முன்னுரை வாசிக்க * 14. சமூக மருத்துவம் - நீரும் நோய்களும் - நீரினால் ஏற்படும் நோய்கள் யாவை

நீரை அடிப்படையாக கொண்ட பிணிகளில் (இதை விட நல்ல தமிழ் மொழிமாற்றம் வரவேற்கப்படுகிறது) நோய் ஏற்படுத்தும் கிருமியின் வாழ்க்கை சுழற்சியின் ஒரு பகுதி நீரில் இருக்கும். (A part of the life cycle of the organism causing this disease is in water) உதாரணம்: நரம்புச்சிலந்தி, சிஷ்டோசோமியாசிஸ்

இவ்வகை நோய்களை பற்றி புரிதல் ஏற்பட முதலில் சிஷ்டோசோமியாசிஸின் வாழ்க்கை சுழற்சியை பார்ப்போம். கீழுள்ள படத்தை பாருங்கள்.  

மனிதனிடமிருந்து சிஷ். முட்டை வெளிவருகிறது. அது பின்னர் நீரில் மிராசிடியமாக மாறுகிறது. அது ஒரு (நீரில் வாழும்) நத்தையின் உள் சென்று பன்மடங்கு பெருகி செர்காரியாவாக மாறுகிறது.

இந்த செர்காரியாக்கள் நீரில் நீந்திக்கொண்டிருக்கின்றன. மனிதன் அங்கு காலை வைத்தாலோ அல்லது குளித்தாலோ அவை தோலை துளைத்து உடலுக்கு உள்ளே சென்று விடுகின்றன. கீழுள்ள படம் CDCயால் வெளியிடப்படுவது


அப்படி தோலை துளைத்து செல்லும் செர்காரியாக்கள் உடலினுள் சென்ற வுடன் சிஷ்டோசோமாக மாறி, அதன் பிறகு ஆன் புழுவாகவும், பெண் புழுவாகவும் மாறி (சில வகை புழுக்கள்) சிறுநீர்ப்பையிலும், (சில வகைப்புழுக்கள்) உணவுபாதையின் சிரைகளிலும் இருந்து கொண்டு முட்டையிடுகின்றன. இந்த முட்டையானது மலத்திலும், சிறுநீரிலும் வெளிவருகிறது.

இந்த புழுவை உடலில் கொண்ட ஒருவர் ஆற்றில் நின்று கொண்டே மலம் கழித்தாலோ அல்லது சிறுநீர்கழித்தாலோ அந்த நீரில் அந்த முட்டைகள் வந்து விடும். பின் அவை மிராசிடியமாக மாறி நத்தைக்குள் சென்று செர்காரியாவாக மாறி அடுத்து வருபவரின் தோலை துளைத்து மீண்டும் மீண்டும் இதே தான் நடக்கும்

இப்பொழுது காலராவிற்கும் இந்த நோயிற்கும் வேறு பாடு தெரிகிறதா

ஒரு நீரில் காலரா கிருமி இருந்தால் உங்களுக்கு காலரா வர நீங்கள் அந்த நீரைப்பருக வேண்டும். இங்கோ அந்த தண்ணீரில் நின்றால் கூடப்போதும் [ஆத்தாடி <img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/2.gif' alt=':('/> ]

ஆனால் அந்த நீரில் அந்த வகை நத்தை இருந்தால் மட்டுமே இது சாத்தியம். நத்தை இல்லையென்றால் இந்த நோய் பரவாது

இப்படி ஒரு நோய் நல்ல வேளை தமிழகத்தில் இல்லை. ஆனால் இதைப்போன்ற ஒரு நோயை பாடுபட்டு வெற்றிகரமாக நம் ஊரிலிருந்து “விரட்டி” விட்டோம். அது தான் நரம்பு சிலந்தி
http://www.payanangal.in/2008/10/16-water-based-diseases.html