உலகப் பொலிஸ்கரப் போட்டியில் ஈடுபட்டிருக்கும் ஏகாதிபத்தியங்கள் பொய், அவதூறுகள், பொருளாதர முற்றுகை, பொருளாதார ஆதிக்கம், தொழில் நுட்ப ஆதிக்கம் என உலகை ஏமாற்றியும், பறித்தும்,

மோசடி செய்தும் ஆதிக்காத்தால் சதியால் உலக மேலான்மை பெற்று உலகை சுரண்டிக் கொழுத்து ஆதிக்கத்தை தக்கவைத்துள்ளது. இந்தபொருளாதார ஆதிக்கத்தில் சின்ன இழப்புகளோ, எதிர்ப்புக்களோ எழும் போது உலகின் முலைமுடுக்ககெல்லாம் இராணுவ தாக்குதல் நடத்த (இலற்றோனிக் யுத்தம்) பின் நிற்க்காத ஐனநாயகத்தை அடிப்படையாக கொண்ட அமைதியான வன்முறையற்ற உலகை பிரகடணம் செய்து பாதுகாக்கின்றனர்.

 

பல்கன் மீதான அமெரிக்கா தலைமையில் ஏகாதிபத்தியத்தின் ஒரு பகுதி தொடங்கிய ஆக்கிரமிப்பு யுத்தம், மூன்றாம் உலக யுத்தத்தக்கான முன் தயாரிப்பாகும். நவீன ஆயுதங்கள் கையாள்வது,  ஆயுதத்தின் பயன்பாட்டை பரிசோதிப்பது, உள் நாட்டு நெருக்கடிகளை தவிர்ப்பது, புதிய ஆதிக்க மண்டலங்களை கைப்பற்றுவது, இராணுவ கூட்டுகளை ஆராய்வதும் பரிசோதிப்பதுடன் பொருளாதார நலன்களை பங்கு போட்டுக் கொள்வது என யுத்தம் தனது கோரா முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஏன் பிரஞ்சு பராளமன்றத்துக்கு கூட அறிவிக்காது யுத்தத்தை தொடங்கி தமது ஐனநாயக பாரளமன்றங்களையே கேலிக்குரியாதாக்கியதுடன், தனது மந்திரிசபையில் கூட விவாதிக்காது  தமது சுரண்டலுக்கான யுத்த ஆதிக்க வெறியை ஆளும் ஐனநாயக வடிவங்கள் வெளிப்படுத்தின.

 

சேர்பிய தேசியவாதிகள் இனவதத்தை கிளறி சொந்த இனத்தை சார்ந்து மற்ற இனங்கள் மீது நடத்தி வரும் தொடர்ச்சியான தாக்குதலில் ஒடுக்கப்பட்ட இனமக்கள் தமது சுயநிர்ணயத்தை கோரி போராவேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டனர். இந்த வகையில் கோசவோ தலைவர்கள் சொந்த வர்க்கப் போராட்டம் சார்ந்து சுயநிர்ணயத்தைக் கோரா தவறி ஏகாதிபத்தியம் நோக்கி கையேந்திய நிலையில், ஏகாதிபத்தியத்திடம் பயிற்சிகளை பெற்ற (ஐர்மனியிடம்) நிலையிலும், நியமான சுயநிர்ணயக் கோரிக்கையை ஏகாதிபத்தியத்தின் காலுக்கு கீழ் இட்டுச்சென்று ஆக்கிரமிப்புக்கு பக்கபலமாக மாறியது என்பது, நியாமான கோரிக்கைகூட ஏகாதிபத்திய அடிமைத்தனத்துக்கு ஒப்பமிட்டதாகும்.

 

யுத்த தயாரிப்பில் ஈடுபட்ட ஏகாதிபத்தியங்கள் அமைதி ஒப்பந்தம் என்ற பெயரில் நடத்திய நாடகங்கள், அதன் தொடர்ச்சியில் கோசவோ பிரதிநிதி கையெழுத்திட்ட சரத்துக்கள் மூலம் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை இலகுபடுத்திய வரலாறு கோசவோ மக்களின் நியாயமான கோரிக்கையின் மேல்அல்ல. மாறாக தமது ஏகாதிபத்திய தரகு தனத்தால் மக்களின் துன்ப துயரங்களை விற்று ஏகாதிபத்திய ஆளும்வர்க்கங்ளின்  எலும்புகளுக்காக சோராம் போனவர்கள். தாக்குதல் தொடங்கிய பின் சர்வதேச ரீதியாக கோசவோவின் நியாயமான போராட்டம் பின்தள்ளப்பட்டு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு அம்பலப்பட, முன்பு கையெழுத்திட்டவர் திடீர் என சேர்பிய தலைவர்களின் கைகளை குலுக்கியபடி ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரியதன் மூலம் ஏகாதிபத்திய நரித்தனத்தையும், ஏகாதிபத்திய ஒப்பந்தங்கள், அந்த மக்களின் நியாயமாக பிரதிபலிக்காது கையெழுத்துக்கு உள்ளனதையும் அம்பலப்படுத்தியது.

 

சேர்பிய மக்கள் இரண்டாம் உலகயுத்தில் பாசிசத்தை எதிhத்து வீரமிக்க வரலாற்றை கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் நடத்தினர். பொதுவாக மற்றைய தேசிய இனங்கள் பாசிசத்துடன் சமரசம் கண்ட நிலையில் வளர்ச்சி பெற்ற போராட்டம் ஒன்றினைந்த யூக்கோசிலவியவை சுயநிர்ணயத்தின் அடிப்டையில் வென்று எடுத்தனர். டிட்டோ பின்னால் கம்யூனிசத்தை கைவிட்டு நடுநிலை வேடம் போட்டு முதலாளித்துவத்தை மீட்ட நிலையில், சுயநிர்ணயத்தை கைவிட்டதால் தேசிய இனமுரண்பாடு வளர்ச்சிபெற்றது.

 

nஐர்மனிய பாசிட்டுகள் தமது இரண்டாம் உலக யுத்ததின் தமது nஐன்ம விரோதிகளை பழிவாங்க காத்துக் கிடந்த நிலையில் இந்த தேசிய இன முரண்பாட்டில் தலையிட்டனர். முன்பு பொஸ்சினியா, குரோசியா பிரச்சனையில் ஆர்பாட்டங்களை திட்டமிட்ட முன்றவது சக்தி ஒன்று, திடீர் என கத்தோலிக்க கோயில்கள் மூலம் ஆயுதங்களை வழங்கி யுத்ததை தொடக்கிவைத்தனர்.

 

இன்று கோசோவோ பிரச்சனையை ஓட்டி நோட்டோவின் தாக்குதலுக்கு முன்பே சேர்பிய படைகள் இருந்த பிரதேசங்களில் கோசவோ மக்களை அங்கு போராடிக் கொண்டிருந்த குழுக்கள் கட்டயப்படுத்தி நோட்டோ தாக்குதல் நடத்தப் போவதாக கூறி வெளியேற்றினர். (இது போல் இலங்கையில் யாழ்குடாநாட்டை இலங்கை அரசு ஆக்கிரமிப்பு செய்த போது புலிகள் செய்தனர்.) மாறுபுறம் சேர்பிய ஆயுதப்படைகள் மக்களை வெளியேற்றியதுடன் சில பகுதிகளில் படுகொலைகளையும் செய்தனர். கோசவோ பகுதியில் நோட்டோ தாக்குதலுக்கு முன்பே செயலற்றிக் கொண்டிருந்த 2000 மேற்பட்ட  மனித உரிமை மற்றும் பத்திரிகை துறையைச் சேர்ந்தோரை வெளியேற கோரிய நோட்டோ, இதன் மூலம் அகதிகள் வெளியேற்றத்தை முன்கூட்டியே துரிதப்படுத்தினர். இந்த களத்தில் செயல் பட்டவர்களே பல்வேறு வகையில் தாக்குதலுக்கான தேவையை மேற்க்குநாட்டு மக்களுக்குள்;  பிரச்சாரம் செய்தவர்கள் ஆவர். ஏன் செஞ்சிலுவைச் சங்கம் தற்போதும் சேர்;பிய படைகளின் தாக்குதல் நிலைகளை அடையாளம் காட்டும் வகையில் செயல்படுவதும் அம்பலமாகியுள்ளது. அத்துடன் யுத்தத்தின் ஆரம்பத்தில் ஐரோப்பிய மக்களிடையே நிலவிய எதிர்ப்பை, செஞ்சிலுவை சங்கம் உட்பட்ட பல்வேறு அமைப்புகள் மனிதபிமான பிச்சை கேட்டு ஐரோப்பிய மக்களிடம் சென்று யுத்தத்துக்கு ஆதாரவான பிரச்சரத்தை மறைமுகமாக செய்துள்ளனர். ஏன் பாதிக்கப்பட்ட சேர்பிய மக்களுக்கு உதவ முன்வராத இவ் அமைப்புகள், தாக்குதலை நிறுத்தக் கோரமுடியாது யுத்தவாதிகளாக, யுத்ததின் பின் சென்று யுத்த கடமையில் ஈடுபடுகின்றனர். மக்களிடம் சேர்க்கும் பொருட்க்களை இராணுவ விமனங்களில் கொண்டு சென்று, இராணுவமே தமது உதவியாக விநியோகித்த யுத்த மனிதபிமானியாக காட்டப்படுகின்றது. (இதைத்தான் இந்திய இராணுவம் எம் மண்ணில் செய்தது.)

 

குவிந்து வந்த அகதிகளை தீடீர் என ஐந்து லட்சம் என அறிவித்து மூக்குடைபட்ட நோட்டோ, பின்னால் அகதியைக் காட்டி யுத்ததை நியப்படுத்திய நிலையில் சேர்;பிய அரசு அகதியை திருப்பி அழைத்த நிலையில் ஒரு இரவில் 60000 அகதிகள் மீள சென்றதை அடுத்து நோட்டோ மீளவும் மூக்குடைபட்டது. இதைத் தொடர்ந்து அகதிகளை பல்வேறு நாடுகளுக்கு விமானம் மூலம் பலக்காரமாக, ஏங்கு கொண்டு செல்லப் படுகின்றனர் என அறிவியாது ஏற்றி அணுப்பப்பட்டனர். இவர்கள் குடும்பங்கள் சில பிரிக்கப்பட்டு மக்களுடன் தொடர்பற்ற முட்கம்பிகளின் பின்னால் பாதுகாப்பின் பெயரில் அடைத்து பண்ணையாக்கப்பட்டுள்ளனர். இவை இன்று அவர்களின் செய்திகளில் பின் காட்டுவது மறைக்கப்பட்டுவிட்டது. ஏன் துருக்கிய பாசிட்டுகள் சேர்;பியரை விட மோசமாக குருட்டீஸ்தான் மக்களை வேட்டையயாடி மக்கனை கொன்றும் அகதியாக்கும் இவர்கள் அகதிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து தமது பாசிசத்தை வெள்ளையாக்கின்றனர்.

 

இந்த நிலையிலும் கோசவோவில் வாழும் சேர்பிய மக்கள் எந்த தாக்குதலையும் கோசவோ மக்கள் மீது நடத்தவில்லை. அதே நேரம் சேர்;பிய மற்றம் கோசவோ அரசியல் ஆதிக்க பிரிவுகளை எதிர்த்த சுயநிர்ணயத்தை கோரும் சேர்;பிய கோசவோ வாதிகளை இரு பகுதியும் தாக்குவது அம்பலப்பட்டுப் போய்யுள்ளது. அகதிகளை நிர்பந்தித்தும், ஏமாற்றியும் நோட்டோவால் உருவாக்கப்பட்டு வரும் கூலிப்படையில் 40000 மேல் சேர்க்கப்பட்டு ஆயுதமயப்படுத்தி, ஏகாதிபத்திய நலனுக்காக பலியிட தரைச்சண்டையில் இறக்கப்படுகின்றனர்.


சேர்;பியா ஆளும் தேசியவாதிகள் ஏகாதிபத்திய ஆதாராவுடன் போலி கமியூனிஸ்ட்டுக்கு எதிராக ஐனநாயகத்தை மீட்டு ஆட்சிபீடம் எறும்வரை ஏகாதிபத்தியம் தேவையான உதவிகளையும் ஐனநாயகவாதிகளாக நிறுவி பாதுகாத்து வளர்த்தன் மூலம் , இருந்த மக்கள்நலன் சாhந்த நலன்களை எல்லாம் சுரண்டும் ஏகாதிபத்திய கொள்ளைக்காக ஒழித்துக்கட்டினர். இதன் தொடர்ச்சியில் மக்களின் எதிர்ப்பு, எழுச்சிகள் எல்லாவற்றையும் தடுக்க தேவைப்பட்ட இனபிளவை ஏகாதிபத்திய தயவுடன் தொடங்கிய போதும், அதன் எல்லைகடந்து சொந்த தேசியம் சாhந்த தேசிய வெறியாக வளர்ந்த போதுதான் ஏகாதிபத்திய நலன்கள் நெருக்கடிக்குள்ளானது. பல்கனிலும் அதைச் சுற்றியும் அமைதியான சுரண்டல் என்பது தேசியவாதிகளால் சிக்கலுக்குள்ளாகியதுடன், சந்தைகள் ஏகாதிபத்தியதுக்கு இடையில் இழுபறிநிலையை தோற்றுவித்த நிலையில் இதைக்கட்டுப்படுத்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு அவசியமாகிவிட்டது.

 

ஒரு கோடி சனத்தொகையைக் கொண்ட சேர்பியில் கோர்சவ மக்களாகிய அல்பேனியர் 18 லட்சம் பேர் ஆவர். இது கோசவோவில் இரண்டு லட்சம் சேர்பியரையும், 18 லட்சம் அல்பேனியரையும் கொண்ட பகுதியாக இருந்தது. நகர் மயமாதல் 51.2 வீதமாக இருக்க இந்த சேர்பிய மக்கள் இரண்டாம் உலக யுத்தத்தில் கம்யூனஸ்ட்டுகள் தலைமையில் வீரமிக்க கொரிலாப் போராட்டத்தை நடத்தியதுடன், இரண்டாம் உலக யுத்தத்தில் இயங்கிய மிகப் பெரிய கொரிலா குழுவாகவும் இயங்கிய வீர வராலாற்றை சாதித்த மக்கள் ஆவர். இந்த வீரமிக்க பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தால் இரண்டாம் உலக யுத்ததில் மூன்றவது பெரிய இழப்பைச் சந்திதனர்.

 

இந்த மக்களின் சமூக பொருளாதார நிலைகளை ஆராய்வோம்.


ஆண்டு                        1946    1955    1970    1974    1977    1978    1980    1985    1989    1990            1991    1992    1993    1994    1995
தனிநபர் வருமானம் டொலரில் -    -    -    -    -    -    2890    2570    2680    2630            2360    1870    1480    1450   
தேசிய வருமானம் (100 கோடியில்)   -    -    -    -    -    -    28.7                             27.7     24.6     19.6     15.5     15.4.    16.3
வேலையின்மை                -    -    -    -    -    -    11.9                            15.9            20.5     22.8     23.9     23.9     24.7
தேசிய மூதலீடு                                                                                  -                                  19.1     19.1     15.9            -          -          -
வெளிநாட்டு கடன் (100 கோடியில்)                                  -    18.4     17.3            16.5     -          5.3       5.6       5.6       6.5
ஏற்றுமதி (100 கோடியில்)                                 7.5       3.8       -          4.6       4.7            2.539   -          -          -
இறக்குமதி                                     13.2     4.6       -          6.7       5.5       3.859   -            -          -
கோதுமை உற்பத்தி
ஆயிரம் தொன்னில்            1800    2436    3792    6283    5595    5355    5078    4859    -          4109                                   3049    3249   
சோளம்                        1725    3900    6933    8031    9870    7376    4686    9891    -          4719            -          -          1292    2222   
ஆடு, மாடு
ஆயிரத்தில்                    8848    17269  14003  13533  13125  13056  2597    12898  -          2098            -          -          1991    1808   
பன்றி                          2763    47805  5544    7401    7326    8452    4876    8673    -          4354            -          -          4092    3692    -
வருட உற்பத்தியில் விவாசயத்தில் மாற்றம் வீதத்தில்           -    -    4,0       7,0       9,7       17,8     3,3            4,0       6,0
நிலக்கரி (ஆயிரம் தொன்னில்)            -                    -    41267  -          -            40410  40105  37434  38145  -
பெற்றோல்                     21.3     257.2   2854    3458    3950    4100    -          1127    -          -            1100    1165    1148    1078    -
செப்பு                          46        57.4     188.2   272.1   262.5   267.1   -          135      -          -            134      115      51        72        -
அலுமினியம்                   0.6       11.5     47.7     147.1   176.5   180      -          271      -          -            76        67        26        6,9       -
உருக்கு                        202      805      2228    2836    2580    2422    -          923      -          -            725      665      183      137      -
மின்சாரம் பத்து லட்சம் கிலோ வாற்     1614    6950    40765  60115  69185  51358  -          38683  -          -            39453  36488  34156  35353  -
ரைக்டர்                                  -                    -    43615  -          -            23865  14423  5369    4508    -
லொறி                                        -                    -    11672  -            -          8508    4252    278      697     
கார் ஆயிரத்தில்                          -                    -    158      -          -            97        26        8          8,4       -
தொழில்சாலை உற்பத்தியின் மாற்றம் வீதத்தில்            -                    -    1,0       -          -            17,6     21,4     37,3     1,2       3,8

சேர்பிய ஏற்றுமதி இறக்குமதி யாரைச் சாhந்துள்ளது எனப் பார்ப்போம்.


நாடுகளின் வகை    ஏற்றுமதி 1993 இல் வீதத்தில்    இறக்குமதி 1993 இல் வீதத்தில்
வழமையான நட்பு நாடுகள்     45.9                                                    40.3
முன்னேறிய நாடுகள்               44.8                                                    51.5
பின்தங்கிய நாடுகள்                   9.3                                                      8.2

 

உற்பத்தி வகைகள்
என்ன வகையில்    வீதத்தில்
தனியார்                   92,3
அரசு                         3,4
கூட்டுறவு                2,3
கலந்தவை               2,0

 

1994 இல் 3,62 பேர் சராசரியாக ஒரு வீட்டில் வாழ்ந்தனர்.
1993 இல் 1000 பேருக்கு 5,9 திருமனம் நடந்தது. 1000 பேருக்கு 119,2 விவகரத்து நடந்தது.
1994 இல் 1000 பேருக்கு 14 வைத்தியர் இருந்தனர். 1000 பேருக்கு 167 தொலைக் காட்சி இருந்தது. 890 குளிரூட்டி இருந்தது. 350 பேரிடம் வாகனம் இருந்தது.

 

1000 பேருக்கு 93,3 ஆரம்ப கல்வி மணவர்களும், 35,2 இறுதியாண்டு மணவர்களும், 11,6 பல்கலைக் கழக மணவர்களும் இருந்தனர்.

 

யுக்கோசிலேவியா மக்களின் வாழ்க்கைதரம் இரண்டாம் உலக யுத்தின் பின் அதிகரித்து சென்றதும் பின்னால் 1980க்கு பின்னால் படிப்படியாக குறைந்து சென்றதை மேல் உள்ள அட்டவனை காட்டுகின்றது. உற்பத்தி குறைந்து சென்றதையும், வேலையின்மை அதிகரித்தையும், ஏகாதிபத்திய பொருளாதார ஆதிக்கம், தொடர்ச்சியான யுத்தம், நாடுகள் பிரிந்ததும் தனிநபர் வாழ்க்கைத்தரம் மிகவும் கீழ் நோக்கி நகர்ந்துள்ளது. இந்த நிலைகளில் யுத்தம், இனமுரண்பாடு மேலும் மேலும் தீவிரமாக்குவதன் மூலம் வாக்கப் போராட்டத்தை தடுக்க அவசியமாகின்றது.

 

சேர்பியா தேசியவாதிகள் அப்பாவிமக்களை கிரமம் கிரமமாக தாக்கியும், படுகொலை செய்தும் வந்த நிலையில் இதை ஏகாதிபத்தியம் சாட்டாக முன்வைத்த தாக்குதலுக்கும், ஆக்கிரமிப்புக்கும் நியாங்களை முன்வைத்தனர். சேர்பிய தேசியவாதிகள் சொந்த மக்களை உச்ச அளவில் சுரண்டவும், ஏகாதிபத்தியத்திடம் நாட்டை அடகுவைத்ததை மறைக்கவும், மற்றை இனங்கள் மீதான தாக்குதல் தொடர் வரலாறாக உள்ளது. முன்பு பொஸ்சினியா பெண்களை இனத் தூய்மையை களங்கப்படுத்த பெண்களை ஆயிரம் ஆயிரமாக பாலியல் வன்முறைக்குள்ளாக்கி; படுகொலை செய்தும் தமது தேசிய இனவெறியை பாறைசாற்றினர். நடந்ததும், நடக்கும், தொடர்வதும் வளர்ச்சி பெற்றுவரும் வர்க்கப் போராட்டத்தை தடுக்கவும், மீண்டும் கம்யூனிசம் எற்படாது தடுக்கவும் தேசிய வெறியை கிளறி பாசிசத்தை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட யுத்தம், ஏகாதிபத்திய முரண்பாட்டின் வெடிப்பாக அதன் பிரதிபலிப்புகளை எற்படுத்தியுள்ளது.

 

ஐக்கிய நாட்டுசபை ஊடாக ஒரு தாக்குதலை தொடுக்க முடியாது எனக் கண்டு கொண்ட ஏகாதிபத்தியம், நோட்டோ மூலம் தனது ஆக்கிரமிப்பை தொடங்கினர். இந்த ஆக்கிரமிப்பின் பின்னர் அதிகரித்த குண்டுத்தாக்குதாலால், சேர்பிய மக்களின் வெற்றிகள் அழிக்கப்பட, மறுபுறம் சேர்பிய இனவெறி கோசவோ மக்களின் அனைத்து சொத்துகளையும் எரித்தும் கொள்ளையடித்தும் அந்த மக்களை அந்த மண்ணில் இருந்து படுகொலையூடாக எல்லைக்கு அப்பால் துரத்தியுள்ளது. சொந்த இனத்தின் விடுதலைக்கு மக்களுக்குள் இருந்து போராடிய கோசவோ மக்களின் வீரமான போராட்டம் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பால், முற்றாக நசுக்கப்பட்டு அழிக்கப்பட்டு, சொந்தமண்ணையும் வராலறாக உருவாக்கிய பொருளாதாதராங்களை எல்லாம் இழந்து நாதியற்ற அகதியாக, ஏகாதிபத்தியங்கள்  தமது ஆக்கிரமிப் ஊடாக மாற்றியுள்ளது. இது மேலும் ஏகாதிபத்திய நுகத்தடியில் அம் மக்களை அடக்கவும், எதிர்காலத்தில் சர்வதேச நிதியங்களின் நிபந்தனைக்குள்  அடிமைக்கான ஒப்பந்தங்களை ஒப்பமிட நிர்பந்திக்கும் ஆக்கிரமிப்பாகும்.

 

ஐரோப்பிய ஆளும்பீடங்கள் அனேகமாக எல்லாம் கால்மார்க்ஸ் உருவாக்கிய முன்னைய சமூகஐனநாயக கட்சியின் புரட்சிகர அரசியல் போராட்ட வரலாற்றை தொடர்ந்தும் மேலும் மேலும் துரோகம் இழைத்த ஏகாதிபத்திய யுத்த வெறியராக மாறி இருப்பதுடன், இந்த அரசுகளில் சில லெனின் உருவாக்கிய புரட்சிகர கம்யூனிஸ் கட்சியின் அரசியலை விபச்சாரம் செய்த துரோகத்தின் ஆதாரவில் உயிர்வாழ்பவையாகும். மூன்றாம் உலக யுத்தத்தின் ஊற்று மூலத்தை முன்னைய சமூகசனநயாக கட்சிகள் தொடங்கி நடத்த தயாரனதையும், போலிக் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பதாக பாசங்கு செய்து யுத்தத்தை ஊக்குவிப்பர் என்பதையும் இந்த ஆக்கிரமிப்பு இரண்டம் உலக யுத்த தயாரிப்பு போல் மீள உலகுக்கு தமது வர்க்க துரோகத்தின் ஊடாக பறைசாற்றியுள்ளனர். குறிப்பாக பிரான்ஸ், இத்தாலி போலிக் கம்யூனிஸ்ட்டுகள் பெயரளவில் எதிர்ப்பாதாக பாசங்கு செய்த போதும், அரசில் இருந்து ராஐpனமா செய்ய மறுத்து யுத்தத்தை தொடர்கின்றனர். இதைப் போல் nஐர்மனி, பிரான்ஸ் என பல நாடுகளில் மாசு அசுத்தத்துக்கு எதிரான பச்சைக் கட்சினர் ஆக்கிரமிப்புக்கு பச்சை கொடி காட்டி  அரசுகளில் பங்கேற்ற படி ஆதாரித்து நிற்பதுடன், ஏகாதிபத்திய அதிநவீன கண்டு பிடிப்புகள் பரீட்சாத்தின் ஊடாக நாசமாகும் சூழல் பற்றி அக்கறையின்றி, சேர்பிய மண்ணின் சூழல் நாசமாவதை ஊக்குவித்து யுத்த பிரச்சரவாதிகளாக அரசில் செயல் ஆற்றுகின்றனர்.

 

இவ் யுத்தம் ஐரோப்பாவில் ஆளமான ஒரு பிளவை எற்படுத்தியுள்ளது. பல தமது ஆக்கிரமிப்பு தேசவெறிக்குடாக நிர்வணமாகியுள்ளனர். எல்லா அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் என எங்கும் முரண்பாடுகளை திவிரமாக்கியுள்ளது. இது எதிர் காலத்தில் இரு எதிர் அரசியல் போக்கை தீர்மானிக்கும் வகையில் விவாதங்கள் தொடங்கிவிட்டது.

 

இது ஒருபுறம்நிகழ்ழ இதை எதிர்க்கும் ஐரோப்பியரில் ஒருபகுதியினர் அமெரிக்கா தலைமையில் நடக்கும் ஆக்கிரமிப்புக்கு பதில் நேரடியான ஐரோப்பிய ஆக்கிரமிப்புக்கு ஊடாக உலக தலைமையை கோருபவராக உள்ளனர். அதாவது அமெரிக்காவுக்கு பதில் போட்டித் தலைமையை உருவாக்கவும், கடந்த வரலாற்றில் ஐரோப்பிய தலைமையில் உலகை சூறையாடி கொள்ளையடித்து இழந்து போனவைகளை மீள பெறும் கணவுகளில் இத்தாக்குதலை எதிர்க்கின்றனர்.

 

ரசியா ஏகாதிபத்தியம் பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த போதும், முன்னைய சோவியத் சமூக ஏகாதிபத்திய கனவுடன், உள்நாட்டு வர்க்கப் போராட்டத்துடன் எழும் நெருக்கடியில், போலிக் கம்யூனிஸ்க் கட்சியின் வளர்ச்சியுடன் யுத்தத்தை எதிர்த்து தனது பொருளாதார ஆதிக்கத்தை தக்கவைக்க தீவிரமாக முயல்கின்றது. ஆயுத உதவி உட்பட படை நகர்த்தல் ஈறாக முன்வைத்து மூன்றாம் உலக யுத்ததை நோக்கிய முரண்பாட்டை தெளிவாக்கியுள்ளது. இந்த நெருக்கடியில் பிரிந்து வரும் அனைத்து அரசுகளும் உலகின் உன்னதமான ஐனநாயகத்தை கொண்டவையாகும். இந்த ஐனநாயக அமைப்பில் உள்ள முரண்பாடு உண்மையில் ஐனநாயகம் அல்ல மாறாக மக்களின் உழைப்பை சூறையாடுவதும், அதற்க்கான ஆக்கிரமிப்புதான் என்பதை, ஆக்கிரமிப்பும், எதிர்ப்பும் துல்லியமாக்கின்றது. இந்த பொருளாதார அமைப்பு பாதுகாக்கும் அனைத்து ஐனநாயகமும் உண்மையில் ஐனநாயகம் அல்ல மாறாக மற்றவர் மீது சவாரி விடுவதுதான் என்பதை மீளமீள வரலாறு நிறுவுகின்றது.

 

யுத்ததைத் தொடங்கிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புவாதிகள் கோசவோ மக்களின் துன்பம்  துயரங்கள் பற்றி முதலைக் கண்ணீர் வடித்தபடி நடத்தும் ஆக்கிரமிப்பு என்பது தௌ;ளத் தெளிவானது. ஏன் சொந்த ஏகாதிபத்திய நாடுகளில் வீதிகளில் வசிக்கும் பல லட்சம் மக்கள் பற்றியோ, வருடம் வருடம் குளிரில் விறைத்துச் சாகும் மக்கள் பற்றியோ, கோடி கோடியாக (ஐரோப்பாவில் வேலையற்றவர் இரண்டு கோடி இது அரசு புள்ளிவிபரம.; ஆணால் உண்மையில் இது நாலு கோடிக்கும் அதிகம்) வேலையற்று தண்டல் சோறுக்கு கையேந்தும் மக்கள் பற்றியோ இந்த ஆக்கிரமிப்பாளனின் முன் தெரிவதில்லை ஏன்? ஆபிரிக்காவில் இவர்கள் எழும்புக் கூடாக்கி நாள் தோறும் கொன்று ஒழிப்பவர் பற்றி கண்டு கொள்ளாத மனிதபிமானம் தான் என்ன? உலகு எங்கும் உலக மயமாதல் கோடி கோடியாக உழைக்கும் வர்க்கத்தை சிலர் அதிகமாக கொள்ளையடிக்க, வேலையில் இருந்து துரத்தி கஞ்சிக்கே வேட்டு வைக்கும் இந்த ஆக்கிரமிப்பாளனின் மனிதபிமானம் எது என்பது, இந்த ஐனநாயக முதலாளித்துவ எகாதிபத்தியத்தில் வாழும் சிலருக்கே என்பது புரிந்ததே.

 

ஏன் நீண்ட பல வருடாமாக போராடும் குருடீஸ்தான் மக்களின் போராட்டமும், துருக்கிய பாசிட்டுகளின் படு கொலை அரசியலும் சொந்த இனத்தவனின் ஐனநாயக உரிமைக்கே சிறைகளும், படுகொலையையும்; தீர்வாக வழங்கும் ஐனநாயகத்தை இந்த ஆக்கிரமிபாளர்கள் தான் வர்க்க விசுவாசத்துடன் பாதுகாக்கின்றனர்.

 

அண்மையில் குருடீஸ்தான் கம்யூனிஸ் கட்சியின் தலைவர் கைது செய்ய அமெரிக்கா உட்பட்ட இஸ்ரேல் உளவுத்துறையுடன் ஐரோப்பியா ஐனநாயகவாதிகள் சட்டவிரோதமாக நாட்டு எல்லைகளை தாண்டி கைது செய்த ஐனநாயகம் கண்டு உலகம் அதிர்ந்தது போனபோது மனிதபிமனமோ, நாடு கடந்த ஐனநாயக விரோதமோ கேள்விக்குள்ளாகவில்லை ஏன்?

 

குருடீஸ்தான் தலைவர் அப்துல்லா ஒக்கலான் சர்வதேச நீதிமன்றம் முன் சரணடைந்து விசாரணையை எதிர் கொள்ள விரும்பிய போதும், ஐனநாயகத்தின் காவலரான ஐரோப்பிய விமனத்தையே இறங்க விடமறுத்து துருக்கிய பாசிட்டுகளின் மரண தண்டனையை எதிர்கொள்ள சிவப்பு கம்பளம் விரித்து ஐனநாயகத்தின் பெயரில் அனுப்பியவர்கள்; இவர்கள்தான் இன்று கோசவோ இனப் பிரச்சனையில் முதலைக்கண்ணிர் வடிப்பவர்களாகவும், கவாலரகவும் இருப்பதுடன் சர்வதேச நிதிமன்ற விசரனையை கோருவதும் சேர்பியை முழுசாக ஏப்பமிடவே.

 

மாறாக ஈராக்சரி, அப்துல்லா ஒக்கலானுக்கும் சரி, நோட்டோ ஆக்கிரமிப்புக்கும் சரி எதிராக ஐரோப்பா முதல் உலகு எங்கும் மக்கள் தொடர்ந்து போராடுகின்றனர். மக்களை சென்று அடையும் அனைத்து செய்தி, தகவல் ஊடாகங்களையும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு வாதிகள் பொய்கள் மூலம் காட்டிய உண்மைகளை விட, மக்கள் உண்மையையும், பொய்களையும் இனம் கண்டு உண்மைக்காக யுத்தத்துக்கு எதிராக போராடுகின்றனர். வர்க்கப் போராட்ட வரலாறு முடியும் வரை யுத்தங்கள் மக்கள் முன் எப்போதும் யதார்த்தமாக நிடிக்கின்றன. இதற்க்கு எதிரான போராட்டமும் யதார்த்தமாக மக்கள் நடத்துவதும் தொடர்வது தவிர்க்கமுடியாது. கோர்சோவோ மக்கள் மீதான சேர்பிய ஆக்கிரமிப்பை எதிர்த்தும், ஏகாதிபத்திய தலைமையில் சேர்பியா மீது நடத்தும் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் நாம் குரல் கொடுப்பதும், போராடுவதும் வரலாற்று கடமையாகும்.