(வன்னி) மக்கள் பற்றி புலிகள் என்ன நினைக்கின்றனரோ, அதுபோல் அரசு என்ன நினைகின்றனரோ, அதைபற்றி மட்டும்தான் பேசுகின்றனர். உண்மையில் இவர்கள் சொல்வதற்கு எதிராகவும் அல்லது ஆதாரவாகவும் குலைக்கின்றனர். இப்படி மனித வாழ்க்கை திரிக்கப்பட்டு, குறுகிய பிரச்சார நோக்கின் அடிப்படையில் தான் உலகில் முன் கொண்டு வரப்படுகின்றது.

 

ஈழத்துப் புலிப்பினாமிகள் முதல் தமிழ்நாட்டில் கடைகெட்டுப் போன பிழைப்புவாதிகள் வரை, இதைத் தாண்டி மக்களை மக்களாக யாரும் பார்க்கவில்லை. அந்த (வன்னி) மக்களின் பிரச்சனைகள் என்ன? அவர்கள் என்ன நினைக்கின்றனர்? என்பது பற்றியெல்லாம், யாருக்கும் எந்த அக்கறையும் கவலையும் கிடையாது. இதுதான் உண்மை.

 

இந்த மக்களிள் அவலமோ மிகப்பெரியது. அது மக்களுகே உரிய அவலம். எந்த நாதியுமற்ற நிலையில், கேட்பாரற்று நசிந்து நலிந்து கிடக்கின்ற சமூக அவலம்.

 

இவைகள் அனைத்தும் வன்னி மக்களின் உற்றார் உறவினர் நண்பர்களிடையே மட்டும், பகிர்ந்து கொள்ளப்படும் துயரங்களாக உள்ளது. எந்த ஊடாகமும் இதைப் பேசுவது கிடையாது. அவையோ புலி - அரசு என்ற வட்டத்தைச் சுற்றி, அதை திரித்தும் புரட்டியும், கதைகள் எழுதுகின்றன, கதைகள் சொல்கின்றன. துயரம்பற்றி தம் குறுகிய நோக்கத்துக்காக, திரித்தும் பரட்டியும் ஒரு பக்கமாக மட்டும் பிரச்சாரம் செய்கின்றனர்.

 

வன்னி மக்களுடன் தொடர்பில் உள்ள ஒவ்வொருவருவரிடமும், அந்த மக்கள் பற்றிய வெளிவராத கண்ணீர் கதைகள் பற்றிய உண்மைகளும் அனுபவங்கங்களும் உண்டு. இன்று யாரிடமும் இதற்கு நிவாரணம் பெறமுடியாது பரிதவிக்கும் தமிழ் இனம். யாரிடமும் இதைச் சொல்லியழவும் கூட முடியாது. வரண்டபோன வக்கிரபிடித்த மனநோய்யாளர்களிடம் இதைக் கூறி, இதற்கு ஆறுதல் பெற எதுவும் கிடையாது. இவை எதைப் பற்றியும் சமூக இயக்கம் பேசுவது கூட கிடையாது. எல்லயைற்ற சக மனித துயரங்களையிட்டு, அக்கறையற்ற குருட்டு வழிபாட்டுச் சமூகம். மனித துயரங்கள தான், தம் விடிவிற்கு பாதை என்று நம்புகின்ற அரசியல் வக்கிரங்கள் மலிந்த சமூகத்தில் நாம் வாழ்கின்றோம்.

 

மக்களின் துயரம் பெருக போராட்டம் வளரும் என்று நம்பும் நடைமுறைகளும், வரட்டுத் தர்க்கங்களும். இன்று வன்னித் தமிழ்மக்கள் சந்திக்கின்ற துயரங்களும், அவலங்களும், பொதுவான தமிழ் மக்களில் இருந்து வேறுபட்டது. இப்படி வன்னியில் நடக்கின்ற துயரங்களும், துயரக்கதைகளும் வெகுஜனமட்டத்தில் பொதுவில் வெளிவருவதில்லை. பொதுவாக உறவினர்கள், நண்பர்கள் ஊடாக மட்டும் வன்னியின் துயரம் மெதுவாக ஊனமாகி, கண்ணீர்க் கதைகளாக வெளிவந்த வண்ணமேயுள்ளது.

 

மக்களின் இந்த துயரத்துக்கு யார் காரணம்?

 

1.பேரினவாதம் 2.புலிகள்

 

இப்படி இரண்டும் வௌவேறு வடிவங்களில், ஓரே நேரத்தில் துயரத்தைத் மக்கள் மேல் திணிக்கின்றனர். மக்களை புலியிடமிருந்து மீட்பதாக கூறிக்கொண்டு, மக்களை அரசிடமிருந்து விடுதலை செய்வதாக கூறிக்கொண்டு, மக்களையே வட்டி வதைக்கின்றனர். வார்த்தைகளால் சொல்ல முடியாத, சொல்னென்ன துயரத்தை வாழ்வின் மேல் திணிக்கின்றனர்.

 

வன்னிமக்களின் நிலை என்ன?

 

வன்னி மக்களின் இன்றைய நிலை என்ன? தம் குழந்தைகளை புலிகளிடம் பறிகொடுத்த வண்ணம் திறந்த வெளிச் சிறையில் கூட்டகூட்டமாக, மரங்களில் கீழாகவும் மறைப்புகளின் கீழ் ஒடுங்கி வாழ்கின்ற சமூக அலவம். இந்த திறந்த வெளிச்சிறை, சித்திரவதைகளின் கூடாரமாகிவிட்டது. இதிலும் இரண்டுவிதமான சித்திரவதைகள்.

 

1.இயற்கை வழங்கும் சித்திரவதைகள 2.செயற்கையாக வழங்கும் சித்திரவதைகள்

இரண்டும் இனைந்த கதைகள், உற்றார் உறவினர் நண்பர்களின் மனித உணர்வுகளையே சிதைத்துவிடுகின்றது. செத்துப்போன மனித உணர்வுகளுடன், வெய்வதறியது சமூகம் நடைபிணமாகி மனதுக்குள்ளாகவே ஊனமாகி அழுகின்றது.

 

காலைக்கடனை கழிப்பது முதல் மழைக்கு ஒதுங்குவது வரை, அவர்கள் படுகின்ற துன்பங்கள். இதில் பெண்கள் குழந்தைகள் பாடு, பெரும் வேதனைக்குரியது. காட்டு நுலம்புகள் மனிதனை கடித்துத் திண்ண, காட்டுப்பாம்புகள் மனித உடலை பாதம் பார்க்க, ஒரு சமூகமெ அவலமாகவே சீராழிகின்றது.

 

காட்டுகளிலும், பத்தைப் புதர்களிலும், மரங்களின் கீழும், திறந்த வயல் வெளிகளிலும், வன்னிமக்கள் சந்திக்கின்ற எத்தனையோ விதமான இயற்கைத் தடைகளும், வாழ்வுகாக இயற்கையுடான போராட்டமும் வார்த்தையில் அடங்காது. பச்சிளம் குழந்தைகள் முதல் கைக்குழந்தைகள் வரை சந்திகின்ற துயரமும், இதனால் பெண்களின் வேதனையான முனாகல் தாய்மையின் கருவறையையே விறண்டுகின்றது. இவை அனைத்தும் அடைத்து வைத்துள்ள திறந்தவெளிச் சிறைகூடத்தில்தான் நிகழ்கின்றது.

 

பேரினவாதம் சுற்றிவளைத்த யுத்த முனையும், அதில் இருந்து தப்பிபோகாத வண்ணம் கண்கணிக்கும் புலியும் சேர்ந்து, இந்த திறந்தவெளி சிறைக்கூடத்தில் மக்களை அடைத்து வைத்து வதைக்கின்றனர். இங்கு எந்த மனிதபிமானமும் யாரிடமும் கிடையாது.

 

இவையெல்லாம் தமிழ் மக்களுக்காக என்ற பிரச்சாரம் வேறு. யுத்தத்தை செய்தவன் மூலம் தமிழ் மக்களை மீட்டல் என்று புலிகளும் மற்றும் பேரினவாத யுத்தக் கூச்சலுக்கு இடையில், மனிதம் செத்துக்கொண்டிருக்கின்றது. அங்குள்ள மக்களின் துயரம், இந்த யுத்த கூச்சல்களுக்கு இடையில் கேபாரின்றியே அழுகிப் போகின்றது.

 

இயற்கையும் இந்த அநீதியான யுத்தத்துடன் சேர்ந்து மனிதத்தை வதைக்கின்றது. கடும் மழையில் அகதிகள் கூட்டம் குளிரில் விறைத்துச் சாகின்றது. காட்டு நூலம்புகள் அவர்களை கடித்ததே கொல்லுகின்றது. பொறுக்கிப் போடும் நிவரணத்தை, பொங்கிப்போட்டு உண்ண விறகு கிடையாது. உடல் கழிவை சுதந்திரமாக கழிக்கக் கூட, ஒரு சுதந்திரமான இடம் கிடையாது. இப்படி அனைத்து சுதந்திரமும் மறுக்கப்பட்ட தேசத்தில் வாஐம் மனிதர்களின் கதையிது.

 

பொறுக்கிப் போட்ட நிவரணத்தை கஸ்ரப்பட்டு பொங்கினலும், உண்ண முடியாது. வெடியோசை காதுப் பறைகளை அதிரவைக்கின்றது. மனவுணர்வை அது சில்லிட வைக்கின்றது. வெடியோசையுடன் கூடிய குழந்தைகளின் அலறலும், கீச்சிடலும், அகதிகளின் வாழ்விடங்களையே அழுகையின் நரகமாகிவிடுகின்றது. ஆறுதல் கூறுவர் யாரும் கிடையாது. சமூகத்தை வழிகாட்ட, சமூக உணர்வு கொண்டோர் யாரும் கிடையாது. அழுது களைத்தே, குழந்தை உறங்கும் அவலம். இப்படி வாழ்ந்தும், சலித்தும், களைப்புற்றும் துயிலும் சமூகத்தின் இருப்பே, மனித வாழ்வாகிவிடுகின்றது.

 

இதையெல்லாம் ஊடுறுத்து தலைக்கு மேல் சுற்றும் விமானங்கள் முதல் பாய்ந்து செல்லும் வெடிகுண்டகள் வரை, மனித இரத்த ஓட்டத்தையே இந்த வெடி ஒசைக்கு எற்ப தாளமிடவைக்கின்றது.

 

உண்ணக் கூட மனமற்ற அச்சம், பீதி. அதிரவைக்கும் வெடியோசைகள், நித்திரை கூட கொள்ளமுடியாது அதிர்ச்சிகளும், அதிர்வுகளும். யுத்த உருவாக்கும் பல்வேறு வியாதிக்குள், மனிதத்தையே சித்திரவதை செய்து கொல்கின்றனர். மனித விடிவுக்கானதாக கூறி இவர்கள் நடத்தும் யுத்தம், மனித அழிவையே வித்திடுகின்றது. மனிதம் மனநோய் பிடித்த பிரமைக்குள், ஊனமாகி முடமாகின்றது. இதை யாரிடம் சொல்லி அழக் கூட அழ முடியாத கண்கணிப்புகள், சித்திரவதைகள், தண்டனைகள்.

 

இடையிடை அப்பாவி மக்கள் குண்டுக்கு பலியாகின்ற முடிவற்ற மரண ஒலங்கள். மறுபக்கத்தில் அகதி மக்களிடமிருந்து இழுத்துச் சென்ற குழந்தைகளின் பிணங்களை அன்றாடம் கொண்டுவந்து கொட்டும் புலிகள். மரணங்களும், ஓலங்களும் இன்றி திறந்தவெளி சிறைக் கூடங்கள் ஒருநாள் கூட விடிவதில்லை.

 

புலிகள் தாம் தப்பி பிழைக்க, யுத்த முனைக்கு இழுத்துச் சென்ற தம் குழந்தைகளின் கதியை எண்ணி அழுகின்றது சமூகம். மறுபக்கம் இந்த யுத்தத்தின் விளைவை அனுபவிக்கும் துயரங்கள்.

 

இந்த திறந்த வெளிச் சிறையில் இருந்து எப்படியாவது தப்பிபோகவே முனைகின்றது வன்னிச் சமூகம். ஓருபுறம் பேரினவாதம் நடத்துகின்ற இனயழிப்பு யுத்ததுக்கு எதராகவும், மறுபுறம் புலிகள் நடத்துகின்ற மனித விரோத யுத்தத்துக்கு எதிராகவும் வன்னியில் இருந்து மக்கள் தப்பிப்போக விரும்புகின்றனர். இதைப் புலிகள் தடுத்து நிறுத்துகின்றனர். திரிபடுத்தப்பட்ட பிரச்சாரம் மூலமும், வன்முறை மூலம் இதைப் புலிகள் அரங்கேறுகின்ற முனைகின்றனர்.

 

இந்த மக்கள் விரோத யுத்தத்தில் இருந்து தப்பவும், தம் குழந்தைகளை புலிகளிடம் இருந்து பாதுகாக்கவும், மொத்த வன்னி மக்களும் விரும்புகின்றனர். இதற்காக ஆயிரம் ஆயிரம் முயற்சிகளில், அன்றாடம் மக்கள் ஈடுபடுகின்றனர். புலிக்கு எதிரான இந்த முயற்சியில், சிலர் பலத்த போராட்டத்தின் பின் வெற்றிபெறுகின்றனர். சிலர் உயிரை இழக்குமளவுக்கு நடக்கும் இந்த போராட்டமே, வன்னி மக்களின் வாழ்வுக்கான அவர்களின் சொந்தப் போராட்டமாக மாறிவிட்டது. இது அரசுக்கு எதிரான போராட்மாக மாறது, புலிக்கு எதிரான ஒரு போராட்டமாகிவிட்டது. இப்படி எங்கும் யுத்த சூழலே புலிக்கு எதிரானதாக மாறி நிற்கின்றது.

 

யுத்த கெடுபிடிகள் மூலம் பேரினவாத இராணுவமோ, மக்களை யுத்த சூனியத்துக்குள் அடைத்து வைத்துள்ளனர். இந்த திறந்தவெளிச் சிறையில் இருந்து தமிழ்மக்கள் தப்பிப் போகாத வண்ணம், புலிகளின் கண்கணிப்போ பல மடங்காகியுள்ளது. இராணுவம் அப்பாவி மக்களை தப்பிச்செல்ல அனுமதித்தாலும், புலிகள் அதை அனுமதிக்க மறுக்கின்றனர்.

 

தப்பிச் செல்பவர்களை கண்கணிக்கும், மக்கள் மத்தியில் புலிகளின் உளவுப்படை செயல்படுகின்றது. இதையும் மீறிச் தப்பிச்செல்ல புலிகளே முகவர்களை அனுப்பி பணத்தையும் பெற்ற பின், அப்படியே மொத்தமாக கைதுசெய்து சித்திரவதைகளின் பின் யுத்தமுனைக்கு அனுப்புகின்றனர். அத்துடன் அந்த குடும்ப உறுப்பினர்களை அலகாக தூக்கி செல்லுகின்றனர். இப்படி பற்பல சம்பவங்கள். இதனால் உற்றார் உறவினருக்கு என்ன நடந்தது என்ற தெரியாது அல்லறும் உறவினர்கள். மண்ணில் தொடங்கி புலம்பெயர் நாடுகள் வரை, இது மன உழைச்சலை எற்படுத்தியுள்ளது.

 

இன்று யுத்த சூழலில் இருந்து தப்பிப்பது கூட துரோகம். திறந்தவெளிச் சிறையில் இருந்து தப்ப சிந்திப்பது, தப்பிக்க முயல்வது மரணதண்டனைக்குரிய குற்றமாகும். யுத்தத்தில் ஈடபட பயந்து நடுங்கும் மனிதர்களை கட்டாயப்படுத்தி யுத்த முனைக்கு இழுத்துச் செல்லும் புலிகள், அங்கு அவர்களைப் பலியிடுகின்றனர். பறிகொடுத்த தாய்மை, புலியை காறி உமிழ்கின்றது, திட்டி தீர்க்கின்றது. வேறு எதைத்தான் அவர்கள் செய்யமுடியும்.

 

புலிகளின் கட்டாய பயற்சி முகாமுக்குள் எத்தனையோ மனித அவலங்கள். வன்னி மக்கள் அங்கமிங்கும் தப்பியோட வழியின்றி, யுத்தமுனையில் வைத்து மொத்தமாகவே சிதைக்கப்படுகினர். இந்த மனித அவலத்தை யார் தான் இன்று பேசுகின்றனர். ஒருபுறம் பேரினவாதம் மறுபுறம் புலிகள் நடத்தகின்ற இந்த வெறியாட்டத்தை, எந்த மனிதநேயம் குறைந்தபட்சம் நேர்மையாக சமூகத்தின் முன் கொண்ட வருகின்றனர். தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமை இன்று எப்படி சிதைக்கப்பட்டு உள்ளதோ, அப்படி வன்னி மக்கள் பற்றி யாருக்கும் அக்கறை கிடையாது.

 

அரசியல் செய்கின்ற பொறுக்கிகளின் குறுகிய நலனுக்குள், மனிதம் சாகடிகப்படுகின்றது என்பது மட்டும் உலகறிந்த உண்மை. இதை வரலாறு மட்டும்தான், ஒரு பொதுவான உண்மையாக எற்றுக்கொள்ளும். அந்தளவுக்கு சமூக அக்கறையற்ற பொறுக்கித்தனம் கோலோசிய, இன்றைய சமூகத்தில் நாம் வாழ்கின்றோம்.


பி.இரயாகரன்
11.11.2008