பாகிஸ்தானோடு போர் புரிந்து தேச வெறியை கிளப்பி தன் சர்வாதிகாரத்தை திசை திருப்பினார்.இந்திய மேலாதிக்க போக்கினை வளர்தெடுத்து பங்களாதேசினை உருவாக்கி தான் தான் ரவுடியென நிரூபித்தார்.ஆட்சியை இழந்து மன்றாடினார்.மீண்டும் தான் செய்த தவறுக்காக மெரீனா கடற்கரையில் மன்னிப்பு கேட்டு அழுதார். முன்பு தன் ஆட்சியை கலைத்த இந்திராவை கருணாநிதி பேய் என்றவர் தற்போது இந்திராவின் மகளே வா நிலையான ஆட்சியை தாவென முழங்கினார் . மீண்டும் அரியசானை கீழ் வர முன்னை காட்டிலும் பல அரசுகள் தீவிரமாய் கலைக்கப்பட்டன.தேசிய இனபோராட்டத்தை அழித்தொழித்தார்.
அதில் முக்கியமானது “புளு ஸ்டார்” தேசிய இன போராட்டம் பஞ்சாபில் அதிகமாய் பீறிட்டு கிளம்பியது.அதனை அடக்க வந்ததாய் கூறிகொண்டு ராணுவம் போலீசு ஆகியவை மக்களின் அடிப்படை உரிமயை கூட பறித்தன.பலர் சீக்கியர்கள் என்பதாலேயே கைது செய்யப்பட்டு காணாமல் போகடிக்கப்பட்டனர்.இன்னும் அதிகமாய் இனப்போராட்ட்ம் தீயாய் பற்றியது.பல சீக்கியர்கள் சீக்கியன் என்ற ஒரு காரணத்தாலே கொல்லப்பட்டனர், இதன் விளைவாக பாகிஸ்தானுக்குக்கெதிராக இந்திரா உருவாக்கிய பிந்த்ரன் வாலே தற்போது இந்தியாவுக்கு எதிராக திரும்பினார். தன்னுடைய மேலாதிக்க கனவுக்காக ஈழத்தில் விடுதலைபுலிகள்,வங்கத்தில், பாகிஸ்தான் பஞ்சாப்-ல் பிந்த்ரன் வாலெ என பலரையும் உருவாக்கி அந்நாடுகளை தனக்கு அடிபணிய நிர்பந்தம் கொடுத்தார். இறுதியில் அது அவருக்கே வினையாய் முடிந்தது . பிந்த்ரன் வாலே இனப்பிரச்சனையை பயன் படுத்தி முன்னுக்குக்கு வந்தார்.பார்ப்பன,இந்துக்களுக்கு இக்கலவரம் பெரும் அச்சுறுத்த்லை தந்ததுதனது.பார்ப்பனீயத்துக்கு ஆபத்து என்றவுடன் இறுதிகட்ட தாக்குதலை தொடுக்க முனைந்து “புளு ஸ்டார்” -ல் இறங்கினார். அக் 3 - அக் 6 1983 வரை பொற்கோயில் முற்றுகையிடப்பட்டது.அப்போது சென்ற ராணுவம் 1990-ல் தான் விலக்கி கொள்ளப்பட்டது. கணக்கிலடங்காதோர் சிக்கியர்கள் கொல்லப்பட்டனர்.பெண்கள் குழந்தைகள் உட்பட எல்லோரும் இதில் அடக்கம். 3 நாட்கள் கழித்து கோயிலின் கதவை திறந்த போது உள்ளேயிருந்தவர்கள் சொர்க்கத்துக்கு அனுப்பபட்ட விசயம் தெரிய வந்தது துப்பாக்கி ரவைகள் வழியே.
1984 -ல் சீக்கிய மெய்காப்பாளரால் இந்திராவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.கண்ணில் பட்டவருக்கெல்லாம் ஆப்ரேசன் செய்து கொண்டிருந்த சஞ்சய் “இறந்த” பிறகு இனாட்டை காக்கும் பொறுப்பு இளந்தலைவர் ராஜீவுக்கு வந்தது.ராஜீவின் தலைமையில் இந்தியா முழுவதிலும் மாபெரும் சீக்கியர்களு,கெதிரான கலவரம் பரப்பப்பட்டது.ராஜீவின் அல்லக்கைகள் ஜகதீஸ் டைட்லர் உள்ளிட்டவர்கள் அதை செய்து முடித்தார்கள்.தலை நகர் டெல்லியில் அப்பாவி சீக்கியர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டார்கள்.அதற்கு ராஜீவ் மவுனமாய் பதில் தந்தார்” ஒரு ஆலமரம் விழும் போது அதிர்வுகள் வரத்தானே செய்யும்”
நாமும் இந்திராவின் பிறந்த நாள் , இறந்த நாள்களை நினைவு கூர்வோம் ராஜீவ் எம்ஜிஆர் செயா போன்ற பாசிச படிமானங்களை பெற்ற பாசிச தாயை புகழ்வதற்காக அல்ல.
பஞ்சாபில் கொல்லப்பட்ட மகனுக்காக கதறிக்கொண்டு இருக்கின்றாரே அந்தத்தாய்க்காக!
http://kalagam.wordpress.com/2008/11/20/இந்திரா-பாசிசத்தாய்/
இந்திரா-பாசிசத்தாய்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode