08112022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

உடல் தானம் என்றால் என்ன, உறுப்பு தானம் என்றால் என்ன, கண் தானம் ??, இரத்த தானம் ??

உடல் உறுப்பு தானம் குறித்த எனது முதல் இடுகையான
இப்படியும் சிலர் : இதய தானம் குறித்த சில கேள்விகளும் பதில்களும் இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் பதிவர் தெக்கிட்டானின்உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs! இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் விளக்கமளிக்க இந்த இடுகை

 

உதிரக்கொடை (இரத்த தானம் ) :

 

ஒருவர் உடம்பில் ஓடும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்ததில் இருந்து சுமார் 350 மிலி பெறப்படுவது இரத்த தானம்

  

எத்தனை முறை வேண்டுமானாலும் அளிக்கலாம்

  

சில நாட்களில் இரத்தம் மீண்டும் ஊறி விடும்

  

தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்

  

பலன் : பிணியாளருக்கு. ஒவ்வொரு முறையும் ஒரு உயிரை காக்கலாம்

 
கண் தானம் :

 

ஒருவர் இறந்த பின் அவரது கண்கள் எடுக்கப்படும்.

 

இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்

 

மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்

  

கண்கள் எடுக்கப்பட்ட பின் பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்

  

எடுக்கப்பட்ட கண்களின் விழித்திரை அடுத்த நபருக்கு பொருத்தப்படும்

 

 தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

  

பலன் : விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு

 

  

ஒருவர் இறந்த பின்னரே அவரது எலும்புகள் எடுக்கப்படும்

  

இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்

 

 மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்

  

பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும் 

  

எலும்பு வங்கி இருக்கும் ஊர்களிலேயே இது கடை பிடிக்கப்படுகிறது

  

எடுக்கப்பட்ட எலும்புகள் எலும்பு வங்கியில் வைக்கப்படும்.

 

தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்

  

இது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது

  

பலன் : பல பிணியாளர்களுக்கு

  
உறுப்பு தானம் :

  

மூளை சாவு என்றால் மட்டுமே எடுக்கப்படும்

 

சிறுநீரகங்கள், ஈரல், இதயம், நுரையீரல், தோல் உட்பட பல உறுப்புகள் எடுக்கப்படும்

  

பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்

  

தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்

  

இது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது

 

 பலன் : பல பிணியாளர்களுக்கு

 

 உடல் தானம் :

 

 
இயற்கை மரணம் என்றால் மட்டுமே பெறப்படும்

  

உடல் உறவினர்களிடம் அளிக்கப்படாது

 

 உடல் உடற்கூறியல் பிரிவில் வைக்கப்படும். முதல் வருட மாணவர்கள் உடற்கூறியல் குறித்து படித்த அறிவதற்காக உடல் பயன்படும்

 

 அவ்வாறு தானம் அளிக்கப்பட்ட உடலிருந்து கண்களும், எலும்புகளும் எடுக்கப்படலாம். இவை பிணியாளர்களுக்கு பயன் படும்

  

பலன் : கண்களால் இருவருக்கு, எலும்புகளால் பல  

  • பிணியாளர்களுக்கு, மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு


மூளை சாவு பற்றிய சில விபரங்கள் மருத்துவர் டெல்பின் விக்டோரியாவின் உடல் உறுப்புகள் தானம் இடுகையில் இருக்கின்றன

வழக்கம் போல் உங்களின் சந்தேகங்களை மறுமொழியில் கேட்கலாம்

http://www.payanangal.in/2008/09/blog-post_21.html