தேவையான பொருட்கள்
*************************************
வருத்த மாவு - 200 கிராம்( இரண்டு டம்ளர்)
மட்டன் - 400 கிராம்

Image

மாவில் விறவி கொள்ள
**********************************

வெங்காயம் - இரண்டு
பச்ச மிளகாய் - ஒன்று
கொத்து மல்லி  தழை - கால் கப்
புதினா - கால் காப்
தேங்காய் துருவியது - அரை முறி
உப்பு  - அரை தேக்கரண்டி

கறி தாளிக்க
*****************

எண்ணை  - கால் கப்
பட்டை - ஒரு அங்குலம் அளவு ஒன்று
கிராம்பு - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்ச மிளகாய்  - ஒன்று
கொத்து மல்லி -  சிறிது
புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசை கரண்டி

Image

மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒன்ன்ரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - முன்று தேக்கரண்டி (தேவைக்கு)
கடைசியில் கரைத்து ஊற்ற
****************************************
வருத்த மாவு -  இரண்டு மேசை கரண்டி

செய்முறை
***************

1. முதலில் கறியை கழுவி வைக்கவும். வெங்காயம்,தக்காளியை அரிந்து வைக்கவேண்டும். மசாலா தூள் வகைகளையும் ரெடியாக வைக்கவும், புதினா, கொத்துமல்லி யை மண் போக கழுவி தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.
2. இஞ்சி பூண்டு பேஸ்ட்,உப்பு,மாவு, மாவில் கலக்க வேண்டிய வெங்காயம்,பச்சமிளகாய்,கொத்துமல்லி,புதினாவை பைனாக சாப் பன்ணி ரெடியாக வைக்க வேண்டும்.

Image
3.ஒரு பெரிய வயகன்ற சட்டியில் எண்ணையை காய வைத்து அதில் பட்டை,கிராம்பு,ஏலத்தை போட்டு பொரிய விட வேண்டும். பொரிந்ததும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

Image
4.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பொட்டு நன்கு பச்ச வாடை போகும் வரை வதக்க வேண்டும்.

Image
5.தக்காளி, கொத்துமல்லி, புதினா, பச்சமிளாயை போட்டு நன்கு வதக்கவும்.
Image

6.மட்டன் &எல்லா தூள்வகைகளையும்(உப்பு,தனியா,மஞ்சள்,மிளகாய்)போட்டு நன்கு பிரட்ட வேண்டும்.
7.ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும்.
Image

8.பிறகு ஒன்றுக்கு முன்று மடங்கு தண்ணீர் ஊற்றி  கொதிக்க விட வேண்டும்.

Image
9. மாவில் தேங்காய்,சிறிது உப்பு,கொத்துமல்லி,புதினா,வெங்காயம் நல்ல பைனா எல்லாவற்றையும் சாப் செய்து போட்டு கிளறி வைக்க வேண்டும்.கொதித்த கறி தண்ணீரிலிருந்து இரண்டு டம்ளர் மசாலா தண்ணீரும் எடுத்து கொள்ளவேண்டும். (இது மாவு கொழுக்கட்டை பிடிக்க விறவுவதற்கு)

Image
10. மசாலா தண்ணீரை மாவில் போட்டு பிசறி நன்கு அழுத்தி குழைத்து கொள்ள வேண்டும்.(மசாலா தண்ணீர் ஊற்றி பிடித்தால் தான் இது நல்ல டேஸ்டாக இருக்கும்)

Image
11.குழைத்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து தட்டில் அடுக்கி வைக்க வேண்டும்.

Image

12.பிடித்த கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக கொதித்து கொண்டிருக்கும் கறி மசாலாவில் போட வேண்டும்.
13. போட்ட தும் கரண்டியை போட்டு கிண்ட கூடாது கொழுகட்டை கரைந்து விடும்.
ஒரு தோசை கரண்டி அல்லது கட்டை கராண்டியால் லேசாக ஒன்றோடு ஒன்று ஒட்டமல் பிறட்டி விட வேண்டும்.

Image
14.கறியும், கொழுக்கட்டையும் ஒரே நேரத்தில் வெந்துவிடும். முதலே கறி வெந்துவிட்டால்  கறி கரைந்து விடும்.

Image
15.இப்போது கரைத்து ஊற்ற வேண்டிய மவை தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

Image
16.. லேசகாக கிளறி விட வேண்டும்.

Image
17. கடைசியில் தம் போடும் கருவி (அ) தோசை தவாவை வைத்து அதன் மேல் பாத்திரத்தை வைத்து  பத்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவேண்டும்.

Image
18 . சுவையான கறி தக்குடி (கொழுக்கட்டை ரெடி)

குறிப்பு
************
மாவு தயாரிக்கும் முறை
***********************************
பச்சரிசி (அ) சிகப்பரிசியை களைந்து வடிகட்டி ஒரு மெல்லிய துணியில் காயவைத்து மிஷினில் கொடுத்து திரித்து கொள்ளவேண்டும். திரித்த மாவை ஒரு பெரிய இரும்பு வானலியில் போட்டு நன்கு வருக்கனும். வருத்ததை ரவை ஜலிக்கும் ஜல்லடையில் ஜலித்து கொள்ளவேன்டும்.
இல்லை வீட்டிலேயே அரிசியை ஊறவத்து மிக்சியில் கட்டியா அரைட்த்து அதனுடன் சிறிது ரெடி மேட் அரிந்து மாவு சேர்த்தும் கொழுக்கட்டை பிடிக்கலாம்.
இத ரவையிலும் செய்யலாம். ரவையை நன்கு வருத்து கொள்ள வேண்டும்.
கறி நல்ல எலும்புடன் போட்டால் தான் சுவை அதிகம்.
ஜலீலா

.

 

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2371&Itemid=99