10282021வி
Last updateச, 09 அக் 2021 9am

கார்ல் மார்க்ஸ்

ஜெர்மனைச் சேர்ந்த  மாமேதை கார்ல் மார்க்ஸ் எழுதிய சிறந்த நூல்களுள் ஒன்று "மூலதனம்" (Das Capital) உலக வரலாற்றை அடியோடு மாற்றியமைத்த நூல். புரட்சிகர சிந்தனைகளான கார்ல் மார்க்ஸின் "மூலதனம்" நூலில் இருந்த சிந்தனைளைக் கண்டு ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள் கார்ல் மார்க்ஸ்ஸை சொந்த நாட்டிலேயே நிம்மதியாக வாழவிடவில்லை. வெறுத்துப் போன மார்க்ஸ் தன் மனைவியுடனும் 3 - குழந்தைகளுடனும் பிரான்சுக்கு வந்தார்.

 


 

பாரிசில் இந்தபோதும் அரசியல்ரீதியாக பிரச்சனைகள் தொடர்ந்தது. பாரீசிலும் நிம்மதியில்லாமல் இருந்த மிகுந்த மனஉளச்சலுக்கு உள்ளான கட்டத்தில் இருந்தார். ஒரு கட்டத்தில் மார்க்ஸை பிரான்ஸ் நாட்டை விட்டு வெளிபேறும்படி பிரெஞ்ச் அரசாங்கம் ஆணைபிறப்பித்தது. அதுவும் 24 - மணிநேரத்திற்குள்.

 

தன் குடும்பத்தை பாரீசிலேயே விட்டு விட்டு இங்கிலாந்திற்கு சென்ற மார்க் தன் தனிமையான நேரத்தை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலிருந்த நூல் நிலையத்தில் இருந்த புத்தகங்களுடன் செலவழித்தார். அதுவே அவருடைய ஆராய்ச்சிக்களமாகவும் இருந்தது. 40 -  வருட  காலம் அங்கிருந்த நூல்களை படித்து ஆராய்ச்சி செய்து எழுதிய நூல்தான் டாஸ் காபிட்டல் (Das Capital)

 

இன்றைய சோவியத் யூனியன் மக்கள் சீனக் குடியரசு முதலான கம்யூனிச நாடுகளுக்கெல்லாம் ஆதாரமாக விளங்கும் தத்துவக் களஞ்சியம். 

 

அந்நூலை எழுதுவதற்காக மார்க்ஸ் தன் வறுமை நிலையிலும் தன் சிந்தனைகளை எழுத்து வடிவம் கொடுக்க வெறித்தனமான முயற்சியில் இருந்தார். மிகக் குறைந்த சம்பளத்தை பெறுவதற்காக அதிக நேரம் உழைப்பிற்காக செலவிட்ட மார்க்ஸ் சாப்பாட்டிற்கு கூட சம்பளம் பத்தாமல் கஷ்டப்பட்டிருக்கின்றார். 

 

கார்ல் மார்க்ஸ் தம்முடைய வாழ்க்கையின் இலட்சியத்தில் மிகத் தெளிவாக இருந்தார். அவர் சொல்கிறார்:

* "நான் அந்தக் காலம் முழுவதும் மரணத்தின் விளிம்பிள் இருந்தேன். எனவே உடல் நலத்துடன் இந்த ஒவ்வொரு நிமிஷத்தையும் எனது நூலை எழுதி முடிப்பதற்காகப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அதற்காக நான் எனது உடல் நலம் சந்தோஷம் மற்றும் குடும்பத்தைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. நான் காரியவாதிகளைப் பற்றியும் அவர்களது விவேகம் பற்றியும் சிரித்துக் கொள்கிறேன். ஈவிரக்கமற்றவர்களுக்கே மனித குலத்தின் துயரங்கள் குறித்துக் கவலைப்படாமல் தம் சொந்த விஷயங்களைக் கவனித்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் எனது (Das Capital) நூலை குறைந்தபட்சம் கைப்பிரதி வடிவத்தினாலாவது முழுமையாக உருவாக்காமல் சாவேனானால் நான் என்னை மெய்யாகவே உலகம் தெரியாதவன் என்று எண்ணிக் கொள்வேன்."