உலகையே சூறையாடிக் கொழுத்த அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் மொத்த ஆண்டு வருமானம் 11000 பில்லியனாக இருக்க, எழை நாடான ஈராக்கின் வருமானமோ வெறும் 57 பில்லியனாகும். இந்த எழை நாட்டின் மீது ஆக்கிரமிப்பை நடத்திய அமெரிக்காவின் இராணுவச் செலவானது,

 அடுத்து அதிகமாக இராணுவத்துக்கு செலவு செய்யும் முதல் 25 நாடுகளின் இராணுவச் செலவை விட அதிகமாகும். இந்த ஏகாதிபத்தியம் உலக செல்வ வளங்களை கட்டுப்படுத்த நடத்தும் ஆக்கிரமிப்பில், எண்ணை வளமும் முக்கியமான ஒரு கச்சப் பொருளாகும். பெரும் கொள்ளைக்கு உலகை கட்டப்படுத்தும் ஒரு ஆயுதமாக எண்ணை வளம் உள்ளது. நாள் ஒன்றுக்கு 7.5 கோடி பரல் பெற்றோல் உலகளவில் பயன்படுத்தப்படுகின்றது. இது 1973 இல் 5.7 கோடி பரலாக இருந்தது. 1978 இல் 6.5 கோடி பரலாக காணப்பட்டது. ஒர பரலின் விலை ஒரு டொலா குறைந்தால் நாள் ஒன்றுக்கு, எண்ணை விற்பனையில் மட்டும் 7.5 கோடி டொலர் லாபத்தை ஏகாதிபத்தியங்கள் பெற முடியும். ஒரு பீப்பாய் எண்ணை 1972 இல் வெறுமானே 1.9 டொலராக இருந்தது. இது 1974 இல் 10.41 டொலராகவும், 1978 இல் 13.03 ரொலராகவும், 1980 இல் 39.69 ரொடலராகவும், 1981-85 வரை 30.10 டொலராகவம் மாறியது. 1973 இல் எண்ணை விலை 400 சதவீத்தால் அதிகாரித்தது. உலகப் பொரளாதாரமே ஆட்டம் கண்டது. இந்த வர்த்தகம் எண்ணையை கடந்து பிரதான உற்பத்தியாக உள்ள போக்குவரத்து துறையையும், சக்தித் துறையையும், உற்பத்தியையும் கூட நேரடியாக பாதிக்கவல்லவை. அத்துடன் விவாசாயத்தை கூட இது விட்டுவிடமாட்டது. ஈராக் மீதான ஆக்கிரமிப்பு உலகின் வளத்தை யார் அதிகம் நுகர்கின்றனரோ, அவனுடைய ஆடம்பரத் தேவை சாhந்த அவனுடைய பண்பாட்டுடன் தொடர்புடையதாகின்றது. இரண்டாம் உலக யுத்த முடிவில் உலகளவிய முதலாளித்துவ உற்பத்தியில் 75 சதவீதத்தை அமெரிக்கா கொண்டிருந்தது. இது படிப்படியாக குறைந்து வந்தது. இராண்டாம் உலக யுத்தின் பின் அமொக்கா பொருளாதாரம் பெற்ற அனுகூலங்கள் பின்னால் இழப்புக்குள்ளாகின. 1965 இல் 65 சதவீதமாக இருந்த வாகன உற்பத்தி 1980 இல் 20 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. 1980-84 இடையில் தனது எற்றுமதி சந்தையில் 23 சதவீத்ததை இழந்தது. 1955 இல் எஃகு உற்பத்தியில் 39.3 சதவீதத்தை வைத்திருந்த அமெரிக்கா 1975 இல் 16.4 சதவீதமாக மாறியது. 1984 இல் 8.4 சதவீதமாகியது. அதாவது 1973-1983 க்கு இடையில் ஏஃகு உற்பத்தி 44 சதவீத்தால் வீழ்ச்சியடைந்தது. 1950 இல் அமெரிக்கா சந்தையில் அமெரிக்கா பொருட்கள் 95 சதவீத்தை வழங்கியது. இது 1984 இல் 60 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. எங்கும் அமெரிக்காவின் சோகம் எல்லையற்றதாக இருந்தது. சந்தைகள் இழத்தல் மறுபங்கிட்டடை கோரியது.

 

அமெரிக்காவின் கார் முதலாளியான போர்டு "ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் சொந்தமாக ஒர் கார்!. அதுதான் அமெரிக்காவின் இலட்சியம்" என்று அறிவித்து, காரின் தேவையை பிரகடனம் செய்த போதெ மத்திய கிழக்கில் அமெரிக்கா வல்லூறுகள் காலுன்ற தொடங்கின. 1950 இல் அமெரிக்காவில் 4 பேருக்கு ஒருவர் கார் வைத்திருந்தார். 1974 இல் ஐரோப்பிய நாடுகள் இந்த நிலையை அடைந்த போது, அமெரிக்காவில் இரண்டு பேருக்கு ஒருவர் ஒரு கார் வைத்திருந்தனா. வாகனம் வைத்திருக்கும் எண்ணிக்கை எற்ப எரிபொருள் வளத்தை கட்டப்படுத்துவது அவசியமாக இருந்தது. இல்லாத பட்சத்தில் ஒட்டு மொத்த பொருளாதாரமே ஏன் இந்த முதலாளித்துவ அமைப்பே சரிந்துவிடும் அபாயம் தொங்கிக் கொண்டிருக்கின்றது. புஸ்சின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டோலெஸ்ஸா ரைஸ் கூறும் போது "நேட்டோ எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய பெரிதும் முக்கியமான, அல்லது குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக வளைகுடா நாடுகள் விளங்கும்" என்றார். இதனால் எண்ணை வளம் உள்ள மத்திய கிழக்கு ஏகாதிபத்தியங்களின் தேவைக்கு எற்ற அரசு வடிவங்களை தேர்ந்து எடுப்பதாக இருந்தது. மத்திய கிழக்கு பற்றிய அமெரிக்கா ஆளும் வர்க்கங்களின் அடிப்படையான ஒரு கொள்கை இதை சாhந்து இருந்தது. ஈரானில் அமெரிக்காவுக்கு எதிரான இஸ்லாமிய புரட்சி நடந்ததைத்;  தொடாந்து, 1980 இல் அமெரிக்கா ஜனதிபதி கார்ட்டர் நடாளுமன்றத்திவ் உரையற்றிய போது "நம்முiடைய நிலையை மிகவும் தெளிவாக கூறிவிடுகின்றோம். வளைகுடா பிராந்தியத்தில் எந்த நாடாவது, எந்த வெளிநாட்டுச் சக்தியாவது தனது கட்டுப்பாட்டை நிலைநாட்ட முயலுமானால், அது அமெரிக்காவின் உயிர்நாடியான நலன்கள் மீதான தாக்குதலாக கருதப்படும். அத்தகைய தாக்குதல்களை அமெரிக்கா இராணுவ நடவடிக்கை உட்பட எல்லா வழிகளிலும் ஈடுபட்டு முறியடிக்கும்" என்றான். இந்த வழியில் தான் ஈராக் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையானது. இராசாயண ஆயுதங்கள் முதல் சகல வழிகளிலும் ஈராக்கை அமெரிக்கா ஆயுதபாணியாக்கியது. ஈராக் பற்றிய சர்வதேச பொது மன்னிப்பு சபை தனது அறிக்கை ஒன்றில் "சந்தர்ப்பவாத அடிப்படையில் சில குறிப்பிட்ட தகவல்களை  மட்டும் பிரிட்டன் வெளியிட்டிருக்கின்றது." என்று அம்பலப்படுத்தியது. தன்னுடைய இராணுவ நோக்கத்தக்கு மட்டுமே வாயால் அழுகின்றனர். அமெரிக்கா மனித உரிமைகளின் கண்கானிப்பு அமைப்பு தனது அறிக்கை ஒன்றில் "சாதம்ஹீசேன் தனது மக்களுக்கு எதிராக, குறிப்பாக 1988-ம் ஆண்டு குர்டிஷ் கிராமமான ஹலாப்ஜாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகின்றார் என்ற இடைவிடாது கூறிய போது, அந்த கால கட்டத்தில் அமெரிக்காவும், பிரிட்டனும் சதாம் ஹீசேனுக்கு உடந்தையாக இருந்ததைப் பற்றி இன்று பிரிட்டிஸ் பிரதமரும், அமெரிக்க குடியரசுத் தலைவரும், குறிப்பிடுவதில்லை" என்ற அம்பலம் செய்தார். அத்துடன் அந்த அறிக்கையில் "சதாம் ஹீசேனுக்கு இரசாயண ஆயுதங்;களை ரகசியமாகவும், சட்டவிரோதமாகவும் விற்க்கப்படுவதை இரண்டு அரசாங்களும் அப்போது ஒப்புதல் தந்தனர். குர்டிஷ் கிராமத்தில் நடைபெற்ற அட்டூழியத்தை மறைப்பதற்கு இரண்டு அரசுகளின் வெளியுறவுத் துறைகளும் முயன்றன. இந்த கொடூரத் தாக்குதல்களுக்கு ஈரான் நாடு  பொறுப்பு என்பதாக போலியான தகவலை இரு அரசும் பரப்பின" என்று அறிக்கை அண்மையில் அம்பலம் செய்தது. இப்படி ஈரான் மீதான போரை உந்தித் தள்ளி யுத்தத்தைத் திணித்தது.. யுத்ததுக்கு தேவையான ஆயுதங்களை வாரி வழங்கப்பட்டது. வளங்கப்பட்ட இரசாயாண ஆயுங்களில் கணக்கை ஈராக் கணக்க காட்ட முடியவில்லை என்பது, ஆயுதப் பரிசோதனையில் முன்வைக்கும் இரகசிய குற்றச்சாட்டாகும். அமெரிக்கா நலன்கள் எதுவோ அதுவே வளைகுடா நாடுகளின் ஜனநாயகம் பற்றிய பொலிப்புரையாகும். அமெரிக்காவின் உள்நாட்டு பொருளாதார சீர்குiலையும் போதும் இது தான் உலகளவிய தீhப்பாகும்.

 

உலகில்; மூன்றில் ஒரு சனத் தொகை கொண்ட பணக்காரர்கள் வசிக்கும் நாடுகள் உலக ஆற்றலில் ஐந்தில் நான்கை கொள்ளையிடுகின்றனர். இந்த நிலையில் மேற்கு நோக்கி சக்தி வளம் குவிக்கப்படுகின்றது. 2020 இல் 1997யை விட சக்தி மேலும் 57 சதவீதம் அதிகமாக வேண்டும். சக்தி வளத்தை நுகரும் மேற்கத்தைய நாடுகளுக்;கிடையில் இதைப் பகிர்வதில் முரண்பாடுகள் கூர்மையாடைகின்றன. 1997 இல் 860 கோடி தொன் பெற்றொலில் இருந்து கிடைக்கும் சக்தியில் ஐந்தில் நான்கை நுகர்ந்த மேற்கத்தைவனின் தேவை, 2020 இல் 1310 கோடி தொன்னானாக மாறுகின்ற அபாயம் ஏகாதிபத்திய முரண்பாட்டை இதற்குள் குவிக்கின்றது. இதில் அமெரிக்கானின் நுகர்வு வெறி எல்லையற்றதாக உள்ளது. எரிபொருள் பயன்பாட்டை எடுப்பின் 1997 இல் ஒரு சீனான் 0.7 தொனும், பிரஞ்சுக்காரன் 4.1 தொன்னும், அமெரிக்கன் 8.1 தொன்னும், உலகம் 1.6 தொன்னையும் பயன்படுத்தியது. எல்லையற்ற வெறித்தனமான ஆடம்பரம் சார்ந்த நுகர்வின் அதிகாரித்த தேவை, ஏகாதிபத்திய முரண்பாடுகளை விரிவாக்கியுள்ளது. ரொணி பிளேயர் முன்னாள் ஜனாதிபதி ஜேர்ஜ் புஸ் நூலகத்தில் உரையாற்றும் போது "யார் எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை வைத்திருக்கிறார்கள், புதிதாக எண்ணெய் எரிவாயு உற்பத்திக்கான வளங்கள் என்ன என்பது உயிர் நாடியான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த  கேள்வி." என்று அமெரிக்கா அதிகார வர்க்கம் கூடியிந்த கூட்டத்தில் எழுப்பினார். அவர் மேலும் "உலகிலேயே தலைசிறந்த எரிபொருள் கம்பனிகளை" வைத்திருப்பதாக கூறி யுத்த வெறிக்கான நோக்கத்தை வெளிப்படுத்தினார். இதன் நலன்களை உறுதி செய்யவவும், சர்வதேச நாடுகளின் கைக்கூலித்தனத்துடன் இதை உறுதி செய்ய வேண்டும் என்றார். பிரிட்டிஸ் பிரவுன் பிரபுவோ ஈராக்கை ஆக்கிரமித்த பின்பு "எண்ணைய் நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதில்" சம உரிமையை வேண்டும் என்றார்.. இதை புஸ் உறுதி அளிக்கும்படி  கோரினார்.

 

முரண்பாடுகள் ஒருபுறம் புகைய பிரிட்டிஸ் வெளியுறவுதுறை அமைச்சர் பிரிட்டனின் வெளியுறவு கொள்கை தொடர்பாக கூட்டப்பட்ட 150 பிரிட்டிஸ் துதார்களை உள்ளடக்கிய  கூட்டத்தில் "பிரிட்டன் மற்றும் உலக அளவில் எரிபொருட்கள் விநியோகத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பெருக்குவதே" பிரிட்டனின் எதிர்கால கொள்கை என்றார். இந்த மாநாடு பற்றி பிரிட்டிஸ்  கார்டியன் எழுதும் போது "பிரிட்டிஸ் அரசின் சில அமைச்சர்களும், அதிகாரிகளும், தனிப்பட்ட முறையில் பேசும் போது மக்களை கொன்று குவிக்கும் ஆயுதங்களை விட எண்ணெய் வளம் தான் எங்களுக்கு முக்கியமானது. ஏனெனில் இப்போது எண்ணெய் வளங்கள் கிடைப்பதில் நிலையற்ற தன்மை உருவாகி வருகின்றது.... எண்ணைவளம் தொடர்பாக நிலையற்ற தன்மையிருப்பதால், பாதுகாப்பான  ஏற்பாடுகள் செய்யவேண்டியது அவசியமாகின்றது என அந்த அதிகாரிகள் கூறினார்கள்" என செய்தி வெளியிட்டது.  யுத்தத்தின் நோக்கத்தை ஆளும் வாக்கங்கள் தமது சக கொள்ளையர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது முடிமறைப்பதில்லை.

 

உலகை அடக்கியாள ஆக்கிரமிப்பாளனின் போர் முழக்கங்கள் குண்டுகளாக மாறி ஈராக் மக்கள் மேல் துவப்பட்டன. அமெரிக்கானின் நுகர்வின் தேவை ஈராக் மக்களின் விடுதலை என்ற கோசத்தின் கீழ் குண்டகள் பூ மாலையாக போடப்பட்டன. இந்த குண்டுகள் எண்ணை வயல்களையும், எண்ணை அலுவலகங்கனை மட்டும் தாக்குவதை தவிர்த்தன. மக்கள் குடியிருப்புகள், வைத்தியசாலைகள், மின்சார நிலையங்கள்;, நீர் விநியோக மையங்கள், பாடசாலைகள் என அனைத்தையும் விண்ணில் இருந்தும், தரையில் இருந்து அழித்தனர். சர்வதேச சட்டத்தை தனக்கு எற்றவாறு அமெரிக்கா வளைத்துக் காட்டின. அமெரிக்கா, பிரிட்டிஸ் ஆக்கிரமிப்பாளார்கள்; ஜநா சட்டங்களை யுத்தத்தின் முன் பின்னுமாக அப்பட்டமாக மிறின. தடை செய்யப்பட்ட குண்டுகளையும், கண்ணி வெடிகளையும் ஈராக் மண்ணில் விதைத்தனர். ஈராக்கின் விடுதலை பற்றியும், சாதமின் கொடுங்கொண்மை பற்றியும் மூக்கால் அழுதபடி ஆக்கிரமிப்பை மக்களின் பிணங்களின் மேல் நடத்தினர். ஈராக்கை கையேந்தி வாழும் ஒரு சமூகமாக மாற்றி, ஈராக்கின் செல்வங்களை கொள்ளையடிப்பதே அடிப்படை நோக்கமாக கொண்டு ஜனநாயகத்துக்கே பூச்சூடினர். உலகிலேயே இரண்டாவது எண்ணைக் கையிருப்பு நாடான ஈராக்கின் எண்ணை வளத்தை, அமெரிக்காலின் ஆட்சியில் அமர்ந்து இருக்கும் எண்ணை முதலாளிகளும் ஆயுத தயாரிப்பளர்களும் தமது தனிப்பட்ட சொந்தச் சொத்தாக்க நடத்திய யுத்தம் தான் ஈராக் மீதான அழித் தொழிப்பு யுத்தமாகும்.

 

ஆக்கிரமிப்பை தொடங்க முன்பே ஐ.நா சொந்த தேவைக்கு எற்ப பயன்படுத்தி, ஈராக் ஆக்கிரமிப்புக்கு இயல்பான வகையில் மாற்றி அமைத்தனர். இது இராணுவத்துறையில் மட்டுமல்ல, மக்களின் வாழ்வில் அடிப்படையிலும் கூட சிதைத்தனர். 1990 க்கு முன் ஈராக் மனித வள மேம்பாட்டு குறியீட்டு உலகளவில் 50 வது இடத்தில் இருந்தது. இது 2000ம் ஆண்டில் 126 இடத்துக்கு ஐ.நா இட்டுச் சென்றது. 1989 இல் உள்நாட்டு உற்பத்தி 66 பில்லியனாக இருந்தது. இது 1992 இல் 270 மடங்கு குறைந்து 245 மில்லியனாகியது. மக்களின் அடிப்படை வாழ்வியலை சிதைப்பதன் மூலம் ஆக்கிரமிப்புக்கான சூழலை மிக நீண்ட காலமாக உருவாக்கி வந்தது. இதற்கு முன்னோடியாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தெற்கு ஈராக்கில் 1998 க்கு பின்னர் தாக்குதலுக்காக 42000 விமானப் பறப்புகளை நடத்தி குண்டகளை வீசியது. 1991-1999 இடையில் 450 இலக்குகளை 6000 படைகள் மூலம் தாக:கியதுடன், 1800 குண்டுகளை வீசியது. 2001 மார்ச்சக்கு பின்பாக அமெரிக்கா தெற்கு ஈராக் பகுதியில் தனது விமானத் தாக்கதலை 300 சதவீதத்தால் அதிகாரித்துடன், 54 தொண் குண்டுகளை போட்டது. ஐ.நா விபச்சாரத்தில் இறங்க யார் விபச்சரத்தில் ஈடுபடுவது என்று ஏகாதிபத்திய மோதலாகிய போது, பயங்கர ஆயுதங்களை ஈராக் வைத்திருப்பதை ஐ.நா கண்டபிடிக்க முடியாது என்றார் புஷ். "அமெரிக்க மற்றும் பிரிட்டனை விமானிகளை நோக்கி சுட்டுக் கொண்டிருக்கும்  ஒர் அரசாங்கம் ஐ.நா வின் பாதைக்கு வராது, கண்டனங்களும் பொய் மூட்டைகளும் அடங்கிய கடிதங்களை அனுப்பிக் கொண்ருக்கின்ற அராசாங்கம் எப்படி ஐ.நா வழிக்கு வரும்?" என்றார்.

 

இந்த நிலையில் நாள் ஒன்றக்கு 1500 விமானப்பறப்புகளை நடத்தி குண்டகளை துவியபடி, 1000 மேற்பட்ட குருச் ஏவுகளை வீசிபடி, அண்மையில் அமெரிக்காவில் பரிசோதித்த 20000 இறத்தல் கொண்ட மோடப் குண்டுகளையும், 10000 இறாத்தல் கொண்ட டசிக்கற் குண்டுகளையும்  ஈராக் மண்ணில் வீசியபடி, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பளார்கள் ஈராக்கில் புகுந்த போது ஒட்டு மொத்த மக்களே அதை எதிர்த்து நின்றனர். ஆக்கிரமிப்பாளனின் கைகளைக் குலுக்க துரோகிகள் கூட ஈராக் மண்ணில் இருந்து முன்வரவில்லை. குழந்தைகளுக்கு இனிப்பை கொடுத்து கையாட்டி வரவேற்பதாக தொலைகாட்சிகள் ஜனநாயகத்தின் வெம்பலில் செய்தியாக்கின. ஈராக்கில் இருந்து முன்பே வெளியேறிய எலும்பிட்டு வளர்க்கப்பட்ட ஒரு கும்பல், களத்தில் அவசரம் அவசரமாக இறக்கப்பட்டு அவர்களை கொண்டு கொள்ளையடிப்பை உருவாக்கினர். இந்த கொள்ளையடிப்பு விரிவாக கொள்ளையடிப்பததும், சூறையாடுவதும் ஊக்குவிக்கபட்டது. இதன் மூலம் தனது கூலிபட்டளத்தை உருவாக்க முடிந்தது. கொள்ளையடித்த கூலிபட்டளத்தை அமெரிக்கா பிரிட்டீஸ் படைகள் திரட்டியதன் மூலம், தொலைக் காட்சிகளில் காட்சிக்காக கை குலுக்க முடிந்தது. இது படிப்படியாக கொள்ளையடிப்பதே ஒரு போக்காக, கொள்ளைக் கோஸ்டிகள் ஆக்கிரமிப்பாளனின் பின் தயாராக காத்துக் கிடந்தது. ஒரு பிரதேசத்தை கைப்பற்றியவுடன், கொள்ளைக் கோஸ்டி முதலில் புகுந்து சூறையாட அனுமதித்த அமெரிக்கா பிரிடடிஸ் படைகள், ஆக்கிரமிப்புடன் சூறையாடலும் இனைக்கப்பட்டது. ஈராக்கிய மக்களின் பொதுச் சொத்தை கொள்ளையடிப்பவனும், ஆக்கிரமிப்பு மூலம் தேச வளங்களை கொள்ளை அடிக்க முனைந்தவனும் இனைந்து கைகளை குலுக்கியபடி ஈராக்கைச் சூறையாடத் தொடங்கினர்.. 7000 வருட பழைமை வாய்ந்த ஈராக்கிய பண்பாட்டு கலாச்சாரத்தின் தொடாச்சியான அருங்காட்சியங்கள் அனைத்தும் திட்டமிடப்பட்ட வகையில் ஆக்கிரமிப்பாளின் துனையுடன் சூறையாடப்பட்டன. எஞ்சியதை அடித்தம் சுட்டும் நொக்கினர். வங்கிகளின் இரும்பு பெட்டகங்களில் இருந்த தொல் பொருள் பொருட்கள் அமெரிக்காவின் துணையுடன் கொள்ளையிடப்பட்டன. யூனேஸ்கோ முதல் உலகின் அறிவியல் காப்பகங்கள் யுத்த்ததின் முன்பே, ஈராக்கின் பல பாகத்தில் பாதுகாக்கப்படும் வரலாற்று சிறப்பு வாய்ந்த அரும்பெரும் களஞ்சியங்கள் பாதுகாக்கபட வேண்டும் என்பதை அமெரிக்காவிடம் தெரிவித்து இருந்தும,; இது அழிக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு எண்ணை அகழ்வு மையமும் சரி, ஈராக்கின் தலைநகரில் இருந்த பெற்றோலிய அமைச்சகம் சரி சூறையாடப்படவில்லை. ஆனால் யுத்தம் தொடங்கியது முதல் ஈராக்கை கைப்பற்றிய ஒவ்வொரு நிகழ்வும் அமெரிக்கா பிரிட்டிஸ் படைகளின் நோக்கத்தை தெளிவாகவே நிர்வாணப்படுத்தியது. உலக மக்கள் மிக தீர்க்கதரிசனமாக ஏகாதிபத்தியத்தின் நோக்கத்தை அம்பலப்படுத்தி விதிகளில் இறங்கினர். மறு தளத்தின் ஏகாதிபத்தியங்களுக்க இடையில் முரண்பாடுகள் என்று மில்லாத வகையில் கூர்மையாகின. இத பற்றி பிளேயர் கூறும் போது "தற்போதுள்ளது போல் பிரிட்டன் முன் ஒருபோதும் ஒரே நேரத்தில் இந்த அளவிற்கு அதிக கஷ்டங்களையும், அபாயகரமான பிரச்சனைகளையும்" சந்திக்கவில்லை என கூறினார். உலக பொருளாதாரம் அச்சமூட்டுவதாக உள்ளாக கூறினார். 1970 க்கு பின் மிக கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளதாக கூறிய அவர் "பிரிட்டன் மேலும் சரிவை (பொருளாதாரத்தில்) நோக்கி போவதை நிறுத்தி ஒரளவுக்கு இயல்பக்கு வரவேண்டுமானால், அமெரிக்காவின் இணையற்ற இராணுவ மற்றும் பொருளாதார வல்லமையை அது ஏற்றுக் கொள்ள வேண்டும்;;. உடனடி விளைவுகளைப்பற்றி எண்ணாமல் அதை செய்யவேண்டம்" என்ற பிளையர் பிரகடனம் செய்கின்றார். இந்த ஏகாதிபத்திய முரண்பாட்டையே செய்தி அமைப்புகள் பிரதிபலித்தன.

 

ஐரோப்பிய மக்களும் செய்தி அமைப்புகளும்

 

யுத்தத்தின் முன்னும் பின்னுமாக ஐரோப்பிய செய்தி அமைப்புகள், மக்களின் யுத்த எதிhப்பு உணர்வுகளுடன் இணைந்த நிற்கவில்லை. செய்தி அமைப்புகள் ஆளும் வர்க்கத்தின் நலன்களுடன் இணைந்து நின்று யுத்தத்ததை பற்றி செய்திகளை வழங்கியது. ஆளும் வர்க்கத்திற்க்கு இடையில்hன முரண்பாடுகளுக்கு அமைய செய்திகள் ஊசலாடின. பல செய்தி அமைப்புகளில் முரண்பட்ட பலர் தனிப்பட்ட ரீதியில் ஒரம் கட்டப்பட்டனர். ஸ்பானியோலில் தொலைக்கட்சி செய்தி அமைப்பைச் சோந்த் பலர் தொடர்ச்சியான வேலை நிறுத்தை நடத்தினர். ஆளும் வாக்க முரண்பாடுகள் ஒருபுற செய்தியளர்களை பிளக்க, ஆளும் வர்க்கங்களுக்கு மக்களுக்கு இடையிலான முரண்பாடும் செய்தியாளர்களை பிளந்தது. சமுதாயப் பிளவு  இணைக்க முடியாத வகையில் அகன்றுவிட்டது.

 

ஆளும் வர்க்கங்கள் இடையிலான முரண்பாடு உலகமயமாதலை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதில் இருந்து எழுந்தது. இதுவே யுத்தத்தின் போக்கில் எந்த நிலையை எடுப்பது என்பதை தீர்மானிக்கும்; ஒரு விடையமாகியது. ஆதிக்கம் பெற்ற மூலதனங்கள் சாhந்து உலகத்தைக் கைப்பற்றுவதா அல்லது ஆதிகம் பெற்ற எகாதிபத்திய நாடுகள் சார்ந்து உலகைக் கைப்பற்றுவதா என்பதே யுத்தம் பற்றிய நிலைப்பட்டை வரையறுத்தது. அதாவது தேசிய எல்லை சாhந்த வகையில் ஏகாதிபத்திய முரண்பாட்டுக்குள் உலகை பங்கிடுவதா அல்லது நேரடியாக மூலதனங்கள் உலகை கைப்பற்றுவதா என்பதை அடிப்படையாக கொண்டே ஆளும் வர்க்க பிளவுகள் உருவானது. நேரடியாக மூலதனங்கள் எல்லை கடந்து உலகை சூறையாடுவதை அடிப்படையாக கொண்டு அமெரிக்காவை ஆதாரிக்கும் போக்கு, ஐரோப்பாவின் எல்லா பகுதியிலும் காணப்பட்டன. இதனால் செய்தி அமைப்புகள் ஊசாலாடின. அமெரிக்கா எகாதிபத்தியம் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தில் இருந்து குறிப்பான வேறுபாடுகளை கொண்டிருந்தது. அமெரிக்க பன்நாட்டு மூலதனத்தின் சொந்தக்காரர்கள்; அமெரிக்கா ஆளும் வர்க்கத்தின் நேரடி பிரதிநிதியாக பிரநிதித்துவப்படுத்தி நிற்கின்றனர். ஐரோப்பிய மூலதனம் அமெரிக்கா போன்று அல்லாது ஆளும் வாக்க்துக்கு வெளியில் நிற்கின்றது. இதை தெளிவாக புரிந்து கொள்வத அவசியம். ஜரோப்பிய ஆளும் வர்க்கம் ஆட்சிக்கும் வெளியில் இருக்கும் மூலதனத்தை பிரதிபலிக்கின்றது. இது  அமெரிக்காவில் ஆளும் வர்க்கமும் மூலதனமும் ஒன்றாக நிற்கின்றன. அமெரிக்கா ஆளும் வர்க்கமும் மூலதனமும் ஒன்று இணைந்த போதும், இது சர்வதேச ரீதியாக அமைந்துவிடவில்லை. இது அமெரிக்கா மூலதனத்தை மட்டும் பிரதிபலித்தே தன்னை வெளிப்படுத்தியது. எகாதிபத்திய முரண்பாட்டை கூர்மையாக்க மேலும் வழி அமைத்துள்ளது.

 

ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களுக்கு இடையில் இது பற்றி உலகமயமாதல் கொள்கை என்ன என்பதை பொறுத்து பிளவுகள் உருவானது. எந்தப் பிரிவு ஆட்சி அதிகாரத்தில் இருந்தது என்பதைப் பொறுத்து, யுத்தத்துக்கு ஆதாரவு எதிர்ப்பு என்ற நிலை ஆளும் வர்க்கங்கனை பிளவுபடுத்தியது. இதைச் சார்ந்து பெரும்பாலான செய்தி அமைப்புகள் தத்தம் நிலைப்பாட்டை எடுத்தன. இந்த நிலையில் ஆளும் வர்க்கங்களின் வேறுபட்ட பிரிவுக்குள் மட்டுமல்ல, தனித் தனியான கட்சிகளுக்குள்ளேயே பிளவுகள் உருவாகியுள்ளது. இது எதிர்காலத்தில் பல கட்சிகள் இருந்த இடத்தைக்; கூட துடைத்தெறிந்துவிடும் நிலைக்குள், கொந்தளிப்பான மக்களின் உணர்வுகள் திரண்டு காணப்படுகின்றது. ஒட்டு மொத்தமாக எகாதிபத்திய நாடுகிடையிலான முரண்பாடு கூர்மையாகியுள்ளது. அமெரிக்கா எகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்த கட்சிகள,; ஐரோப்பவின் அதிகாரத்தை நோக்கி முன்னேறும் போக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இது அமெரிக்காவுக்கு எதிரான ஒரு சர்வதேச மாற்று ஏகாதிபத்திய அமைப்பின் தேவையை, அதை பாதுகாக்கும் படையைக் கோரி நிற்கின்றன. 

 

ஏகாதிபத்தியத்துக்கிடையிலான முரண்பாடு

 

இந்த முரண்பாடு மூன்றாம் உலக யுத்தத்தினை நோக்கிய முன் முயற்சியாக பரிணமிக்கின்றது. ஆளும் வர்க்கங்கள் தமக்கிடையில் ஊசாலாடிய போதும், ஐரோப்பிய படை ஒன்றை அமெரிக்காவுக்கு நிகாரக அமைக்கப்பட வேண்டும் என்ற கோசம் செய்தி அமைப்புகளில் ஒலிக்கின்றன. பாரிய விவாதமாக முன்வைக்கப்படுகின்றது. மறுதளத்தில் தத்தம் ஏகாதிபத்திய நோக்கத்தை வெளிப்படுத்த தவறவில்லை. மக்களின் யுத்த எதிர்ப்பு கோசத்தின் அடிப்படை கோரிக்கைக்கு மாறாக ஐரோப்பிய ஆளும்; வர்க்கங்கள் அமெரிக்கா ஆக்கிரமிப்பபை எதிர்க்கவில்லை. உதாரணமாக ஜெர்மன் ஆளும் வர்க்கம் யுத்த எதிர்ப்பு பற்றி ஒருதலைப்பட்சமாக விளக்கம் கூறியவர்கள், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் வானில் யுத்த விமானங்கள் பறப்பதை தடை செய்ய மறுத்தன. அத்துடன் ஜெர்மன் மண்ணில் உள்ள அமெரிக்கா தளங்களில் இருந்து யுத்தத்தை நடத்தும் உரிமையை அமெரிக்காவுக்கு வழங்கினர். உண்மையில் ஜெர்மனிய அரசியல் சட்டத்தையே மீறும் செயலாக இருந்த போதும் அனுமதித்தது. ஜெர்மன் வெளிநாட்டு அமைச்சர் ஜேர்ச்கா பிஷ்கர் பிரிட்டிஸ் ஆளும் வர்க்கதிடம் பேசும் போது சாதமின் "ஆட்சி எவ்வளவு விரைவில் சாத்தியமோ அவ்வளவு விரைவில் சரிந்த விடும்" என்று யுத்த்ததின் மீது நம்பிக்கை ஊட்டி தமது ஆதாரவைத் தெரிவிக்க தவறவில்லை. ஜெர்மனியா அதிபர் ஷ்ரோடர் கூறும் போது "சர்வாதிகாரத்தை வெல்வதன் மூலம் ஈராக் மக்கள் எவ்வளவு விரைவில் அவ்வளவு விரைவில் அமைதி, சுதந்திரம், உள்ளடக்கிய சுயநிர்ணயத்தை பெறுவர் என்று" தனது யுத்த ஆதாரவுக் கொள்கையை பிரகடனம் செய்தார். பிரான்சில் உள்ள இரண்டாம் உலக யுத்தத்தில் இறந்தவர் நினைவுக்  கல்கள் யுத்த எதிர்ப்பளாரால் சேமாக்கப்பட்ட நிலையில், பிரான்ஸ் ஜனதிபத்தி ஜாக் சிராக் பிரிட்டிஸ் ராணிக்கு எழுதிய கடிதத்தில் "உங்கள் படைவீரர்கள் எல்லா யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் வேளையில், பிராஞ்சு மக்களது சிந்தனைகள் எல்லாம் இயல்பாகவே அவர்களுடன் தான் இருந்தது என்பதை கூற என்னை அனுமதிக்க வேண்டம்" என்றார். ஆளும் வர்க்கங்கள் தத்தம் நோக்கங்களில் ஒன்றுபட்டு நின்ற அதே நேரம், அதைப் பகிர்வதில் மட்டமே முரண்பட்டனர்.

 

ஜெர்மனிய அதிபர் ஷரோடர் யுத்தம் பற்றிய அறிக்கையில் "ஈராக் மீது போரைத் தொடத்துள்ள அரசுகள், எமது கூட்டணி மற்றும் நட்பு நாடுகள் என்பதை நாம் மறக்க கூடாது" என்றார். எமது நோக்கம் இதைக் கடந்தது அல்ல என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்திக் கொண்டர். ஆனால் முரண்பாடு உலகை பகிர்வதில் முனைப்பு பெற்றது. யுத்தத்தை ஆதாரித்து நின்ற ஜெர்மனிய கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் தலைவர் ஆஞ்சலாமெர்கல் யுத்தத்தை ஆதாரித்து தனது கருத்தை தெரிவித்த போது "ஜேர்மனியர்கள் அணைவருக்குமாக ஷரோடர் பேசவில்லை" என்றார். ஜெர்மனிய மக்கள் பாரிய போர் எதிர்ப்பு நடவடிக்கையை நடத்திய முதள் நாள், பிராங்போட்டில் வெளியான யுத்த ஆதாரவுப் பத்திரிகை மக்களை திசை திருப்ப இராசாயண ஆயுதங்கள் பற்றி ஒரு பீதியை பரப்பியது. உலகளவில் மக்கள் பாரிய ஆர்ப்பட்டங்கள் நடத்திய அடுத்த நாள், அதே பத்திரிகை தனது முதல் பக்க தலையங்கத்தில் "தவறாக புரிந்து கொள்ளபட்ட ஜனநாயகம்" என்று எழுதியது. ஜெர்மனிய அரசின் நிலைப்பட்டுக்கு 70 சதவீதமான மக்கள் ஆதாரவு தெரிவிப்பதை கொச்சைப்படுத்தி, ஜனநாயகம் பற்றி புதிய விளக்கத்தை அளித்தது. "மக்களின் விருப்பம் தான்" ஜனநாயகம் என்பது "ஜனநாயகாத்தின் படுமோசமான சீராழிவாகும்" என்று கூறியது. அத்துடன் "ஜனநாயகம் என்பது ஒருபோதும் மக்களின் விருப்பமல்ல, அப்படி இருக்க முடியாது, அப்படி இருக்கவும் கூடாது" என்றது.  ஆளும் வர்க்கத்தினை யுத்த ஆதாரவை எடுக்கக் கோரியது. மேலும் "பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை அரசு நடைமுறைப்படுத்தின் அடிப்படையில் தவாறானது" என்று போதித்தது. கிறிஸ்துவ சமூக யூனியனின் தலைவர் மைக்கேல் கிளாஸ் "எந்த ஜனநாயக விலைகொடுத்தவது அரசாங்கம் பதிவை விட்டு விலக வேண்டும்" என்ற கேரினார். இன்டர்நேஷ்னல் ஹொhல்ட் டரிபியூன் செய்தி தாள் கட்டுரை ஒன்றில் "அமெரிக்காவின் போர் திட்டங்களுக்கு எதிhப்பு தெரிவிக்கும் ஷரோடர் (ஜெர்மனிய அதிபர்) மன்னிக்கப்படமட்டார். அரசியல் ரீதியாக ஜேர்மன் அதிபரை புஷ் நிர்வகம் அழித்துவிட முயலும்" என்று எச்சரித்தது. பிளேயரின் அரசில் இருந்து பதவிவிலகிய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ரொபின் குன் "நாம் பொதுவாய் புரிந்து  கொள்ளும் பொருளில் ஈராக்கிடம் மக்களை கொன்று குவிக்கும் ஆயுதம் எதுவுமில்லை" என்று குறிப்பிட்டார். தத்தம் ஏகாதிபத்திய நாடுகளின் கூர்மையான முரண்பாடடை பிரதிபலிக்கும் ஆளும் வர்க்ககளிள் பிரதிநிதிகளுக்கும், அமெரிக்கா ஏகாதிபத்தியத்துடன் 50 வருடமாக நக்கித் திரிந்த பழக்கதோச பிரதிநிதிகளுக்கு இடையிலான ஒரு தீவிர முரண்பாடாக உருவாகியுள்ளது.

 

இப்படி ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாடுகளின் ஒட்டு மொத்தமான பிளவுகளில் திணறிய போது தத்தம் நிலையில் உறுதியாக நின்றனர். 50 வருடமாக அமெரிக்காவின் பின்னால் வாலை முறுக்கிக் கொண்டு உலக மக்களை அடக்கியாண்டவர்கள் இடையே, இப்படி மேலும் கீழுமாக புலம்பினர். மக்களின் யுத்த எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து தம்மை தாம் வேறுபடுத்த தீவிரமாக முயன்றனர். நாம் எதை பிரதிபலிக்கின்றோம் என்பதை வெளிப்படுத்தினர். ஷரோடர்; வெளியிட்ட அரச அறிக்கையில் "நாம் எமது சொந்த இராணுவத் திறமைகளை அக்கறையுடன் மீள எண்ணிப்பார்க்க வேண்டும்" என்றார். அமெரிக்காவுக்கு நிகாரன ஒரு மாற்றுப் படையை நோக்கி ஒரு முன்முயற்சி தொடங்கப்பட்டுவிட்டது. ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சர் பிஷ்கர் தனது அறிக்கையில் "நாம் நமது இராணுவ ஆற்றலை பலப்படுத்த வேண்டும். இதனால் தான் இந்தக் கோலத்தில் எம்மை கவணம் எடுத்துக் கொள்வர்" என்றார். ஜேர்மன் பச்சைக் கட்சி தனது கருத்தில் 1999 இல் 60000 படைகளைக் கொண்ட ஐரோப்பிய படைப் பிரிவை அமைக்க எடுத்த முடிவை, எவ்வளவு விரைவில் அமைக்க முடியுமோ அவ்வளவு விரைவில் அமைக்க வேண்டும் என்ற கோரினர். பிரான்சின் ஆட்சியியில் உள்ள ஆளும் வர்க்க பிரதிநிதியான யாக் பரோ "எந்த விதமான தவறான கருத்தையும் தவிர்ப்பது அவசியம். நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை.  சர்வதேச விதிமுறைகள் தொடர்பாக, எங்களுக்கு அதிக அளவில் பூகோளப் பார்வை உண்டு. உலகில் மீண்டும் சமநிலை எற்பட வேண்டம். குறிப்பாக மத்திய கிழக்கில்...." மேலும் அவர் "அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தையை நாம் தொடர்வோம். அமைதிவாதத்தில் வீழ்வதற்கோ அல்லது அமெரிக்கா எதிர்ப்பு வாதம் என்பதற்கோ இங்கு இடமில்லை" என்றார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவர் ஜாவியர் சோலானாவின் வெளியிட்ட இரகசிய அறிக்கையில் "அமெரிக்கா, ஒரு ஐரோப்பிய நாட்டை இன்னொரு ஐரோப்பிய நாட்டுடன் மோதவிட தீர்மனித்திருப்பதாக" அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.  கிழக்கு ஐரோப்பிய சில நாடுகள் அமெரிக்காவுக்கு சார்பாக எடுத்த நிலைபாட்டை சுட்டிக்காட்டிய பிரான்ஸ் ஜனதிபதி சிராக் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் தடை கற்களாக இவை உள்ளது என்றார்.  "இதை விட சிறந்த வழியை அவாகள் கண்ட பிடித்திருக்க முடியாது" என்றார். இதன் தொடாச்சியில் ஜெர்மனிய ஆளும் வர்க்கங்களும், பிராஞ்சு ஆளும் வர்க்கங்களும் அமெரிக்காவுக்கு எதிரான ஒரு படைப்பிரிவை அமைப்பதன் முக்கியத்துவதை முன்வைத்துள்ளனர். யுத்தத்தின் போக்கில் 50 வருடமாக கம்யூனிசத்துக்கு எதிராக கொண்டிருந்த கூட்டுகள் சிதைந்த போது, பழைய எச்சசொச்சங்கள் ஆஞம் வர்க்கதினிடையே முரண்பாடுகளை உருவாக்கின. ஆனால் இந்த ஆளும் வர்க்க முரண்பாடுகளை கடந்து சூறையாடலை தாம் சொந்தமாக நடத்தி முடிக்க திறமையுள்ள படை பிரிவுகளை உருவாக்குவதன் மூலம், அமெரிக்காவுக்கு நிகாரன உலகை ஆக்கிரமிக்க முடியும் என்பதில் முரண்பாடு கொள்ளவில்லை.ஆளும் வர்க்கத்தின் ஊசலாட்டமான யுத்த ஆதாரவு, யுத்த எதிர்ப்பு கருத்துகளை வெளியிடப்பட்ட போது இவை தற்செயலாக நிகழ்ந்துவிடவில்லை. பிரான்ஸ் - ஜெர்மனிய - ரூசியா யுத்த எதிர்ப்பு கருத்துகள் வெளியிட்ட போது, இவை அனைத்தும் கடந்த 10 வருடமாக ஈராக்கில் முதலீடப்பட்ட மூலதனங்கள் சார்ந்தே பிரதிபலித்தன. அமெரிக்கா பிரிட்டிஸ் கூட்டுக்கு எதிராக பிரான்ஸ் - ஜெர்மனிய - ரூசியா கூட்டுக்கு இடையிலான முரண்பாடுகள், ஈராக்கின் மறு முதலீட்டு தொடர்பான பேரத்திலேயே தொடங்கியது. ஈராக்கு 1991 முதல் சிதைக்கப்பட்ட தேச வளங்கள் மேலான, மீள் கட்டுமானம் தொடர்பான ஒவ்வொரு திட்டத்திலும் இருந்து எதிர் எதிரான ஆளும் வர்க்கங்களும் கடுமையாக மோதின. ஈராக்கின் அடிப்படைத் தேவைகளை முன்வைத்த ஐ.நா எடுத்த ஒவ்வொரு தீர்மானத்திலும், இந்த இரண்டு முகாங்களுக்கிடையில் யாருக்கு இந்த ஒப்பந்தம் என்பதில் மோதல் உருவானது. ஒவ்வொன்றையும் ஐ.நாவின் ஒப்பதல் உடன் தொடங்கிய பின் அது இராணுவத்துக்கு பயன்படுத்த முடியும் என அமெரிக்கா தடுத்த போது எல்லாம் மோதல் தீவிரமாகியது. யுத்தமற்ற ஈராக்கில் மறு நிர்மானம், அமெரிக்கா - பிரிட்டிஸ் பொருளாதார நலனுக்கு எதிரானதாக இருப்பது எதார்த்தமாக இருந்தது. அமெரிக்கா - பிரிட்டிஸ் எதிhப்பை ஈராக் ஆட்சியாளர்கள் கைக் கொண்ட நிலையில், ஈராக்கின் எந்த மறு நிர்மானமும் பிரான்ஸ்- ஜெர்மனிய- ரூசியாவுக்கு சாதகமாக இருந்தது. இதில் பெற்றொலியத்துறையும் விதிவிலக்கல்லா. இந்த நாடுகளுடன் சீனாவும் போட்டியிட்டது. இந்த முரண்பாடு கடந்த பத்து வருடமாக ஐ.நாவில் தொடங்கி அதுவே படிப்படியாக முதிர்ச்சி பெற்றது. அமெரிக்கா திட்டமிட்டு ஈராக்கின் தகவல் தொடர்பகங்களை தொடர்ச்சியாக அழித்தது. பழைய மாதிரியான தொலை பெசியை விட நவீன தொலைபேசி முறைக்கான சர்வதேச ஒப்பந்தம் ஒரு பில்லியன் கோடி டொலரை தரக் கூடியது. யுத்தத்தின் முன்பே பிரான்ஸ்சின் தகவல் தொழில்நுட்பம் நிறுவனமான அல்கட்ரெல் 1991 க்கு பின் பல ஒப்பந்தங்களை ஈராக்குடன்  தொடர்ச்சியாக செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் ஒன்றின் பெறுமானம் 7.5 கோடி டொலராகும். 1990க்கு பின்பாக தகவல் மற்றும் சேவைத்துறையில் ஐ.நா அங்கிகாரித்த 3 பில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தகத்தில் பிரான்ஸ்சே மிகப் பெருமளவில் லாபம் அமைடந்தது. 1996 எண்ணெய்க்கு உணவுத் திட்டம் அமுலுக்கு வந்த போது, அப் பணம் ஐ.நாவின் நேரடி கண்கணிப்புக்கு வந்தது. இதைப் பகிர்வதில் கடுமையான மோதகள் எகாதிபத்தியங்களுக்கு இடையில் உருவானது. ஈராக்கும் சீனாவுக்கு இடையில் கையெழுத்திட்ட 8 கோடி டொலர் பெறுமதியான ஒப்பந்ததை தடுத்த நிறுத்தியது. அமெரிக்காவின் நிலைக்கு எதிரான கடுமையான மோதலின் பின்னே அமெரிக்க அனத அனுமதித்தது.  இது அனுமதிக்கப்பட்ட அடுத்த நாள் சீனா அரசு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன்- அமெரிக்காவுடன் "இரட்டை பயன்பாடு" பற்றி ஒப்பந்தம் ஒன்றை ஈராக் தொடாபாக செய்துள்ளதாக அறிவித்தது. சீனா நிறுவனமான ஹீவாய் 2001 இல் ஈராக்கில்  தொடங்கிய தகவல் தொடர்பு நடவடிக்கையை, இராணுவ நோக்கத்துக்கு பயன்படுத்த முடியும் என்று அமெரிக்கா ஒரு தலைபட்சமாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து 2001 உலகளவில் உள்ள வளங்களை தமது கட்டுப்பாட்டில் நேரடியாக கொண்டு வருவதை அமெரிக்கா - பிரிட்டிஸ் ஆட்சியளர்கள் கனவாக இருந்தது. இந்த ஆக்கிரமிப்பின் தன்மை, இதற்கு எதிரான பிரிவுக்கு சதாகமாக இருந்தது. அமெரிக்க மூலதனமும், டொலரும் உலகளவில் வீழ்ச்சியடைந்த நிலையில், ஐரோப்பிய நாடுகள் இதற்கு எதிராக முன்னேறிய போது, உலகப் பங்கீடுகள் கடுமையான நெருக்கடிக்குள்ளாகியது. டொலரின் வீழ்ச்சியும், டொலர் தங்க அளவை கைவிட்டு வெற்று பேப்பராக மாறிய நிலையில், எண்ணை உற்பத்தி செய்யும் ஒப்பெக் நாடுகள் 2000ம் ஆண்டில் டொலருக்கு பதில் ஈரோ நாணயத்தில் சந்தையின் கொடுப்பனவைக் கோரியது. சந்தை படிப்படியாக கைமாறிக் கொண்டிருந்தது. இந்த ஈரோ நணயம் பற்றி ஜேர்மனிய முன்னாள் பிரதமர் ஹெல்முட் ஸ்மித் தீர்க்க தரிசனமிக்க கருத்தை வெளியிட்டார். அவர் ஐரோப்பாவில் யூரோ நணயம் எற்பட வேண்டியதை சுட்டிக்காட்டிய போது "யூரோ நாணயத்தின் சிறப்பு குறித்து அமெரிக்கர்களுக்கு இன்னும் புரியவில்லை. அப்படி அவர்கள் அந்த நாணயத்தின் சிறப்பை புரிகின்ற நேரத்தில் மிகப்பெரும் அளவிலான மோதல் போக்கு உருவாகும். அது உலகம் முழுக்க நிலைமையை மாற்றம். அது எந்த அளவுக்கு இருக்கும் என்றால் அதன் பின் அமெரிக்கா எந்த விதமான முடிவையும் செய்ய முடியாத நிலைமை எற்படும்." மிக தீர்க்க தரீசனமான ஏகாதிபத்திய நிலைப்பாடு, அமெரிக்காவின் நெருக்கடியை உச்ச நிலைக்கு நகர்த்தியது. அமெரிக்காவின் முன்னாள் ஜனதிபதியின் பொருளாதார ஆலோசகர்pன் தவைலர் மார்ட்டின் பெல்ஸ்டெய்ன் கூறும் போது "ஜரோப்பியா நாடுகளுக்கிடையில் நாணய ஒருங்கினைப்பு எற்படின், ஐரோப்பிய நாடுகளிடையே அரசியல் தன்மையையே மாற்றிவிடும் என்றார். அதனால் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுடன் மோதும் நிலை உருவாகும்; இது உலகையே மாற்றிவிடும்" என்றார். இதன் முதிர்ச்சியே இன்று பிரதிபலிக்கின்றது. இந்த நிலையில் இருந்து மீள உலகை இராணுவரீதியான ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வருவதன் மூலம், தமது நலன்களை தக்க வைக்க பிரிட்டிஸ் அமெரிக்கா கூட்டுகள் விரும்பின.

 

ஆனால் இதன் மூலம் பிரச்சனையை தீர்க்க முடியாது. 2001 இல் புஸ் ஆட்சி ஏறிய பின் அமெரிக்காவில் 20 லட்சம் பேர் தத்தம் வேலைகளை இழந்தனர். 2002 முதல் மூன்று மாதத்தில் நிரந்தர முதலீடு 3 சதவீத்தால் வீழ்ச்சி கண்டது. அமெரிக்கா வெளி நாட்டுக் கடன் 2002 இன் இறுதியில் 2.8 ட்ரிலியன் டொலராக மாறியது அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக பற்றக்கறை 500 பில்லியன் டொலராக மாறியது. இது அமெரிக்காவின் பிரமாண்டமான இராணுல பஜெட்டை விட 35 சதவீதம் அதிகமாகும்;. அமெரிக்காவின் நாளந்த 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான வெளி நாட்டுப் பணம் தேவைப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் அமெரிக்கா பொருளாதாரத்தால் ஈடுகட்ட முடியவில்லை. இதை ப+ர்த்தி செய்ய, அமெரிக்கா ஆளும் வர்க்கத்துக்கு யுத்தம் ஒரு பாதையாக மாறியது. ஈராக்கில் ஒவ்வொரு குண்டு போடப்பட்டு மக்களின் இரத்தம் மண்ணில் ஊறிய போது, விடுதலை பற்றி பிரகடனங்கள் வெளியாகியது.  அமெரிக்காப் பங்குச் சந்தையில் அதை கொண்டடிக் கொண்டிருந்தனர்.. எப்பிரல் 2ம் திகதி அமெரிக்காவின் பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட் செய்தியில் குவைத்தில் காத்திருக்கும் ஈராக்கிய ஆட்சி "எறத்தாழ அமெரி;க்கர்கள் மட்டுமே அடங்கியாதாக இருக்கும்" என்று அறிவித்தது. அமெரிக்கா இராணுவ அதிகாரி ஒருவர் கூறும் போது "எங்களுக்கு இறுதியில் தேவையானது நுங்கானுடன் சுற்றி வந்து ஓர் அரசாங்கத்தை எவ்வாறு உருவாக்குவது என ஈராக்கியருக்கு கூறக்கூடிய ஒருவரே தேவை." என்று உருவாக்க உள்ள பொம்மை அரசு பற்றி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் 1990க்கு முந்திய எண்ணை உற்பத்தியை ஈராக்கில் அடைய 5 பில்லியன் டொலர் தேவை என்று மதிப்பிடப்படுகின்றது. ஒரு நாளைய உற்பத்தியான 2.8 பில்லியன் பீப்பாய் உற்பத்தியை இரட்டிப்பாக 40 பில்லியன் டொலர் தேவையாகும். ஆனால் அனைத்துக்கும் ஈராக் எண்ணை வயல்கள் தான் முதலீட்டை வழங்க வேண்டும் என்பதை ஆக்கிரமிப்பாளன் தெளிவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரியான ஜோசப் காலின்ஸ் கூறும் போது "ஈராக்கானது ஆப்கானிஸ்தானை விட பொருளாதார அடிப்படையில் உயர்ந்த வளமுடையது. அங்கு எண்ணை இருப்பதால் யுத்த சீரழிவுகளை ஈடுசெய்ய அந்த எண்ணை வயலில் இருந்தே பெறப்படும் என்றார்" இது போன்ற பல்வேறு அறிக்கைகளை விடுத்துள்ள அமெரிக்கா ஆளும் வர்க்கம், யுத்தத்தின் சுமை ஈராக் மக்கள் எற்க வேண்டும் என்பது நிபந்தனையாக முன்வைக்கின்றது.  இந்த நிர்மாணப்பணியில் எண்ணை வயல்கள் ஈராக் அரசின் சொத்தாக இருக்க கூடாது என்பதும் அவை தனியார் மயமாக்க வேண்டும் என்பது அடிப்படையான நிபந்தனையாகும்; இருந்த போதும் பிரிட்டிஸ் அமெரிக்கா மூலதனத்துக்கிடையில் யுத்தம் நடை பெற்றுக் கொண்டிருந்த போதே மோதல் உருவாகியது. இதன் துதல் படியாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்கா நிறுவனம் 48 லட்சம் டொலர் பெறுமதியான ஒப்பந்தம் ஒன்றை, அமெரிக்க நிறுவனமான எஸ்எஸ்ஏக்கு  வழங்கியது. இந்த நிறுவனம் உலகில் மிகப் பெரிய சரக்கு எற்றி இறக்கும் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். இந்த நிறுவனத்துடன் பிரிட்டிஸ் நிறுவனமான பெஅன்ஒ போட்டி இட்டது. இந்த ஒப்பந்தைப் பெற்ற பொது அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் "இது மிகவும் நேர்த்தியான வர்த்தகம்;. இது எமக்கு உற்சாகத்தை அளிக்கின்றது" என்றனர். எண்ணைக் கிணறுகளின் தீயை அணைக்க அமெரிக்கா உதவி ஜனதிபத்தி முன்பு இயக்குணராக இருந்த நிறுவணத்தக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் அமெரிக்காவின் 5 மிகப் பெரிய நிறுவணங்களை தேர்ந்தெடுத்து 90 கோடி டொலர் பெறுமதியான ஒப்பந்தத்துக்கான தத்தம் அறிக்கை சமர்பிக்க கோரியுள்ளனர். இதில் 2000 ஆண்டு ஜனதிபதி தேர்தலில் ஜந்ததாக அதிக நிதியை லஞ்சமாக வழங்கிய பெக்டெல் காhப்பரெசனும் அடங்கும.;; இத போன்று ஆப்கானில் சூறையாடலில் ஈடுபடும் லூயி பெஜர் குழுவாகும். இப்படி ஆட்சியாளருடன் நெருங்கி நிறுவனங்கள் கொள்ளையை நடத்த தெரிவு செய்யப்படுகின்றது. போருக்கு பிந்தியா சீரமைப்பு பற்றிய 13 பக்க இரகசிய அறிக்கை ஒன்றை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்கா நிறுவணம் யுத்தத்தின் முன்பே வரைந்து இருந்தது. இந்த இரகசிய ஆவணத்தை பத்திரிகை ஒன்று பகிரங்கமாக்கிய போது, அதில் "பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த வீதிகள் பாலங்கள்" உள்ளடக்கிய 1500 மைல்கள் நீளத்திற்கு பாதையை அமைப்பது பற்றிய விபரங்களையும் உள்ளடக்கியிருந்தது. இந்த நிலையில் பிரிட்டிஸ் கம்பனிகள் ஒப்பந்தில் பங்கு பெற்றுத் தரும்படி பிரிட்டிஸ் பிரதமரிடம் கோரினர். அமெரிக்கா கம்பனிகளுடன்; இடை நிலை ஒப்பந்தங்களை உருவாக்கி உலகை மறுபங்கிட்டை நகர்த்த முடியுமா என பிரிட்டிஸ் ஆளும் வர்க்கம் ஏங்குகின்றது. பிரிட்டிஸ்சின் மூலதனத்தின் பிரதிநிதித்துவப்படுத்தும் குழு பிரிட்டிஸ் ஆளும் அதிகார வர்க்கத்ததை சந்தித்த பின் வெளியிட்ட அறிக்கையில் "எங்களது கவலைகளை அரசாங்கத்திடம் கடுமையாக வெளிப்படுத்தியுள்ளோம். 1990 இல் குவைத் விடுவிக்கப்பட்ட போது நடந்தது போன்ற நிகழ்ச்சிகள் தற்போதும் நடைபெறுவது தவிர்க்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டோம்; அப்போது அமெரிக்கா நிறுவனங்களே பெரும்பாலன ஒப்பந்தங்களை பெற்றன" என்று அமெரிக்காவை குற்றம் சாட்டினர். பிரிட்டனின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பட்ரீயா ஹெவிட் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்கா நிறுவணத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொள்ளையில் பங்கு கேட்டார். அப்பொது அவர் "வர்த்தக அடிப்படையில் லாபம்" பெறும் போட்டியில் தாம் ஈடுபடவில்லை என்றார். "மறு நிர்மாணப் பணிகளில்" ஒப்பந்தம் வழங்கும் போது "சம வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்" என்ற கெஞ்சினார். இருந்த போதும் இதில் அவர் வெற்றி பெறவில்லை. அவர் பி.பி.;சி க்கு அளித்த பேட்டியில் ஐ.நா தலைமையில் ஈராக் மக்களின் தலைமையில் ஈராக்கின் மறு சீராமைப்பு ஒப்படைக்க வேணடும் என்ற கோரினார். அவர் மேலும் கூறும் போது "ஐ.நா கட்டளைப்படி, மக்கள் நிர்வாக அமைப்பு வந்து விடுகிற நிலைக்கு நாம் நெருங்கி வந்து விட்டால், அப்போது சிறந்த கம்பனிக்கிடையே மறுநிர்மாணப் பணிக்கு சம வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்றார்." இப்படி அமெரிக்கா பிரிட்டிஸ் ஆளும் வர்க்கங்களுக்கிடையில் ஈராக்கை பங்கிடுவதில் யுத்தம் நடந்த கொண்டிருந்த போதே முரண்பாடுகள் தோன்றின. இரண்டு தலைவர்களும் சந்தித்து இதை பற்றி பேசிக் கொண்டனர். இந்த நிலையில் தான் பிரான்ஸ் - ஜெர்மனி- ரூசியா எகாதிபத்தியங்கள் ஈராக்குடனான பழைய ஒப்பந்தங்கள் அனைத்தையும் நடைமுறையில தொடர்ந்து அமுல்படுத்தப்பட வேண்டும் என்றனர். ஈராக்கிய நிர்மாணத்தில் தமது பங்கைக் கோரினர். ஐ.நா தலைமையில் ஈராக்கிய எதிர்காலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றனர். ஆனால் இதை அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பளர்கள் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டனர். அமெரிக்கா - பிரிட்டிஸ் ஆக்கிரமிப்புக்கு ஐ.நா ஊடாக சட்டப+ர்வமான அந்தஸ்தை பெற்றுத் தருவதாக கூட அறிவித்த நிலையிலும், ஆக்கிரமிப்பாளன் அதை நிராகரித்து ஈராக்கை சூறையாடும் உரிமை தமக்கு மட்டும் உண்டு என்றனர். தமக்கிடையில் மோதிக் கொளள்ளும் ஆக்கிரமிப்பளர்கள், போட்டி ஏகாதிபத்தியத்துக்கு எதையும் கொடுக்கப்போவதில்லை. இது மூன்றாம் உலக யுத்தத்தை நோக்கிய தயாரிப்பு நிலைக்கு நகர்த்தியுள்ளது. முன்னெப்போதையும் விட பன்நாட்டு மூலதனங்களுக்கிடையிலான பிளவுகள் அதிகாரித்துள்ளது. உலகை யார் அதிகம் சூறையாடுவது என்பதிலும், அதை எப்படி செய்வது என்பதில் இராணுவ ரீதியான ஆக்கிரமிப்பு பாதை நிகழ்ச்சி நிரலுக்கு அப்பட்டமாக வந்துள்ளது. இது தொடரும். இதை பிரிட்டிஸ் பிரதமர் கூறத் தயங்கவில்லை. "அடுத்த யார்" என்ற ரொனி பினேளயாரிடம் கிண்டல் அடித்த கூச்சலுடன்; பராளுமன்றத்தில் எழுந்த போது "ஈராக் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்த பின்னர், அடுத்து, .. ஆம் ஐ.நா, மூலம் வடகொரியவோடு, அதன் ஆயுதத் திட்டம் தொடர்பாக மோத வேண்டிவரும்." என்று பிரகடனம் செய்தார். நாம் ஈராக் ஆக்கிரமிப்பில் இருந்த பின்வாங்கினால்; "வடகொரியா, நம்மை ஒரு பொருட்டாக மதிக்கும் என்று எவரும் நம்புவார்களா?" என்று பிளேயர் தனது ஆக்கிரமிப்புக்கு நியாயம் கற்பித்தார். அமெரிகாவின் துணை அமைச்சர் ஜோன் போல்டன் தென்கொரியாவில் வட கொரிய பற்றிய உரையில் "எல்லா வழிமுறைகளும் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு வரகின்றன. இராணுவத் தாக்குதல் நடவடிக்கையை அமெரிக்கா விடடுடவிடவில்லை. " என்றார். உலகளவில் ஆக்கிரமிப்பகளும் அதற்கெதிரான போராட்டங்களும் நிகழ்ச்சி நிரலாகியுள்ளது.

 

அமெரிக்காவுக்கு எதிரான உணர்வுகள்

 

இந்த நிலையில் தான் மக்களின் போராட்டங்கள் உலகளவில் உயர்ந்தன. மேற்கு நாடுகளின் வரலாறறு காணத அளவுக்கு இது உச்சத்தை எட்டியது. அமெரிக்கா உள்ளிட ஐரோப்பா முதல் அனைத்து மேற்கு நாடுகளிலும் போராட்டங்கள் தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலாகியது. மக்கள் புதிதாக அரசியல் உணர்வுகளைக் பெறுகின்றனர். ஐ.நா பற்றியும், அதன் இரட்டை வேடம் களைந்துள்ளது. ஐ.நா அமெரிக்காவின் நேரடியான ஒரு விபச்சார தரகனாகவே இருந்து வந்தது அம்பலமாகியுள்ளது. அமெரிக்காவும் பிரிட்டனும் இராசாயண ஆயதங்களையும் ஆணுவாயுதங்களையும் ஈராக்கில் தேடி அழிப்பதாக கூறி களமிறங்கிய போது, பிரான்ஸ் ஜெர்மனி ரூசியா ஆளும் வர்க்கங்கள் ஒத்துதின. இராணுவ பலம் மூலம் ஆக்கிரமித்து சட்டவிரோத ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என அமெரிக்கா -பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள்; கோரிய போது, பிரான்ஸ்; - ஜெர்மனி - ரூசியா எகாதிபத்தியங்கள் அமைதி வழியில் இதை செய்ய முடியும் என்றனர். யாரும் இது போன்ற ஆயுதங்களை இந்த பூமியில் இருந்தே ஒழிக்க வேண்டும் எனக் கோரவில்லை. இரண்டு முகமாக பிளவுபட்ட  ஏகாதிபத்தியங்கள் ஈராக்கை சூறையாட எதன் மூலம் எந்தப் பாதை தமக்கு அனுகுலமானது என்பதை முன்னிறுத்தி நின்றனர்.  இதற்காக இரண்டு எகாதிபத்திய முகங்களும் ஈராக் மீது ஒரே குற்றச்சாட்டை முன் வைத்து நின்றன.

 

ஆனால் மக்கள் இதற்கு எதிராக இருந்தனர். பிரான்ஸ் முதல் மூன்றாம் உலக நாடுகளின் வீதிகள் எங்கும் இது பெற்றோலுக்கான யுத்தம் என்ற கோசம் சர்வதேசியமாக எதிரோலித்தது. உலகளவில் சர்வதேசியத்தின் மையக் கோசமாக இந்த யுத்தம் பெற்றோலுக்கான என்பதை பறைசாற்றி நின்றது. பெற்றோலுக்கான இந்த யுத்தத்தின் கொடூரத்தை ஒவ்வொரு மனிதனும் அம்பலப்படுத்தும் வகையில், தனது திறமைக்கு எற்ப வெளிப்படுத்தி நிற்பதில், அதை மக்களுக்கு கூறுவதில் தலை சிறந்த முன்னோடிகளாக திகழ்ந்தனர். பரிஸ் வீதிகள் எங்கும் பெற்றொலுக்கான யுத்தத்தின் விளைவை சித்தரிக்கும் பல துண்டுபிரசுரங்கள் எங்கும் எப்போதும் தொடராக காட்சியளித்தன. மக்கள் தன்னிச்சையாக இது தொடர்பாக ஊர்வலங்கள், கூட்டங்கள், கருத்தரங்குளை நடத்தினர். மையமான ஊர்வலங்கள் நடக்கின்ற போது, பிரான்சின் அனைத்து கிராமங்களிலும் ஒன்று திரண்ட எதிhப்புகளை நடத்தினர். பாடசாலைகள் எங்கும் எதிர்ப்பு கூட்டங்கள், யுத்த எதிர்ப்பு கருத்தரங்ககள், ஆர்ப்பட்டங்கள் நாள் தோறும் தன்னியல்பாகவும் திட்மிட்டும் நடத்தப்பட்டன. யுத்ததுக்கு எதிரான கோசங்கள் போராட்டங்கள் அலை அலையாக மக்கள் உணர்வாக எழுந்தன. இது ஆளும் வர்க்கத்தின் யுத்த எதிர்ப்பு கோசத்திற்கு திட்வட்டமாக எதிராக இருந்தது. அமெரிக்கா தலைமியாலான ஏகாதிபத்தியத்துக்கும், பிரான்ஸ் - ஜெர்மனிய தலைமையிலான எகாதிபத்தியத்தின் அடிப்படை நோக்கத்துக்கும் எதிராக இருந்தது. ஐரோப்பா எங்கும் பெரும்பான்மையாக மக்களி;ன் யுத்த எதிர்ப்பு கோசங்கள் போராட்டங்கள், இரண்டு முகமாக பிளவுண்ட ஆளும் ஏகாதிபத்திய வர்க்கத்தின் யுத்தம் பற்றிய நிலைப்பாட்டுக்கு எதிரானதாக இருந்தது. இந்த நிலைப்பாடு ஈராக்கிய அரசின் நிலைப்பாட்டு சார்பானதாக இருக்கவில்லை. அமெரிக்காவுக்கு எதிராக வீரம் செறிந்த மிக குறுகிய பொராட்டம் நடத்திய ஈராக் மக்களின் நிலைக்கு சார்பானதாக இருந்தது. இது ஈராக் மக்களில் தொடங்கி அமெரிக்கா மக்களின் யுத்த எதிர்ப்பு போராட்டங்கள் ஒன்றுபட்ட அதே நேரம், ஒன்றுபட்ட நோக்கங்களை பிரதிபலித்தனர். உலக வரலாற்றை நிர்ணயம் செய்யும் மக்களின் இந்த போராட்டம், தத்தம் சொந்த படிப்பினை உடாக ஒரு கரம் குவிக்கின்றனர். உலகை தலைகீழாக்கும் மூலதனத்துக்கு எதிரான போராட்டத்துக்கு, இப் போராட்டங்கள் அனைத்தும் சொந்தப் படிப்பனை ஊடாக ஒரு கரம் கோர்த்து நிற்கின்றன. மூலதனத்தக்கான யுத்தத்தை ஒழிக்க கொரும் மா-லெ-மாவோ தத்துவம் இதை வழிகாட்டும் நாள் எப்போது உருவாகின்றதோ, அன்றே உலகை உலுக்கும் போராட்டங்களுக்கு இவை முன்னுதாரணமிக்க படிபினைகளை வழங்கி நிற்கின்றது.