வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், சர்வதேசியம் என்பதை எற்றுக் கொண்ட தோழர்களே, உலகமயமாதலுக்கு பதிலாக சர்வதேசியத்தை முன்னிறுத்திய மக்களின் அதிகாரத்தை கோரும் தோழர்களே, சமூதாயத்தின் அனைத்து சமூக ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து

 அணிதிரண்டு போராடும் தோழர்களே, உங்களுக்கு எமது புரட்சிகரமான செவ் வணக்கங்கள். இந்த மாநாடு உலகமயமாதலுக்கு எதிராக, சர்வதேச ரீதியாக உழைக்கும் மக்களின் அதிகாரத்துக்காக போராடும், வர்க்கப் போரட்ட அணிகளை ஒரே அணியில் அணிதிரளக் அறைகூவுகின்றது. மிக நுட்பமாக தன்னை வேறுபடுத்தி கருத்துரைக்கும் இவ் மாநாட்டில், வர்க்க நடைமுறைகளைக் கொண்ட புதியதொரு அரசியல் அணிசேர்க்கைக்கு துணிச்சலாக முன்கையெடுத்துள்ளது. இந்த மாநாட்டின் நோக்கம் வெற்றி பெற நானும், எமது சக தோழர்களும் மனதார வாழ்த்துகின்றோம். உங்கள் கரங்களை இறுக கைப்பற்றிக் கொள்வதில் நாம் பெருமகிழ்சி அடைகின்றோம்.  

 

உலக சமூக மன்றம் மற்றும் மும்பை எதிர்ப்பு இயக்கம் 2004ம், உலகமயமாதலை எதிர்த்த கூட்டத் தொடர்கள் இதே பிரந்தியத்தில் நடத்துகின்றன. நாம் உலகமயமாதலை மட்டும் இன்றி, இந்த இரு எதிர்ப்புக் குழுக்களின் அரசியல் விபச்சாரத்தையும் எதிர்த்து ஒரு வர்க்கப் போராட்டத்தை இங்கு நடத்துகின்றோம். உலகமயமாதலை எதிர்த்த இந்த இரு அணிகளுக்கு இடையில் இந்த பிளவு ஏன் என்பதையும், அதன் வேறுபாடுகளையும், அதன் நோக்கங்களையும் மாநாட்டில் உரையாற்றியவர்கள் கோட்பாட்டு ரீதியாகவும், எமது சொந்த நடைமுறை ஊடாகவும் தெளிவுபடவே விளக்கி நிற்கின்றனர். இ;ந்த நிலையில் மற்றைய மாநாடுகளில் உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் எடுத்துக் காட்டும் ஐரோப்பிய போராட்டங்களை பற்றியும், அதன் அரசியல் உள்ளடகத்தைப் பற்றியும் உங்களுடன் நான் விளக்கிப்பேச முனைகின்றேன்.

 

மூன்றாம் உலக நாடுகளை விட மேற்கு நாடுகளில் வீதியில் இறங்கி போராடும் மக்கள் எண்ணிக்கை பல மடங்காகவும், அவை தன்னியல்பானதாகவும் உள்ளது. ஒரே நாட்டில் வௌ;வேறு சிறிய நகரங்களில் கூட, ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்துகின்றனர். எகாதிபத்தியத்தின் காட்டமிராண்டித் தனமாக நலன்களை எதிர்த்து, எப்போதும் தன்னியல்பாக வீதிகளில் அணிதிரளுகின்றனர். தன்னியல்பான மக்கள் திரள் மேல், ஆயிரக்கணக்கான குழுக்கள் தமது அரசியல் செல்வாக்கைச் செலுத்துகின்றனர். ஆனால் அதன் நோக்கத்தை, அரசியல் விளைவை நெருங்கிப் பார்த்தால், ஆட்சியில் இருப்பவர்களை எதிர்த்து எதிர் கட்சிக்கு வாக்களிக்கும் உணர்வோட்டத்தை தாண்டி, இப் போராட்டங்கள் நகர்ந்துவிடவில்லை. உலகமயமாதலுக்கு எதிரான போராட்டங்களின் அரசியல் கதி, எப்போதும் சோகமாக முடிவடைகின்றது. அரசியல் ரீதியாக உரசிப் பார்த்தால், லட்சக்கணக்கான மக்களின் போராட்டங்கள், அதன் கோசங்கள், அதன் நோக்கங்கள் மூலதனத்துக்கு சாதகமானதாக இருக்கின்றது. மக்கள் மூலதனத்தைக் கைப்பற்றி இந்த அதிகார அமைப்பை தூக்கி எறியாத வண்ணம், மூலதனமே இந்த போராட்டங்களுக்கான நிதியையும் அதற்கான வழிகாட்டு கோட்பாடுகளையும் கூட வழங்குவதைக் காணமுடியும்;. இதை எப்படி, யார் எங்கிருத்து வழிகாட்டுகின்றனர் என்பதை நாங்கள் தெளிவு படுத்துவதன் மூலம், நாம் மேலும் எதிரிகளை அடையாளம் கண்டு போராடவும், அவர்களை தனிமைப்படுத்தி அழிப்பதும் எமது மைய நோக்கம். அதற்காகவே நாம் இங்கு கூடியுள்ளோம் அல்லவா!


மேற்கத்தைய போராட்டங்களைப் போல் அன்றி, மூன்றாம் உலக நாடுகளில் சிறியளவில் எழும் போராட்டங்கள் தெளிவான நோக்கை வெளிப்படுத்துகின்றன. மேற்கத்தைய போராட்டங்களை விட, மிக தெளிவாகவே மக்களின் அதிகாரத்துக்கான நோக்கங்களை கொண்டவை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நோக்கி போராட்டம் மூலம், உலகமயமாதலை தகர்த்தெறியக் கோருகின்றது. இதற்கு பதிலிடாக சர்வதேசியத்தை முன்னோக்காகக் கொண்ட வளமிக்க போராட்ட மரபை உலகுக்கு இந்த மாநாடு மீண்டும் பறைசாற்றி நிற்கின்றது. இந்த வகையில் மகத்தான மக்களின் கடந்தகார வீர வராலாற்றின் தொடர்ச்சியை, அதன் மரபை உள்வாங்கி மக்களின் போராட்டங்களுக்கு வழிகாட்ட இந்த மாநாடு உங்களை அழைக்கின்றது.

 

மேற்கத்தைய நாடுகளில் லட்சக்கணக்கான மக்களை அணிதிரண்டு போராடும் போது, அவர்கள் தன்னியல்பான சமூக நோக்கின் பால் திரளுகின்றனர். உலகமயமாதலின் சமூக விளைவுகளை நடைமுறைகளில்; எதோ ஒன்றை எதோ ஒரு வகையில் உணர்ந்து கொள்ளும் ஒவ்வொருவரும், அதற்கெதிரான போராட்டங்களில் கலந்து கொணள்கின்றனர். இவர்கள் அதை எதிர்க்கும் அதே நேரம், மாற்றான தெளிவான ஒரு மற்றுத் திட்டங்கள் எதையும் கொண்டிருப்பதில்லை. உதிரியான பராம்பரியமாக இருக்கும் சீராழிந்த பல நூறு குழுக்கள் இது போன்ற ஆர்பாட்ட ஊர்வலங்களை கோரும் போது, மக்கள் தன்னியல்பாக அதில் இணைகின்றனர். ஆனால் சித்தாந்த ரீதியான தெளிவான ஒரு அரசியல் அடிப்படையைக் கொண்டு இவை நடத்தப்படுவதில்லை. பல்வேறு குழுக்களின் கதம்பமான சித்தாந்தங்களில் இருந்து ஆங்காங்கே சிலவற்றைப் பெற்றுக் கொள்கின்றனர்.

 

இடதுசாரி குழுக்களின் அரசியல் சிதைவு மாற்றுப் பாதையை தெளிவாக வைக்க முடியாத நிலையில், போராட்டங்கள் தொடர்ச்சியாக எதிரியால் தோற்கடிக்கப்படுகின்றது. மகத்தான வேலை நிறுத்துங்களை இலகுவாக மூலதனம் தோற்கடிக்கின்றது. ஒட்டு மொத்த மக்களையும் அடிமைப்படுத்துகின்ற நிகழ்ச்சி நிரலை இலகுவாகவே ஆணையில் வைக்கின்றது. கொந்தளிப்பான சமூக நெருக்கடிகள் இயல்பாகவும் தன்னியல்பாகவும், பல லட்சக் கணக்கான மக்களை வீதியில் இறக்குகின்றது. பராம்பரியமான இடதுசாரி  குழுக்களின் அரசியல் ரீதியான சிதைவு, மக்களை தலைமை தாங்கும் தகுதியை அவற்றுக்கு அற்றதாக்கிவிட்டது. இந்த நிலையில் இதற்கான அரசியல் தலைமையை வழங்க, அரசு சராத நிறுவனங்கள் முனைப்பு பெற்று அதில் வெற்றி பெற்றுள்ளது. கோட்பாட்டு ரீதியாக தெளிவான அரசியலை முன் வைத்தபடி, பெரும் பணப்பலத்துடன் இவர்கள் களம் இறங்கி உள்ளனர். மூலதனம் உருவாக்கி அரசு சராத நிறுவனங்களின் பலம் பலவீனம் அனைத்தும், மூலதனத்தின் தயவில் ஒரு தீவிரமான அரசியல் சீர்திருத்தை முன் தள்ளுகின்றது. சமூக கொந்தளிப்புகள் அதிகாரிக்கின்ற போது மக்களின் கோபத்தை தணிக்கவும் வடிகாலக்கவும் ஒரு மாற்றை எகாதிபத்தியங்கள் திட்டமிட்டே களத்தில் உருவாக்கின்றன. அந்த வகையில் மாற்று பொருளாதார அடிப்படையுடன் செயற்படும், தன்னார்வ ஏகாதிபத்திய கைக் கூலிகளின் கைக்கு அதிகாரத்தை பகிர்த்தல் அல்லது கொடுத்தல் என்ற மாற்று வடிவம் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்படுகின்றனர்.

 

மற தளத்தில் அற்றாக், உலக  சமூக மன்றம் போன்ற மிகப் பெரிய தன்னார்வக் குழுக்கள் முதல் பல நூறு சிறிய குழுக்கள் ஈறாக, இடதுசாரி பாரபரியமிக்க போராட்டங்களின் நிகழ்ச்சி நிரலை தனக்கு இசைவாக மாற்றி அமைக்கின்றது. கோட்பாட்டு ரீpதியாக தொழிலாளர் வர்க்கம் ஆட்சிக்கு வரமுடியும் என்பதை மறுதளிக்கின்றது. அப்படி வந்தாலும் அது ஒரு ஜனநாயக விரோத சர்வாதிகாரமானதாகவே இருக்கும் என முத்திரை குத்தி தூற்துகின்றது. நிலவும் அமைப்பின் வர்க்க சர்வாதிகாரத்தை மூடிமறைத்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஜனநாயக விரோதமானதாக கட்டமைக்கின்றது. ஜனநாயகம் எப்போதும் ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரமாக இருப்பதை மறுத்து, நிலவும் சமூக அமைப்பில் அது அனைத்து வர்க்க ஜனநாயகமாக உள்ளதாக நம்பவைக்கின்றது. இதற்கு நாசித் தலைவன் கிட்டலரின் கீழ் பிரச்சார மந்திரியாக இருந்த ஜோஸஃப் கேப்ல்ஸ்சின் சித்தாந்தமான "ஒரு பொய்யை பலமுறை பிரச்சாரம் செய்தால், அதேயே மக்கள் உண்மை என்ற நம்பிவிடுவார்கள்" என்ற கோட்பாட்டை ஏகாதிபத்தியமும், அரசு சராத நிறுவனங்களும் அக்கம் பக்கமாகவே தமது அடிப்படைச் சித்தந்தமாக முன்வைக்கின்றனர். மக்களின் கடந்தகால வீரமிக்க போராட்டங்களையும், சமூக வெற்றிகளையும் தூற்றுவதில் பாசிட்டுகளின் வழியில் பொய்யை மீள மீள ஒப்புவித்து அதை உண்மையானதாக காட்டிவிடுகின்றனர். இதனால் சித்தாந்த ரீதியாக, போட்பாட்டு ரீதியாக மக்கள் போராட்டங்கள் தனக்குத் தானே வேலியிட்டுக் கொண்டு சிதைந்து சிராழிகின்றது. இதன் மூலம் தான் தன்னார்வக் குழுக்களின் பலம் அரசியல் ரீதியாக அரங்கு வந்துள்ளது. 

 

அவர்கள் இந்த அமைப்பை இதற்குள்ளேயே ஜனநாயகப+ர்வமாக மாற்றி அமைக்க முடியும் என்கின்றனர். மூலதனத்திடம் பெறும் சலுகை மூலம், உலக அவலங்கைள முடிவு கட்ட முடியும் என்கின்னர். உடனடி பொருளாதார நலன்களை முதன்மைப்படுத்தி, சில பிச்சைக் காசுகளை எறிந்து விடுவதன் மூலம், அதை நோக்கி கையெந்த வைப்பதன் மூலம் கொடூரமான மூலதன சமூக அமைப்பை தக்கவைக்கின்றனர். சமூக அக்கறை கொண்ட புரட்சிகர வடிவங்கள் மூலம், மக்களின் துயரங்களைப் போக்க முடியாது என்று கூற முனைகின்றனர். செல்வந்தர்கள் தமது லபத்தில் ஒரு வீதத்தைக் கொடுத்தாலே, மாகத்தான சமூக மற்றத்தை எற்படுத்த முடியும் என்கின்றனர். தன்னார்வக் குழுக்களின் சமூக அடிப்படையே கவர்ச்சிகரமான நடவடிக்கைகள் மூலம் கவருவதாக உள்ளது. தேர்ந்து எடுத்த  உடனடி நடைமுறை பிரச்சனைகளில் ஈடுபடுவதன் மூலமும், தீர்வை பொருளாதார ரீதியாக வழிகாட்டுவதன் மூலம் தன்னை நிலைநாட்டிக் கொள்கின்றது. மூலதனம் வழங்கும் நிதியை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களை வரைகின்றனர். அடிமட்ட நிலையில் மக்கள் வாழும் பகுதிகளில், சில நடவடிக்கைகளில் ஈடுவதன் மூலம் கிராமப் புறங்களில் புரட்சிகரமான சிந்தனைத் தளத்தை விலை பேசிவிடுகின்றனர். சம்பளம் பெற்ற ஊழியர்கள், சம்பளம் பெறாத ஊழியர்கள் என்று இது விரிவடைகின்றது.

 

ஐரோப்பாவில் அனாசிற் குழுக்கள் (ANARCHISTE), ஒத்தனோம் குழுக்கள் (AUTONOME ), பச்சைக் கட்சிகள்( ECOLOGIETE), விவசாய இயக்கங்கள் (MOUVEMENT PAYSAN), GAUCHISME POLITIGUE, தொழிற் சங்கங்கள் (SYNDICAL CLASSIQUE பெண்கள் அமைப்புகள், ரொக்சிய குழுக்கள், மிருக வேட்டைக்கு உள்ள தடையை எதிர்க்கும் வேட்டைக்காரக் குழுக்கள், ஆட்கள் அற்ற வீடுகளைக் கைப்பற்றும் குழுக்கள், கிறிஸ்துவ மதவாதக் குழுக்கள், சோசலிசக் கட்சி, சீரழிந்த கம்ய+னிசக் கட்சிகள், அதில் இந்த பிரிந்த குழுக்கள், நாசி எதிர்ப்புக் குழுக்கள் போன்ற என்னற்றக் குழுக்கள் தத்தம் சொந்த அரசியல் சீரழிவுடன் களத்தில் இறங்குகின்றனர். உலகமயமாதலுக்கு எதிராக, யுத்தத்துக்கு எதிரான, அரசுக்கு எதிராக என பல தளத்தில் போராடுகின்றனர். இவர்கள் தத்தம் அரசியல் வழிகளில் கோசங்களை முன்வைத்த போதும், மக்களின் விடுதலைக்கான அவர்களின் சமூக வேட்டகையுடன் கூடிய ஒரு மாற்றை முன்வைக்க முடியவில்லை. தொழிலாளார் வர்க்க ஆட்சியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிய அரசியல் போராட்டங்களை கைவிட்டு விட்டனர். அதைப்பற்றி பேசுவது கூட ஆபத்து என்று நினைக்கும் அளவுக்கு சீரழிவு உச்சத்தில் உள்ளது. மறுதளத்தில் அரசியல் போராட்டத்தை கடுமையாக தூற்றுகின்றனர். இதற்கு மாற்றாக சீர்திருத்தை முன்வைப்பது, தீவிர பொருளாதார கோசங்னை முன்வைப்பது என பல்வேறுபட்ட வழிகளை முன்வைக்கின்றனர். இதன் மூலம் சிதைந்து செல்லும் சொந்த அமைப்பை கட்டிப் பாதுகாக்க முடியாத நிலையை அடைகின்றனர். இந்த நிலையில் இவர்களை கட்டிப் பாதுகாக்கும் அமைப்பாக, ATTAC   போன்ற தீடிர் குழுக்கள் கைக் கொடுக்கின்றன. இவர்களை ஒன்று இணைக்க அற்றாக் போன்ற என்னற்ற அரசு சராத நிறுவனங்கள் உருவாகின்றன. தமக்குள் மையப்படுகின்றன. அரசு சராத நிறுவனத்துக்கு வெளியில் உள்ள சிராழிந்த குழுக்களை மையப்படுத்துகின்றன. ஒரு அரசியல் சித்தாந்த வழியை அவர்களுக்கு காட்டுகின்றனர். அவைகளின் அழிவைத் தடுக்கின்றனர். சர்வதேச ஒருங்கினைப்புகளை தீடிர் தீடிரென உருவாக்கின்றனர்.

 

இப்படி பிரான்சில் உருவாக்கப்பட்ட அற்றாக், (LE MONDE DIPLOMATIOUE)) உலக ராஐதந்திரிகளின் முன் முயற்சியால் உருவானது. இந்த அரசு சராத நிறுவனமான ATTAC   க்கு  பிராஞ்கு சோசலிச கட்சியின் பலமான அடித்தளம் உண்டு. இதே போன்று உலக சோசலிசக் கட்சிகளின் குறிப்பான பங்களிப்பு உண்டு. இதன் தொடர்ச்சியாக பிரரேசில் தொழிலாளர் கட்சியுடன் நெருங்கிய கட்டமைப்பு உருவானது. இதன் தொடர்ச்சியாக உலக சமூக மன்றம் (WSF)  இணைப்பாக உருவாக்கப்பட்;டது. இப்படி பல அமைப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவானது.

 

ATTAC   உருவாக்கமே ஆச்சிரிகரமானதும் மட்டுமின்றி, அதன் வளர்ச்சி எதிர்பாரததாக அமைந்துள்ளது. 3 யூன் 1998 இல் பிரான்சில் ATTAC   பிறப்பெடுத்தது. படித்த உயர் அறிவாளி வர்க்கத்தினரும், சர்வதேச ராஜதந்திரிகளும் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கினர்கள்.  1998 இல் 5000 தீடிர் உறுப்பினர்களுடன் தன்னை அறிமுகம் செய்தது. பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல், சமூக சேவை போன்றவற்றை மையமாக்கி தன்னை தீடிரென சமூகத்தின் முன் அடையளப்படுத்தியது. தன்னைத் தான் உலகமயமாதலின் எதிர்ப்பாளனாக மேல் இருந்து பிரகடனப்படுத்தியது. ATTAC    நிறுவிய போனாட் காசென் தெளிவுபடவே எழுதினார் "தீவிர இடபுறத்தில், மரபுவழிக் கட்சிகளுடைய அல்லது அரசாங்கங்களுடைய வரம்பிற்கு அப்பால், அதாவது நிறுவன அமைப்பு அரசியலுக்கு அப்பால்" உலகமயமாதலை எதிர்ப்பதை எதிர்த்தே ATTAC   உருவானதாக பிரகடனம் செய்தான்;. கட்சி அரசியலுக்கு அப்பால் உலகமயமாதலை எதிhக்கவே என்று பிரகடனம் செய்தனர்.

 

2001 இன் முடிவில் இந்த தீடிர் அமைப்பு பிரான்சில் மட்டும் 28 ஆயிரம் உறுப்பினர்களை கொண்டதும், 230 பிராந்தி கமிட்டிகளை கொண்ட அமைப்பாக தன்னை வெளிப்படுத்தியது. உழைக்கும் மக்களின் அதிகாரத்துக்கு எதிரான, இடைவழி கொள்கைளாக 39 அடிப்படை விடையங்களை உள்ளடக்கியபடி தனது அமைப்புத் திட்டத்தை முன்வைத்தது.  உலகளவில் பல நாடுகளில் தீடிர் கிளைகளுடன் தன்னை விரிவாக்கிய படி மொழி கடந்து வெளிப்பட்டது. பல மொழிப் பத்திரிகைகள சஞ்சிகைகள், பல நூறு இணையத் தளங்கள் என்று பாரிய பிரச்சார ஆயுதங்களுடன் தீடிரேன திட்டமிட்ட வகையில் சமூக அரங்கில் நுழைந்தது. தன்னைத்தான் எழைகளின் நன்பனாக வேறு காட்டிக் கொண்டது.

 

பிரான்ஸ்  ATTAC   தனது ஆரம்ப உறுப்பினர் எண்ணிக்கையை 5000 என அறிவித்தது. 2003 இல் 30000 ஆயிரம் என்று அறிவித்துள்ளது. பெருமளவில் அறிவித்துறையினரையே உறுப்பினராக கொண்டுள்ளது. 53 நாடுகளில் தனது கிளைக் கொண்ட ஒரு பன்னாட்டு தன்னாhவக் குழுவாக தன்னை தீடிரேன விரிவாக்கியுள்ளது. 2002 இல் இந்த தன்னார்வக் பிராஞ்சுக் குழுவின் வரவு செலவு 89.6 கோடி ரூபாவாகும். ஆசியா தவிர மற்றைய பகுதிகளில், குறிப்பாக மேற்கு நாடுகளில் விரைவாக விரிவாக்கி வருகின்றது.

 

இந்த தேசங்கடந்த அரசு சாரத நிறுவனமான ATTAC   என்ற பெயரே சந்தேகத்துக்கு இடமின்றி எதிரியின் அடித்தளத்தை பாதுகாக்கின்றது. ATTAC   என்பது action pour une taxation des transactios pour l’aide aux citoyens என்ற பெயரின் உள்ளடக்கம் உலகமயமதலை பாதுகாப்பதையும், உலகமயமாதலின் ஒரு பகுதியைக் கொண்டு மக்களுக்கு உதவி செய்வதைப் பற்றி பேசுகின்றது. உலகமயமாதலை; அமைப்பிடம் ஒரு பகுதி பணத்தை கோரி நிற்கின்றது. அதாவது ஒரு ஒப்பந்தம் மூலம் ஒரு அற்ப பகுதியை பணத்தை மக்களுக்கு உதவுவதற்காக பெறுவதற்கு அப்பால் இந்த உலகமயமாதலை ATTAC   எதிர்க்கவில்லை. அதை நோக்கி மட்டுமான போராட்டத்தை அமைதி வழியில் நடத்தக் கோருகின்றது. இதற்கு வெளியில ATTAC  ; எதையும் உலகமயமாதலுக்கு எதிராக இவை கோரவில்லை.

 

உலகமயமாதல் தேசிய அரசாங்களின்; கடமைகளை அழிக்கினறது. இதனால் எற்படும் பாதிப்புகள் மக்களின் சமூக வாழ்வியலையே அழிக்கின்றது. இந்த நிலையில் அதற்கு மற்றாக ATTAC   கோருவது, சூறையாடும் தேசிய வளங்களில் ஒரு அற்ப பகுதியை தம்மிடம் தரும்படி கோருகின்றனர். தேசிய அரசுக்கு பதில், தாமே அதைக் கையாளும் உரிமையைக் கோருகின்றனர். கடந்த 100 வருடமாக ஏகாதிபத்தியங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் உருவாக்கி கொடுத்ததை, இன்று போராடிப் பெறுவதாக காட்டுவதன் மூலம், ATTAC   போன்ற சர்வதேச பன்னாட்டு அரசு சராத நிறுவனங்கள் மக்களின் போராட்டங்களையும் நோக்கங்களை குறிவைத்து அழிக்கின்றனர். ATTAC   கோருவது மூலதனங்களுக்கு கிடைக்கும் லாபங்களில் ஒரு சதவீத்தை எழைகளுக்கு வழங்க கோருகின்றனர். இது முன்னைய ஐ.நா தீர்மானத்தை விட சற்று அதிகம். அதாவது ஐ.நா 0.7 சதவீதத்தை ஒதுக்க கோரியது. உலகமயமாதல் எதிர்ப்பு குழுக்ளின் பிரதிநிதியான ATTAC   ஒரு சதவீதத்தைக் கோருகின்றது. முன்பைவிட சூறையாடல் பலமடங்காகியுள்ள நிலையில், கோரிக்கையை அடக்கமாகவும் பண்பாகவும் வைக்கின்றனர். பொதுவாக காட்டப்படும் தேசிய வரிகளை விட 40 மடங்கு குறைவானது. மூலதனத்துக்கு தேசிய வரிகள் குறைக்கப்படுகின்ற, சிறப்பு வரி விலக்குகள் வழங்கப்படுகின்ற சுதந்திரமான மூலதன விரிவாக்க அமைப்பில் கேட்கும் பிச்சைத் தான், உலகமயமாதல் எதிர்ப்பாக விளம்பரம் செய்யப்படுகின்றது. இந்த எல்லைக்குள் அவர்களின் கோரிக்கையின் உயாந்த பட்சம் நோக்கத்தை முடித்துக் கொள்ளுகின்றனர். 

 

இதற்குப் பின்னால் உதிரியான குறுகிய அரசியல் நோக்கமுள்ள குழுக்களும் (உதாரணமாக உலமயமாதலை அவர்களின் நோக்கை ப+hத்தி செய்யும் எல்லைக்குள் எதிர்க்கும் மதவாத குழுக்கள், நாசிய குழுக்கள்), தெளிவான அரசியல் வழிகளுக்கு துரோகம் இழைத்த குழுக்கள் படிப்படியாக அணிதிரண்டு நிற்கின்றனர். பராம்பரிய போராட்ட குழுக்கள் துரோகத்துடன் கூடிய சீரழிவு, ஒரு அமைப்பாக நீடிப்பது சாத்திமற்றதாக்கியுள்ளது. எஞ்சியிருக்கும் போராட்ட உணர்வுகளை கூட மந்தைகளாகவே போராட்டங்களில் இறக்கி நலமடித்துக் காட்டிக் கொடுக்கின்றனர். இதன் மூலம் நம்பிக்கையினமும் விரக்தியும் அறுவடையாக பெறுகின்றனர். சலுகை பெற்ற ஒரு வர்க்கம், தனது சொந்த சுகபோகத்தை மட்டும் இதன் மூலம் சாதித்துக் கொள்கின்றனர். இதற்காக தொழிச் சங்கங்கள், கட்சிகள் தமது இருப்பை தக்கவைக்க வேண்டியுள்ளது. இதனால் ATTAC   போன்ற அமைப்பின் பின்னால் அணி திரண்டு, ஒரு மாற்றாக தம்மை காட்டிக் கொள்கின்றனர். இந்த நோக்கில் தான் ATTAC   போன்ற அமைப்புகள் திட்டமிட்டு தீடிரென உருவாக்கபடுகின்றன. இவர்கள் போராட்ட அரங்கை கவர்ந்து கொண்டு, தன்னியல்பான மக்கள் போராட்டங்களை, எழுச்சிகளை நலனடிக்கின்றனர். சலுகை பெற்ற தொழிற் சங்கங்கள் இதற்கு முண்டு கொடுக்கின்றன. 

 

சலுகை பெற்ற தொழிச்சங்கத் தலைமைகள் மேல் இருந்து கீழாக முதலில் தொழிச்சங்க அமைப்பின் உரிமைகளையே முறைகேடாக பயன்படுத்துகின்றது. தொழிச்சங்க நடவடிக்கைகான உரிமைகள், பிராச்சார செய்வதற்கான நேரங்கள்;, அற்கான அனைத்து வசதியையும் தனது சொந்த சுகபோகத்துக்கு பயன்படுத்துகின்றனர். உழையமால் மற்றவன் உழைப்பில் வாழவும், அந்த நேரத்தை சொந்த தேவைக்கு பயன்படுத்துவதும் எங்கும் நிக்கல் இன்றி காணமுடியும். முதலாளியுடன் உள்ள தொழிச்சங்க உறவைக் கொண்டு தனிப்பட்ட சிறப்பு சலுகைகளை பெறவும் பின் நிற்பதில்லை. தொழிச் சங்கத்தின் உள்ளே  கீழ் இருந்து மேலாக சம்பள விகிதங்கள் சில பகுதிகளில் பல பத்து மடங்காக உள்ளது. பொதுவாக தொழிச்சங்கத் தலைமைகள் நவீன சொகுசு வாழ்க்கையையும், அவரைச் சுற்றி பல உதவியாளர்களைக் கொண்ட ஒரு புல்லுரிவிகளாக மாறி நிற்கின்றனர். இதை திரொட்கிய மற்றும் சீரழிந்த கட்சிகள், தொழிச் சங்க தலைமைகள், அனாசிட் குழுக்கள் எங்கும் இந்த ஊழலலும், காட்டிக் கொடுப்புடன் கூடிய ஒரு சலுகை பெற்ற வர்க்கமாக காணப்டுகின்றது. இவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய மையமாக ATTAC   உலகமயமாதல் எதிர்ப்புடன் வெளிவருகின்றது. உழைக்கும் மக்கள் இந்த போராட்டங்களில் இருந்து அன்னியமாகும் நிலை அதிகரித்து வருகின்றது. மறுதளத்தில் மீண்டும் ஒரு வர்க்கப் போராட்டம் என்ற கருத்து முன்னிலை விவாதத்துக்கு உள்ளாகி அரங்கு வருகின்றது. இந்த நிலையில் அரசு சாரத பன்னாட்டு நிறுவனங்கள் பணப்பலத்துடன் தீடிரென சர்வதேச மையங்களை உருவாக்கின்றன. இப்படி ஏகாதிபத்திய துனையுடன் உருவாகுபவர்கள் ஒரு வாய்க்காலை வெட்டுவதன் மூலம், உதிரியாக சிதைந்து அழிந்து வரும் உதிரிக் குழுக்களை அந்த வாய்கள் ஊடாக ஒடவைக்கின்றனா. விதிவிலக்கற்ற வகையில் பெரும்பாலன ஐரோப்பிய பராம்பரிய போராட்ட குழுக்கள் அனைத்துமே ATTAC   வெட்டிய வாய்கால் வழியாக ஒடி, கடல் என்ற மூலதனத்தி சங்கமித்துக் கொள்கின்றன. இந்தப் போராட்டங்கள் எல்லாத் சமூகத் துறையிலும் விதிவிலக்கற்ற ஒன்றாகியுள்ளது.. ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்கள், தொழிலாளர் போராட்டங்கள், சுற்றுச் சூழல் போராட்டங்கள் என அரங்கில் உள்ள அனைத்தையும் கூட ATTAC   போன்ற அமைப்புகள் தலைமை தாங்குகின்றது.

 

பிரான்சில் அண்மையில் ஒய்வூதிய வெட்டு மற்றும் ஒய்வூதிய வயது அதிகாரிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு நடந்த கதியும், அதற்கு தலைமை தாங்கியவர்களின் காட்டிக் கொடுப்பையும்; ஆராய்ந்தால், அவர்களை ஒரே குடையின் கீழ் ஒன்றினைத்து வைத்திருக்கும் ATTAC   போன்ற தன்னார்வக் குழுக்களின் அரசியலைப் புரிந்து கொள்ளமுடியும்;. ஒய்வூதிய வெட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது அனாசிட் குழுவான (ளுருனு) சூட், தனது அரசியல் கையெலத்தனத்தை வெக்கமமின்றி ஒப்புக்; கொண்டது. 10 குழுவின் சார்பாக பேசிய சூட் பிரதிநிதி, ஒய்வூதிய வெட்டுக்கான சட்டமூலம் நடைமுறைக்கு வருவதை தம்மால் தடுக்க முடியாது என்றனர். திரொக்சிய கட்சியான புரட்சிகர கொம்யூனிச கழகம் (டுஊசு) "இந்த போராட்டத்தில் நாங்கள் தோற்றுவிட்டோம் என்பதை அரசங்கத்தில் உள்ளவர்கள் உணர்வுபூர்வமாக அறிவார்கள்" என்று பீற்றிக் கொண்டனர். லுத் ஊவ்ரியேர் (டுழு) என்ற புரட்சிகர தொழிலாளர் திரொட்கிய கட்சி "அரசாங்கத்தின் அவலமான மதிப்பின்மையை " எடுத்துக் காட்டவதாக கூறி, போராட்டத்தை காட்டிக் கொடுக்க நியாயம் கற்பித்தனர். நியாயமான எதிர்ப்பைக் காட்டி, தம்மை பாதுகாத்துக் கொள்ளும் அனுகு முறை ஜனநாயக வழிப்பட்டது என்றனர். லுத் ஊவ்ரியேர் பொது வேலை நிறுத்தை அடியோடு நிராகரித்தனர். பழைமையானதும் மிகப் பெரிய தொழிச் சங்கமான ஊபுவுஇ ஒய்வூதிய வெட்டுக்கு எதிரான தனது கொள்கை விளகத்தில் "கோரிக்கைகள் தொடர்பான ஒரு நோக்கத்தை தொடருகின்றோமே தவிர, அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்ற அரசியல் இலக்கை நாங்கள் கொண்டிருக்கவில்லை" என்றதுடன் ".....பொதுத்துறை, தனியார் துறைகளில் எதிர்ப்பை உருவாக்கி தொழிற்சங்க முறைப் போராட்டங்கள் வழியே வெற்றியடைய வேண்டும் என்பதே எங்கள் நிலை" என்று கூறி ஒய்வூதிய வெட்டை ஊக்குவித்தனர். அரசியல் போராட்டத்தை நிராகரித்தனர். சீராழிவை நிரந்தரமாக்கும் Nபுhராட்டங்களை எடுக்கவும், விரக்தியையும் நம்பிக்கையினத்தையும் உருவாக்குவதே தமது கொள்கை என்றனர். மூன்றாவது பெரிய தொழிச் சங்கம் குழு வின் தலைவர் "பொது வேலை நிறுத்தம்" என்ற சொற்தொடரை பயன்படுத்தவே நான் தயங்குகின்றேன் என்றார். இது நாம் விரும்பினாலும் விரும்ப விட்டாலும் புரட்சி என்ற கருத்தையும், அரசியல் போராட்டம் என்ற உள்ளகத்தையும் உருவாக்கின்றது என்று கூறி நிராகரித்தார். பொதுவேலை நிறுத்தத்தை அனைவரும் ஒட்டு மொத்தமாகவே நிராகரித்தனர். 80 சதவீதமான பிரஞ்;சு மக்கள் பொது வேலை நிறுத்ததையும், இதற்கு எதிரான போராட்டத்தையும் ஆதாரித்து நின்றதைப் புள்ளிவிபரங்கள் தெளிவுபடுத்திய போது கட்சிகள், தொழிச்சங்கங்கள் அதை நிராகரித்து மூலதனத்துக்கு பல்லாக்கு எடுத்தனர். பிரான்சின் இரண்டாவது பெரிய தொழில் சங்கமான ஊகுனுவு அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை முன் கூட்டியே செய்த கொண்டு, ஒய்வூதிய வெட்டிற்கும், ஒய்வூதிய வயது அதிகாரிப்புக்கும் வக்காளத்து வாங்கினர். இந்த துரோகத்தை எதிர்த்து அவாகளின் மத்திய குழுவின் ஒரு பகுதி விலகிச் சென்றதுடன், ஊபுவு இல் இனைந்து கொண்டது. இப்படி துரோகங்களுக்கு அரசியல் வழிகாட்டியாகவும், அவற்றை ஒன்று இனைக்கும் அமைப்பாக ATTAC   உள்ளது. இவர்கள் அனைவரும் ATTAC   கின் முக்கிய பங்காளியாகவும், அதன் உறுப்பாகவும் இருக்கின்றனர். ஒய்வூதிய வெட்டை ஊக்குவித்து செய்த துரோகத்தை பாரட்டமால் அராசாங்கத்தால் இருக்க முடியவில்லை. இந்த சட்டத்தைக் கொண்டு வந்த அமைச்சர், பராளுமன்றத்தில் உரையாற்றிய போது, ஊபுவு தனது சொந்தக் கொள்கை மூலம் தனது ஒய்வ+தியம் வெட்டும் திட்டத்தை பாதுகாத்ததாக கூறி அவர்களை புகழ்ந்தார். அதை அவர் "உணர்வுப+ர்வமான அணுகுமுறை" என்று சிலாப்பித்துக் கொண்டார். பொது வேலை நிறுத்தம் அதிகாரத்தை கைப்பற்றுவதை விரும்பியோ விரும்பமலோ கோருகின்றது. இது அந்த இலக்கை நோக்கிய விவாவதத்தை தோற்றுவிக்கின்றது. இயன்றவரை இந்த விவாதம் தொடங்குவதைக் கூட தொழிச்சங்கங்கள், கட்சிகள் திட்டுமிட்டு நிராகரிக்கின்றன. இது அவர்களின் அரசியல் சித்தாந்தமாகி அதுவே அடிப்படை தத்துவமாகிவிட்டது. 

 

மக்கள் ஒய்வூதிய வெட்டை எதிர்த்தும், ஒய்வூதிய வயது அதிகாரிப்பதை எதிர்த்தும் ஒரு பொது வேலை நிறுத்தத்தை நடத்துவதை ஆதாரித்து நின்றனர். ஆனால் தொழிச் சங்கங்கள் முன்னெடுக்க மறுத்தது. மாறாக உதிரியான ஒன்றுடன் ஒன்று தொடர்புறாத வகையில் போராட்டங்களை முன்வைத்துடன், வௌ;வேறு கால எல்லைக்குள் வௌ;வேறு துறைசாhந்து வேலை நிறுத்தத்தை கோரியதுடன், வௌ;வேறு தொழிச் சங்கங்கள் வௌ;வேறு போராட்ட வழிமுறைகளை அறிவித்ததுடன், பொதுவான கோசத்துக்கு பதில் பகுதிக் கோரிக்கையை பிரதானப்படுத்தி முன்வைத்தன் மூலம் போராட்டங்களை தொடர்ச்சியாக அடிசறுக்க வைத்தனர். இத ஐரோப்பா அவுஸ்ரேலிய என எங்கும் இதுவே பொதவான காட்டிக் கொடுப்பாக இருந்தது. கம்ய+னிசம் மக்களின் நடைமுறை வழிகாட்டியாகவும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உலகின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய போது கிடைத்த அனைத்து வெற்றிகளும், இன்று படிப்படியாக கதறக்கதற பறிக்ப்படுகின்றது. இவை விதிவிலக்கற்ற வகையில் உலகின் நிகழ்ச்சி நிரலாகி விட்டது.

 

கம்யூனிசம் உழைக்கம் மக்களின் வழிகாட்டியாக இல்லாத போன நிலையில், நீண்ட இழுபறியான போராட்டங்களை கம்யூனிச விரோதிகள் திட்டமிட்டே நடத்துகின்றனர். போராட்டம் மீதான சமூக உணர்வுகளைக் கூட நம்பிக்கை இழக்க வைத்தனர். காலவரையற்ற தெளிவான நோக்கமற்ற வேலை நிறுத்தம் மூலம், தனிப்பட்ட போர் குணம்சங்களை முன்னிலைப்படுத்தி தொழிச் சங்கங்கள் வேலைத் தளங்களில் அவர்களை தனிப்படுத்தி சிதைத்தனர், சிதைக்கின்றனர். தனிப்பட்ட போhக்குணம்சம் படைத்த போராட்ட நபர்கள் தனிப்பட்ட ரீதியில் சம்பள இழப்புகளை, வேலை இழப்புகளையும் கண்டதைத் தவிர, வேறு எதையும் பெற முடியாத வகையில் மிகவும் திட்டமிட்ட வகையில் வழிகாட்டினர், வழிகாட்டகின்றனர். இந்த நிலைமையை திரொட்கிய கட்சிகள், ஸ்ராலினை துற்றும் கம்யூனிச கட்சி, சோசலிச கட்சிகள், அனாசிட்; குழுக்கள், தொழிச் சங்கங்கள் முதல் அனைத்து வகைக் குழுக்களும் சோரம் போவதில் ஒருவரை ஒருவர் முந்திச் சென்றரே ஒழிய பின்தள்ளிச்செல்லவில்லை. இவர்கள் அனைவரை ஒன்றினைத்து வழிகாட்டும் ATTAC   சித்தாந்த்ததில் இவர்கள் முரண்படவில்லை. ATTAC   என்ற அரசு சாரத அமைப்பின், ஏகாதிபத்திய சார்பை வெட்ட வெளிச்சமாக்கியது. இன்று ATTAC   போன்ற குழுக்கள் பற்பலவாக பன்னாட்டளவில் தீடிர் தீடிரென பெருகி வருகின்றன. மக்களின் தன்னியல்பான போராட்டங்கள் சிதைப்பது இவர்களின் மைய நோக்கமாக உள்ளது. பராம்பரியமாக போராடிய குழுக்கள் அரசியல் ரீதியாக சிதைந்து, காட்டிக் கொடுக்கும் சந்தாப்வாதமாகி நக்கிப் பிழைக்கும் நிலையில், அதிர்த்தியுற்ற மக்கள் உருவாகும் தன்னியல்பான போராட்டங்களை இட்டு மூலதனம் அச்சம் கொள்கின்றது. ATTAC   போன்ற குழுக்கள் இவர்களுக்கு தலைமை தாங்கும் போதே, இவர்களின் சமூக உணாவுகளை மறு சிதைவுக்குள்ளாக்கும் நோக்குடன் பெரிய பலத்துடன் களத்தில் இறங்கி உள்ளது.  இன்று உலக அளவில் போராட்டங்களை சிதைப்பதை அடிப்படையாக கொண்ட தன்னார்வக் குழுக்கள், பாரிய நிதிப் பலத்துடன் களம் இறங்கி உள்ளது. அரசு மற்றும் உலகமயமாதலுக்கு தாம் எதிரானவர்களாக காட்டிக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து சமூகப் பிரிவுகளின் சார்பாகவும் களத்தில் இறங்குகின்றனர்
உலகமயமாதலுக்கும் அதன் கைக்கூலி அரசுக்கு எதிரானவாரகவும், மாற்று சக்தியாகவும் இவர்கள் தம்மைத் தாம் விளம்பரம் செய்வதுடன், பெருமளவு நிதியை எழைகளின் வாழ்விடங்களில்; செலவு செய்கின்றனர். பன்நாட்டு நிறுவனங்கள் பெரும் மூலதனத்துடன் பல நாடுகளின் தேசிய வருவயை எப்படி மிஞ்சி நிற்கின்றனவோ, அதன் வளர்ப்பு நாயான தன்னார்வக் குழுக்கள் சிலவற்றின் வரவு செலவு பல சிறிய நாடுகளின் தேசிய வருவாயை மிஞ்சி நிற்கின்றன. உதாரணமாக அரசு சாராத அமைப்புகள் சிலவற்றின், 2002 ம் ஆண்டில் அவர்களின் தேசங் கடந்த நிதிப்பலமும்; மற்றும் சில தேசங்கடந்த தொண்டர் நிறுவனங்கள் மற்றும் வலைப் பின்னல்களைக் கொண்ட அமைப்புகளைப் பார்ப்போம்.


CARE அமெரிக்கா                            2055 கோடி ரூபா
RESEAU WWF                                    1971 கோடி ரூபா
OXFAM பிரிட்டன்                              1512 கோடி ரூபா
GREENPEACE                                       924 கோடி ரூபா
CROIX-ROUGE                                      896 கோடி ரூபா
CORDAID நெதர்லாந்து                        890 கோடி ரூபா
SAVE THE CHILDREN பிரிட்டன            884 கோடி ரூபா
MISEREOR டென்மார்க்                        817 கோடி ரூபா
OXFORM நெதர்லாந்து                        812 கோடி ரூபா
MEDECINS SANS FRONTIERE பிரான்ஸ் 537 கோடி ரூபா
WELT HUNGER HILFE ஜெர்மனி          532 கோடி ரூபா
HIVOSநெதர்லாந்து                          364 கோடி ரூபா
HANDICAP INTERNATIONAL பிரான்ஸ் 280 கோடி ரூபா
MEDECINS பிரான்ஸ்                          257 கோடி ரூபா
ACTION CONTRE LA FAIM பிரான்ஸ்     235 கோடி ரூபா
CCFD பிரான்ஸ்                                  196 கோடி ரூபா

 

உலகளவில் நூற்றுக் கணக்கான பன்நாட்டு தொண்டா நிறுவணங்களும்; தேசத்தின் உள் மிகப் பெரிய வலைப்பின்னலைக் கொண்ட அமைப்புகளும் உலகமயமாதலை எதிர்த்தல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. உhரணமாக சிலவற்றைப் பாhப்போம்.


1973 இல் உருவாக CONFEDRATION EURPEENNE DES SYNDICATS என்ற பெல்ஜிய அமைப்பு தொழிச் சங்கம் முதல் பல்துறை நடவடிக்கைகளை 35 நாடுகளில் வௌ;வேறு பெயர்களில் 6 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு இயங்குகின்றது.

 

1949 இல் உருவான  CONFEDRATION INTERNATIONALE DES SYNDICATS LIBRES என்ற பெல்ஜியம் அமைப்பு தொழிச்சங்கம்; முதல் பல்துறை நடவடிக்கையில் 231 வௌ;வேறு பெயர்களில் 150 நாடுகளில் இயங்குகின்றது. இந்த அமைப்பில் 15.8 கோடி உறுப்பினர்களைக் கொண்டு இயங்குகின்றது.


NAVDANYA என்ற இந்தியக் அமைப்பு விவசாயத்தில் மரபு மற்றத்துக்கு எதிராக 3000 கிராமங்களில் செயல்படுகின்றது. இதல் 2000 உறுப்பினபர்கள் உள்ளனர்.


FIFTY YEARS IS ENOUGH என்ற அமெரிக்கா அமைப்பு 1994 இல் உருவானது. அமெரிக்காவில் 200 வௌ;வேறு அமைப்புகளையும், உலகில் 160 வௌ;வேறு அமைப்புகளையும் வைத்துள்ளது. இது உலகமயமாதலை திருத்தக் கோருகின்றது.


இது போன்ற நீண்ட பட்டியல் உண்டு. ஒருபுறம் ஒரே அமைப்பு பலநூறு பெயர்களில் உலகெங்கும் இயங்குகின்றது. இவற்றின் கீழ் வௌ;வேறு கோசங்களை முன்வைத்து உலகமயமாதலை திருத்தக் கோரும் பல ஆயிரம் அமைப்புகள் உலகுகெங்கும் இயங்குகின்றது. சித்தாந்த ரீதியாக மக்கள் தமது விடுதலைக்கு போராடுவதைத் தடுக்க, பல பெயர்களில் அமைப்புகளை வண்ணம் வண்ணமாக பெத்துப் போடுவது அன்றாட நிகழ்வாக உள்ளது.

 

சமூகத் தொண்டு என்ற பெயரிலும், உலகமயமாதலுக்கு எதிராகவும் களமிறங்கும் பன்னாட்டு தன்னார்வ நிறுவனங்கள் நிதிப் பலம் மறுகாலனியாதிகத்துக்கான உந்துவிசைக்கான புறச் சூழலை உருவாக்கின்றது. அமெரிக்காவின் தன்னார்வ நிறுவனமான ஊயுசுநு யின் 2002க்கான மொத்த நிதிப்பலம், 1997 தேசிய வருமானத்தை அடிப்படையாக எடுத்து ஆராய்ந்தால்; 40 நாடுகளின் தேசிய வருமானத்தை விட அதிகமாகும். நுருசுழுளுவுநுP என்ற ஐரோப்பிய யூனியனை மையமாக வைத்து 13 நாடுகளைச் சேர்ந்த 19 அரசுசாரத அமைப்புகளின் கூட்டமைப்பு இயங்குகின்றது. 2003 இல் இதன் வருடாந்த மொத்தச் செலவு 4225 கோடி ரூபாவாகும். 1997 தேசிய வருமானத்தை அடிப்படையாக எடுத்து ஆராய்ந்தால்; 50 நாடுகளின் தேசிய வருமானத்தை விட அதிகமாகும். கிறின்பின்ஸ் முதலாளியின் வருடாந்த சம்பளம் 60.48 லட்சம் ரூபாவாகும். கிறின்பின்ஸ் அமைப்பு நிதிச் சேகரிப்பை மக்களிடம் நடத்தும் போது, 267 கோடி ரூபாவுக்கு குறையாது நிதி கிடைக்கின்றது. 2003 இல்; 28 லட்சம் பேர் பண உதவி செய்துள்ளனர். இந்த உதவி 5600 ரூபா முதல் 28000 ரூபாவரை அமைந்து இருந்தது. அண்ளவாக 25 சதவீத்தை பணக்காரர்களிடம் திரட்டும் கிறின்பின்ஸ், அதில் 60 லட்சம் ரூபாவை அதன் தலைவர் கொள்ளையடிக்கின்றார். இப்படி மேல் இருந்து கீழாக ஒரு கொள்ளைக் கூட்டமாக உள்ள இந்த அமைப்புகள், எதையும் மக்களின் நலனில் இருந்து திட்டமிடுவதுதில்லை சிந்திப்பதுமில்லை.

 

பிரைட்ரிக் எபெர்ட் அறக்கட்டளை ஜெர்மானிய ஏகாதிபத்திய அரசின் நிதி உதவியில் இயங்குகிறது. இராண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து 25 வருடமாக ஆட்சியில் இருந்த ஆளும் கட்சியுடன் நேரடி சித்ததாந்த தொடர்புடையது. இந்த நிர்வகக் குழுவில் பன்நாட்டு ஏகபோக நிறுவனங்கள், உளவு நிறுவனங்கள் உட்பட பலர் இயக்கினர். தொழிச் சங்கங்களுக்கு உலகளவில் உதவி செய்வது இதன் சித்தாந்தமாக இருந்தது. தனிப்பட்ட தொழிச் சங்க தலைவர்களை அனுகுவதுடன், நேர்மையானவர்களுக்கு மட்டும் நிதி உதவி என்ற கோணத்தில் இயங்குகின்றது. இது தொழிலாளர் கூட்டுரவு என்ற மையக் கோசத்தை வைத்து வருகின்றது. அறக்கட்டளையின் மைய நோக்கம் சொந்த ஆலையின் லாபம், பிற கம்பனியை எப்படி வெல்வது என்பதை முதன்மைப்படுத்தி தொழிலாளர்கள் அதை நோக்கி திசை திருப்பி தொழலாளர் வர்க்க உணர்வை பிளக்கின்றது. எபெர்ட் என்ற அறக்கட்டளை இலங்கையிலும், இந்தோனேசியாவிலும் தொழில் நுட்ப நிபுணர்களை உருவாக்குவது, வயது வந்தோர் கல்வி என்ற போர்வையில் இயங்குகின்றது. சாம்பியா, நைஐPரியா, டுனிசியா, சைரே, ஜேர்டான், சூடான், கென்யா, கானா போன்ற பல நாடுகளில் பல்வேறு பயிற்ச்சிகளை வழங்குகின்றது.

 

பிரிட்டனைச் சேர்ந்த ஒக்ஸ்பம் (OXFAM) என்ற அரவு சராத அமைப்பு பன்நாட்டு அளவில் மருத்துவ துறையில் இயங்குகின்றது. இதில் 4500 பேர் சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர். 2003 இல் இதன் மொத்த வரவு செலவு 2548 கோடி ரூபாவாகும்;. உலகளவில் 108 நாடுகளில இயங்குகின்றது. 23000 சம்பளமற்ற சமூக ஆர்வளர்களைக் கொண்டது. 1942 இல் இது பிரிட்டின் ஒஸ்பேட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உருவானது. இது யுத்த அகதிகளுக்கு உதவு உருவாக்கப்பட்டது. 6 லட்சம் நிரந்தரமான நிதி உதவும் அங்கத்தவர்களைக் கொண்டது. உலகளவில் இன்று மருத்துவத்தை தனியார் துறையாக்கும் உலகமயமாதல் நிபந்தனைகளை நடவடிக்கைகளையும் மூடிமறைக்கவும், அதை விரிவாக்கவும், தொண்டர் அமைப்புகளின் உதவியுடன் உலகெங்கும் முயலுகின்றது. இதுபோன்ற அமைப்புகளுக்கு நிதி வழங்குவதை ஏகாதிபத்தியங்கள் அண்மைக் காலத்தில் விரிவாக்கியுள்ளது.

 

பிரான்ஸ் அரசு சார்பற்ற நிறுவனங்களின் வெளிநாட்டு உதவி கடந்த பத்த வருடத்தில் இரண்டு மடங்குக்கு மேலாகியுள்ளது. 2001 இல் இதன் தொகை 4628 கோடி ரூபாவாகியுள்ளது. இந்தத் தொகையை 20 முன்னணி அரசு சார்பற்ற அமைப்புகளே செலவு செய்கின்றது. இதில் 39 சதவீத்தை அரசு கொடுக்க, மிகுதியை வெளியில் திரட்டுகின்றனர். அதாவது 2036 கோடி ரூபாவை மக்களிடம் திரட்டுகின்றனர். இப்படி பெரும் நிதிபலத்துடன் உருவாகும் தன்னார்வக் குழுக்கள் என்ற அரசு சராத நிறுவனங்கள், உலகமயமாதலுடன் அக்க பக்கமாக வளர்த்து எடுக்கப்படுகின்றது. இதன் மூலம் தேசங்களில் கைக்கூலி தேசிய அரசுகள் செய்து வந்த பணிகள் முடிவுக்கு வருகின்றன. மாறாக அவற்றை வெறும் அடக்குமுறை கருவியாக மட்டும் இருப்பதை உறுதிசெய்கின்றன.


இதைத் தணிக்க, திசைதிருப்ப அரசு சாரத நிறுவனங்கள் தற்போது நேரடியாக மக்களிடையேயான முன்னணி உறுப்பினர்களை இனம் கண்டு அவர்களை உள்வாங்குகின்றனர். இதன் மூலம், போராட்டத்தின் சமூக கொந்தளிப்பை நலம் அடிப்பதை உறுதி செய்வதுடன், இந்த அரசு சராத நிறுவனங்களின் மைய நோக்கமாக தொடருகின்றது. சில மத அமைப்புகள் எப்படி பல கோடி ரூபா பணத்துடன் பல மொழி வெளியீடுகளை நிறுவனப்படுத்தி மக்களை நலனடிக்கின்றதோ, அதையே அரசு சராத நிறுவனங்கள் செய்கின்றன. அரசு சராத நிறுவனங்கள் பற்றி தூய்மைவாத சித்தாந்தம், மக்களின் உண்மையான உணர்வுபூர்வமான சமூக அமைப்பை உருவாக்கவதற்கு பாதகமான கோட்பாடாக வளர்ச்சி உறுகின்றது.

 

தன்னார்வக் குழுவுக்கு நிகராக பெரும் நிதிப் பலத்துடன் மதங்கள் பல சித்தாந்ததுடன் உருவாக்கப்பகின்றது. தன்னார்வக் குழுக்கள் போராட்டங்களை அமைதியாக மூலதனத்தின் ஜனநாயக எல்லைக்குள் நடத்த கோரும் அதே தளத்தில், மதங்கள் போராட்டகளை திட்டவட்டமாக எதிர்கின்றது. 2002 இன் ஆரம்பத்தில் உலகளவில் 9900 மதங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. புதிய மதங்கள் உருவாகுவது என்றும் இல்லாத வேகத்தில் பெரும் நிதி ஆதாரத்துடன் நடக்கின்றது. நாள் ஒன்றுக்கு  இரண்டு அல்லது மூன்று மதங்கள் புதிதாக தோன்றிய வண்ணம் உள்ளது. மதங்களின் விரிவாக்கம் அதிhச்சிகரமான தாக்கத்தின் ஊடாக அல்லது மென்மையான தன்மையின் ஊடாக என இரண்டு வௌ;வேறு அனுகு முறைகளில் ஊடாக விரிவாக்கப்படுகின்றது. வர்;த்தக அடிப்படையில் பணம் புரளும் ஒரு மூலதனமாக மாறியுள்ளதுடன், பாரிய விளம்பர ஊத்தி மூலம் மதப்பரப்பல் விரிவாகியுள்ளது. இந்த மதப்பிரிவுகளில் கிறிஸ்தவம் சார்ந்த புதிய மதப்பிரிவுகள் தனக்குள் 39.4 கோடி பேரை உள்வாக்கியுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.  கிறிஸ்துவ மக்களில் 20 சதவீதமானோர் இந்த மதங்களுக்குள் சீராழிந்துள்ளனர். நைஜிரியாவை எடுப்பின் 12.66 கோடி பேர் ஒரு டொலருக்கு குறைவான வருமானத்தை உடையவாகள்;. இந்த மக்களில் 40 நைஜிரியவின் கதை இது. கொள்ளையை முடிமறைக்க அமைதியாக பிரத்தனை செய்வதை புதிய மதங்கள் உறுதி செய்கின்றன.

 

இதையே அரசு சாரத அமைப்புகள் உலக அமைப்பை சேதமின்றி திருத்தக் கோருகின்றனர். இந்த சமூக அமைப்பை தலைகீழாக்க கோருவதில்லை. தன்னார்வக் குழுக்கள் முன்வைக்கும் திருத்தம் மூலம், தாம் தம்மளவில் மக்களுக்காக போராடுவதாக காட்டிக் கொள்கின்றனர். இதன் மூலம் மக்கள் செயலில் இறங்குவதை தடுக்கின்றனர். வரையறக்கப்பட்ட கோரிக்கைக்குள் போராட்டத்தை முன்னெடுக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அதன் மூலம் அனைத்தையும் கையாளக் கூடியவர்கள் என்ற பிரமையை உருவாக்கின்றனர். இதன் மூலம் மக்களை செயலற்ற நிலைக்குத் தள்ளி, தன்னார்வக் குழுப் பிரதிநிதிகள்; செய்வார்கள் என்ற கனவு நிலையை உருவாக்கின்றனர். கடவுள் வழிபாட்டு நிலைக்கு செயலை சித்தாந்தமாக்கின்றனர். இதை ஒருங்கு இனைக்கவும், தாம் பலமானவராக காட்டவும் சர்வதேச வலைப்பின்னலை உருவாக்கின்றனர். இந்த வகையில் சிதைந்து போன பராம்பரிய போராட்ட குழுக்களும், தன்னார்வக் குழுக்களுடன் இணைந்து குறிப்பான மக்கள் போராட்டங்களையும், உலகமயமாதருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

 

போராட்டங்கள் அரசியல் ரீதியாக விரியமிழக்க முதலில் கோட்பாட்டு ரீதியாக நலனடிக்கப்படுகின்றது. போராட்ட மையங்கள் எப்போதும் எங்கும் அரசியல் அற்ற அமைப்பை முன்னிறுத்துகின்றன. ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் குழுக்களை, இந்த மையங்கள் ஆரம்பம் முதலே ஐனநாயக விரோத சித்தாந்தமாக சித்தரிக்கின்றது. பொது வேலை நிறுத்தங்களை ஆராம்பம் முதலே நிராகரிக்கின்றன. ஜனநாயகத்தை ஒரு தலைபட்சமாக்கி,   போராட்ட கோட்பாடுகளின் அதை முன்னிலையில் ஒரு சித்தாந்த அடிப்படையாக கொண்டு வருகின்றனர். ஜனநாயகம் என்பது சுரண்டும் உரிமையை உள்ளடங்கியது என்பது அரசு சாரத நிறுவனங்களின் அடிப்படைச் சித்தாந்தம். அதே போன்று போராடுவதும் போராடமல் விடுவதும் ஜனநாயக வழிப்பட்ட உரிமையாக விளக்குகின்றது. போராடமல் விடுவதையும், வேலை நிறுத்தத்தை முறியடிக்கும் உரிமையை அங்கிகரிக்கின்றது. கருங்காலித் தனத்தை ஜனநாயக உரிமை என்கின்றது. வரையறுக்கபட்ட நிலையில் போராட்டத்தை அரையும் குறையுமான உயிருடன் முன்வைப்பர். அமைதியான போராட்டம் என்ற மையமான அரசியலை தமது சித்தாந்தமாக முன் தள்ளுகின்றனர். இதன் மூலம் பராம்பரிய போராட்ட குழுக்களின் பல சித்தாந்தங்களை தகர்தெறிவதுடன், நன்றியுள்ள நாயாக போராட்ட களத்தில் இறக்குகின்றனர். இதை எதிர்த்து மக்கள் திரளை சார்ந்து நிற்க முடியாதோரை இலகுவாக தனிமைப்படுத்தி, தனிமனித பயங்கரவாத நடவடிக்கைகளில் சீராழிய வைத்த மூலதனத்தின் சுரண்டும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்றனர்.

 

இப்படி பெரும் பலத்துடன் ஒருங்கினைத்த 40000 அரசு சார நிறுவனங்களின் ஒருங்கினைந்துள்ளது. தனது அரசியல் வழி ஒன்றை அரசியலுக்கு வெளியில் என்ற கோசத்துடன் முன்வைக்கின்றது. அமைதியான வழியில் எகாதிபத்திய நடைமுறைக்கு மாற்றாக போராடி, மாற்று உலகை படைக்க கோருகின்றது. இது சுரண்டல் அமைப்பை தகர்த்து அல்ல, மூலதனம் தனது கொள்ளையில் ஒரு சிறிய பகுதியை தனமாக தருவதன் மூலம் மற்றொரு உலகை உருவாக்க முடியும் என்ற கோசத்துடன முன்னணி நபர்களைக் கவர்ந்து கொள்கின்றது. ஏகாதிபத்தியங்கள் உலகளவில் மக்களை கொள்ளை அடிக்க கூடும் இடங்கள் எங்கும், அதற்கு வெளியிலும் எதிர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு மாநாடுகளையும் தொடர்ச்சியாக நடத்துகின்றனர். இதன் பின் தன்னியல்பாக மக்கள் கலந்து கொள்வதுடன், பல கோடி மக்கள் உணர்வு பூர்வமாக அணிதிரளுகின்றனர். சித்தாந்த ரீதியாக அறிவுத்துறையினர், பல்கலைக்கழக் அறிவுத்துறையினர் இதற்கு ஆதாரவாக பல வண்ணக் கட்டுரைகளையும் ஆய்வுகளையும் வெளியிடுகின்றனர். பாரிய பிரமையை ஊட்டுகின்றனர். உலகை மாற்றும் வல்லமை நெருங்கி விட்டதாக நம்பவைக்கின்றனர்.

 

உலகம் முழுக்க பன்நாட்டு கட்டமைப்புடன் இயங்கும் அரசு சாரத நிறுவனங்கள், எகாதிபத்தியம் போல் அவையும் தமக்கு இடையில் ஒன்று இணைந்து வருகின்றது. ஏகாதிபத்தியத்துக்கு மாற்றுகள் தாமே என்ற பறைசாற்றி, தமது பலத்தையும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் கொண்டு மக்களை தம் பின் அணி திரட்டுகின்றனர். இவர்களுடன் இனையும் பல்வேறு குழுக்கள், படிப்படியாக இவர்களின் அரசியல் சித்தாந்தத்துடன் கரைந்த சிதைந்து வருகின்றனர். இத்தகைய அரசு சாரத நிறுவனங்கள் எகாதிபத்தியத்தால் மிகவும் திட்டமிட்ட வகையில் கட்டமைக்கப்படுகின்றது. இது பணத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகின்றது. தன்னார்வத் தொண்டர்களை உள்ளடக்கிய இவ் அமைப்புகள், பரந்த நிதி ஆதாரத்தையம், எகாதிபத்திய ஆதாரவையும் அடித்தளமாக கொண்டது. உலகமயமதாலை சிதைவின்றி காப்பாற்துவதை தத்துவமாக கொண்டது. இந்த தன்னார்வக் குழுக்களின் நிதி திரட்டல், பெருமளவில் மூலதனத்தின் கொடைகளைச் சார்ந்துள்ளது. இந்தக் கொடை கூட மக்களின் நலனில் இருந்து பிறக்கவில்லை. மாறக மூலதனம் தேசங்கள் தோறும் வரியாக கட்டுவதை குறைக்க வழங்கிய சலுகையை ஆதாரமாகவம் அடிப்படையாக கொண்டது. தேசிய அரசாங்களுக்கு கட்ட வேண்டிய வரித் தொகையை குறைக்க, சமூக நலன் திட்டத்துக்கு நிதி வழங்குவதன் மூலம் கிடைக்கும் விசேட வரிச் சலுகையை அடிப்படையைக் கொண்டு அரசு சராத அமைப்புகளின் பணம் திரளுகின்றது. இங்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தப்படுகின்றது. ஒருபுறம் வரிச் சலுகை, மறு தளத்தில் தனக்கு சார்பான எதிர்பற்ற சமூக அமைப்பை உருவாக்கின்றனர். இதனால் மூலதனம் மேலும் வீங்குகின்றது. உதாரணமாக அமெரிக்காவை எடுத்தால் அரசு சராத அமைப்புக்கான பணத்தை மூலதனம் வழங்குவதன் மூலம் சிறப்பு வரி சலுகை பெறுவது அதிகரிக்கின்றது. இதன் அடிப்படையில்  2002 இல் அமெரிக்காவில் பெரிய கொள்ளை நிறுவனங்கள் அரசு சாரத அமைப்புக்கு வழங்கிய பணம் 10 சதவீத்தால் அதிகரித்துள்ளது. மொத்தமாக அரசு சாரத நிறுவனத்துக்கு அமெரிக்காவில் நன்கொடையாக மூலதனம் திரட்டிக் கொடுத்த தொகை 2 18 400 கோடி ரூபாவாகும்;. 1997 தேசிய வருமானத்தை அடிப்படையாக எடுத்து ஆராய்ந்தால்; 75 நாடுகளின் தேசிய வருமானத்தை விட அதிகமாகும். இப்படித் தான் உலகெங்கும் அரசு சராத நிறுவனங்களின் பணம் குவிகின்றது. பணத்தை நன்கொடையாக தந்தவனுக்கு எதிராக போராடுவதாக கூறுவது என்பது, வேடிக்கையான ஒரு எமாற்றுதான்.

 

ஆபிரிக்காவை ஏகாதிபத்தியங்கள் சூறையாடி பஞ்சம் தலைவிரித்தாடி மக்கள் மடிந்து கொண்டிருந்த போது, அரசு சாராத நிறுவனங்கள் அமெரிக்காவின் உபரி உணவை நாம் பெற வேண்டும் என்ற கோசத்தை முன்வைத்தது. இந்த உதவி வந்தடையவும் "ஆப்பிரிக்காவுக்கு நண்பன் அமெரிக்கா" என்ற அடிப்படையில் பிரச்;சாரத்தைச் செய்தது. இதன் மூலம் ஏகாதிபத்திய சார்பாக "உணர்வு மட்டத்தை உயர்த்தல்" என்ற கோட்பாடு திட்டமிட்டே செயற்பட்டன. கொள்ளை அடித்தவனை நண்பனாக உற்றத் துணைவனாக வருணிப்பதில் அரசு சாரத தன்னார்வ நிறுவணங்கள் தலையாய பணியை ஆற்றினர். உலகை இந்த ஜனநாயக அமைப்பில் கொள்ளையடிக்க அமைதியான பணியினை துரிதமாக்கும் அரசு சாரத தன்னார்வ நிறுவனங்களுக்கு 1950 இல் ஐ.நா ஆலோசனை அந்தஸ்தை தனது சபையில் வழங்கியது. ஐ.நா என்ற அமைப்பின் விபச்சாரத்துக்கு இது சலாப் பொருத்துமாக துணையாகவும் இருந்தது.

 

அண்மையில் ஐரோப்பிய சமுதாய அரங்கிற்காக EUROPEAN SOCIAL FORUM பாரிசில்  டிசம்பர் 2003 இல் 12 முதல் 15ம் திகதிவரை கூடிய போது, அதில் 40 000 பிரதிநிதிகள் பங்கு கொண்டனர். ATTAC   நடத்தப்பட்ட இதன் மொத்தச் செலவு 1232 கோடி ரூபாவாகும். இந்த பணத்தில் பெரும் பகுதியை அரசாங்கமும், உள்ளுர் நகரசபைகளும் வாரி வழங்கின. முதலாளித்துவ சமூக நடத்தைகளை எதிர்த்தும், உலகமயமாதலை எதிர்த்தும் இந்த கூட்டம் ஆர்பாரித்தது. 100 மேற்பட்ட மொழிகளில் மொழிப் பெயாப்புகளை செய்தது. பல கூட்டங்களில் விவாதங்கள் பல மணி நேரம் நடந்தது. இவ்விதாங்களில் நிறைந்த நெருக்கத்தால் கூட்ட பிரதிநிதிகள் அலை மோதினர். "ப+கோள மாற்று" என்று ஆர்ப்பட்டமான கோசங்களால் தம்மைத் தாம் அலங்கரித்துக் கொண்டனர். ATTAC   பிராஞ்சு குழு நடத்திய ஐரோப்பிய சமுதாய அரங்கில் இடதுசாரி திரொக்கிய குழுக்கள், சோசலிசக் கட்சினர், சீரழிந்த கம்யூனிச கட்சி, பெண்கள் அமைப்புகள், தொழிற் சங்கங்கள், அனாசிட் குழுக்கள், பின் முன் நவீனத்துவ வண்ண எழுத்தளார்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என பலரை இது பிரதிநிதித்துவம் செய்தது.

 

இவர்கள் "கோட்பாடுகளின் கொள்கை விளக்கம்" ஒன்றின் ஊடாக அரசியல் கட்சிகளும், இராணுவ அமைப்புகளும் கலந்து கொள்வதை தடை செய்தனர். அத்துடன் அரசியலுக்கு அப்பால் தம்மை கவாச்சிகரமாக இணைத்துக் கொண்டனர். பிரான்சின் திரொக்கிய கட்சியான புரட்சிகர கொமினிஸ்ட் (டுஊசு) கட்சியினர்,  பிரிட்டனின் தொழிலாளர் சோசலிச கட்சி போன்ற என்னற்ற திரொட்கிய குழுக்கள் முதல், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் ஸ்ரலினையும் துற்றிச் சீராழிந்த கட்சிகள் ஈறாக அதில் பங்கெடுத்துப் பலப்படுத்தினர். சோசலிசக் கட்சி, பச்சைக் கட்சி பிரமுகர்கள், முன்னாள் மந்திரிகள், முன்னனி அரசியல் வாதிகள் என பலர் அதில் உரையாற்றினர். இத்தாலி கம்யூனிச கட்சியில் இருந்து உடைந்த குழு உட்பட எல்லா வண்ண ஒடுகாளிகளும், பிழைப்புவாதிகளும், சந்தர்ப்பவாதிகளம் என பலர் அதில் கலந்து உரையாற்றினர்.

 

உலகமயமாதலை உணாவு பூர்வமாக செயல்படுத்தும் சோசலிசக் கட்சியைச் சேர்ந்த பாரிஸ் மேயர், ATTAC   நடத்திய டிசம்பர் மாத ஐரோப்பிய சமுதாய அரங்கை திறந்த வைத்ததுடன் அது வெற்றிபெற பல சலுகைகளை வாரிவழங்கினார். அவர் வாழ்த்தி வழங்கிய உரையில் "ஆம் நாம் ஸ்தூலமான முடிவுகளை எடுப்பதற்காக கற்பனாவாதிகளாக இருப்போம். ஆனால் நம்முiடைய விரோதிகள் யார் என்பதில் தெளிவாக இருப்போம்;. நாம் ஒன்றாக இணைந்த வர முடியவில்லை என்றால், தாராள பூகோளமயமாக்கல் காரர்கள் ஒளிமிகுந்த வருங்காலத்தை அடைவார்கள்" என்றார்; இதன் மூலம் அவர் வழங்கிய ஆசிச் செய்தி, உலகமயமாதலுக்கு எதிராக உமகயமாதலின் மறைமுக ஆதாரவாராகிய நாம் அதை எதிhத்து ஒன்று இனையவிட்டால், கம்யுனிஸ்ட்டுகள் அதை கைப்பற்றிவிடும் அபாயத்தை எச்சரிக்கின்றார். எனவே நாம் முடிவுகளில் கற்பனைவாதிகளாக இருந்தபடி எதிர்ப்பதன் மூலம், உலகமயமாதலால் அமைந்த மிகப் பெரிய ஒளிமிகு வருங்காலத்தை உருவாக்கவே நாம் ஒன்றினைந்துள்ளோம் என்பதை தெளிவாக சொல்லிவிடுகின்றார். சோசலிச கட்சியின் முன்னாள் மந்திரியும் முக்கிய பிரமுகருமான வோரன் பவுஸ்சுடன், துழுளுநு டீழுஏநு என்ற மற்றொரு உலகமயமாதல் எதிhப்பு குழுவின் தலைவர் ஒன்றாக காலை உணவை உண்டபடி  உலகமயமாதலை எப்படி எதிர்ப்பது என்பது பற்றி கலந்துரையாடியபடி தான் அன்று பூகோள எதிர்ப்பை தொடங்கினர். இந்தளவுக்கு இந்த உலகமயமாதலை எதிர்ப்பதில் ஒருங்கினைந்தனர். யுடுவுநுசுஆழுNனுஐயுளுவுநுளு  கான நிதியின் பெரும் பகுதியை அதாவது 896 கோடி ரூபாவை பாரிஸ் மற்றும் ளயiவெ-னநnளை உள்ளுர் சபைகள்; வழங்கி வாழ்த்தன. உலகமயமாதலை எதிர்க்க நடந்த ஐரோப்பிய சமுதாய அரங்கை சிறப்பாக நடத்த, இன்றைய பிரான்ஸ் ஐனாதிபதி 2.8 கோடி ரூபாவை அன்பளிப்பாக வழங்கினார். "ப+கோள மாற்று" வெற்றி பெற ஜனாதிபதி சார்பாக தனது சிறப்புத் தூதுவராக JEROME BONNAFONT வை மாநாட்டில் பங்குகொள்ள அனுப்பி வைத்திருந்தார். உலகமயமாக்களின் ஏகாதிபத்திய தந்தைகள் பணம் முதல் பல பத்து வசதிகளை வழங்கியதுடன், வெற்றி பெற வாழ்த்துகளையும வழங்கியதுடன், தமது பிரதிநித்துவத்தையும் கூட வழங்கியிருந்தனர். இவை எல்லாம் யாரை எதிர்க்க என்று நினைக்கின்றிhகள்! தம்மைத் தாம் எதிர்க்கத்தான். இதை இட்டு சிரிக்;காதீர்கள். இது வேடிக்கை அல்ல. இதற்கு பின்னால் உணர்வுபூர்வமான பல லட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட செயல் தளமுள்ள அமைப்பு,  ஒரு மக்கள் திரளைத் திரட்டி உள்ளது. 40 ஆயிரம் பேர் அதன் கீழ் திரண்டு நின்று பாரிசில் ஆர்ப்பாரித்தனர்.

 

இதன் ஒரு வடிவமாகத் தான் இன்று பம்பாயில் உலகச சமூக மன்றத்தின் வருடாந்த கூட்டம் நடக்கின்றது. இதை எதிhப்பதாக பாசங்கு செய்யும் மும்மை எதிhப்பு இயக்கம் 2004, அவர்களில் சிலரை வென்று எடுக்க நடுநிலை வேசம் கட்டியுள்ளனர். ஏகாதிபத்தியத்தின் தயவில், பன்நாட்ட நிறுவனங்களின் வரிச் சலுகையில் திரளும் பணத்தைக் கொண்டு, வலாட்டும் உலகமயமாதல் எதிர்ப்பு வேஷம் கட்டியாடும் கூத்துகளை நாம் இனம் கண்டு கொள்ள வேண்டி நிலையில், அதை அம்பலம் செய்ய வேண்டிய பொறுபும் எம்முன் விரிந்து கிடக்கின்றது.

 

மேலும் இந்த விபச்சாரத்தைப் புரிந்து கொள்வது அவசியம்;. ஐp -8 மாநாட்டடை எதிர்த்த நடந்த எவின் (நுஏஐயுN) மாநாட்டை, பிரான்ஸ் ஜனதிபதி சிராக் புகழ்ந்த பராட்டியது இங்கு நாம் மறந்து விட முடியாது. அந்த மாநாட்டை சிறப்பாக ஒழுங்கு செய்த அரசு சாரத நிறுவன உறுப்பினர்களை, பிரான்ஸ் ஐனதிபதி தனது சிறப்பு விருந்தினராக தனது மாளிகைக்கு அழைத்த கூடிக்குலாவிய படி அவர்களை பராட்டினர். இவை எல்லாம் எதற்காக! மக்களின் மேலான சுரண்டலை, சூறையாடலை வெற்றிகரமாக திசை திரும்பும,; விசுவசமிக்க நாய்களின் முயற்சிகளுக்கு எலும்புகளை போடத்தான் இந்த வாழ்த்துகளும் விருந்துகளும்;. இதே போன்றே துழுளுநு டீழுஏநு என்ற மற்றொரு எகாதிபத்திய எதிhப்புக் குழு  ஆகஸ்ட் 8 முதல்  10 திகதி வரை டுநு டுயுசுணுயுஊ என்றம் இடத்தில்  கூட்டத்தை நடத்தினார். இவர் பிரான்சில் மாக்டோனாடல் உடைப்பு மற்றும் மரபு மற்றத்தை எதிர்த்து பயிர்களை அழித்த குற்றத்துக்காக அபாரத்தையும், சிறைத் தண்டiனையை பெற்றிருந்தார். அந்த தண்டனை வழங்க சட்டப்படி துணை நின்ற சோசலிச கட்சி துழுளுநு டீழுஏநு இன் ஓகஸ்ட் மாநாட்டுக்கு 2.8 கோடி ரூபாவை அன்பளிபாக வழங்கியது. இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்த, பிரான்ஸ் ஜனாதிபதி சீராக் அவருக்கு கிடைத்து இருந்த சிறைத் தண்டைனையைக் குறைத்ததுடன், தீடிரென விடுவிக்கப்பட்டார். இவர் ஏன் விடுவிக்கப்பட்டார். உலகமயமாதலை எதிர்த்து கூட்டம் நடத்தவும், அதன் மூலம் மக்களை ஏகாதிபத்திய இரண்டாவது தலைமையின் கீழ் மந்தைகளாக மேய்க்கும் தொழிலுக்காக விடுவித்தனர். அந்த கூட்டத்தில் துழுளுநு டீழுஏநு வைத்த மையக் கோசம் "நாம் தடுப்போம்! வேறு உலகங்களும் சாத்தியமே!" என்றார். எந்த உலகம்? எப்படியான உலகம்;. உழைக்கும் மக்களின் உலகத்தை அல்ல. மூவதனத்தின் கீழ் வேறு ஒரு உலகம். கற்பனையான ஒரு கோசத்தின் கீழ் அடிமைத் தனத்தை எப்படி உருவாக்குவது என்பத பற்றி முழங்கினார். அங்கு உரையற்றிய ஜேர்சே பூவே "பூகோளரீதியான முறையில் சிந்தியுங்கள், உள்ளூ துறையில் நடந்த கொள்ளுங்கள்" என்றார் இதன் மூலம் எதை உலகமயமாதலுக்கு மாற்றக முன்வைக்கின்றார். ஏகாதிபத்திய நாடுகளின் தீவிர முரண்பாட்டை அடிப்படையாக கொண்ட, தேசிய பாசிச பொருளாதாரத்தை கோருகின்றார். அனைவரும் தேசியவாதிகளாக உலகில் குரல் கொடுங்கள், ஆனால் உள்ளுர் பாசிச தேசிய உணர்வை ஆணையில் வையங்கள் என்;றார். அதாவது உலகமயமதாலுக்கு எதிராக தேசிய பொருளாதாரம். மறு தளத்தில் பாட்டாளி வைக்கும் முன்வைக்கும் சர்வதேசியத்துக்கு மாற்றக தேசிய பொரளாதாரம். இது என்ன? உலகமயமாதலையும், சர்வதேசியத்தையும் எதிர்த்த பாசிச தேசியவாதமாகும்;. ஆனால் அதை அப்பட்டமாக சொல்வதில்லை. சுற்றி வளைத்த இதன் முடிவுகள் உலக பாசித்தை கோருகின்றது. இதனால் தான் வலதுசாரி கட்சியான ருனுகு வின் தலைவர் "ஒரு முக்கியமான இயக்கம் தோன்றியுள்ளது" என்று கூறி சிலாகித்தார். 

 

இப்படி எண்ணிறைந்த தன்னார்வக் குழுக்கள் "கலகம் செய்வோர்"ரையும், "கொள்கைப் பிடிப்புள்ள அறிவுஜீவிகளை"யும் பாரிய நிதி ஆதாரத்தில் உருவாக்கியுள்ளனர். மூன்றாம் உலக நாடுகளின் வாழ்க்கை சீராழிவுகளும் பாசிசமும் ஜனநாயகமாகின்ற போது, மக்களின் கோபத்தை தன்னார்வ இலக்கியங்கள் மூலமான "ஜனநாயக உயிரினங்கள்" இதை சந்தப்படுத்தி மெதுமைப்படுத்துகின்றன.
"சித்ததாந்த விவாதத்துக்கு தளங்கள் அமைத்து தருவதில்" தன்னார்வக் குழுக்கள் கோட்பாட்டு ரீதியாக விரிவானதும் திட்டமிட்ட நோக்குடன் அதனை முதன்மைப் படுத்துகின்றனர். ஏகாதிபத்திய கைக்கூலி கவிஞர்கள், விஞ்ஞானிகள், பொருளாதாரவாதிகள், சுற்றசு; சூழல் செயல் வீரர்கள் பல்கலைக்கழக பேராசியர்கள் என பலதர மட்டத்தில் இது திட்டமிடப்படுவதுடன், இவர்களின் உதவியுடன் இது ஒரு சர்வதேச போக்காகின்றது. இந்த கூத்து அரங்கேற்றப்படும் அதே தளத்தில் இருக்கின்ற அரசுகள் ஊழலையும், பாசித்தையும் ஆதாரமாக கொண்டு மக்களின் இரத்தை உறிந்துவிடுகின்றனர்.

 

 அரசு சராத நிறுவனங்களின் அடிப்படை நோக்கம் வரலாற்றில் புதியவையல்ல. 19ம் நூற்றான்டில் காலனித்துவ கொடூரங்களை மூடிமறைக்க அக்கம்பக்கமாக தன்னார்வக் குழுக்கள் இயங்கின. கிறிஸ்துவ மத அமைப்புகள் மதமாற்றம் முதல் மனிதபிமான சேவைகளை கையாண்டு காலனித்துவத்தை எப்படி நிலைநாட்டி பாதுகாத்தனரோ, அதே போன்றே தன்னார்வக் குழுக்கள் மறு காலனித்துவ மூகமுடிகள் சிதையாமல் இருக்க அக்கபக்கமாக இயங்கின்றன. இன்றைய எகாதிபத்திய உலகமயமாதல் தத்துவவாதிகளே அரசு சாராத தன்னார்வக் குழுக்களின் செயல்கள் பற்றி இரண்டு விடையத்தை ஒத்துக் கொள்கின்றனர்.

1.  உலகமயமாதலையும் மறு காலனியாதிக்கத்தையும் உருவாக்கும் சிறப்பு ஊக்கியாக உள்ளனர் என்பதையும்


2.  ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மக்களின் கோபத்தை திட்டமிட்டே திசை திருப்பி அதை மலடாக்கின்றனர் என்பதையும் என்பதையும் எற்றுக் கொள்கின்றனர்.

 

உண்மையில் மக்களை நலமடிக்கும் உலகமயமாதலின் ஒரு இடைத் தரகராகவே அரசு சாராத நிறுவனங்கள் செயற்படுகின்றன. இதை மேலும் நுட்பமாக கையாள, அரசு சாரத தன்னார்வக் குழுக்கள் பொருளாதார துறையில் நேரடியாக தலையிடுகின்றது. இதை எகாதிபத்தியம் ஒரு நிபந்தனையாக தேசிய அரசுக்கு வைக்கின்றது. மாற்று வரவு செலவு திட்டத்தை வைக்கவும் அல்லது அரசுடன் இனைந்து வரவு செலவு திட்டத்தை உருவாக்கும் உரிமையை எற்படுத்தி உள்ளது. இதன் மூலம் மக்களின் கவணத்தை திசை திருப்பி, அவர்கள் உண்மையைக் காணமுடியாத மந்தைகளை உருவாக்;கின்றனர். இதன் அடிப்படையில் ஐ.எம்;.எஃப், உலக வங்கி முதல் சர்வதேச ரீதியான கூட்டங்களுக்கு சமாந்தரமாக, அரசு சாராத தன்னார்வனக் குழுக்களின் சர்வதேச மாற்றத் திட்ட கூட்டங்களை நடத்துகின்றனர். இதன் மூலம் ஒரு மாயை விதைக்கின்றனர். சில மற்றங்களைச் செய்து மக்களை நம்ப வைக்கின்றனர். மக்களின் உண்மையான சர்வதேச எதிர்ப்புகளை தனது எல்லைக்குள் வடிகாலக்கின்றனர். அதே நேரம் எகாதிபத்தியங்களுடன் மற்றாக கூறி கூடி எடுக்கும் முடிவை, அமுல் செய்யும் நிதியை அவர்களிடமே பெறுவதன் மூலம், மாற்றை அழுல் செய்யும் செயல் வீரர்ளாக பூச்சூடுகின்றனர். இன்றைய தன்னார்வக் குழுக்கள் சில "இன்றைய பிரச்சனையின் ஒரே தீர்வு"  சூழலுக்கு தகுந்த மாதிரி மாற்றுப் பொருளாதார வளர்ச்சி என்று பசப்புகின்றன. "தொடர்ந்து நீடித்து நிற்கும் வாய்ப்புடைய வளர்ச்சியே" என்று பீற்றகின்றன. இதற்கு என சேமிப்புத் திட்டங்கள், சிறு உற்பத்திகளை கிராமப் புறங்களில் வழமையான உழைப்பு முறைக்கு மாறாக திணிக்கின்றன. வழமையான உழைப்ப எகாதிபத்தியத்தால் சூறயாடப்படும் நிலையில், மாற்றகள் புகுத்தப்படுகின்றன. சமூக இருப்பின் அடிப்படை அழிக்கப்படுகின்றது. இயல்பான வாழ்வியல் இதன் மூலம் சிதைக்கப்படுகின்றது.  

 

அமெரிக்காவின் போர்டு அறக்கட்டளையின் "தெய்வீக நடவடிக்கை"யின் வெற்றி குறித்து 20 ஆண்டுகளின் பின் அமெரிக்கா அரசு குறிப்பீடும் போது "போர்டு அறக்கட்டளையின் டாலர் உதவி அதே அளவு பிறரின் உதவியைவிட அதிகப் பயனளிப்பதாக இருந்தது." இதையே அமெரிக்கா ஜனதிபதி ரீகன் "தீவிரமான புதிய ஜனநாயகத்தை அடைவதில் ஜெர்மன் அரசியல் அறக்கட்டளைகளின் பெரும் முயற்சிகள் பிரதான சக்தியாக உள்ளன." என்றார். இப்படி பரஸ்பரம் எகாதிபத்தியங்கள் கைகோர்த்துக் கொண்டு உலக மக்களை சூறையாடினர். அமெரிக்கா "உலகை சிவப்பு அபாயத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு" வைத்த "அமெரிக்க அமைதிப் பேரசு" திட்ட அடிப்படையில் தன்னார்வக் குழுக்கள் மிகத் தீவிரமாக இடது சாயத்துடன் அன்று களம் இறங்கினர். 1950-60களில் அமெரிக்கா உள்ளிட்ட மற்றைய போட்டி ஏகாதிபத்தியங்களும் தன்னார்வக் குழுக்களை பரந்த அடிப்படையில் ஒருகிணைக்க முயன்றன. சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்கா நிறுவனம் தொடக்கம் கெனடியின் கம்யூனிச எதிhப்பை அடிப்படையாக கொண்ட "முன்னேற்றத்துக்கான கூட்டணி" என்பன அன்று விரிவாக அமைக்ப்பட்டன. கனடா சர்வதேச வளர்ச்சி நிறுவனம், பிரிட்டன் தொலை தூர வளாச்சிக்கான அமைச்சகம், ஐரோப்பா சமூகத்தின் வளர்ச்சிக்கான உதவிக் கமிட்டி என்பன ஒருங்கினைக்கப்பட்ட வகையில் மூலதனத்தின் நலனை முன்னிறுத்தியது. இப்படி சொந்த ஏகாதிபத்தியத்தில் தொடங்கி மூன்றாம் உலக கிராமப்புறங்கள் வரை கிளைகள் அமைகப்பட்டது. இவை அனைத்தையும் ஒன்று இனைக்க ஜெனிவை தலைமையகமாக கொண்ட, சாவதேச தன்னார்வக் குழுக்களின் கவுன்சில் அமைக்கப்பட்டது.

 

1960 களில் குறிப்பாக மக்களை போராட்டத்தில் இருந்து திசை திருப்ப கூடிய தத்துவங்கள் உருவாக்கப்பட்டன. பிரேசிலில் பவுலோ பீரீயரின் "சுரண்டப்படுவோருக்கான கல்வியல்" என்ற கோட்பாட்டை முன்வைத்தது. பிலிப்பைன்சில் பவுல் அலின்ஸ்கியின் "அதிகாரத்தின் தத்துவம்", சூமேக்கரின் "சிறியதே அழகு", கிட்டியர்சின் "விடுதலை இறையியல்" ஆபிரிக்காவில் "கறுப்பின விழிப்புணர்வு இயக்கம்", ஆசியாவில் நவகாந்திய நவபுத்தக கோட்பாடு, ஜரோப்பாவில் பசுமை இயக்கம் என எண்ணற்ற கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. உலகை உலகமயமாக்கம் போது, மக்களின் எதிர்ப்பை தணிக்க அரசு சாரத நிறுவனங்கள் உடாக பல திட்டங்களைப் புகுத்தியது. இந்த வகையில் "புதிய அனுகுமுறைகள்", "மக்களின் மாற்று" என பல திட்டங்களை உருவாக்கின. இதன் தொடர்ச்சியில் "செலவு மீட்புத் திட்டங்கள்", சுய நிதியுதவித் திட்டங்கள்", கல்வியிலும், சுகாதாரத்திலும்  "பங்கேற்ப்பு வளர்ச்சி" அல்லது "சமூகப் பங்கெற்ப்பு" என்ற பல்வேறு வழிகளின் உலக வங்கியின் திட்டங்களை அரசு சாரத நிறுவனங்கள் திட்டமிட்ட பங்களிப்பு உடாகவே சமூக கொந்தளிப்புகளை சீராழிக்க முடிந்தது. இக் கோட்பாடுகள் வர்க்க சமரசத்தை உள்ளடக்கிய கதம்பத் தத்துவ அடிப்படையை கோட்பாடாக்கி முன்வைத்தது. பல்வேறு நாடுகளின் நிதி உதவி, ஆளும் வர்க்கத்தின் பக்கத் துணையுடன், பத்திரிகைகள் முற்போக்கு மூலம் பூச இவை களைகளாக உயிர்தெழுந்தன.

 

காந்தி, அலின்ஸ்கி, கிட்டியர்சு, சே குவோர, கிராம்சி கருத்துகளையும் உள்ளடக்கி இடதுசாரி வேஷம் போட்ட மக்களை வேட்டையாடினர். எகாதிபத்திய மற்றும் உலகமயமாதலை தீவிரமாக்கும் சாவதேச அமைப்புகளின் துணையுடன், அவர்களின் தரவுகளை எடுத்து பல நூல்களையும், ஆய்வுகளை உலகெங்கும் குவிக்கின்றனர். மாற்று அறிவியல் இதுவே என்று மார்புதட்டி பிரமையை ஊட்டுகின்றனர். குழந்தை உழைப்பு, வறுமை, பெண்கள் பிரச்சனை, சுற்றுந்சூழல், மனித உரிமை, ஒடுக்குமுறை, அமைதி என்று மாhக்சியம் எதை எல்லாம் இந்த சமூக அமைப்புக்கு எதிராக முன்னிறுத்தி போராடுகின்றதோ, அதை எல்லாம் இந்த ஏகாதிபத்திய அமைப்பில் அக்கபக்கமாக வளரும் ஒட்டுண்ணியான அரசு சராத அமைப்புகள் மாற்றாக முன்வைக்கின்றனர். இவற்றுக்கு வலு சேர்க்க வெகுஜன கோட்பாட்டு சிந்தனையாளர்கள், மேற்கத்திய சிந்தனையாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு கழகங்கள் மூலம் கம்யூனிசத்தக்கு எதிரான "புரட்சிகர" மாற்று ஒன்றை உருவாக்கம் தீவிர பணியில் இறங்குகின்றனர்.. "சித்தாந்தத்தின் முடிவு" என்ற பெயரில் பல்வேறு தத்துவ விளங்கள் முன்வைக்கப்படுகின்றன. வர்க்கப் போராட்டத்தை கைவிடக் கோரும் வர்க்க சமரசத்தை முன்வைப்பதே, இவர்களின் தலையாக சித்தாந்த உள்ளடக்கமாக இருக்கின்றது. அரசு சாரத தன்னார்வக் குழுக்களின் கட்டமைப்பு மாற்றுத் திட்டத்துடன் "சமூக பங்கேற்ப்பு", "அடிமட்டத் திட்டமிடுதல்" போன்ற மூல வடிவங்களை முன்வைக்கின்றன.

 

1980 இல் உலகில் எற்பட்ட பொருளாதார சூறையாடல் கட்டமைப்பு மாற்றத்துக்கு எதிராக எழுந்த போராட்டத்தை தணிக்க சர்வதேச வளர்ச்சிக்கான உதவி நிறுவனம் பெரும் தொகை பணத்தை செலவு செய்தது. 80 நாடுகளில் அரசு சாரா நிறுவனங்கள் பல ஆயிரங் கோடி டாலர்களை செலவு செய்தது. இது பசி, உலக வறுமையின் அடிப்படை காரணம் குறித்து விவாதம் செய்யவும், பொதுத்துறையில் தனியார் வளர்ச்சி உதவி திட்டத்துக்கான தொகுதியை விரிவுபடுத்தவும், உறுதி ஊட்டவும், திட்டக் கல்வியில் ஈடுபடும் நிறுவனங்களை வலைப்பின்னலை வளர்க்கவும், பெரும் தொகை நிதி பயன்படுத்தியது. உலக வங்கித் திட்டத்தில் கடன் வழங்கும் போது  அரசு சாராத நிறுவனங்கள் உள்ளடங்கிய "வளர்ச்சியின் பங்குதாராகள்" என்ற அடிப்படையை அரவனைத்து அனைத்தையும் செய்கின்றன. அரசு சாரத நிறுவனங்களுக்கு கடனனில் ஒரு பகுதி மூலம் உதவும் நிபந்தனையை இது  உள்ளடக்கியுள்ளது. இவர்களின் ஒருங்கினைப்பு உலகமயமாதலை எதிர்த்து போராடுவதாக கூறி இன்று சர்வதேச அரங்குகளை நடத்துகின்றனர். இந்த வகையில் மும்மையில் ஏகாதிபத்திய வளர்ப்பு நாய்களான உலக சமூக மன்றம் கூடி குலைக்கின்றனர். விசுவசமாக வலாட்டக் கூடிய சில நாய்களை பிடிக்க, நடுநிலை வேஷம் போட்டும் மும்பை எதிhப்பு இயக்கம் -2004 வாலட்டுகின்றது.

 

நாம் இன்று என்ன செய்ய வேண்டும். இந்த கயவாளித் தனத்தை நாம் அம்பலப்படுத்த வேண்டும். இவர்களை தனிமைப் படுத்தி அழிக்க வேண்டும்;. நாம் மக்கள் திரள் அமைப்புகளை உருவாகக் வேண்டும். மக்கள் சர்வாதிகார மன்றங்களை உலகெங்கும் உருவாக்க வேண்டும். இதற்கான நடைமுறை போராட்டங்களை நடத்தவேண்டும். உலகெங்கும் இதற்காக அறைகூவலை விடுவதுடன், அதை நனவாக்க வேண்டும்.

 

அனைத்து அதிகாரமும் உழைக்கும் வர்க்கத்துக்கு என்பதை உலகளவில் நனவாக்கும் வரை வர்க்கப் போராட்டங்கள் முடிந்து விடுவதில்லை. இதை நாம் அரசியல் ஆணையாக அனைத்து சமூகத் துறையிலும் முன்னிறுத்துவோம்.

 

உழைக்கும் மக்களாகிய நாம், புரட்சிகள் மூலம் உலகை மாற்றுவோம் என்ற சபத்ததுடன் உங்களிடம் இருந்து விடை பெறுகின்றேன்.